என் மலர்
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அப்படத்தின் இயக்குனர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொன்மகள் வந்தாள், பெண்குயின் படங்களை போன்று இந்தப்படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதன் இயக்குனர் விருமாண்டி அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அவர் கூறியதாவது: க/பெ.ரணசிங்கம் படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தான் ஓடிடியில் வெளிவரும். படத்தின் மீதமுள்ள பணிகள் நிறைவடைந்த பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என விருமாண்டி தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் முதன்முதலாக நடித்து கைவிடப்பட்ட படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியாக விளங்கி வருகிறது. இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்துமே மாஸ்டர் பீஸ் தான். இந்த கூட்டணியில் முதன்முதலில் வெளியான படம் பொல்லாதவன். ஆனால் அதற்கு முன்னரே தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்குவதாக இருந்த 'தேசிய நெடுஞ்சாலை' எனும் திரைப்படம் கைவிடப்பட்டது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக இருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருப்பினும் வெற்றிமாறன் இயக்குவதாக இருந்த 'தேசிய நெடுஞ்சாலை' படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிமாறன் என்பவர் சித்தார்த்தை வைத்து 'உதயம் என்.ஹெச்.4 என்ற பெயரில் படமாக எடுத்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதவன் இயக்கி நடிக்கும் நம்பி நாராயணனின் வாழ்க்கைப் படத்தில் சூர்யாவும், ஷாருக்கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ராக்கெட்ரி: நம்பி விளைவு. ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கை ‘ராக்கெட்ரி’ என்ற தலைப்பில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகி உள்ளது. இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்க, அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.

இந்த படத்தில் சூர்யா பத்திரிக்கையாளராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் வருவதுபோல் இருந்தாலும் அவரது கதாபாத்திரம் கதைக்கு திருப்புமுனையாக இருக்கும் என்கிறார்கள். இந்த படத்தின் இந்தி பதிப்பில் சூர்யா கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். சூர்யா, ஷாருக்கான் நடித்துள்ளதால் இப்படத்தின் வர்த்தகம் மேலும் சூடுபிடிக்கும் என சொல்லப்படுகிறது.
தனுஷின் அசுரன் படம் சீன மொழியில் ரீமேக் ஆக உள்ளதாக செய்திகள் பரவிவந்த நிலையில், அதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு விளக்கம் அளித்துள்ளார்.
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெயர் அசுரனுக்கு கிடைத்தது. இந்த படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதில் வெங்கடேஷ், பிரியாமணி நடிக்கின்றனர். கன்னட மொழியிலும் அசுரன் படத்தை தயாரிக்க உள்ளனர். சிவாராஜ் குமார் நடிக்க உள்ளார்.

இதனிடையே அசுரன் படத்தை பார்த்து வியந்த சீன திரையுலகினர், அப்படத்தை சீன மொழியில் ரீமேக் செய்ய முன்வந்துள்ளதாகவும், இதுகுறித்து சீன தயாரிப்பு நிறுவனம் ஒன்று அசுரன் படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், அதுகுறித்து அசுரன் படத்தின் தயாரிப்பாளர் தாணு கூறியதாவது: "அசுரன் படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பரவும் செய்தி உண்மையில்லை. அது வெறும் வதந்தி. சீன மொழியில் ரீமேக் செய்ய யாரும் எங்களை அணுகவில்லை. ஆனால் அசுரன் படத்தை சீன மொழியில் டப் செய்து வெளியிட உள்ளோம். அதுவும் கொரோனா முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் தான்" என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மாரடைப்பால் காலமான சிரஞ்சீவி சார்ஜாவின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் அர்ஜுன் கதறி அழுதிருக்கிறார்.
பிரபல இளம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் காலமானார். இவர் கன்னட சினிமா உலகில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அர்ஜுன் அவர்களின் மிக நெருங்கிய உறவினரான, இவர் தமிழில் சில படங்களில் நடித்த நடிகை மேக்னா ராஜை 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
நடிகை மேக்னா கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவர் சிரஞ்ஜீவி மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இளம் நடிகரின் மரணம் திரையுலகினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
இவரது இறுதி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் நடிகர் அர்ஜுன் மற்றும் நடிகை மேக்னா அழுத காட்சிகள் பார்ப்பவர்களை மனதை உருக்கும் அளவிற்கு இருந்தது.
நடிகர் சூரி வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கி கொரோனா வைரஸ் பற்றி பேசி இருக்கிறார்.
வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம், மாற்றம் பவுண்டேஷன் மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் மனிதாபிமான செயலை அவர் பாராட்டினார்.
நடிகர் சூரி பேசுகையில், "எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்றுதிறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள். எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன். இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் எனக்கு சந்தோஷம், அதே நேரத்தில் எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது. நாமெல்லாம் சந்திப்பதற்கு இப்படி ஒரு காலகட்டம் உருவாகியிருக்கக்கூடாது.
கடந்த 3 மாதத்தில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சேர்ந்து படித்த ஒரே பாடம் இந்த கொரோனாதான். 'தேவையின்றி வெளியே வராதீர்கள், உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்' என நமக்கு அடிக்கடி உணர்த்தியவர்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் தான். அவர்களுக்கு குடும்பம் இருந்தும் பொதுமக்களுக்காக அவர்கள் ஆற்றும் பணிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். என் சினிமா குடும்பம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள், துணை நடிகர்கள், நாடக நடிகர்கள், சினிமா துறையை சார்ந்த என் நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் என்னால் ஆன உதவியை நான் செய்துள்ளேன், செய்து கொண்டும் இருக்கிறேன்.
சமீப காலமாக பல உதவிகளை செய்து வரும் "வேலம்மாள் கல்விக் குழுமம்" என்மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறார்கள். நானும் அவர்களை மிகவும் மதிக்கிறேன். மேலும், "மாற்றம் பவுண்டேஷன்" திரு. சுஜித், திரு. உதய்சங்கர் அவர்களும் அவர்களால் ஆன பல உதவி திட்டங்களை செய்து வருகின்றனர். இன்று இவர்களோடு சேர்ந்து உங்கள் அனைவருக்கும் உதவ நான் அன்போடு கேட்டுக் கொண்டேன். சிறிதும் யோசிக்காமல் அவர்களும் உடனே சம்மதம் தெரிவித்தது மட்டுமன்றி உங்கள் தலைமையிலேயே இந்த உதவி திட்டங்கள் நடைபெறட்டும் என்று கூறினார்கள். அதன் மூலமாக இன்று உங்களுக்கு இந்த உதவியை செய்ய நான் இங்கு வந்துள்ளேன்.
நமது உயிரை காக்க நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு கூறும் அறிவுரைகளை கடைப்பிடிப்போம். பயப்படாமல் இருங்கள், அதே நேரத்தில் மெத்தனமாக இருக்காதீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுங்கள். மீண்டும் நாம் அனைவரும் இயல்பு நிலைக்கு வர அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.
பிரபல பாடகர் வேல்முருகன் கொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில் நடித்து இருக்கிறார்.
சுப்ரமணியபுரம் படத்தில் மதுரை குலுங்க என்ற பாடல் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் பாடகர் வேல்முருகன். இதைத்தொடர்ந்து சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் தனது குரல் பங்களிப்பையும் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தர்மபிரபு ஆகிய படங்களில் நடித்தும் தனது திரைப் பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார்.
கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அசுரன் படத்தில் இவர் பாடிய ‘கத்தரி பூவழகி...’ பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திரைப்படங்களிலும் நாட்டுப்புற மேடைகளிலும் தனது பங்களிப்பை கொடுத்துவரும் வேல்முருகன் கொரோனா நோய் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு குறும்படத்தில் சம்பளமே இல்லாமல் நடித்து கொடுத்துள்ளார்.
கொரோனா நோய்க்காக பல்வேறு தனிப்பாடல்கள் வெளியிடப்பட்டாலும் வேல்முருகன் நடித்து வெளியாகியிருக்கும் ‘பச்சை மண்டலம்’ என்ற இந்த குறும்படம் மிகவும் வித்தியாசமான அதே நேரத்தில் யாரும் சொல்லாத ஒரு முக்கியமான கருத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமான மனிதர்களை நாம் ஒதுக்கி வைக்கவோ புறக்கணிக்கவோ கூடாது என்பதையும், அவர்களை மனிதாபிமானத்தோடு எப்படி நடத்த வேண்டும் என்பதையும் உணர்த்தும் வகையில் இந்த குறும்படம் அமைந்துள்ளது.
எனவே இந்த குறும்படத்திற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவும் பாராட்டுகளும் குவிகின்றன. இன்றைய சூழ்நிலையில் சமூகத்திற்கு மிக மிக அவசியமான விழிப்புணர்வு கருத்தோடு வெளியாகியுள்ள இந்த குறும்படத்துக்கு கொரோனா நோயை வெல்ல போராடும் அரசு அதிகாரிகளும் மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் கூட பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
கொரோனா என்ற நோயினை மட்டுமே எதிர்க்க வேண்டும். தவிர்த்து, நோயாளியை எதிர்க்க கூடாது என்ற கருத்தை உணர்வு பூர்மமாக விளக்கும் ‘பச்சை மண்டலம்’ குறும்படத்தை ஷில்டன் தேவராஜ் இயக்கியுள்ளார். குறும்படத்தை கைஷோ கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.நாக சுப்ரமணியம் கதை எழுதி தயாரித்துள்ளார். கண்மணி ராஜா திரைக்கதை வசனத்தை எழுத, தஜ்மீல் ஷெரீப் இசையமைத்துள்ளார்.
இந்த குறும்படத்தில் பாடகர் வேல் முருகனுடன் சிற்றரசு, ரம்யா, சிவரஞ்சனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணிக்காக சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.
இதற்காக மத்திய, மாநில அரசுகள் ரயில்கள், பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளன. ஆனாலும் இதில் இடம்கிடைக்காத தொழிலாளர்கள் நடைபயணமாகவும், சைக்கிளிலும் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர்.
இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார், உணவு, தண்ணீர், முகக்கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். தான் தொடங்கிய சேவ் சக்தி அமைப்பின் மூலம் தொழிலாளர்களுக்கு அவர் இந்த உதவிகளை வழங்கினார். அப்போது அவரது தாயார் சாயா தேவி மற்றும் சேவ் சக்தி அமைப்பின் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
விக்ரம் தனது ஒவ்வொரு படத்தின் அறிவிப்பையும் எதிர்பார்ப்புகுரிய படமாகவே அமைத்து, அறிவித்து வருகிறார். தற்போது பெரும் பொருட்செலவில் உருவாகும் 'கோப்ரா' மற்றும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடித்து தொடங்கவுள்ளது.
ஒவ்வொரு படத்திலுமே தனது நடிப்பால் அசத்திவரும் விக்ரம் தனது 60-வது படத்தை இன்னும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைத்திருக்கிறார். ஆம்.. முதன் முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார்.
விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் - துருவ் விக்ரம் என்ற இந்தக் கூட்டணிக்கு இசையால் மெருக்கேற்ற இணைந்துள்ளார் அனிருத்.
'சீயான் 60' படத்தை லலித் குமார் தயாரிக்கவுள்ளார். இவருடைய வெளியீட்டில் 'மாஸ்டர்' தயாராகி வருகிறது. விரைவில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறார். அதனைத் தொடர்ந்து 'கோப்ரா', 'துக்ளக் தர்பார்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'சீயான் 60' படத்தை தயாரிக்கவுள்ளார்.
'சீயான் 60' 2021-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்த ராதிகா ஆப்தேவுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது இயக்குனராகி இருக்கிறார்.

அவர் இயக்கிய குறும்படம் சர்வதேச குறும்பட விழாவிற்கு தேர்வாகி இருக்கிறது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில் ``நான் எழுதி இயக்கிய குறும்படம் பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச குறும்பட விழாவில் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி" என்று இதில் பணியாற்றிய அனைவரையும் டேக் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
ஒரு அடார் லவ் படத்தில் கண்ணடித்து பிரபலமான பிரியா வாரியர், ரொம்ப போர் அடிச்சிருச்சு என்று பேட்டி அளித்துள்ளார்.
ஒரு அடார் லவ் படத்தில் கண்ணடித்து பிரபலமானவர் பிரியா வாரியர். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ’நான் முழு நேர நடிகையாகிட்டேன். ஆனா, இப்பவும் எங்கே போனாலும் கண் அடித்து காட்டச்சொல்லி கேட்கிறார்கள். எனக்கு இது ரொம்ப போர் அடிச்சிருச்சு. அதனால யார் கேட்டாலும் இதைச் செய்றதை நிறுத்திவிட்டேன்.

ஏன்னா, நான் ஒரு நடிகை. என்கிட்ட நடிப்பை எதிர்பார்த்தா சரியா இருக்கும்னு நினைக்குறேன். நான் தொடர்ந்து நிறைய படங்கள்ல நடிச்சு நல்ல நடிகைன்னு பேர் வாங்க ஆசைப்படுகிறேன். என்னை நடிக்க விடுங்கள். சின்ன வயசுல இருந்து நடிகையாகணும்னு ஆசைப்பட்டவ நான். மலையாளம் தவிர, தமிழ் ரசிகர்களுக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்றதுல சந்தோஷம். இதுவரைக்கும் தமிழ்ல எந்தப் படமும் பண்ணல. சீக்கிரமே பண்ணுவேன். தமிழ்ல விஜய் சேதுபதி படங்கள் ரொம்பப் பிடிக்கும்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை ரோஜா 5 வருடங்களுக்கு வில்லியாக ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தமிழில் மட்டும் அல்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் 'புஷ்பா' என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை ரோஜா 5 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுக்க போகிறாராம். மேலும் இந்த படத்தில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்றும் தகவல் வருகிறது.






