என் மலர்
சினிமா செய்திகள்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினி படத்திற்கு முன்பு பிரபல நடிகரை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாநகரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மீண்டும் கார்த்தியுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு இன்னமும் முடிவடையாததால் அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு பிறகு தான் ரஜினி - லோகேஷ் கனகராஜ் படம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்த இடைவேளையில், லோகேஷ் கார்த்தியை வைத்து வேறு ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறாராம். இந்த படத்தையும் கைதி படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னிடம் பணியாற்றிக் கொண்டிருக்கும் 100 ஊழியர்களுக்கு 3 மாதத்திற்கு முன்பாகவே சம்பளத்தை கொடுத்து நடிகர் ரமீஸ் ராஜா உதவி இருக்கிறார்.
டார்லிங் - 2, விதிமதி உல்டா போன்ற படங்களை தனது ரைட் மீடியா ஒர்க்ஸ் நிறுவத்தின் மூலம் தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் ரமீஸ்ராஜா.


இவர் தன்னுடைய நிறுவனத்தில் (ரைட் ரூப்&அல்லய்டு புரொடக்ட்ஸ் (பி) லிமிடெட்) பணியாற்றிக் கொண்டிருக்கும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இந்த லாக்டவுன் சூழ்நிலையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களுக்கு உதவுகின்ற வகையில்3 மாத சம்பளத்தை முன்பாகவே கொடுத்து உதவியிருக்கிறார்.
உலக இசை தினத்தை முன்னிட்டு உலக தமிழ்ச்சங்கங்கள் இணைந்து கங்கை அமரனை கௌரவப்படுத்த இருக்கிறார்கள்.
அன்னக்கிளியில் இளையராஜாவுடன் 1975-ல் துவங்கிய இசைப்பயணம், பாடலாசிரியராக 2500-க்கு மேற்பட்ட பாடல்கள், இயக்குநராக 17 படங்கள், இசையமைப்பாளராக 127 படங்கள், நடிகராக 50-க்கு மேற்பட்ட படங்கள், பாடகராக 300-க்கும் மேற்பட்ட படங்கள், தயாரிப்பாளராக 4 படங்களில் பணியாற்றிய கங்கை அமரனை கெளரவிக்கும் பொருட்டு உலக இசை தினமான வரும் ஜூன் 21-ம் தேதி அன்று டோக்கியோ தமிழ்சங்கம் (Tokyo Tamil Sangam) சார்ந்த கணேசன் ஹரி நாராயணன், மலேசியாவை சேர்ந்த தமிழ் எக்ஸ்பேட்ஸ் மற்றும் உலகெங்கும் உள்ள 30-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து உலக இசை தினத்தை விமரிசையாக நேரலையில் கொண்டாடவிருக்கிறது.
கொரோனாவின் பாதிப்பினால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் மனதிற்கு சிறிதளவில் தங்களால் இயன்ற அளவிற்கு மக்களின் மனதிற்கு, இதம் தரும் அளவிற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சில் தமிழ் சினிமாவில் 45 வருடத்திற்கு மேல் பாடலாசிரியர், கதாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பல்வேறு முகம் கொண்ட கங்கை அமரன் கெளரவிக்கப்படுகிறார்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் கங்கை அமரனுடன் தமிழ் திரையுலக பிரமுகர்கள் மற்றும் தமிழ் திரையுலக முன்னணி பாடகர்கள், உலகெங்கும் உள்ள தமிழ்ச் சங்கங்களை சேர்ந்த பாடகர்கள் தங்கள் இசையுடன் நேரலையில் அவருடன் பயணிக்கிறார்கள்.
இது இசை வரலாற்றில் முதல் முறையாக நேரலையில் ஓர் இசை வேள்வி என்பது குறிப்பிடத்தக்கது. இசையின் இளவலுடன் ஓர் இன்னிசைப் பயணமாய் ஒரு மாபெரும் தவம் செய்த கலைஞனுக்கு இசையால் மகுடம் சூட்டும் வரமாய் இந்நிகழ்ச்சி வடிவமைக்கபட்டுள்ளது.
ராம் இயக்கத்தில் வெளியான தங்கமீன்கள் மற்றும் பேரன்பு படத்தில் நடித்து பிரபலான சாதனாவின் விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகிறது.
ராம் இயக்கத்தில் வெளியான தங்கமீன்கள் படத்தில் செல்லம்மாவாக நடித்து நம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் சாதனா. இவர் மீண்டும் ராம் இயக்கத்தில் வெளியான பேரன்பு படத்திலும் நடித்திருந்தார்.

இவர் தற்போது விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிங்க் பேந்தர் தீம் மீயூசிக்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ கொரோனா வைரஸுக்கு பயப்படும் பேந்தர் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
குடும்பத்தை பாதுகாக்கவே இந்த முயற்சி என்று பெண்குயின் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக்கேயன் சந்தானம் பேட்டியளித்துள்ளார்.
ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் சார்பாக கார்த்திக்கேயன் சந்தானம் தயாரிப்பில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கிய மேயாதமான், மெர்க்குரி படங்களை தொடர்ந்து தற்போது பெண்குயின் திரைப்படம் உருவாகியுள்ளது. ஈஸ்வர் கார்த்திக் தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஜூன் 19ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் கார்த்திக்கேயன் சந்தானம் மாலைமலருக்கு பேட்டியளித்துள்ளார்.
பெண்குயின் திரைப்படம் எப்படி உருவானது?
மேயாதமான், மெர்க்குரி திரைப்படத்திற்குப் பிறகு என்ன படம் பண்ணலாம் என்று நினைக்கும் நேரத்தில் நண்பர் விஜய்சேதுபதி மூலமாக ஈஸ்வர் கார்த்திக் அறிமுகமானார். முதலில் ஈஸ்வர் கார்த்திக் ஹீரோ கதை ஒன்றை சொன்னார். முதல் படமே ஹீரோ சப்ஜெட் வேண்டாம், வேற கதை இருக்கிறதா என்று கேட்டோம். பெண்குயின் கதை சொன்னார். மிகவும் பிடித்தது. கார்த்திக் சுப்புராஜுக்கும் பிடித்துபோக படத்தை தொடங்கினோம்.

கீர்த்தி சுரேஷை தேர்வு செய்ய காரணம்?
கதை கேட்டவுடன் எங்களுடைய முதல் தேர்வு கீர்த்தி சுரேஷ் தான். பிறகு இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக், கீர்த்தியிடம் 4.30 மணி நேரம் கதை சொன்னார். கீர்த்தியும் ஓகே சொல்லிவிட்டார். நடிப்பில் கீர்த்தியை பற்றி சொல்ல தேவையில்லை. அவருடைய திறமையை முந்தைய படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்திலும் பார்ப்பீங்க...
அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்தது பற்றி?
அறிமுக இயக்குனருக்கு எடுத்துகாட்டு கார்த்திக் சுப்புராஜ். அவரும் யாரிடமும் வேலை பார்க்கவில்லை. திறமைதான் முக்கியம் என்று நம்புகிறோம். அனுபவமும் முக்கியம்தான். ஆனால் இந்த படத்துக்காக ஈஸ்வர் கார்த்திக் சொன்ன விஷயங்கள், செய்த காரியங்கள் அவரை நம்ப வைத்தது. அவரிடமும் பெரிய நம்பிக்கை இருந்தது.
படப்பிடிப்பில் நடந்த அனுபவங்கள்?
மலை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினோம். ஒருநாள் படப்பிடிப்பில் தேனிக்கள் கொட்டியது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் டப்பிடிப்பு ரத்து செய்தோம். காயம் ஏற்பட்டது கஷ்டமாக இருந்தது. இருப்பினும் அனைவரும் அதே புத்துணர்ச்சியில் மீண்டும் வேலை பார்த்தார்கள்.

எத்தனை கட்டமாக படப்பிடிப்பு நடந்தது?
ஸ்டோன் பென்ச் நிறுவனத்தை பொருத்தவரை பணம் இருந்தால்தான் படப்பிடிப்பு ஆரம்பம். படப்பிடிப்பு ஆரம்பித்தால் ஒரே கட்டத்தில் முடித்து விடுவோம். இதுதான் எங்கள் பாலிசி. இதை எப்போதும் பின்பற்றுவோம்.
ஓடிடி ரிலீஸ் குறித்து?
எல்லா திரைப்படம் தியேட்டரில் வெளியாக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் படத்தை எடுக்கிறோம். எங்கள் திரைப்படம் குடும்பம் போன்றது. இந்த சூழ்நிலையில், குடும்ப பாதுகாப்புதான் முக்கியம். அதனால்தான் ஓடிடியில் ரிலீஸ் செய்கிறோம். தியேட்டரும், ஓடிடியும் ஒன்றாகதான் டிராவல் செய்யும். தியேட்டருக்கு அழிவே கிடையாது. இம்முறை மக்களை சென்றடையும் வழி ஓடிடி. அதனால் தான் ரிலீஸ் செய்கிறோம்.
சார்லி சாப்ளின் கதாபாத்திரம் பற்றி?
படம் பார்க்கும் போது அந்த கதாபாத்திரம் ஹைலைட்டாக இருக்கும். வித்தியாசமான கதாபாத்திரத்தை இயக்குனர் உருவாக்கி இருக்கிறார். இயக்குனர் என்ன நினைத்தாரோ அதை அப்படியே செய்திருக்கிறார்.

ஓடிடியில் ரிலீசான உடனே தமிழ் ராக்கர்ஸில் வருகிறதே?
பைரசி என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் பார்ப்பது தனி நபரோட விருப்பம். பைரசியை தவிர்க்கதான் திரையுலகம் போராடி வருகிறது. பைரசியில் பார்ப்பதை மக்கள் தான் தவிர்க்க வேண்டும். நம்மால் மாற்ற முடியுமா என்று தெரியவில்லை. பைரசியில் படம் பார்க்கிறார்கள் என்று வருத்தப்படுவதா இல்லை, படம் பார்க்கிறார்கள் என்று சந்தோஷப் படுவதா என்று தெரியவில்லை. தயாரிப்பாளராக பார்த்தால் எங்களுக்கு வருத்தம் தான்.
சிறுவன் அஜய் பற்றி?
குட்டி பையனுக்கு படத்தில் பவர்புல் கதாபாத்திரம். கதாபாத்திரத்தோடு ஒன்றி சிறப்பாக நடித்திருக்கிறார். அவனை மிகவும் பாராட்டவே வேண்டும். இந்த வயதில் அவனிடம் இவ்வளவு பக்குவம் இருப்பது ஆச்சரியம்.

படக்குழுவினர் பற்றி?
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எங்கள் குடும்பத்தில் ஒருவர். எங்களுடைய படங்கள் எல்லாமே சந்தோஷ் நாராயணனிடம் மட்டுமே செல்லும். ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி, திருவின் உதவியாளர். ஒளிப்பதிவாளர் திரு, மெர்க்குரி, பேட்ட படங்களில் எங்களுடன் ஒர்க் செய்திருக்கிறார். கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு இப்படத்தில் பேசும். திறமையானவர். மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருமே சிறந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
அடுத்த படங்கள்?
பெண்குயின் திரைப்படத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. எங்களுடைய தயாரிப்பில் வெளியான மேயாதமான், மெர்க்குரி திரைப்படங்கள் எப்படி ரசிகர்களை கவர்ந்ததோ அதேபோல் பெண்குயின் திரைப்படமும் ரசிகர்களுக்கு பிடிக்கும். இனி வரும் படங்களும் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கண்டிப்பாக இருக்கும்.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று காலை சுமார் 10.30 மணியளவில் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. காவல் நிலைய கட்டுபாட்டு அறைக்கு போனில் இந்த தகவலை தெரிவித்த மர்ம நபர், வேறு எந்த விவரங்களையும் செல்லாமல் தொடர்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு காவல்துறையினர் 4 வெடிகுண்டு நிபுணர்கள், 2 மோப்ப நாய்களுடன் சென்று தீவிர சோதனை நடத்தினர். ரஜினிகாந்தின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் சுமார் 1 மணி நேரம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், காவல்துறைக்கு கிடைத்த தகவல் பொய்யானது என்று போலீசார் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு போன் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தின் முன்னோட்டம்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்கிறார்.
நம்பி நாராயணன் மேல் எழுந்த குற்றச்சாட்டும், சிறை வாழ்க்கையும், பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபணமானதும் ஒரு கமர்ஷியல் திரைக்கதையிலும் காண முடியாத வலியான திருப்பங்கள். இந்த அனுபவங்களை நம்பி நாராயணனோடு விவாதித்து திரைக்கதை எழுதி உள்ளார் மாதவன்.

பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு பிறகு மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் நடித்த ரான் டொனச்சியும், டௌண்டன் அப்பே தொடரில் நடித்து பிரபலமான பிள்ளிஸ் லோகனும் இணைந்து நடித்துள்ளனர். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வலம்வந்த சிரஞ்சீவி சார்ஜா, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். 39 வயதே ஆகும் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரையுலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிரஞ்சீவி சார்ஜா, கடந்த 2018-ம் ஆண்டு நடிகை மேக்னா ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மேக்னா கர்ப்பமாக இருக்கும் நிலையில், சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் மரணமடைந்தார்.
இந்நிலையில், கணவரை பிரிந்து வாடும் மேக்னா, கணவர் குறித்து டுவிட்டரில் கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சிரு, நான் உன்னிடம் சொல்ல நினைத்ததை வார்த்தைகளாக்கி சொல்ல மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகிலிருக்கும் அத்தனை வார்த்தைகளைச் சேர்த்தாலும் விவரிக்க முடியாது. என் நண்பன், என் காதலன், என் பார்ட்னர், என் குழந்தை, என் நம்பிக்கைக்குரியவர், என் கணவர் - இவை அனைத்தையும் விட மேலானவன் நீ. என் ஆன்மாவின் ஒரு அங்கம் நீ.

நான் ஒவ்வொரு முறையும் வாசல் கதவைப் பார்க்கும்போதும் இனம் கண்டுகொள்ள முடியாத ஒரு வலி என் ஆன்மாவைத் தாக்குகிறது. நீ உள்ளே நுழைந்து நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று சொல்வதை பார்க்க முடியவில்லையே என்று. ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் உன்னைத் தொட முடியாததை உணரும்போது, என் இதயம் மூழ்குவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. நான் சோர்வடையும் போதெல்லாம் நீ என்னைக் காக்கும் தேவதையாக என்னைச் சுற்றி இருக்கிறாய்.
நீ என்மீது அளவில்லா காதல் வைத்திருப்பதால்தான் உன்னால் என்னைத் தனியாக விட்டுப் போக முடியவில்லை. இல்லையா? நம் காதலின் சின்னமாக, நீ எனக்குத் தந்த விலை மதிப்பில்லா பரிசுதான் நம் குழந்தை. அந்த இனிய அற்புதத்துக்காக நான் என்றென்றும் உனக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன்.
உன்னை நம் குழந்தை வடிவில் இந்த பூமிக்குக் மீண்டும் கொண்டு வரும் நாளை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். மீண்டும் உன்னை குழந்தையாக என் கையில் ஏந்தும் நாளுக்காக காத்திருக்கிறேன். உன் சிரிப்பை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அறையையே ஒளிரச் செய்யும் உன் சிரிப்பைக் கேட்க ஆவலுடன் உள்ளேன். நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். நீங்களும் எனக்காகக் காத்திரு. என் மூச்சு இருக்கும்வரை நீயும் வாழ்வாய். நீ என்னுள் இருக்கிறாய்." என குறிப்பிட்டுள்ளார்.
MY CHIRU FOREVER ❤️ pic.twitter.com/sqON30wHKR
— MEGHANA RAJ (@meghanasraj) June 18, 2020
ரஜினி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பேட்ட படத்தின், இரண்டாம் பாகம் உருவாகுமா என்பது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி நடித்த பேட்ட படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வந்தப் இப்படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். பேட்ட படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 'பேட்ட 2' குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: "படம் எடுக்கும்போது 2-ம் பாகம் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. ஆனால் படம் வெளியான பின்னர் 2-ம் பாகத்துக்கான சாத்தியங்கள் குறித்து ரசிகர்கள் நினைத்தது சுவாரஸ்யமாக இருந்தது. என்னிடம் பலர் அது பற்றிக் கேட்க ஆரம்பித்தனர். சிலரோ அது எப்படி இருக்க வேண்டும் என்று யோசனைகள் கூறினர்.

'பேட்ட 2' படத்துக்கான யோசனைகள் என சமூக வலைத்தளங்களில் எங்களுக்குச் செய்தி அனுப்புவார்கள். அவை அனைத்துமே சுவாரஸ்யமாக இருந்தன. 'பேட்ட 2' படத்தின் கதை என்னவாக இருக்கலாம் என்பது வரை கூட சிலர் ஐடியா கொடுத்தனர். ஆனால் இப்போதைக்கு 'பேட்ட 2'- படத்துக்கான கதை என்னிடம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் அது நடக்கலாம்". என அவர் கூறினார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, சுஷாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "மிகுந்த துயரமான நாட்களாக இந்த சில நாட்கள் கடந்து போகின்றன.. டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகிய மூவருமே எனது அன்பிற்குரிய நண்பர்கள். இவர்களது இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. சினிமாவிற்கான இழப்பாகப் பார்க்கிறேன். எனது நண்பர்களை இழந்துவிட்ட பேரிழப்பாகப் பார்க்கிறேன். இவர்களின் ஆன்மா, இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்.
இழப்பால் துயருறும் மூவரின் குடும்பத்திற்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஆறுதலும் அவர்களைத் தேற்றிவிடாது என்பதறிவேன். எனது கண்ணீரும் இதயமும் உங்களின் இந்த நிலையை மீட்டெடுக்க வேண்டிக் கொண்டே இருக்கும். இதேபோல் கொரோனா காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸின் சத்தம். இறப்பின் கதறல்.

கொரானாவின் பாதிப்பில் மரணமடைந்த குடும்பத்திற்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தில் பேச்சுரா இசைப்புயலின் வேண்டுகோள் போல, அவரின் ரசிகர்களின் அபிமானத்தின்படி திரையரங்கில் வெளியாகி பெரு வெற்றி பெற வேண்டும். இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்திவிடாது என்பதை உலகறியச் செய்ய திரையரங்கில் வெளியாகட்டும். எனது வேண்டுகோளும் ஆசையும் அதுவே." என சிம்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதியை வைத்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் அடுத்ததாக கொரோனா குமார் என்ற படத்தை இயக்க உள்ளார்.
ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். பின்னர் காஷ்மோரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கிய கோகுல், தற்போது மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி முடித்துள்ளார். இதில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், கோகுல் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இவரின் அடுத்த படத்திற்கு 'கொரோனா குமார்' என பெயர் வைத்துள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், ஒரு விஷயம் செய்ய நினைக்கும் முடிவெடுக்கும் போது லாக்டவுன் அறிவிக்கின்றனர். அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவையாக சொல்ல உள்ளோம். இப்படத்தில் நல்லதொரு சமூக கருத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இப்படத்தின் புரோமோ வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் 2-ம் பாகமாக கொரோனா குமார் திரைப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. லாக்டவுனுக்கு பின் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
Makkal happy annachi ❤️
— VijaySethupathi (@VijaySethuOffl) June 17, 2020
Here's the smashing title promo of @DirectorGokul upcoming comic riot - #CoronaKumar
A spin-off that will bring the roof down😇https://t.co/LOh9sBko2g@sathishoffl@cinemawalaoffl@thinkmusicindia@PradeepERagav@sidvipin@palanibalan1@proyuvraaj 🥁🔊 pic.twitter.com/CIGpWgZIYO
நடிகையும் பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமானவருமான வனிதாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் ஜூன் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

பீட்டர் பற்றி வனிதா கூறும்பொழுது "அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர். வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.






