என் மலர்
சினிமா செய்திகள்
போக்கிரிகளை தண்டிக்க வேண்டும் என்று நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்திருக்கிறார்.
கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தனது சமூக வலைதளத்தில், எவரும் எவருடைய நம்பிக்கையையும் ஓரளவு கடந்து விமர்சிக்கிறேனென்று கொச்சைப்படுத்துவது பெரிதாய் பேசப்படும் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. அவரையேன் கேட்பதில்லை இவரையேன் கேட்பதில்லை என்கிற வாதமும் பயன் தராது. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு பெரிது. அதை மதிக்கத்தெரியாத போக்கிரிகள் யாராயினும் எவர்க்கெதிராயினும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும்!
— Prasanna (@Prasanna_actor) July 14, 2020
மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில் மதநம்பிக்கையினும் அதிமுக்கியம் என்று தெரிவித்துள்ளார். நடிகர் பிரசன்னாவின் இந்த கருத்துக்கு பெரும்பாலும் ஆதரவான கமெண்ட்டுக்களும் சில எதிர்ப்பு கருத்துக்களும் பதிவாகி வருகின்றன.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், அஜித்துடன் நடித்த நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நடிகர், நடிகைகள் பலர் கொரோனாவில் சிக்கி வருகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.
பிரபல சின்னத்திரை நடிகை நவ்யா சாமி, நடிகர் ரவிகிருஷ்ணா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகை ராச்சல் ஒயிட்டுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். இம்ரான் ஹாஸ்மி, கங்கனா ரணாவத் ஆகியோர் நடித்துள்ள உங்க்லி படத்திலும் நடித்து இருக்கிறார். வங்காள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

பிரபல இந்தி இயக்குனர் சஜித் நதியத்வாலா மீது மீ டூ புகார் சொல்லி பரபரப்பாக பேசப்பட்டார். ராச்சல் ஒயிட் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா சென்னை கோடம்பாக்கத்தில் புதியதாக ராஜா ஸ்டுடியோவை உருவாக்கி வருகிறார்.
இசையமைப்பாளர் இளையராஜா வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தனது பாடல்களைப் பதிவு செய்து வந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் எல்.வி.பிரசாத் இளையராஜாவுக்கு அங்கு இடம் வழங்கினார், மேலும் இளையராஜா இந்த ஸ்டுடியோவிலிருந்து மிகப் பெரிய ஹிட் பாடல்களைப் பதிவு செய்திருந்தார்.
எல்.வி.பிரசாத்தின் மகன் ரமேஷ் பிரசாத்தும், பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோ வைத்திருப்பதில் பெருமிதம் கொண்டார். ஆனால் கடந்த ஆண்டு எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத், இளையராஜாவை ஸ்டுடியோவை விட்டு வெளியேற வேண்டும் என்று விரும்பினார். அப்போது, இளையராஜாவுக்கு ஆதரவாக கோலிவுட்டும் திரண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பலன்கிடைக்கவில்லை. இளையராஜாவும் இனிமேல் பிரசாத் ஸ்டுடியோவில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்.

தற்போது இளையராஜா கோடம்பாக்கத்தில் எம்.எம்.பிரிவ்யூ தியேட்டரை ரெக்கார்டிங் ஸ்டுடியோவாக மாற்றுவதற்காக வாங்கி இருக்கிறார். இந்த ஸ்டுடியோவுக்கு ராஜா ஸ்டுடியோ என்று பெயரிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ராஜா ஸ்டுடியோ செப்டம்பரில் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆதரவற்றவர்களுக்கு நடிகரும், தயாரிப்பாளருமான பஷீர் உதவி செய்திருக்கிறார்.
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இதன் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான ஜெ.எம்.பஷீர் சென்னையில் சாலை ஓரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு தினமும் இரவில் உணவு அளித்து வருகிறார். நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜெ.எம்.பஷீர், குற்றாலம் என்ற படத்தை அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தனது டிரென்ட்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கி வருகிறார்.

மேலும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. இதில் பசும்பொன் தேவர் வேடத்தில் பஷீர் நடித்து வருகிறார்.
செய்தியாளர்களை சந்தித்த நடிகை வனிதா, அவர்கள் இருவரால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக பேட்டியளித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் கடந்த மாதம் 27-ம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், பீட்டர் பால் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக போலீசில் புகாரளித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை வனிதா, சூர்யா தேவி என்பவர் தொடர்ந்து தன் மீது அவதூறு பேசி வீடியோ வெளியிட்டு வருவதாக போரூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாரளித்திருந்தார். தற்போது மீண்டும் சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீது போலீசில் புகாரளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னைப் பற்றி சூர்யா தேவி என்பவர் யூடியூப் சேனலில் ஆபாசமாகவும் தவறாகவும் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். பணம் சம்பாதிக்க இது போல செய்து வருகிறார். போரூர் போலீசில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தேன். சூர்யா தேவி மற்றும் படத்தயாரிப்பாளர் ரவீந்திரன் சேர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர்.
இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. சினிமா தொடர்புடையவர்கள் என்னுடைய விஷயத்தில் தலையிடாதீர்கள். ஆதரவு இல்லாத பெண்களை குறிவைத்து அந்த 2 பேரும் அவதூறு பரப்புகிறார்கள். இந்த விஷயத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்றார்.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் நடித்துள்ள அயலான் படத்தின் முன்னோட்டம்.
இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தின் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.
அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற சச்சின் படத்தின், 2-ம் பாகம் குறித்து அப்படத்தின் இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளிவந்த படம் சச்சின். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். மேலும் வடிவேலு, பிபாஷா பாசு உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். தமிழில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் தெலுங்கு, இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் விஜய் நடித்துள்ள சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று அந்த படத்தின் இயக்குனர் ஜான் மகேந்திரனிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து ஜான் மகேந்திரன் கூறியதாவது, “ரசிகர்கள் இப்போதும் சச்சின் படத்தை விரும்புகிறார்கள். அதன் இரண்டாம் பாகத்தில் விஜய்யை பார்க்க எனக்கு ஆர்வம் உள்ளது. அது நடந்தால் நன்றாக இருக்கும்” எனக்கூறினார்.
என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு தேடி வந்துள்ளதாம்.
தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதை அடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. இதுதவிர நானும் ரவுடிதான், மிருதன் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

15 வயதாகும் அனிகா, ஹீரோயின்களுக்கு இணையாக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வந்தார். இதன் பலனாக அவருக்கு மலையாளத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளதாம். பள்ளி மற்றும் கல்லூரி காதலை மையமாக வைத்து உருவாகும் படத்தில் அனிகாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
தமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களைக் காட்டிலும், அதிரடியான, திரில்லரான, சஸ்பென்ஸ் நிறைந்த வெப் தொடர்களில் நடிக்கவே பல நடிகர்களும், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், பிரியாமணி ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள். பிரசன்னா, பரத், பாபி சிம்ஹா, மீனா ஆகியோர் ஏற்கனவே வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.
அந்தவகையில், தமிழ் திரையுலகின் பிஸியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி வெப் தொடரில் அறிமுகமாக உள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாக கூறிய அவர், அந்த வெப் தொடரை யார் இயக்கப்போவது என்பதை தெரிவிக்கவில்லை.

அந்த வெப் தொடரை 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 29 வயது இளம் நடிகை, இறப்பதற்கு முன் பதிவிட்ட சமூக வலைதள பதிவு வைரலாகி வருகிறது.
நடிகை திவ்யா சௌக்சி, ஹே அப்னா தில் தோ அவாரா உள்பட சில இந்தி படங்களில் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வந்தார். திவ்யா சௌக்சிக்கு சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 29. திவ்யா சௌக்சி மரணம் அடைவதற்கு முன்னால் வலைத்தளத்தில் வெளியிட்ட “நான் மரண படுக்கையில் இருக்கிறேன். ஆனாலும் உறுதியாக இருக்கிறேன். வலி இல்லாத இன்னொரு வாழ்க்கை கிடைக்கட்டும்” என்ற பதிவு வைரலாகி வருகிறது.
துப்பறிவாளன் 2 படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்த மிஷ்கின்-விஷால் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர்.
இந்த இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடித்துள்ளது. இதனிடையே விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இப்படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மீதி படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் அறிவித்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக மிஷ்கின் ஒரு வெப் தொடர் அறிமுக விழாவில் விஷாலை திட்டித்தீர்த்தார். இதனால் இவர்கள் இடையேயான பிரச்சனை திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரும் மீண்டும் கூட்டணி சேர்வது சாத்தியமில்லாத ஒன்று என்று திரையுலகில் பேசிக் கொண்டனர்.
இதனிடையே துப்பறிவாளன் 2 படத்தில் எஞ்சியுள்ள காட்சிகளை எடுக்க விஷால் தயாராகி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மிஷ்கினை மீண்டும் அழைத்து படத்தை இயக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் பரவி வருகிறது. மிஷ்கின் இயக்கினால் தான் படம் சிறப்பாக இருக்கும் என விஷால் கருதுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனாவிற்கு சவால் விடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களின் வாயிலாக புதிய புதிய சேலஞ்ச்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர்.
தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தனறு மரம் நடும் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற ஒன்றை தொடங்கி வைத்தார். இதை நடிகர் பிரபாஸ் உள்ளிட்டோர் ஏற்று மரம் நட்டனர். இதன் தொடர்ச்சியாக நடிகர் நாகார்ஜூனா மரக்கன்று நட்டு அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தார். அவரது சவாலை ஏற்று நடிகை சமந்தாவும் மரக்கன்றுகளை நடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
தான் மரக்கன்றுகளை நட்டு வைத்தது போல் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் தனது தோழி ஷில்பா ஆகியோரும் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு கிரீன் இந்தியா சேலஞ்ச் விடுத்திருக்கிறார் சமந்தா.






