search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய்
    X
    விஜய்

    விஜய்யின் சச்சின் 2-ம் பாகம் உருவாகிறதா? - இயக்குனர் விளக்கம்

    விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற சச்சின் படத்தின், 2-ம் பாகம் குறித்து அப்படத்தின் இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார்.
    விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளிவந்த படம் சச்சின். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். மேலும் வடிவேலு, பிபாஷா பாசு உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். தமிழில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் தெலுங்கு, இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

    விஜய்

    இந்த நிலையில் விஜய் நடித்துள்ள சச்சின் படத்தின் இரண்டாம்  பாகம் வருமா? என்று அந்த படத்தின் இயக்குனர் ஜான் மகேந்திரனிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து ஜான் மகேந்திரன் கூறியதாவது, “ரசிகர்கள் இப்போதும் சச்சின் படத்தை விரும்புகிறார்கள். அதன் இரண்டாம் பாகத்தில் விஜய்யை பார்க்க எனக்கு ஆர்வம் உள்ளது. அது நடந்தால் நன்றாக இருக்கும்” எனக்கூறினார்.
    Next Story
    ×