என் மலர்
சினிமா செய்திகள்
பாகுபலி என்னும் பிரமாண்ட படத்தை இயக்கிய ராஜமவுலி மற்றும் அவருடைய குடும்பத்தினரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.
இந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தல் என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமவுலிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: "
சில தினங்களுக்கு முன்பு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அது தானாகவே சரியாகிவிட்டாலும், நாங்கள் பரிசோதனை செய்து கொண்டோம். இன்று பரிசோதனை முடிவில் மிதமான கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் எங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நன்றாக உள்ளோம். ஆனால், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம்".
பிரபல நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் கருப்பு வெள்ளை சேலஞ்சுக்கு மாறி இருக்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கு சமயத்தில் பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். பலரும் சமூக வலைத்தளத்தில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். புகைப்படங்களை பதிவிட்டு வரும் சிலர் கொஞ்சம் எல்லை மீறி ஆபாசப் படங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய சேலஞ்ச் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. 'பெண்களுக்கு ஆதரவாக பெண்கள்' அதாவது, “Women supporting women” என்ற சேலஞ்சை ஆரம்பித்து வைத்தார்கள். அந்த சேலஞ்சில் கருப்பு வெள்ளை புகைப்படங்களை பிரபலங்கள் பதிவிட வேண்டும். இந்த சேலஞ்ச் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

பல சினிமா நடிகைகள் விதவிதமான கருப்பு வெள்ளை புகைப்படங்களைப் பதிவிட்டு சமூக வலைத்தளங்கள் முழுவதும் கருப்பு வெள்ளையாகவே மாற்றிவிட்டார்கள். பாலிவுட், கோலிவுட் என அனைத்து முன்னணி நடிகைகளும் அந்த சேலஞ்சில் கலந்து கொண்டு புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
பிரபல நடிகை ஒருவர் தனுசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி நடிக்க வாய்ப்பு வேண்டும் என்று வெளிப்படையாக கேட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அப்படி ட்விட்டரில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன் தனுஷை வாழ்த்தி ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது..
"ஹாப்பி பர்த்டே தனுஷ் சார். வருகின்ற வருடம் சிறப்பானதாக இருக்கட்டும். உங்களுடன் பணியாற்ற உற்சாகமாக இருக்கிறேன் (யாராவது நம் இருவரையும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வைப்பார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்)" என குறிப்பிட்டுள்ளார்

நடிகர் தனுஷுடன் ஜோடி சேர தான் விரும்புவதாக வெளிப்படையாக கூறி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நடிகை ஐஸ்வர்யாராய், அன்பைக் கண்டு இதயம் கரைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 11-ம் தேதி அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி ஐஸ்வர்யாராய் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 10 நாட்கள் சிகிச்சை பெற்ற ஐஸ்வர்யாராய், ஆராத்யா இருவரும் கடந்த ஜூலை 27-ம் தேதி நலமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நடிகை ஐஸ்வர்யாராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை எழுதியுள்ளார். அதில், “எனது குடும்பத்தினர் நலம் பெற நீங்கள் காட்டிய அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. உங்களுக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். உங்களின் இந்த அன்பைக் கண்டு எனது இதயம் கரைந்துவிட்டது. மிக்க நன்றி” என்று கூறி கையெடுத்து வணங்குவது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
பிரபல நடிகை மதுமிதா கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாத்தால் இரண்டு விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளார்.
ஒருகல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மதுமிதா. இதைத் தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மதுமிதா, சில காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலிருக்கும் மதுமிதா, பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “படப்பிடிப்பு இல்லாத, குறைந்த நாட்களில் பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டுவிட்டேன். எப்போதும் யாரையாவது சார்ந்து நிற்பது பெண்களின் கெட்ட பழக்கம்! நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்டேன். மற்றொரு ஓட்டுநர் இல்லாமல் பயணிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நடிகை பூர்ணா, திருமணத்தை நினைத்தால் பயம் வருவதாக கூறி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ள பூர்ணாவை சமீபத்தில் ஒரு கும்பல் திருமண சம்பந்தம் பேசி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரின் பேரில் குற்றவாளிகளை கைது செய்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.
இந்த நிலையில் பூர்ணா அளித்துள்ள பேட்டி வருமாறு: “எனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினர். இதற்காக மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது இந்த மோசடி கும்பல் எங்களை பெண்கேட்டு அணுகியது. இரு குடும்பத்தினரும் பேசி திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். என்னை மணக்க இருந்தவரும் நானும் திருமணத்துக்கு பிறகு எப்படி வாழ வேண்டும் என்பது பற்றியெல்லாம் பேசினோம்.

அதன்பிறகு எதிர்பாராத சம்பவங்களால் நிலைமை மாறிவிட்டது. அந்த போலிகும்பல் எங்களிடம் அன்பாக பழகி ஏமாற்றினார்கள். அவர்களை நினைத்தாலே எனக்கு அச்சம் வருகிறது. யாரை நம்புவது என்றே தெரியவில்லை. எனவே இப்போது திருமணம் வேண்டாம் என்று பெற்றோர்களிடம் கூறிவிட்டேன். திருமணத்தை நினைத்தாலே எனக்கு பயம் வருகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள நடனத்தில் கவனம் செலுத்துகிறேன்.” இவ்வாறு பூர்ணா கூறினார்.
விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத், கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் என கூறி உள்ளார்.
தமிழில் காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது விஷாலின் சக்ரா, மாதவனுடன் மாரா ஆகிய படங்களில் நடிக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
ஸ்ரத்தா ஸ்ரீநாத் அளித்த பேட்டி வருமாறு: “எனக்கு நயன்தாரா, சமந்தாவை மிகவும் பிடிக்கும். சினிமா துறை ஆணாதிக்கம் நிறைந்தது. இதில் அவர்கள் தாக்குப்பிடித்து சாதித்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கின்றனர்.

இதுபோல் மேலும் சில நடிகைகளும் சாதிக்கிறார்கள். அவர்களை மாதிரி உயர ஆசைப்படுகிறேன். பெரியவர்கள் நிச்சயம் செய்யும் திருமணங்கள் தோல்வி அடைகிறது என்று சொல்ல மாட்டேன். ஆனால் எனக்கு வரப்போகிற கணவர் என்னை புரிந்து கொள்ள வேண்டும். நானும் அவரை புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே கண்டிப்பாக காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். இப்போது யாரையும் காதலிக்கவில்லை. நிஜ வாழ்க்கையில் நான் துணிச்சல் உள்ளவள். அதற்காக புகைப்பிடிப்பேன். மது அருந்துவேன் என்று நினைக்க வேண்டாம். எவ்வளவு பெரிய பொறுப்பையும் தைரியமாக ஏற்பேன். இதுதான் துணிச்சல் என்பதன் பொருள்”. இவ்வாறு ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறினார்.
கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் அடர்ந்த வனப்பகுதியில் பேரிஜம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வனத்துறையினர் அனுமதி பெற்றுதான் உள்ளே செல்ல வேண்டும். இங்கு கடந்த 17-ந்தேதி நடிகர்கள் விமல், சூரி மற்றும் சினிமா பட இயக்குனர்கள் சிலர் எந்த அனுமதியும் பெறாமல் 3 வாகனங்களில் வந்தனர். இவர்களுக்கு வனத்துறையினர் மற்றும் கொடைக்கானல் நகரை சேர்ந்த பலர் உதவியுள்ளனர். இதனிடையே இ-பாஸ் இல்லாமல் அவர்கள் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு வந்து சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஆர்.டி.ஓ. சிவகுமார் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கொடைக்கானல் போலீசில் கடந்த 24-ந்தேதி ஒரு புகார் மனு அளித்தார். அதில் நடிகர்கள் விமல், சூரி உள்பட அனைவரும் இ-பாஸ் இல்லாமல் கடந்த 15-ந்தேதி கொடைக்கானலுக்கு வந்து தங்கியுள்ளனர். 17-ந்தேதி அவர்கள் வனப்பகுதிக்கு சென்று பேரிஜம் ஏரியில் மீன்பிடித்து பொழுதுபோக்கில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
எனவே அவர்கள் இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு வந்தது குறித்து பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், நோய் தொற்றினை பரப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் நடிகர்கள் விமல், சூரி, இயக்குனர்கள், உள்ளூர் முக்கிய பிரமுகரான காதர்பாட்சா மற்றும் அவர்களுக்கு உதவிய உள்ளூர் நபர்கள் உள்பட மேலும் பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் காதர்பாட்சா எவ்வாறு நடிகர்கள், இயக்குனர்களை அழைத்து வந்தார் என்பது குறித்தும், அவர்கள் வந்த 3 வாகனங்கள் யாருடையது என்பது குறித்தும், வெள்ளிநீர்வீழ்ச்சியில் உள்ள சோதனைச்சாவடியை அவர்கள் எவ்வாறு கடந்து வந்தனர்?, அல்லது வேறு ஏதாவது வழியில் வந்தார்களா?, நடிகர் சூரியின் உறவினர் வீட்டில் அவர்கள் தங்கி இருந்தார்களா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் விரைவில் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி நடித்துவந்த அண்ணாத்த படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் தகவல் பரவிய நிலையில், படக்குழு அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கி ஐதராபாத் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால் திடீரென்று கிளம்பிய கொரோனா பரவலால் படப்பிடிப்பு நின்று போனது. கிட்டத்தட்ட 4 மாதங்களாக படப்பிடிப்பு முடங்கி இருக்கிறது.
மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கும் நிலை இருப்பதால் கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகே படப்பிடிப்பை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்த இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு தள்ளி வைத்தனர்.

படப்பிடிப்புகளை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டு வருதால் பொங்கலுக்கு படம் ரிலீசாகுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் 50 சதவீத படப்பிடிப்புகள் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அண்ணாத்த படம் கைவிடப்பட்டு விட்டதாகவும் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை எற்படுத்தியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். அண்ணாத்த படத்தை கைவிட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். அனுமதி கிடைத்ததும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்படும்” என்றனர்.
சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வில்லன் தோற்றம் அடங்கிய போஸ்டரை கே.ஜி.எப் 2 படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரஷாந்த் நீல் - யஷ் கூட்டணியில் 2018ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி நல்ல வசூல் செய்தது. இப்படம் ஜப்பான், கொரியா முதலிய அயல் நாடுகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார்.
இன்று சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வில்லன் தோற்றம் அடங்கிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத், ஆக்ரோஷ வில்லனாக அதீரா என்ற கேரக்டரில் நடிக்கிறார். முதல் பாகம் ஹிட்டானதால், 2-ம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதை அதிகரிக்கும் வகையில், இந்த படத்தின் போஸ்டர்கள் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ADHEERA’-Inspired by the brutal ways of the vikings 🔥
— Maalai Malar News (@maalaimalar) July 29, 2020
Happy Birthday @duttsanjay sir.#KGFChapter2#AdheeraFirstLook@hombalefilms@VKiragandur@TheNameIsYash@prashanth_neel@SrinidhiShetty7@TandonRaveena@bhuvangowda84@BasrurRavi@excelmovies@onlynikilpic.twitter.com/feh1dE1t0s
சுற்றுச்சூழல் காக்க மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுற்று சூழல் தாக்க வரைவில் மாற்றம் வேண்டும் எனக்கூறி நடிகர் கார்த்தி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையை குறிப்பிட்டு நடிகர் சூர்யா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்” என பதிவிட்டுள்ளார்.
நடிகர் கார்த்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தியாவில் இப்போது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களே, நம் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை. ஆனால், தற்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.
மரங்களையும் விவசாய நிலங்களையும் அழித்து நெடுஞ்சாலைகள் போடுவதும் இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைப்பதும் நிச்சயம் வளர்ச்சி அல்ல. இந்த வரைவு அறிக்கையில் பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம்’ என்கிற ஒரு சரத்தே, அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.. #EIA2020https://t.co/le0hgpzHPX
— Suriya Sivakumar (@Suriya_offl) July 29, 2020
இந்தச் சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்? இந்த வரைவு அறிக்கையின் சாதக பாதக அம்சங்களை பொது விவாதமாக்கி, அதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மின்னஞ்சல் முகவரியில் ஆகஸ்டு 11-ந்தேதிக்குள் நம் கருத்துகளை பதிவு செய்வோம். அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்துகளுக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வரவேண்டுமென மக்களில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு கார்த்தி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பற்றி பேசி வரும் நிலையில் குரூப்பிசம் ஆதிக்கம் இருப்பதாக நட்டி நட்ராஜ் கூறியுள்ளார்.
வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தொடர்பான பிரச்சினை இந்தி பட உலகில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்தி பட உலகிற்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சதுரங்க வேட்டை, மிளகா உள்ளிட்ட படங்களில் நடித்த நட்டி நடராஜ் தமிழ் திரையுலகை பற்றி பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ் சினிமாவில், வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் இருக்கிறதா? இல்லையா? எனத் தெரியாது..., ஆனால், குரூப்பிசம் இருக்கிறது. யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க????... என்று டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.






