search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பு வெள்ளை"

    • சிறப்பு பாடல், நடனம், கவிதை மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது
    • ஆசிரியர்களும் கருப்பு வெள்ளை நிறங்களில் ஆடை அணிந்து இவ்விழாவில் கலந்துகொண்டனர்

    கன்னியாகுமரி :

    கருங்கல் பாலூரில் இயங்கிவரும் பெஸ்ட் மே ல்நிலைப்பள்ளியில் வெள்ளை உள்ளம் கொண்ட மழலையர்களால் நீதி நேர்மையை வெளிப்படுத்தும் நிறமான கருப்பு வெள்ளை நிற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னி லை வகித்தனர்.

    இந்நிகழ்வில் மழலையர் பிரிவின் மாணவர்கள், கருப்பு வெள்ளை வண்ண ஆடைகளை அணிந்து வந்து கலந்துகொண்டனர். மேலும் நோக்கவுரை, சிறப்பு பாடல், நடனம், கவிதை மற்றும் மழலையர்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழா மேடையானது பலவிதமான கலைப்பொருட்களால் அழகுபடுத்தப்பட்டு கண்ணை கவரும் விதமாக இருந்தது. இவை அனைத்தும் கருப்பு வெள்ளை நிற கருப்பொருட்களை விளக்கும் வண்ணமாக இருந்தது.இந்நிகழ்வானது மழலை யர்கள் கருப்பு வெள்ளை தொடர்பான பொருட்க ளையும், சாலை விதிகளின் முக்கியத்துவத்தினையும் அறிந்து கொள்ளும் விதமாக அமைந்திருந்தது. மேலும் ஆசிரியர்களும் கருப்பு வெள்ளை நிறங்களில் ஆடை அணிந்து இவ்விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் மேற்பார்வையில் மழலையர் பிரிவு ஆசிரியர்கள், மழலை யர்கள் மற்றும் இதர பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×