என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல இசையமைப்பாளரான இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது புகார் அளித்துள்ளார்.
    இசையமைப்பாளர் இளையராஜா வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தனது பாடல்களைப் பதிவு செய்து வந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் எல்.வி.பிரசாத் இளையராஜாவுக்கு அங்கு இடம் வழங்கினார், மேலும் இளையராஜா இந்த ஸ்டுடியோவிலிருந்து மிகப் பெரிய ஹிட் பாடல்களைப் பதிவு செய்திருந்தார்.

    எல்.வி.பிரசாத்தின் மகன் ரமேஷ் பிரசாத்தும், பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோ வைத்திருப்பதில் பெருமிதம் கொண்டார். ஆனால் கடந்த ஆண்டு எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத், இளையராஜாவை ஸ்டுடியோவை விட்டு வெளியேற வேண்டும் என்று விரும்பினார். அப்போது, இளையராஜாவுக்கு ஆதரவாக கோலிவுட்டும் திரண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பலன்கிடைக்கவில்லை. இளையராஜாவும் இனிமேல் பிரசாத் ஸ்டுடியோவில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்.

    இளையராஜா

    தற்போது இளையராஜா கோடம்பாக்கத்தில் எம்.எம்.பிரிவ்யூ தியேட்டரை ரெக்கார்டிங் ஸ்டுடியோவாக மாற்றுவதற்காக வாங்கி அதற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார்.

    தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்த இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது புகார் அளித்துள்ளார்.
    ஏ.ஆர்.ரகுமானால் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்ட இளம் பாடகி அவரை இசையால் ஈர்த்துள்ளார்.
    வளர்ந்து வரும் தமிழ் பின்னணி பாடகி தர்ஷனா கே.டி., இவர் ஏ.ஆர்.ரகுமானால் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டார்.

    அழகிய தமிழ் மகன் படத்தில்  "மதுரைக்கு போகாதடி" பாடலின் மூலம் அறிமுகமான இவர், ஓகே கண்மணியில் "காரா ஆட்டக்காரா", "தீர உலா", காஞ்சனா 2 வில் "கருப்பு பேரழகா", ஓகே கண்மணி ஆந்திர மொழியில் "மெண்டல் மனதில்" மற்றும் இந்தியில் பல  பாடல்களை பாடியுள்ளார்.

    பாடகி தர்ஷனா

    தற்போது இவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் "99" என்ற  கவர் ஆல்பத்தைஹேங்டிரம் என்ற புதிய இசை கருவியை பயன்படுத்தி இந்த பாடலை உருவாக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் பல பாடல்களை பாடியிருந்தாலும் இவர் உருவாக்கிய 99 என்ற கவர் ஆல்பம் ஏ.ஆர்.ரகுமானை மிகவும் ஈர்த்துள்ளது. 

    ஏ.ஆர்.ரகுமான் இந்த ஆல்பத்தை  பார்த்தது மட்டும் இல்லாமல் அவருடைய  சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தது, எனக்கு  புதிய உற்சாகத்தையும் அடுத்தகட்ட இடத்திற்கு நான் செல்வதற்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன் என்று பாடகி தர்ஷனா கூறியுள்ளார்.
    நகைச்சுவை நடிகர் வடிவேலு அறிமுகமாகும் வெப் தொடரை, இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பட வேலைகள் கொரோனாவால் தடைபட்டுள்ளது.

    சுராஜ், வடிவேலு

    இந்த நிலையில் தலைநகரம், படிக்காதவன், மருதமலை போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. படப்பிடிப்பை கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்கும் முடிவில் இருந்த நிலையில், வடிவேலு திடீரென்று சினிமாவுக்கு பதில் வெப் தொடராக அதை எடுக்கும்படி சுராஜிடம் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கதையில் சில மாற்றங்கள் செய்து வெப் தொடருக்கு தகுந்தாற்போல் கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. காமெடி கலந்த பேய்க்கதையாக உருவாகும் இந்த வெப் தொடர் ஒன்பது எபிசோடுகளாக உருவாகிறது. 
    ரஜினியுடன் பேசிய ஆடியோ லீக்கானது வருத்தமளிப்பதாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம்  ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தேசிங்கு பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ரீதுவர்மா உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்திற்கு பின் வேறு எந்த படமும் வெளியாகாமல் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி தளத்திலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

    சமீபத்தில் இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த், இயக்குனர் தேசிய பெரியசாமிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருந்தார். ரஜினியின் வாழ்த்தை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு பின் ரஜினி அவருடன் பேசிய போன் ஆடியோ சமூக வலைத்தளங்களில் கசிந்து வைரலானது. 

    அந்த ஆடியோவில் படம் சூப்பர் என பாராட்டி பேசியுள்ள ரஜினி, இவ்வளவு நாட்கள் கழித்து படத்தை பார்த்ததற்காக மன்னிப்பும் கேட்டிருக்கிறார். மேலும் முடிந்தால், தனக்கும் ஒரு கதை தயார் செய்யும்படி ரஜினி அதில் கேட்டிருக்கிறார்.

    தேசிங்கு பெரியசாமியின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில் ரஜினியுடன் பேசிய ஆடியோ கசிந்தது பற்றி வருத்தம் தெரிவித்து தேசிங்கு பெரியசாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: வாழ்த்து சொன்ன எல்லாருமே "என்கிட்டயே தலைவர் பேசின மாதிரி அவ்வளோ சந்தோஷம்னு சொல்றாங்க". இவ்வளவு அன்பு காட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி. அந்த உரையாடல் லீக் ஆனது எனக்கு சந்தோஷம் இல்லை. அது மிகவும் பர்சனல் கால். என்னுடைய டுவிட்டில் கூட நான் தலைவரின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் இது துரதிஷ்டவசமாக நடந்துவிட்டது. எல்லாம் நன்மைக்கே. அன்பு மற்றும் ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறிக் கொள்கிறேன்" என தேசிங்கு பெரியசாமி கூறி உள்ளார்.
    பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘பிச்சைக்காரன்-2’ படத்திற்காக நடிகர் விஜய் ஆண்டனி உடல் எடையை குறைத்துள்ளாராம்.
    விஜய் ஆண்டனி நடித்த படங்களில் நீண்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடி, அதிக வசூல் செய்த படம், ‘பிச்சைக்காரன்.’ சசி இயக்கிய அந்தப் படம், தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டு அங்கும் அதிக வசூல் செய்தது. அதைத் தொடர்ந்து ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க விஜய் ஆண்டனியின் பட நிறுவனம் முடிவு செய்தது. இது, அந்த நிறுவனத்தின் 10-வது தயாரிப்பு. பிரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார். இவர், தேசிய விருது பெற்ற ‘பாரம்’ படத்தை இயக்கியவர். 

    இதுபற்றி தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி கூறியதாவது: “பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம், அதே பெயரிலேயே உருவாகிறது. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யாமேனன் அல்லது அவரைப் போன்ற நடிப்புத் திறன் மிகுந்த கதாநாயகி நடிப்பார். பிரியா கிருஷ்ணசாமி இயக்குனராக அமைந்தது படத்தின் வெற்றியை உறுதி செய்து இருக்கிறது.

    பிச்சைக்காரன் 2 போஸ்டர்

    விஜய் ஆண்டனி நடித்த படங்களிலேயே மிக அதிக செலவில் தயாராகும் படம், இதுதான். படத்துக்காக அவர் உடல் எடையை 15 கிலோ குறைத்து இருக்கிறார். ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் வாபஸ் பெற்று படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்ததும், ‘பிச்சைக்காரன்-2’ படம் வளர ஆரம்பிக்கும்.” இவ்வாறு அவர் கூறினார்.
    சுஷாந்துடன் லிவ்விங்-டூ-கெதராக ஓராண்டு வாழ்ந்ததாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
    இந்தி நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன் சுஷாந்தின் தந்தை, சுஷாந்த் காதலி ரியா சக்ரவர்த்தி மீது பாட்னா போலீசில் புகார் அளித்திருந்தார். ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் சுஷாந்தை ஏமாற்றியதாகவும், மன ரீதியாக துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

    சுஷாந்த் சிங், ரியா சக்ரவர்த்தி

    இந்நிலையில், தன் மீதான புகாரை பாட்னாவிலிருந்து மும்பைக்கு மாற்றக்கோரி நடிகை ரியா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளாராம். அதில், சுஷாந்துடன் நான் கடந்த ஓராண்டு காலமாக லிவ்விங்-டூ-கெதராக ஜுன் 8 வரை வாழ்ந்தேன். அதன்பின் அவரது வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். சுஷாந்த் கடுமையான மனஉளைச்சலில் இருந்ததாகவும் ரியா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாராம். மேலும், தன்னைத் துன்புறுத்தவே சுஷாந்த்தின் தந்தை, இப்படி ஒரு புகாரை கொடுத்துள்ளதாக நடிகை ரியா, குற்றம் சாட்டியுள்ளார்.
    டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துக்ளக் தர்பார் படத்தின் முக்கிய அப்டேட்டை விஜய் சேதுபதி வெளியிட்டு உள்ளார்.
    நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.

    அரசியல் கதைகளத்துடன் உருவாகி உள்ள இப்படத்தின் அப்டேட்டை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு உள்ளார். அதன்படி இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியீட்டு தேதியை அறிவித்து உள்ளனர்.  ‘அண்ணாத்தேசேதி’ என்ற பாடலை வருகிற திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.
    இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
    இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதாக பாரத் முன்னணி அளித்த புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    வேலு பிரபாகரன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    பாலிவுட் நடிகர் சுஷாந்தை தொடர்ந்து மற்றொரு இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டு இறந்தபின் நட்சத்திரங்களின் மன அழுத்தம் குறித்த விவதாங்களும், தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வும் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. ஆனாலும் அதை தொடர்ந்து கன்னட இளம் நடிகரான சுஷீல் கவுடா என்பவரும் மன அழுத்தம் காரணமாக ஜூலை-8  தற்கொலை செய்துகொண்டார்.

    இந்த நிலையில் மராத்திய நடிகர் அஷுதோஷ் பக்ரே என்பவரும் மன அழுத்தம் காரணமாக தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிகழ்வு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    அஷுதோஷ் பக்ரே
     அவருடைய பெற்றோர் கொடுத்த தகவலின் பேரின் பாக்ரேவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பினார்கள். தற்கொலைக்கான காரணம் குறித்தும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெரிய பியூச்சர் இருக்கு உங்களுக்கு என்று நடிகர் ரஜினிகாந்த், இளம் இயக்குனர் ஒருவரை பாராட்டி இருக்கிறார்.
    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தேசிங்கு பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ரீதுவர்மா உள்பட பலர் நடித்திருந்தார்கள்.

    இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்திற்கு பின் வேறு எந்த படமும் வெளியாகாமல் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி தளத்திலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

    இயக்குனரின் பதிவு

     இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த், இயக்குனர் தேசிய பெரியசாமிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினியின் வாழ்த்தை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘"சூப்பர்.. எக்ஸலண்ட்.. ஹா.. ஹா.. ஹா.. வாழ்த்துக்கள்.. பெரிய பியூச்சர் இருக்கு உங்களுக்கு". காலையில் இருந்து இதுமட்டும் தான் கேட்டுகிட்டு இருக்கு காதுல. பறந்துட்டு இருக்கேன். அனைவருக்கும் நன்றி" என்று பதிவு செய்துள்ளார்.

     இந்த டுவிட்டில் தேசிங்கு பெரியசாமி, ரஜினியின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் டுவீட்டின் இடையிடையே பாபா முத்திரையை அவர் குறிப்பிட்டுள்ளதால் ரஜினியிடம் இருந்து கிடைத்த பாராட்டு தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    பிரபல டான்ஸ் மாஸ்டர் ஒருவர், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு நடன அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
    கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். இவர் கடந்த மாதம் 14-ம் தேதி மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது மறைவு பாலிவுட்டில் பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தின. சுஷாந்த் சிங்கின் தற்கொலை குறித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

     சுஷாந்த் சிங் கடைசியாக நடித்திருக்கும் படம் ‘தில் பேச்சாரா’. ஜான் க்ரீன் எழுதிய "தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்" என்ற நாவலை மையமாகக் கொண்டு முகேஷ் சாப்ரா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

    சதீஷ்

    இந்நிலையில் சுஷாந்த் சிங்குக்கு பிரபல டான்ஸ் மாஸ்டர் சதீஷ் நடன அஞ்சலி செலுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
    குரூப்பிசம் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும் என்று சிம்பு பட தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
    நெப்போடிசம் போலவே குரூபிசம் என்ற வாசகம் கோலிவிட்டில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சிம்புவை வைத்து மாநாடு படத்தை தயாரித்து வரும் சுரேஷ் காமாட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

    பாலிவுட்டில் மட்டுமல்ல குரூப்பிசம் இங்கும் உள்ளது. நடிகர்களிடம் உள்ளதோ இல்லையோ ஒருசில தயாரிப்பாளர்களிடம் உள்ளது. அவர்களால்தான் மிகப் பழமையான தயாரிப்பாளர்களும் ஒதுங்கியிருப்பதுவும் அதனால்தான். தான் மட்டுமே வாழவேண்டும் என நினைக்கும் அந்த பிரபல தயாரிப்பாளர் தன் பலத்தால் சில பல தயாரிப்பாளர்களை உடன் சேர்ந்துகொண்டு பலரை வாழவிடாமல் கெடுத்துக்கொண்டிருக்கிறார்.

    சிம்பு , சுரேஷ் காமாட்சி

    ஹீரோக்களுக்கு போன் பண்ணி கெடுத்துவிடுவதும், பைனான்சியர்களை கலைத்துவிடுவதும், படத்தைப் பற்றி கேவலமாக கிளப்பிவிட்டு விநியோகஸ்தர்களிடம் பீதியை உருவாக்குவதுமாக முன்னால் விட்டு பின்னால் செய்யும் வேலையை வெற்றிகரமாக செய்துவருகிறார்.

     அதற்கு சில தயாரிப்பாளர்கள் உடன் பட்டு நிற்பதுதான் வேதனை. வெகுவிரைவில் முகத்திரைகள் கிழியும். அதற்கு நடுவில் பாலிவுட் போல யாரும் தற்கொலை அது இதுன்னு இறங்கிவிடக்கூடாது. குரூப்பிசம் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×