என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை வனிதா மீது சென்னை போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சர்ச்சை ஆனது. இந்நிலையில் நடிகை வனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

     ஐயப்பன்தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொதுசெயலாளர் நிஷாதோட்டா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வனிதா

    தனது திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் ஆட்களை திரளசெய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

     முன்னதாக தன்னையும், தனது கணவரையும் தாக்கி பேசியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.
    ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா என்பதற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
    கடந்த சில தினங்களுக்கு முன், நடிகர் ரஜினிகாந்த் லம்போர்கினி காரில் கேளம்பாக்கதிற்கு சென்று வந்தார். அவருடன் அவரின் மகள் சவுந்தர்யா, அவரின் கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் சென்றிருந்தனர்.

      ரஜினி கார் ஒட்டிய அந்த புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதேசமயத்தில், ரஜினி இ பாஸ் எடுத்துதான் சென்றாரா என பலரும் கேள்வி எழுப்பிவந்தனர்.

      இதன்காரணமாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என்பது பற்றி ஆய்வு நடத்தி வருவதாக தெரிவித்தார். 

     இந்நிலையில், ரஜினிகாந்த் இ பாஸ் எடுத்துதான் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் சென்றார் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். மேலும், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அவர் இ பாஸ் பெற்றது ஆய்வின் முடிவில் தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
    நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் பட குழுவினர் அவருக்கு கிப்ட் கொடுத்துள்ளனர்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனுஷூக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள்.

    தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டைட்டில் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வாளை பல கைகள் இணைந்து தூக்கி பிடித்துள்ளன.

    தனுஷ்

    அதேபோல், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    கர்ணன் டைட்டில் லுக் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் மாரி செல்வராஜ், “நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது” என்று கூறியுள்ளார். தற்போது இந்த போஸ்டரும் பாடலும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    நடிகைகள் நயன்தாராவும், ரம்யா கிருஷ்ணனும், கோடிக்கணக்கில் நிலம் வாங்கி ஏமாந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    முன்னணி நில வணிக நிறுவனம் ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான ஏரி நீர் ஆதாரம் கொண்ட புறம்போக்கு நிலத்தை நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சச்சின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது. 

    விவசாயிகளிடமிருந்த புறம்போக்கு நிலங்களை ஏக்கர் ஒன்றுக்கு 5 லட்ச ரூபாய்க்கு மட்டுமே வாங்கி, அதனை ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு பிரபலங்களிடம் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகை நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்டோர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏக்கர் கணக்கில் இந்த நிலத்தை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்

    இந்த நிலையில் தற்போது இந்த நிலத்தில் எந்தவித கட்டுமான பணிகளும் மேற்கொள்ள முடியாது என்றும் அவை நீர் ஆதாரம் கொண்ட புறம்போக்கு நிலம் என்றும் தெரிய வந்துள்ளதால் இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை செய்து அந்த குறிப்பிட்ட நில வணிக நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்களாம். 

    தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரம், அந்த நில வணிக நிறுவனத்தில் உள்ள பங்குதாரர்களிடையே ஏற்பட்டுள்ள மோதலால் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    மாறி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன் நடிக்கும் கர்ணன் படத்தின் முன்னோட்டம்.
    தனுஷின் 41-வது படம் கர்ணன். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்குகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். 

    யோகிபாபு, லால், கவுரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது.

    தனுஷ்

    யுகபாரதி பாடல்களை எழுதி உள்ளார். திலீப் சுப்புராயன் ஸ்டாண்ட் பணிகளை கவனிக்கிறார். தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
    நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
    நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. பீட்டர் பால் முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது.

    இந்த விவகாரத்தில் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் வனிதாவை பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இவர்கள் மீது வடபழனி காவல் நிலையத்தில் வனிதா புகார் அளித்தார். பின்னர் சூர்யாதேவி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன்

    இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு யூடியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்த ஸ்கைப் நேர்காணலின்போது, வனிதா விஜயகுமார் என்னையும் எனது கணவரையும் அநாகரிக வார்த்தைகளால் தாக்கி பேசியிருந்தார். 

    என்னுடன் பேச வேண்டும் என்று வனிதா விஜயகுமார் தான், அந்த சேனலை தொடர்பு கொண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார். ஆனால் நேர்காணலில் வேண்டுமென்றே தவறாக பேசினார். பின்னர் அது ஒளிபரப்பும் செய்யப்பட்டிருந்தது.

    அதை தொடர்ந்து, நானும், எனது கணவரும் எங்களது வழக்கறிஞர் மூலமாக வனிதா விஜயகுமாருக்கு குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதன்படி, வடபழனி மகளிர் போலீஸ் நிலையம், வடபழனி துணை கமிஷனர் மற்றும் தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையம் ஆகியோருக்கும் நோட்டீசின் நகல் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
    கொரோனாவில் இருந்து ஒரே வாரத்தில் குணமடைந்த விஷால், அதற்காக தான் பயன்படுத்திய மருந்துகளை வெளியிட்டு உள்ளார்.
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சினிமா பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  உள்ளனர். அந்தவகையில் விஷாலும், அவரது தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் விஷாலின் உதவியாளர் ஹரி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே வாரத்தில் குணமடைந்தனர். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமானதாக விஷால் தெரிவித்திருந்தார்.  

    இந்நிலையில் தாங்கள் பயன்படுத்திய மருந்தின் விவரங்களை வெளியிட்டுள்ள விஷால், பலர் கேட்டு கொண்டதற்கு இணங்க அதனை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்றும், அனைத்து ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருந்தகங்களில் இது கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    எதிலும் பின்வாங்காத போராளியாக என்னை மாற்றியது ‘தல’ அஜித் தான் என நடிகர் பிரசன்னா நெகிழச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
    நடிகர் அஜித், சினிமாக்கு வந்து 28 ஆண்டுகள் ஆவதையொட்டி நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் அஜித்தின் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடுகிறார்கள். 

    அமராவதி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அஜித் தொடர்ந்து வான்மதி, காதல் கோட்டை, ராசி, உல்லாசம், காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், தீனா, வரலாறு, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரம், வேதாளம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். 

    பிரசன்னாவின் டுவிட்டர் பதிவு

    அவரது இந்த 28 வருட திரையுலக பயணத்தை கவுரவிக்கும் விதமாக, ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நடிகர்கள் பிரசன்னா, பிரேம்ஜி, மகத், நடிகைகள் பூனம் பாஜ்வா, நிக்கி கல்ராணி, பார்வதி நாயர், நந்திதா, இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட திரையுலகினர் பலர் அஜித்துக்காக பொது முகப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    நடிகர் பிரசன்னா அஜித் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “நடிகனாக வேண்டும் என்ற எனது கனவுக்கு வலுசேர்த்து, என்னை நானே செதுக்கிக் கொள்ள கற்றுக்கொடுத்து, தோல்விகளை கடந்து கஷ்ட காலத்தில் என்னை தாங்கி பிடித்து பின்வாங்காத போராளியாக மாற்றியது தல அஜித்குமார்” என்று பாராட்டி உள்ளார்.
    நடிகர் ஷாம் நள்ளிரவில் போலீசாரால் கைது செய்யப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு பகுதியில் சினிமா நடிகர் ஷாமுக்கு சொந்தமான, அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடுவதாகவும், சூதாட்டம் நடப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நேற்றிரவு அடுக்குமாடி குடிருப்பில் உள்ள வீட்டில் திடீரென சோதனைஅநடத்தினர். அப்போது நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை ஜாமினில் விடுவித்தனர்.

    ஷாம்

    நடிகர் ஷாம், இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை சூதாட்ட கிளப் போல் நடத்திவந்ததும், தொடர்ந்து பல நாட்களாக இங்கு இயக்குனர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலர் இது போன்று சட்டவிரோதமாக சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சூதாட்ட புகாரில் நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நடிகர் ஷாம் தமிழில், இயற்கை, 12பி, லேசா லேசா,  உள்ளம் கேட்குமே, தில்லாலங்கடி போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியிருப்பதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு தெரிவித்துள்ளார்.
    நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி பட உலகில் வாரிசுகள் ஆதிக்கம் இருப்பதும் வெளியில் இருந்து வருபவர்களை வளரவிடாமல் அவர்கள் தடுப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியிருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் ரகுமானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொந்தளித்து வருகிறார்கள். கவிஞர் வைரமுத்து உள்பட திரையுலக பிரபலங்களும் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படும் இந்தி திரையுலகினரை சாடி உள்ளனர்.

    இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-



    பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் திரு. @arrahman தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    மன அழுத்தத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பிரபல கன்னட நடிகையை சுதீப் தன்னுடைய குழுவினரை அனுப்பி காப்பாறியுள்ளார்.
    கன்னடத்தில் இளம் நடிகையாக அறியப்படுபவர் ஜெயஸ்ரீ ராமையா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு கன்னட பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். கன்னட கொத்திலா, உப்பு குலி காரா ஆகிய படங்களிலும் ஜெயஸ்ரீ ராமையா நடித்து இருந்தார்.

    இந்த நிலையில் ஜெயஸ்ரீ ராமையா தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் நான் மனசோர்வாக உள்ளேன். இந்த உலகத்தில் இருந்து விடைபெறுகிறேன் என்று கூறியிருந்தார். இந்த பதிவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஜெயஸ்ரீ ராமையா தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகின. 

    ஜெயஸ்ரீ ராமையா - சுதீப்

    சில நிமிடங்களில் அந்த பதிவை நீக்கிவிட்டார். பின்னர் மற்றொரு பதிவில், மிக்க நன்றி சுதீப் சார். உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் என்னை காப்பாற்றியதற்காக நன்றி. உங்களை பீதிக்குள்ளாக்கியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்று தெரிவித்தார். அவரது இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    ஜெயஸ்ரீ ராமையாவின் பதிவு

    விருதுகள் கொடுப்பதில் எனக்கு பல தடவை அநியாயம் நடந்துள்ளது என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் தமன்னா கூறியிருக்கிறார்.
    சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு திரையுலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் வெளியில் இருந்து வரும் நடிகர், நடிகைகள் வாய்ப்புகளை அவர்கள் தடுப்பதாகவும் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. விருதுகளைகூட வாரிசு நடிகர், நடிகைகளுக்குத்தான் கொடுக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. 

    நடிகை தமன்னாவும் இதனை ஆமோதித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- “விருதுகள் கொடுப்பதில் எனக்கு பல தடவை அநியாயம் நடந்துள்ளது. அதை நிச்சயம் சொல்லித்தான் ஆக வேண்டும். நிறைய தடவை விருதுகளுக்கு எனது பெயர் பரிந்துரைக்கபட்டது. ஆனால் விருதுமட்டும் எனக்கு வரவே இல்லை. 

    தமன்னா

    விருதுகள் தராமல் திறமையான நடிகர் நடிகைகளை ஒதுக்க முடியாது. ரசிகர்கள் ஆதரவுதான் முக்கியம். அவர்கள் எவ்வளவு நாள் ஆதரிக்கிறார்களோ அவ்வளவு நாள் நிலைத்து இருக்கலாம். எனது படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு இருப்பதில் திருப்தியாக இருக்கிறேன். ரசிகர்கள் ஆதரவை விட பெரிய விருது எதுவும் கிடையாது.” 

    இவ்வாறு தமன்னா கூறினார்.
    ×