என் மலர்
சினிமா செய்திகள்
நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார்.
தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார். இதையடுத்தே தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார் ஜோதிகா.
ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். “ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக உள்ள நடிகை முகநூலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் திரையுலகை உலுக்கி வருகிறது. இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தூக்கில் தொங்கி இறந்தார். தொடர்ந்து இந்தி டி.வி. நடிகர் மன்மீத் கிரேவல், டி.வி. நடிகை பிரேக்ஷா மேத்தா, மராத்தி நடிகர் அசுதோஷ் பாக்ரே ஆகியோரும் தற்கொலை செய்து கொண்டனர். இரு தினங்களுக்கு முன்பு இந்தி டி.வி. நடிகர் சமீர் ஷர்மாவும் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.
இந்த நிலையில் தற்போது போஜ்புரி திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக உள்ள நடிகை அனுபமா பதக்கும் தற்கொலை செய்துள்ளார்.

பீகார் மாநிலம் புர்னியாவை சேர்ந்த இவர் மும்பையில் உள்ள தஹிசர் பகுதியில் தங்கி படங்களில் நடித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு அனுபமா பதக் தனது முகநூல் பக்கத்தில், “சிலர் தன்னை ஏமாற்றி விட்டனர் என்றும், முதலீடு செய்த பணத்தை ஒரு நிறுவனம் திருப்பி தரவில்லை என்றும், தனது இரு சக்கர வாகனத்தை ஒருவர் எடுத்து சென்று விட்டார் என்றும், இங்கு யாரையும் நம்ப முடியவில்லை” என்றும் வீடியோவில் பேசி வெளியிட்டு இருந்தார். இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நடிகர் விஜய் பற்றி அவதூறாக பேசியதற்காக, நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.
நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“விஜய் நெஞ்சில் குடியிருக்கும் பிரியமான நண்பர்களே... துணை நடிகை மற்றும் மாடல் என்று சொல்லப்படும் மீரா மிதுன் என்பவர் நமது உயிரினும் மேலான விஜய் பற்றியும், உயிர் அண்ணியார் பற்றியும் சமூகவலைத்தளங்களில் கீழ்த்தரமாக பதிவு செய்துள்ளார்.
அவரை வன்மையாக கண்டிப்பதுடன், புதுக்கோட்டை ரசிகர்கள் சார்பில் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். மீரா மிதுன் தொலைக்காட்சி மூலமாகவும், பத்திரிகை மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும், ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

விஜய் பற்றியும், அவருடைய மனைவி பற்றியும் மீரா மிதுன் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியிருப்பது ரசிகர்-ரசிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “விஜய் பற்றியும், அவருடைய குடும்பம் பற்றியும் பேசுவதற்கு மீரா மிதுனுக்கு தகுதி இல்லை. இன்னொரு முறை அவர் அவதூறாக பேசினால், கையை கட்டிக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்” என்று ரசிகர்-ரசிகைகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டம் சார்பிலும் மீரா மிதுன் மீது வழக்கு தொடர விஜய் ரசிகர்கள் முடிவு செய்திருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும் என்று நடிகர் சாந்தனுவை இளம் இயக்குனர் ஒருவர் வாழ்த்தி இருக்கிறார்.
'மதயானைக் கூட்டம்' படம் வெளியாகி சுமார் 7 ஆண்டுகள் கழித்து விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இராவண கோட்டம்'. கண்ணன் ரவி தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படம் முதற்கட்டப் படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது. பின்னர் 'இராவண கோட்டம்' படத்தின் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. இதையடுத்து படத்தின் கதை தட்பவெப்பநிலையைப் பொறுத்தது என்றும், வருடத்துக்கு 3 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்றும் படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் 'மாஸ்டர்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 'இராவண கோட்டம்' படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளார். அதோடு, "இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்" என்று சாந்தனுவையும் வாழ்த்தியுள்ளார்.
பிகில் படத்தில் நடித்த நடிகை ஒருவர் விஜய்க்கு மறக்க முடியாத பரிசு ஒன்றை கொடுத்திருக்கிறார்.
பிகில் படத்தில் விஜய்யின் கால்பந்து அணியில் நடித்திருந்தவர் நடிகை ஆதிரை சவுந்தரராஜன். இவர் கடந்த ஆண்டு பிகில் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் விஜய்க்கு வித்தியாசமான மறக்கமுடியாத கிஃப்ட் ஒன்றை கொடுத்து அசத்தியுள்ளார்.
சமீபத்தில் ஆதிரை சவுந்தரராஜன் அளித்த பேட்டி ஒன்றில், "பிகில் பட ஷூட்டிங்கின் போது எங்கள் அணியில் இருப்பவர்கள் அனைவரும் விஜய்க்கு பிறந்தநாள் பரிசளித்தார்கள். நானும் கொடுத்தேன்.

நான் வாங்கியிருந்த பிறந்தநாள் பரிசு சற்றே வித்தியாசமானது. ‘பிகில்’ படத்தில் இடம்பெறுவது போன்று மணிப்பூர் மற்றும் தமிழ்நாடு அணிகள் இருப்பது போல் கதாபாத்திரங்கள் பொம்மைகளாக இருந்தன. அதை நம் கைகளில் வைத்து விளையாடமுடியும். இந்த கேமில் எங்கள் அணியின் கோச் விஜய்யின் கேரக்டரையும் அவரது ஜெர்சி எண் மாறாமல் அப்படியே இணைத்திருந்தேன்.
இந்தப் பரிசைப் பார்த்த விஜய், உண்மையிலேயே பிகில் அணியைப் பார்ப்பதுபோல் உணர்வதாகக் கூறினார். சில நேரங்களில் தான் இதில் விளையாடுவதாகவும் விஜய் சொன்னார்.
எனது பரிசுப் பொருளைப் பார்த்து திரையுலகின் உச்சநட்சத்திரமான விஜய் மறக்கமுடியாத பரிசுப் பொருள் என்று கூறியது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.
மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக இயக்கும் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது.
‘மாநகரம்’, ‘கைதி’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது லோகேஷின் அடுத்த திரைப்படம் குறித்து முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் அவரது சொந்த ஊரான கோயம்புத்தூரில் தனது அடுத்த படத்திற்கான கதையை எழுதி கொண்டிருக்கிறாராம். இந்த கதையில் நடிகர்கள் சூர்யா அல்லது கார்த்தி நடிப்பார்கள் என கூறப்படுகிறது.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதிராஜாவை அன்னபோஸ்ட் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தயாரிப்பாளர் சிங்காரவேலன் கூறியுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கியதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் இதுகுறித்து கூறும்போது, தயாரிப்பாளர் சங்கத்தில் 1351 பேர் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்கள் இருக்கிறார்கள். இந்த சங்கத்தில் 10 ஆண்டுகளாக சரியான நிர்வாகிகள் தேர்வாகவில்லை. இதனால் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.
பாரதிராஜா சில தயாரிப்பாளர்களை சேர்த்துக் கொண்டு புதிய சங்கம் ஆரம்பித்து இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டத்தில் தாணு அவர்கள் பேசும் போது, பாரதிராஜா மீண்டும் சங்கத்தில் வாருங்கள்... உங்களுக்கு அன்னபோஸ்ட்டாக தலைவர் பதவி கொடுக்கிறோம் என்று கூறினார்.
யாரிடமும் எந்த கருத்தும் கேட்காமல் தாணு அவர்கள் அவரது சொந்த கருத்தை கூறினார். இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆதலால் தொடர்ந்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இணைந்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறோம். தேர்தலில் களமிறங்க இருக்கிறோம் என்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் நடித்த படங்களில் பணியாற்றியவர் புதிய படத்தை இயக்க இருக்கிறார்.
பல தமிழ் படங்களுக்கு பைனான்ஸ் செய்து வரும் சந்தோஷ் கிருஷ்ணன் முதல் முறையாக, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கிறார்.

பாகுபலி, கபாலி, கத்தி, விவேகம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பிஎஃப் எக்ஸ் (VFX) துறையில் பணியாற்றிய சதீஷ் சேகர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயகுனராக அறிமுகம் ஆகிறார். தொடுப்பி மற்றும் கருப்பு கண்ணாடி படத்தின் கதாநாயகனாக நடித்த தணிகை இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.

மருத்துவமனையில் நடைபெறும் பல அதிர்ச்சிகரமான சம்பவங்களினால் ஒரு சாமானியன் எந்த அளவிற்கு பாதிக்கப் படுகிறான் என்பதை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கிரைம் கலந்த ஆக்க்ஷன் திரில்லர் ஆகவும் அனைத்து தரப்பு மக்களும் தாங்கள் சந்தித்த விஷயங்களை வெளிக்கொணரும் படியாகவும் இந்த படம் உருவாகிறது.
கதாநாயகி மற்றும் மற்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் துவக்க விழா ராஜிவ் காந்தி கல்லூரி சேர்மன் Dr. மக்கள் ஜி இராஜன் பங்கேற்க அரசாங்க விதிமுறை படி எளிதாக நடைபெற்றது.
அஜித் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படத்தை அப்போதே தெலுங்கில் ரீமேக் செய்வதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்போது இப்படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகளில் சிரஞ்சீவி ஈடுபட்டுள்ளார். இதையடுத்து வேதாளம் ரீமேக்கில் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது, இயக்குனர் மெஹர் ரமேஷ் இப்படத்தை இயக்க உள்ளார். இவர் 'பில்லா' படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவியின் பிறந்தநாளன்று 'வேதாளம்' ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் பயோபிக்கில் ரகுல்பிரீத் சிங் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாழ்க்கை கதை படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் அந்த வகை படங்கள் அதிகம் வருகின்றன. மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். மாயாவதி வாழ்க்கை படத்தில் ரிச்சா சட்டா, விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையில் மாதவன், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை கதையில் ஸ்ரத்தா கபூர், கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் வாழ்க்கை கதையில் டாப்சி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த பிரபல பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையும் படமாகிறது. இவர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண். இந்த படத்தை சஞ்சனா ரெட்டி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இதில் கர்ணம் மல்லேஸ்வரி வேடத்தில் நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. ரகுல்பிரீத் சிங் பொருத்தமாக இருப்பார் என்று அவரை படக்குழுவினர் அணுகி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நடிப்பாரா? என்பது விரைவில் தெரியவரும்.
கொரோனா ஊரடங்கில் 60 வயது நடிகர் ஒருவர் 28 வயதே ஆகும் இளம் நடிகை ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் சீன் பென். இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜட்ஜ்மெண்ட் இன் பெர்லின், டிராபிக் தண்டர், பிபோர் நைட் பால்ஸ், மிஸ்டிக் ரிவர். டெட்மேன் வாக்கிங், யுடர்ன் உள்பட பல படங்கள் சீன் பென் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.
இண்டியன் ரன்னர், த லாஸ்ட் பேஸ் இண்டுத வைல்ட் உள்ளிட்ட சில படங்களை இயக்கியும் உள்ளார். சீன் பென் பிரபல ஹாலிவுட் நடிகை மடோனாவின் முன்னாள் கணவர். இருவரும் 1985-ல் திருமணம் செய்து 1989-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் 1999-ல் நடிகையும் இயக்குனருமான ராபின் ரைட்டை காதலித்து மணந்து 4 வருடங்களில் அவரையும் விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் லீலா ஜார்ஜ் என்ற 28 வயது இளம் நடிகைக்கும் சீன் பென்னுக்கும் காதல் மலர்ந்தது. தற்போது 60 வயதை நெருங்கும் சீன் பென் கொரோனா ஊரடங்கில் லீலா ஜார்ஜை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.
தனக்கு போனில் பாலியல் மிரட்டல் வருவதாக நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு வலைத்தளத்தில் அரசியல், சமூக விஷயங்கள் சம்பந்தமான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராகவும் இருக்கும் குஷ்பு தனக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் வந்திருப்பதாக கூறி மிரட்டிய நபரின் செல்போன் நம்பரையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த எண்ணில் இருந்து எனக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் வருகிறது. கொல்கத்தாவில் இருந்து இந்த அழைப்பு வந்துள்ளது. மிரட்டல் விடுத்தவர் பெயர் சஞ்சய் சர்மா என்று வருகிறது.

இதுகுறித்து கொல்கத்தா போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் இதை கவனிக்க வேண்டும் எனக்கே இந்த மிரட்டல் என்றால் மற்ற பெண்கள் நிலைமையை நினைத்து பார்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வலைத்தளத்தில் குஷ்புவுக்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.






