என் மலர்tooltip icon

    சினிமா

    அனுபமா பதக்
    X
    அனுபமா பதக்

    முகநூலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை

    திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக உள்ள நடிகை முகநூலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கில் நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் திரையுலகை உலுக்கி வருகிறது. இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தூக்கில் தொங்கி இறந்தார். தொடர்ந்து இந்தி டி.வி. நடிகர் மன்மீத் கிரேவல், டி.வி. நடிகை பிரேக்‌ஷா மேத்தா, மராத்தி நடிகர் அசுதோஷ் பாக்ரே ஆகியோரும் தற்கொலை செய்து கொண்டனர். இரு தினங்களுக்கு முன்பு இந்தி டி.வி. நடிகர் சமீர் ஷர்மாவும் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.

    இந்த நிலையில் தற்போது போஜ்புரி திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக உள்ள நடிகை அனுபமா பதக்கும் தற்கொலை செய்துள்ளார்.

    அனுபமா பதக்

    பீகார் மாநிலம் புர்னியாவை சேர்ந்த இவர் மும்பையில் உள்ள தஹிசர் பகுதியில் தங்கி படங்களில் நடித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு அனுபமா பதக் தனது முகநூல் பக்கத்தில், “சிலர் தன்னை ஏமாற்றி விட்டனர் என்றும், முதலீடு செய்த பணத்தை ஒரு நிறுவனம் திருப்பி தரவில்லை என்றும், தனது இரு சக்கர வாகனத்தை ஒருவர் எடுத்து சென்று விட்டார் என்றும், இங்கு யாரையும் நம்ப முடியவில்லை” என்றும் வீடியோவில் பேசி வெளியிட்டு இருந்தார். இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×