என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாலு எழுந்து வா, உனக்காகக் காத்திருக்கிறேன் என்று இளையராஜா உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
    சென்னை:

    பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    தற்போது சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி. பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அச்சப்படும் நிலை இல்லை என்றும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், எஸ்.பி.பியின் நெருங்கிய நண்பரும் பிரபல இசையமைப்பாளருமான இளையராஜா உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    அதில், “பாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன். நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதில்லை. சினிமாவோடு தொடங்கியதுமில்லை. எங்கேயோ ஒரு மேடை கச்சேரிகளில் ஒன்றுசேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி. அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது. அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்தது நமது நட்பும் இசையும். இசை எப்படி ஸ்வரங்களை விட்டு ஒன்றோடு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அது போன்றது உன்னுடைய நட்பும் என்னுடைய நட்பும். நமது நட்பு எந்தக் காலத்திலும் பிரிந்தது இல்லை. 

    நாம் சண்டை போட்டாலும் சரி. நமது இருவருக்குள்ளும் சண்டை இருந்தாலும் அது நட்பே, சண்டை இல்லாமல் போன போது அது நட்பே என்பதை நீயும் நன்றாக அறிவாய், நானும் நன்றாக அறிவேன். அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது. அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா!” என பதிவிட்டுள்ளார். 

    இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அனிருத், தினா, தமன், இயக்குநர் ஹரி, நடிகர்கள் பிரசன்னா, யோகி பாபு, நடிகைகள் குஷ்பூ, ராதிகா, பாடகி சின்மயி, கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோரும் அவர் விரைந்து நலம் பெற வேண்டும் என்றும், அதற்காக பிரார்த்திக்குமாறும் பதிவு செய்துள்ளனர்.
    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை தொடர்ந்து அவரது மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

    எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண், எஸ்.பி.பி.யின் உடல்நிலை 
    அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை என்றும், நலமாகவே இருக்கிறார்
     என்றும் கூறினார். தற்போது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
    கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நலம் குறித்து அவரது மகன் தகவல் அளித்துள்ளார்.
    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று நேற்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 

    எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    இவர் உடல் நலம் பெற வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கம் அளித்துள்ளார். அதில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு  மோசமாக இல்லை. நலமாகவே இருக்கிறார் என்று எஸ்.பி.பி மகன் சரண் கூறியிருக்கிறார்.

    கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

    எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று நேற்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 

    இவர் உடல் நலம் பெற வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்கள்.

    அதில் நடிகர் தனுஷ், ‘எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்காக எல்லாரும் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.



    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ‘இசை ரசிகர்கள் அனைவரும் என்னுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். அற்புதமான குரலால் மற்றவர்களை மகிழ்வித்தவர் எஸ்.பி.பி’.



    இசையமைப்பாளர் அனிருத், ‘விரைவில் குணமடைய வேண்டுகிறேன்’.



    இயக்குனர் பாரதிராஜா, ‘என் நண்பன் பாலு, தன்னம்பிக்கையானவன்.. வலிமையானவன்.. அவன் தொழும் தெய்வங்களும் நான் வணங்கும் இயற்கையும் அவனை உயிர்ப்பிக்கும்.. மீண்டு வருவான் காத்திருக்கிறேன்’.



    நடிகை ராதிகா சரத்குமார், ‘எஸ்.பி.பி விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்’



    இவ்வாறு பல பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக கூறிவருகிறார்கள்.
    தயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள்... மனவேதனையாக இருக்கிறது என்று பிரபல காமெடி நடிகர் யோகி பாபு கூறியிருக்கிறார்.
    தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. ஒருசில திரைப்படங்களில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடித்த பழைய படங்களை எல்லாம் தூசி தட்டி ரிலீஸ் செய்யும் முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றன. ஒரு சில காட்சிகளில் மட்டுமே யோகி பாபு நடித்திருந்தாலும் அந்த படத்தில் யோகி பாபு முழுவதும் நடித்திருப்பது போன்ற விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

    சில தினங்களுக்கு முன்பு தெளலத் என்ற படத்தின் போஸ்டர் வெளியானது. இதில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது போல் சித்தரித்திருந்தனர். இதற்கு யோகிபாபு, எனக்கும் தௌலத் படத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறினார்.

    இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் யோகிபாபு. அதில், "சில வருடங்களுக்கு முன்பு சின்ன சின்ன படங்களாக நிறைய நடித்துள்ளேன். அந்தப் படங்கள் எல்லாம் இப்போது வெளியாகிறது. அந்தப் படங்களில் எல்லாம் 2, 3 காட்சிகள் தான் நடித்திருப்பேன். இப்போது என்னுடைய புகைப்படத்தைத் தனியாக போஸ்டரில் போட்டு விளம்பரப்படுத்துகிறார்கள். தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீர்கள்.



    எனக்கென்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இந்த மாதிரியான போஸ்டர்களால் ஏமாந்து போய்விடுகிறார்கள். இடைப்பட்ட காலங்களில் என்னுடைய புகைப்படம் மட்டும் போட்டு சிலர் ஏமாற்றியுள்ளார்கள். சிலர் எனக்கு தொலைபேசி வாயிலாக, உங்கள் புகைப்படத்தைப் பார்த்து தான் தியேட்டருக்கு சென்றோம். ஆனால், 2 - 3 காட்சிகளில் தான் வருகிறீர்கள் என்று சொன்னார்கள்.

    இதனால் எனக்கு மனவேதனையாக இருக்கிறது. இடையே 'தெளலத்' என்ற படத்துக்குக் கூட அப்படியொரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் சிவன் தான் ஹீரோ, நான் அல்ல. தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீர்கள். என்னை முன்னிலைப்படுத்தி படங்கள் எடுக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் திட்டத் தொடங்கிவிட்டார்கள். விநியோகஸ்தர்கள், ரசிகர்களை எல்லாம் ஏமாற்றுவது போல் இருக்கிறது. தயவு செய்து அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.

    நான் முழுமையாக நடித்திருந்தால் போடலாம் தவறில்லை. ஆனால் 2-3 காட்சிகளுக்கு எல்லாம் போடுவது தவறு. அது எனக்குத் தான் பாதிப்பாக இருக்கிறது. 2-3 சீன் நடித்திருக்கிறேன் என்றால் அந்தப் படக்குழுவினரோடு இருப்பது போல் புகைப்படம் போடுங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள். தயவு செய்து தனி புகைப்படம் போட்டு போஸ்டர்கள் வெளியிடாதீர்கள்.

    இவ்வாறு யோகி பாபு தெரிவித்துள்ளார்.
    கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. திரைப்பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சன் குடும்பத்தினர், இயக்குனர் ராஜமவுலி, நடிகர் விஷால், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா என பலர் பாதிக்கப்பட்டனர். அந்தவகையில் பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

    தனக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததாகவும், கொரோனா பரிசோதனை முடிவில் பாசிடிவ் என வந்தது என்றும் பயப்படும் படியாக இல்லை என்றும் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். 

    பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    பின்னர், கொரோனா தொற்றுக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    தற்போது ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. 

    பிரபல நடிகர் ஒருவர் தனது மகளின் 25-வது பிறந்தநாளன்று, தனது மனைவி மீண்டும் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.
    இந்தி திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சயீப் அலிகான். இவர் கடந்த 1991-ம் ஆண்டு நடிகை அம்ரிதா சிங்கை மணந்து 2004-ல் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு சாரா அலிகான் என்ற மகள் உள்ளார். அவர் தற்போது பாலிவுட் படங்களில் நடிக்கிறார்.

    கடந்த 2012-ம் ஆண்டு நடிகை கரீனா கபூரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தைமூர் என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது கரீனா கபூருக்கு 40 வயது ஆகும் நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமாகி இருக்கிறார்.

    சயீப் அலிகான், சாரா அலிகான், கரீனா கபூர்


    இதுகுறித்து அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் குடும்பத்தில் விரைவில் இன்னொரு நபரை எதிர்பார்க்கிறோம். இதனை உங்களுக்கு வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நலம் விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளனர்.

    தனது முதல் மனைவியின் மகளும் நடிகையுமான சாரா அலிகானின் 25-வது பிறந்தநாளன்று சயீப் அலிகான் இந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
    திரைத்துறையில் 61 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
    கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 61 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 1959-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடன கலைஞர், கதாநாயகன், கதை, வசனகர்த்தா, பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல திறமைகளை வெளிப்படுத்தினார். தற்போது அரசியல் கட்சி தலைவராகி இருக்கிறார். கமல்ஹாசனின் 61 ஆண்டுகள் சினிமா பயணத்தை ரசிகர்கள் சமூக வலைத்தள ஹேஷ்டேக்கில் கொண்டாடி வருகிறார்கள். திரையுலக பிரபலங்கள் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    கமல்ஹாசன், வைரமுத்து


    அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து கமல் குறித்து பதிவிட்டுள்ளதாவது: ‘பரமக்குடியின் அருமைக் கலைஞன். பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு. மரபுகடந்த புதுக்கவிதை புரிதல் கடிது; புரிந்தால் இனிது. ஆண்டுகள் அறுபது காய்த்த பின்னும் நனிகனி குலுங்கும் தனிவிருட்சம். கலைத்தாய் தன் நெற்றியில் மாற்றி மாற்றிச் சூடுவது திலகத்தையும் இவர் பெயரையும் ‘கலையாக் கலையே கமல்’. என பதிவிட்டுள்ளார்.
    விஜய்யின் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் விஜய் குறித்து உருக்கமாக பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் பாலா என்ற விஜய் ரசிகர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி அறிந்த விஜய் ரசிகர்களும், நடிகர்கள் சாந்தனு மற்றும் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்றும், பாலா குடும்பத்துக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட பாலா, கடைசியாக ஆகஸ்ட் 11-ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் “தலைவன் படம் பார்க்காமலே போறேன். தலைவனையும் பார்க்காமலே போறேன்” என்று கண்ணீர் விடும் எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.

    பாலாவின் டுவிட்டர் பதிவு


    அந்த டுவிட்டில் நடிகர் விஜய்யை டேக் செய்து லவ் யூ தலைவா என குறிப்பிட்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட பாலாவுக்கு வயது 21. ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர். அவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. பாலா தற்கொலை செய்து கொண்டதையடுத்து #RIPBala என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
    சஞ்சய் தத்தின் திடீர் அறிவிப்பால், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கே.ஜி.எப் 2’ படத்தின் படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் 'கே.ஜி.எப்' . யஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரஷாந்த் நீல் இயக்கிய இந்த படத்தின்  2-ம் பாகம் தயாரிப்பில் இருக்கிறது. 2-ம் பாகத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

    கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இன்னும், 2 சண்டைக் காட்சிகளைப் படமாக்க வேண்டியுள்ளது. அதில் சஞ்சய் தத் இடம்பெறும் பிரம்மாண்ட சண்டைக்காட்சியும் ஒன்று. தற்போது சஞ்சய் தத், மருத்துவ சிகிச்சைக்காக திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக அறிவித்துள்ளதால், கே.ஜி.எப் 2 படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

    கே.ஜி.எப். 2 பட போஸ்டர்

    சஞ்சய் தத் சிகிச்சை முடிந்து வரும் வரை படக்குழு காத்திருப்பார்களா அல்லது டூப் வைத்து சண்டை காட்சிகளை படமாக்குவார்களா என்பது விரைவில் தெரியவரும். இதனால் படம் திட்டமிட்டபடி அக்டோபர் 23-ந் தேதி ரிலீசாகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
    மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
    கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு தியேட்டரில் வெளியாக இருக்கிறது.

    மாளவிகா மோகனன்

    கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாளவிகா மோகனன், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில், பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் குளித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.
    நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கன்னட நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு-2, கீ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார்.

    இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நிக்கி கல்ராணி தனது 
    டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’கடந்த வாரம் மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. நான் இப்போது குணமடைந்து வருகிறேன். 

    எனது கவனித்துக்கொண்ட நெருங்கிய சொந்தங்களுக்கும்,
    முன்கள சுகாதார ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக தொடர்ந்து ஆதரவளித்த சென்னை மாநகராட்சிக்கு
    எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.  

    ×