என் மலர்
சினிமா செய்திகள்
நீங்களும் டோனி மாதிரி தான் என பிரபல இயக்குனர் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயனை வாழ்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று வெளியிட்டார். டோனிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், “எங்களை அதிகபட்சமாக உற்சாகப்படுத்தியதற்கும், மகிழ்வித்ததற்கும் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி டோனி. நீங்கள் எப்போதும் ஒரு அற்புதமான தலைவன் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் எங்களை ஆச்சரியப்படுத்த பல்வேறு உத்திகளைக் கையாள்வீர்கள். உங்களின் அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டிற்காக காத்திருக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

சிவகார்த்திகேயனின் இந்த பதிவை குறிப்பிட்டு இயக்குனர் சீனு ராமசாமி கூறியதாவது: “சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரை வரை நீங்களும் பலரை மகிழ்வித்து வழிகாட்டியாக இருந்து உள்ளீர்கள். நீங்களும் டோனி மாதிரி நண்பர்களுக்கும், புதிதாக வருபவர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறீர்கள். நீங்கள் இருவரும் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த நிலையை அடைந்தவர்கள்’ என்று கூறியுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து நடிகை குஷ்பு உருக்கமாக பேசியுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் நலம் பெற வேண்டி சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை குஷ்புவும் எஸ்.பி.பி குறித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: “எஸ்.பி.பி சார், அன்றாட வாழ்வில் நம்முடனே இருக்கிறார். அவர் இல்லாம வாழ்க்கைய நினைத்து பார்க்க முடியல. தினமும் கடவுளை கும்பிடுவதைப்போல் அவருடைய பாடல்களை கேட்காம யாராலையும் இருக்கவே முடியாது. என்னாலையும் இருக்க முடியாது. என்னைப் பொருத்தவரை அவர் தான் கடவுள் மாதிரி இருக்காரு.
கடவுளுக்கு சமமாக அவரை நான் பார்க்கிறேன். என்னை மாதிரி, இந்த உலகத்தில் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் திரும்பி வருவார்னு காத்திட்டு இருக்காங்க. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்காரு. மருத்துவர்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கார்னு சொல்றாங்க.
#SPB My God. Wishing you a very speedy recovery.. come back hale n hearty soon. We are waiting for you. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/Jkmfb9963q
— KhushbuSundar ❤️ (@khushsundar) August 16, 2020
அவர் எங்களுக்காக திரும்பி வரனும், பாட்டு பாடனும், அவரை சந்தித்து நான் பேசனும். அவருடைய குரலை கேட்கணும். எஸ்.பி.பி. சார் உங்களுக்காக நாங்க காத்திட்டு இருக்கோம். திரும்பி வாங்க. உங்களை போன்ற ஒரு சிறந்த மனிதரை பார்க்கவே முடியாது. திரும்பி வாங்க சார்”. என கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், ‘சாணிக் காயிதம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார்.
காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே. ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.
இந்நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம், நடிகராக களமிறங்கியுள்ளார் செல்வராகவன். இளம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திராத்தில் நடிக்கிறார்.

சுதந்திர தினத்தன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. ‘சாணிக் காயிதம்’ படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஏற்கனவே ‘ராக்கி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் மகேந்திர சிங் டோனி ஓய்வு பெற்றது குறித்து திரைப்பிரபலங்கள் உருக்கமாக பதிவிட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று வெளியிட்டார். டோனியின் இந்த திடீர் அறிவிப்பு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஓய்வு பெற்ற டோனிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பை காணலாம்.

அபிஷேக் பச்சன்
ஒரு சகாப்தத்தின் முடிவு. அனைத்து நினைவுகளுக்கும் நன்றி டோனி. உங்கள் அடுத்த இன்னிங்ஸுக்கு வாழ்த்துக்கள்.
மகேஷ் பாபு
2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நீங்கள் அடித்த அந்த சிக்சரை எப்படி மறக்க முடியும். பெருமையும், கண்களில் கண்ணீருமாய் வான்கடே மைதானத்தில் நின்றிருந்தேன். கிரிக்கெட் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது. வாழ்த்துக்கள் டோனி.
வெங்கட் பிரபு
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் டோனி. இத்தனை ஆண்டுகளில் எங்களுக்கு ஊக்கமளித்தமைக்கு மிக்க நன்றி. அற்புதமான நினைவுகளுக்கும் நன்றி.
தமன்
அன்புள்ள டோனி, எங்கள் இதயங்களில் ஒருபோதும் ஓய்வு பெறாது இருப்பீர்கள். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நீங்கள் தான் எங்களுக்கு பிடித்தமான கேப்டன்.

நிவின் பாலி
லெஜண்டுகளுக்கு ஓய்வு இல்லை. அழகான நினைவுகளுக்கு நன்றி! நீங்கள் என்றென்றும் கேப்டனாக இருப்பீர்கள். நன்றி டோனி.
நயன்தாரா
அனைத்து அற்புதமான நினைவுகளுக்கும் நன்றி டோனி. அனைவருக்கும் உத்வேகம் அளிப்பவர். ஒரு சிறந்த அணி வீரர். முழு இந்தியாவும் உங்களை நீல நிறத்தில் மிஸ் பண்ணும்.
ஹரீஷ் கல்யாண்
நீங்கள் தந்த எல்லா நினைவுகளுக்கும் நன்றி சொன்னால் போதாது. என்றென்றும் கேப்டன் கூல் நீங்கள் தான்.
வரலட்சுமி சரத்குமார்
டோனி போன்ற ஒரு மனிதரைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல முடியும், கிரிக்கெட்டுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். எங்களை பெருமைப்படுத்தியதற்கு நன்றி. உங்கள் ஒவ்வொரு மூச்சிலும் எங்களை மகிழ்வித்தமைக்கு நன்றி. உங்களை போல் இன்னொருவர் இருக்க முடியாது. மேலும் எப்போதும் எங்கள் கேப்டனாக இருங்கள். லவ் யூ டோனி.

ஜிவி பிரகாஷ்
அன்பான கேப்டன் டோனிக்கு பிரியாவிடை. மிகவும் ஊக்கமளிக்கும் அணி வீரர் மற்றும் எனது மிகப்பெரிய உத்வேகம். நீல நிறத்தில் உங்களை மிஸ் பண்றேன்.
விஷ்ணு விஷால்
உலகெங்கிலும் உள்ள ஏராளமான ரசிகர்களை மகிழ்வித்து ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி டோனி. தொடர்ந்து ஊக்குவியுங்கள்.
மோகன்லால்
பிரியாவிடை கேப்டன். உங்கள் எதிர்கால முயற்சிகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள்.
கொரோனா சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நேற்றுமுன்தினம் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்கள்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டும் என்று சினிமா பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
அதன்பின்னர், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
மயக்கநிலையில் இருக்கும் அவருக்கு செயற்கை சுவாசம் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மயக்கநிலையில் இருந்த எஸ்.பி.பி. தற்போது மயக்கநிலையில் இருந்து மீண்டுள்ளதாகவும், அவர் அவ்வப்போது கண்விழிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நுரையீரல் தொற்று காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் எஸ்.பி.பி.க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாடும் நிலா பாலு சாரு, சீக்கிரம் குணமடைந்து வருவார் பாரு என்று வேல் முருகன், எஸ்.பி.பி. உடல்நலம் பெற வேண்டி ஒரு பாடல் ஒன்று பாடியிருக்கிறார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்கள்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டும் என்று சினிமா பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் தற்போது நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலம் பெற வேண்டும் என்று பாடல் பாடி இருக்கிறார். 50 வருடமாக அசையாத விருட்சமாக பாட்டு தேர் ஏறி பவனி வரும் பாடும் நிலா பாலு சார், சீக்கிரம் குணமடைந்து வருவார் பாரு... என்ற பாடலை பாடி வெளியிட்டிருக்கிறார்.
வைபவ், வாணி போஜன், வெங்கட் பிரபு, ஈஸ்வரி ராவ், பூர்ணா, நடிப்பில் வெளியாகி இருக்கும் லாக்கப் படத்தின் விமர்சனம்.
இன்ஸ்பெக்டரான மைம் கோபி கழுத்தறுத்து கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிக்க தற்காலிகமாக போலீஸ் அதிகாரி ஈஸ்வரி ராவ் நியமிக்கப்படுகிறார். அந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் வெங்கட் பிரபு, கொலைகாரன் என ஏற்கனவே ஒருவரை பிடித்து வைத்திருக்கிறார். இந்த வழக்கை ஈஸ்வரி ராவ் விசாரிக்கும் நேரத்தில், பூர்ணா தற்கொலை செய்ததாக சடலம் கிடைக்கிறது.
மைம் கோபி கொலைக்கும், பூர்ணாவின் இறப்புக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுகிறார் ஈஸ்வரி ராவ். இறுதியில் மைம் கோபியை கொலை செய்தது யார்? பூர்ணா எப்படி இறந்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மைம் கோபியின் எதார்த்தம், ஈஸ்வரி ராவ்வின் திமிரான நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. ஒருநாள் வேலை பார்த்தாலும் என் வேலையை ஒழுங்கா பார்ப்பேன் என்று கெத்து காட்டியிருக்கிறார் ஈஸ்வரி ராவ். சப் இன்ஸ்பெக்டராக வரும் வெங்கட் பிரபு வில்லத்தனத்தில் கவர்ந்திருக்கிறார். கான்ஸ்டேபிளாக நடித்திருக்கும் வைபவ் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். வாணி போஜனுக்கு அதிகமாக வேலை இல்லை. வீட்டு வேலைக்காரியாக வரும் பூர்ணா, அலட்டல் இல்லாத நடிப்பு.

இரண்டு மரணங்கள் தொடர்பான மர்மக் கதையை சில திருப்பங்களோடு, 'கொலையை யார் செய்தது' என்ற சஸ்பென்ஸை கடைசிவரை நீட்டித்து, படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ். முதல் படம் என்று தெரியாதளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார். படத்தில், நிரபராதிய கொல்றதுக்கு நாங்க ஓண்ணும் போலீஸ் இல்லையே?, என்ற ஒரு சில வசனங்கள் பலம் கூட்டியிருக்கிறது. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை.

இசையமைப்பாளர் ஆரோல் கரோலியின் பின்னணி இசையும், சந்தானம் சேகரின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘லாக்கப்’ விறுவிறுப்பு.
கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்கள்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டும் என்று சினிமா பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. செயற்கை சுவாசம் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, சுதந்திரம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவர் தனது சமூக வலைதளங்களில் அடிக்கடி ஒருசில கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்பது குறித்தும் போட்டியாளர்களின் மன அழுத்தத்தை பிக்பாஸ் நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும் ஓவியா பதிவு செய்த டுவிட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ’சுதந்திரம்’ குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது அல்ல, எடுக்கப்படுவது என்று சுபாஷ் சந்திரபோஸ் கூறியதை ஓவியா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஓவியாவின் சுதந்திரம் குறித்த இந்த கருத்துக்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
முன்னணி காமெடி நடிகர் யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று தௌலத் படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அலி கூறியுள்ளார்.
ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம் முகம்மது அலி தயாரிப்பில் சக்தி சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'தௌலத்'. இந்த திரைப்படத்தை பற்றி யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த டுவிட்டர் செய்தியில், தனக்கும் 'தௌலத்' படத்திற்கும் எந்த வித சம்பந்தமுமில்லை; நான் நடிக்கவும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இதுபற்றி தயாரிப்பாளர் முகம்மது அலி கூறும்போது, 'தௌலத்' படத்தை தயாரிக்க முடிவு செய்தபோதே, இப்படத்தின் முக்கியத் திருப்பமாக கதாநாயகனும், வில்லனும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் காட்சியில் யோகிபாபுவைத் தான் நடிக்க வைக்க வேண்டுமென்று தீர்மானித்து தான் நடிக்க வைத்தோம். அவரும் நல்லபடியாக நடித்துக் கொடுத்தார். ஆனால், அதன்பின் அவர் நடித்த பல படங்கள் வரிசையாக வெற்றி பெற்று பரபரப்பான நடிகராக மாறினார்.

அவர் நடித்த காட்சிக்காக டப்பிங் பேச வராமலும் இழுத்தடித்தார். நானும் அவருக்காக 9 மாதங்கள் காத்திருந்தேன். அதன்பின்தான் டப்பிங் பேசி கொடுத்தார். அவர் முன்பே டப்பிங் பேசி முடித்து இருந்தால் எப்போதோ வெளியாகியிருக்க வேண்டிய படம். அவர் குறித்த நேரத்தில் டப்பிங் பேசாததால் படம் வெளியாக தாமதமாகி மன உளைச்சலும் பண இழப்பும் ஏற்பட்டது.
ஆனால், அதையும் விட நடித்துவிட்டு இப்போது நான் நடிக்கவில்லை என்று கூறியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு நிறுவனத்திடம் விலைபேசி இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தேன். ஆனால், இந்த செய்தி என்னை இடிபோல் தாக்கிவிட்டது. மேலும், அவர் கூறியது போல் அவர் புகைப்படத்தை மட்டும் போஸ்டரில் போட்டு நாங்கள் விளம்பரம் செய்து சம்பாதிக்க நினைக்கவில்லை. அப்படி செய்யவும் மாட்டோம். நான் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்த ஒரு நடிகர் தன்னை விளம்பரம் செய்யக்கூடாது என்று கூறுவது சரியா? தர்மமா? நியாயமா? யார் மீதோ உள்ள காழ்ப்புணர்ச்சியால் என் மீது பாய்ந்துள்ளார். யோகி பாபு மீது எனக்கு எந்த வருத்தமுமில்லை. எந்த நடிகரும் இதுபோல் எந்த தயாரிப்பாளர் வயிற்றிலும் அடிக்க வேண்டாம்’ என்றார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் சாப்பாட்டுக்கே வழியில்லை என்று பிரபல வில்லன் நடிகர் உதவி கேட்டிருக்கிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்தே திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் ஏராளமானோர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகள் வேலையில்லாமல் இருக்கும் துணை நடிகர்கள், சினிமா தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கி உதவினார்கள்.
படப்பிடிப்புகளுக்கு அரசு இன்னும் அனுமதி வழங்காததால் துணை நடிகர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பாக்யராஜின் ‘தூரல் நின்னு போச்சு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சூரியகாந்த் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சூர்யாகாந்த் கூறுகையில், பாக்யராஜ் தான் என்னை ‘தூரல் நின்னு போச்சு’ படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். பாரதிராஜாவின் மண்வாசனை, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறேன். கடைசியாக கார்த்தியின் கைதி, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தேன்.
தற்போது திரைப்பட படப்பிடிப்புகளும் இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளும் சரியாக நடக்கவில்லை. அதனால் பொருளாதார ரீதியாகவும், சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஒரு மாதத்துக்கு மருந்து மாத்திரை வாங்கவே ரூ.1500 செலவாகிறது. அதை வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லை. சாப்பாட்டுக்க வழியில்லாமல் இருக்கிறேன். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.
ரசிகர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், நடிகை ஆலியா பட் வெறுப்பு குறித்து எனக்கு கவலை இல்லை என்று கூறியிருக்கிறார்.
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தியில் வாரிசு நடிகர், நடிகைகளுக்கு எதிராக ரசிகர்கள் குரல் கொடுத்து புறக்கணித்து வருகிறார்கள். இந்த நிலையில் வாரிசு நடிகையான அலியாபட் நடித்துள்ள சடக் 2 படத்தின் டிரெய்லருக்கு, வலைத்தளத்தில் 80 லட்சத்துக்கும் மேலானோர் வெறுப்பை பதிவு செய்துள்ளனர். இந்த படத்தை அலியாபட்டின் தந்தை மகேஷ்பட் இயக்கி உள்ளார்.
திரைப்பட வரலாற்றில் எந்த டிரைலரும் இந்த அளவுக்கு எதிர்ப்பை பெறவில்லை. அலியாபட் தனது காதலர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடிக்கும் பிரம்மாஸ்த்ரா, அமிதாப்பச்சன், ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் புதிய படம், ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் ஆர் ஆர் ஆர் ஆகிய படங்களையும் ரசிகர்கள் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆர் ஆர் ஆர் படத்தில் அலியாபட் காட்சிகள் இன்னும் படமாகவில்லை என்பதால் அவரை நீக்கி விடலாமா என்று யோசிக்கின்றனர்.

இதற்கு அலியாபட், “வெறுப்பு குறித்து எனக்கு கவலை இல்லை. விரும்புகிறவர்களும் வெறுப்பவர்களும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். எனது பட டிரெய்லரை டிரெண்ட் செய்ததால் அவர்களை பாராட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.






