என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
    பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார்.

    இன்று வெளியிட்ட வீடியோவில் எஸ்.பி.பி. முன்பை விட இப்போது கொஞ்சம் நன்றாகவே மூச்சு விடுகிறார். இதை மருத்துவர்கள் நல்ல முன்னேற்றமாக பார்க்கிறார்கள். தற்போது குணமடைந்து வருகிறார். நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார். தொடர்ந்து அவருக்காக பிரார்த்திப்போம் என்று கூறியிருந்தார்.

    எஸ்.பி.பாலசுப்ரமணியம்

    தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எஸ்.பி.பி. உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், தனக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்ததாகவும் அதை மறுத்ததாகவும் கூறியிருக்கிறார்.
    தமிழில் ஜெயம்ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத் இந்தியில் ரூ.12 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். 

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி திறமையாக செயல்பட்டு வருவதாக சமூக வலைத்தளத்தில் பாராட்டி கருத்து பதிவிட்டு இருந்தார். இதற்கு விமர்சனங்கள் கிளம்பின. பா.ஜனதா கட்சியில் சேர அவர் முடிவு செய்து விட்டதாகவும் பேசினர்.

    கங்கனா ரணாவத்

    இதற்கு பதில் அளித்துள்ள கங்கனா ரணாவத், ‘எனக்கு பா.ஜனதா கட்சி எம்.பி தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க முன்வந்தது. நான் ஏற்கவில்லை. எனது தாத்தா காங்கிரஸ் கட்சியில் 15 வருடங்கள் எம்.எல்.ஏவாக இருந்து இருக்கிறார். பா.ஜனதா கட்சியில் சேரப்போகிறேன் என்று பலரும் கூறுகின்றனர். எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை. நடிப்பின் மீதுதான் ஆர்வம். ஆனாலும் எனது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவேன். அதை நிறுத்த மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ், இப்படிப்பட்டவரை தான் திருமணம் செய்வேன் என கூறியுள்ளார்.
    சமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். இதேபோல் 2015-ம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் தர்பார் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அசத்தினார்.

    அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: “வாழ்க்கையில் எல்லோரும் காதலிக்க வேண்டும் என்ற அவசியமோ, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயமோ இல்லை. நான் நேரம் வரும்போது சந்தோஷமாக திருமணம் செய்து கொள்வேன். இப்போது எனக்கு திருமணம் பற்றிய எண்ணம் இல்லை. காதலிக்க நேரமும் இல்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். எதிர்காலத்தில் இயக்குனராக வேண்டும் என்ற கனவுகளோடு நான் இருக்கிறேன். 

    நிவேதா தாமஸ்

    ஆனால் வரப்போகிற கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதில் சில எதிர்பார்ப்புகள் வைத்துள்ளேன். அவர் உண்மையாக இருக்க வேண்டும். யாரும் உண்மையாக இருப்பவர்களைத்தான் விரும்புவர். இல்லாதபோது ஒருமாதிரி பேசி விட்டு நேரில் வேறு மாதிரி பேசுபவர்களை பிடிக்காது. கணவராக வருகிறவர் எனது பொறுப்புகளை பகிர்ந்துகொள்பவராகவும், பயணம் செய்வதில் விருப்பம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்” இவ்வாறு நிவேதா தாமஸ் கூறினார்.
    பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழரசன் படத்தின் முன்னோட்டம்.
    எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்துள்ள படம் தமிழரசன். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ள இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

    விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன்

    படம் குறித்து இயக்குநர் பாபு யோகஸ்வரன் கூறியதாவது: "இந்தப் படம் சிறப்பாக அமைந்ததிற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியும் தான் காரணம். நாங்கள் இரண்டு ராஜாக்களைப் பார்த்து தான் வளர்ந்தோம். அந்த இரண்டு ராஜாக்கள் இளையராஜாவும் பாரதிராஜாவும் தான். இது பக்கா கமர்சியல் படம். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என கூறினார்.
    ஆதித்ய வர்மா படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த நடிகை பனிடா சந்து, மேலாடையின்றி போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
    விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் தமிழில் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக நடித்தவர் பனிடா சந்து. பாலிவுட் நடிகையான இவர், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

    அந்த படத்துக்கு பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால், கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தி, அதனை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார் பனிடா. 

    பனிடா சந்துவின் டுவிட்டர் பதிவு

    அந்தவகையில், மேலாடை அணியாமல் போட்டோஷுட் நடத்தி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். ‘என் மேலாடை தொலைந்துவிட்டது’ என குறிப்பிட்டு அந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
    2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்கிறார். 

    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் அவரைப்பற்றி அவ்வப்போது திருமண வதந்திகள் வந்துள்ளன. இதற்கு அவர் பல முறை மறுப்பு தெரிவித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாகவும் கூறப்பட்டது. இதுபற்றி வெளியான செய்திகள் உண்மை இல்லை என்று கூறிய காஜல் அகர்வால், விரைவில் திருமணம் நடக்கும் என்றும் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

    காஜல் அகர்வால்

    இந்நிலையில், காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும் அந்த விழாவில் தெலுங்கு தயாரிப்பாளரான பெல்லங்கொண்டா ஶ்ரீனிவாஸ் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மணமகனின் பெயர் கவுதம் என்றும் அவர் தொழிலதிபர் என்றும் சொல்லப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் திருமணம் செய்ய காஜல் அகர்வால் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
    திரைப்பட பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். முக்கியமாக ரஜினியின் படங்களில் ஓபனிங் பாடலை எஸ்.பி.பி பாடினால் தான் ஹிட்டாகும் என்ற செண்டிமெண்டும் தமிழ் சினிமாவில் உண்டு. ரஜினியின் சமீபத்திய பேட்ட, தர்பார் முதற்கொண்டு ஏராளமான படங்களுக்கு ஓபனிங் சாங் பாடியவர் எஸ்.பி.பி என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: “இந்திய மொழிகள் பலவற்றிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளார். அவர் சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் திரும்ப எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
    கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்த படத்தின் நிலை குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
    மாநகரம் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த படத்திலேயே கவனம் பெற்றார். பின்னர், இவர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். இதில் நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்திருந்தார்கள். எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

    அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அந்தவகையில், விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. 

    லோகேஷ் கனகராஜ்

    இதனிடையே லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்தை இயக்கவிருப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், ரஜினி படத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது: “இப்போதைக்கு நான் இந்த படம் பற்றி எந்த தகவலையும் சொல்ல முடியாது. தயாரிப்பு நிறுவனம் தான் இந்தப்படம் பற்றிய முடிவை எடுக்க வேண்டும். ஒப்பந்தங்கள் அனைத்தும் கையெழுத்தான பிறகு அவர்கள் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்” என கூறியிருக்கிறார்.
    தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்க விட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார்.

    தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்க விட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    6வது மாடியில் பாடகர் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் அறையில் ஸ்பீக்கர்கள் அமைத்து பாடல்கள் ஒலிக்கப்படுகின்றன.

    பாடல்களை கேட்பதால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பில் இருந்து மீளுவார் என இசைப்பிரியர்கள் கூறினர்.
    பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.
    பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார்.

    இந்நிலையில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசி இருப்பதாவது:

    “எனது தந்தை ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மூன்றாவது தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் இருந்து ஆறாவது தளத்தில் உள்ள தனிப்பட்ட அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றபட்டு உள்ளார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. மருத்துவர்களிடம் பெருவிரலை உயர்த்தி காட்டுகிறார். அவருக்கு டாக்டர்களை அடையாளம் தெரிகிறது. தொடர்ந்து செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    முன்பை விட இப்போது கொஞ்சம் நன்றாகவே மூச்சு விடுகிறார். இதை மருத்துவர்கள் நல்ல முன்னேற்றமாக பார்க்கிறார்கள். தற்போது குணமடைந்து வருகிறார். முழுமையாக குணமடைவது ஓரிரு நாட்களில் நடந்து விடாது. ஒரு வாரமும் ஆகலாம். நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார். தொடர்ந்து அவருக்காக பிரார்த்திப்போம். அனைவருடைய அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. அவர் முழுமையான மயக்க நிலையில் இல்லை. மற்றவர்களை அடையாளம் காண்கிறார். எனது அம்மாவும் குணமடைந்து வருகிறார்.” இவ்வாறு சரண் கூறியுள்ளார்.
    பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார்.
    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

    நேற்றுமுன்தினம் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்கள்.

    பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டும் என்று சினிமா பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

    அதன்பின்னர், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    இந்நிலையில், மயக்கநிலையில் இருந்த எஸ் பாலசுப்ரமணியத்திற்கு நினைவு வந்திருப்பதாகவும், மருத்துவர்களிடம் கையசைத்தார் என்றும் அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நலம் பெற்று வருவதால் மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற ஒரு ரசிகனாக பிரார்த்திப்பதாக நடிகர் மோகன் தெரிவித்துள்ளார்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குறித்து நடிகர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நான் எஸ்.பி.பி. அவர்களின் ரசிகன். பெங்களூருவில் இருந்த காலகட்டங்களில், அவரின் குரலும் பாடலும் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய பாடல்களைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். கல்லூரி வாழ்க்கையில், அவருடைய எத்தனையோ பாடல்கள் என் கல்லூரி வாழ்க்கையின் பலவற்றில் இரண்டறக் கலந்திருந்தது. 

    அப்போதெல்லாம், நான் சினிமாவுக்குள் வரவேண்டும் என்றோ நடிகனாவேன் என்றோ நினைத்ததில்லை. ஆனால் எப்போதும் எஸ்.பி.பி.யின் பாடல்கள் எனக்கு துணையாகவும் பொழுதுபோக்காகவும் உத்வேகம் கொடுப்பதாகவும் இருந்தன. தெலுங்கில் எனது முதல் படமான 'தூர்ப்பு வெல்லே ரயிலு' (கிழக்கே போகும் ரயில் படத்தின் ரீமேக்) படத்துக்கு எஸ்.பி.பி சார் தான் இசையமைப்பாளர்.

    முள்ளப்புடி வெங்கடரமணா திரைக்கதையில் பாப்பு இயக்கத்தில் வெளியான அந்தப் படத்துக்கு இசையமைத்து, அனைத்து பாடல்களையும் பாடியிருந்தது எஸ்.பி.பி சார் தான். தமிழில், மகேந்திரன் இயக்கத்தில், ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் ஜாக்கிங் செல்லும் போது வருகிற ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்ற பாடல், இன்று வரைக்கும் எல்லோருக்கும் பிடித்த பாடல். 

    மோகன்

    இப்படி நான் திரைத்துறைக்கு வருவேன் என்றோ எனக்குப் பிடித்த எஸ்.பி.பி.யின் பாடலுக்கு வாயசைப்பேன் என்றோ நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. என்னுடைய ஆரம்பக் கால படங்களில் ‘ஜூலி ஐ லவ்யூ’ பாடலும் ‘இளையநிலா பொழிகிறதே’ உள்ளிட்ட ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தின் எல்லாப் பாடல்களும் என்று என் திரைவாழ்விலும் எனக்காக, என் படங்களுக்காக தொடர்ந்து ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். 

    தொழில்முறையிலும் இப்படியான இணைப்பு வந்திருந்தாலும் நான் எப்போதுமே எஸ்.பி.பி.யின் தீவிர ரசிகன். தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். என் மனமும் சிந்தனையும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறது. எஸ்.பி.பி.யின் இனிமையான குரலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் சாகாவரம் பெற்றவை. பாடல்கள் மட்டுமல்ல. எஸ்.பி.பி. அவர்களே அத்தகையை பண்பான மனிதர்தான்.  

    எஸ்.பி.பி. அவர்கள் பூரண குணமடைந்து, இல்லம் திரும்பவேண்டும் என்று  அவரை இதயத்தில் வைத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்கள். அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி. அவர்கள் பூரண நலம் பெற்று, பழையபடி வலம் வரவேண்டும் என்று நானும் ஒரு ரசிகனாக பிரார்த்தனை செய்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.
    ×