என் மலர்tooltip icon

    சினிமா

    எம்.எஸ் டோனி
    X
    எம்.எஸ் டோனி

    ‘ஒரு சகாப்தத்தின் முடிவு’ - டோனி குறித்து திரைப்பிரபலங்கள் உருக்கம்

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் மகேந்திர சிங் டோனி ஓய்வு பெற்றது குறித்து திரைப்பிரபலங்கள் உருக்கமாக பதிவிட்டுள்ளனர்.
    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று வெளியிட்டார். டோனியின் இந்த திடீர் அறிவிப்பு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஓய்வு பெற்ற டோனிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பை காணலாம்.

    அபிஷேக் பச்சன், மகேஷ் பாபு

    அபிஷேக் பச்சன்
    ஒரு சகாப்தத்தின் முடிவு. அனைத்து நினைவுகளுக்கும் நன்றி டோனி. உங்கள் அடுத்த இன்னிங்ஸுக்கு வாழ்த்துக்கள்.

    மகேஷ் பாபு
    2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நீங்கள் அடித்த அந்த சிக்சரை எப்படி மறக்க முடியும். பெருமையும், கண்களில் கண்ணீருமாய் வான்கடே மைதானத்தில் நின்றிருந்தேன்.  கிரிக்கெட் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது. வாழ்த்துக்கள் டோனி.

    வெங்கட் பிரபு
    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் டோனி. இத்தனை ஆண்டுகளில் எங்களுக்கு ஊக்கமளித்தமைக்கு மிக்க நன்றி. அற்புதமான நினைவுகளுக்கும் நன்றி.

    தமன்
    அன்புள்ள டோனி, எங்கள் இதயங்களில் ஒருபோதும் ஓய்வு பெறாது இருப்பீர்கள். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நீங்கள் தான் எங்களுக்கு பிடித்தமான கேப்டன்.

    நிவின் பாலி

    நிவின் பாலி
    லெஜண்டுகளுக்கு ஓய்வு இல்லை. அழகான நினைவுகளுக்கு நன்றி! நீங்கள் என்றென்றும் கேப்டனாக இருப்பீர்கள். நன்றி டோனி.

    நயன்தாரா
    அனைத்து அற்புதமான நினைவுகளுக்கும் நன்றி டோனி. அனைவருக்கும் உத்வேகம் அளிப்பவர். ஒரு சிறந்த அணி வீரர். முழு இந்தியாவும் உங்களை நீல நிறத்தில் மிஸ் பண்ணும்.

    ஹரீஷ் கல்யாண் 
    நீங்கள் தந்த எல்லா நினைவுகளுக்கும் நன்றி சொன்னால் போதாது. என்றென்றும் கேப்டன் கூல் நீங்கள் தான். 

    வரலட்சுமி சரத்குமார்
    டோனி போன்ற ஒரு மனிதரைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல முடியும், கிரிக்கெட்டுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். எங்களை பெருமைப்படுத்தியதற்கு நன்றி. உங்கள் ஒவ்வொரு மூச்சிலும் எங்களை மகிழ்வித்தமைக்கு நன்றி. உங்களை போல் இன்னொருவர் இருக்க முடியாது. மேலும் எப்போதும் எங்கள் கேப்டனாக இருங்கள். லவ் யூ டோனி.

    ஜிவி பிரகாஷ், விஷ்ணு விஷால்

    ஜிவி பிரகாஷ்
    அன்பான கேப்டன் டோனிக்கு பிரியாவிடை. மிகவும் ஊக்கமளிக்கும் அணி வீரர் மற்றும் எனது மிகப்பெரிய உத்வேகம். நீல நிறத்தில் உங்களை மிஸ் பண்றேன்.

    விஷ்ணு விஷால்
    உலகெங்கிலும் உள்ள ஏராளமான ரசிகர்களை மகிழ்வித்து ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி டோனி. தொடர்ந்து ஊக்குவியுங்கள்.

    மோகன்லால்
    பிரியாவிடை கேப்டன். உங்கள் எதிர்கால முயற்சிகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள்.
    Next Story
    ×