என் மலர்
சினிமா செய்திகள்
எம்.ஜி.ஆர் போல் விஜய்யின் புகைப்படத்தை வைத்து போஸ்டர் ஒட்டி இருப்பது குறித்து கேள்வி கேட்டதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், இப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. விஜய்யின் ரசிகர்கள் அடிக்கடி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.
இந்நிலையில், எம்ஜிஆரை போலவே விஜய்யை உருவகப்படுத்தி அவரது ரசிகர்கள் மதுரையில் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். எம்ஜிஆர் நடித்த இதயகனி, ரிக்சாக்காரன், உரிமைக்குரல் உள்ளிட்ட போஸ்டர்களை போலவே விஜய்யின் போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்யின் போஸ்டர் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பிய போது, நடிகர் விஜய்யால் எம்ஜிஆரின் இடத்தை நிரப்ப முடியாது. எல்லோரும் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் மாறிவிட முடியாது என்று பதிலளித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்கங்கள் திறக்கப் படாததால் முதலமைச்சருக்கு விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கேள்வி எழுப்பியுள்ளனர்.
நடிகர் விஜய்யின் திருமண நாளை ஒட்டி மதுரையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவைப் போல் விஜய் மற்றும் சங்கீதாவை சித்தரித்து ஒட்டிய போஸ்டர் மிகவும் பரபரப்பானது. தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை போஸ்டரை மதுரை முழுவதும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை தியேட்டர் திறப்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. முதல்முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்திலிருந்தே திரையரங்கு மூடியிருப்பதால் ஏப்ரலில் திரைக்கு வர வேண்டிய விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இதுவரை வெளியாகாமல் உள்ளது.
கொரோனா பிரச்சனை முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் இப்படம் வெளியாக இருக்கிறது. தியேட்டரில் தான் மாஸ்டரை பார்க்க வேண்டும் என்று விஜய் ரசிகர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்பொழுது தமிழக அரசின் அறிவிப்பில் தியேட்டர் திறப்பு குறித்த அறிவிப்பு எதுவும் இடம் பெறாததால், மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படத்தையும், விஜய் படத்தையும் பயன்படுத்தி போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்.
அதில், 'கொரோனா மறந்தாச்சு... இயல்பு நிலை வந்தாச்சு... திரையரங்கு என்னாச்சு?' என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மதுரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியலை துவங்கியவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவருடன் சேர்ந்து சமூகத்திற்காக எனது சிறந்த சேவையைச் செய்வேன் என்று ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம், இன்று நான் மிக முக்கியமான ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். கடந்த மாதம் நான் ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தேன் அரசியலில் நுழையாமல் கூட நாங்கள் சேவை செய்ய முடியும் என்று. இந்த அறிக்கையின் பின்னணியில் எனது காரணம் என்னவென்றால், நான் பல சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும்போது, எனது நண்பர்கள், ரசிகர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் பல அரசியல்வாதிகள் என்னிடம் கேட்கிறார்கள், நான் அரசியலில் நுழைவதற்கு இதையெல்லாம் செய்கிறேனா என்றும், மேலும் சிலர் என்னால் அரசியலில் நுழைந்தால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
கொரோனா காலகட்டத்தில் நான் செய்த சேவையின் மூலம் அரசியலில் நுழையும் அழுத்தம் அதிகரித்துள்ளது. அனைவருக்கும், நான் ஒரு பொதுவான நபர் என்று சொல்ல விரும்புகிறேன். நான் எனது சேவையை எனது சொந்த வீட்டில் குழந்தைகளுக்காக தொடங்கினேன்.
எனக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் நான் அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பேன் அதற்கு எனக்கு அனைவரும் உறுதுணையாக இருந்துள்ளனர். கலைஞர் அய்யா, ஸ்டாலின் சார், அன்புமனி ராமதாஸ் சார் போன்றோர் பல இதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவியுள்ளனர். ஜெயலலிதா அம்மா, எடப்பாடி. கே.பழனிசாமி ஐயா, ஓ.பன்னீர்செல்வம் சார், விஜய பாஸ்கர் சார் மற்றும் பலர் பல்வேறு சேவைகளை செய்ய எனக்கு ஆதரவளித்துள்ளனர்.

நான் அரசியலில் நுழைந்தால் ஒற்றை மனிதனாகச் செய்வதை விட அதிக சேவையைச் செய்ய முடியும் என்பதை நான் நன்கு அறிவேன், ஆனால் நான் அரசியலில் நுழையாததற்கு காரணம், எதிர்மறை அரசியலை நான் விரும்பாததால் தான், என் அம்மாவுக்கும் அதே கருத்துதான்.
ஏனென்றால் நாம் எல்லோரையும் பற்றியும் மோசமாக பேச வேண்டும், மற்றும் காயப்படுத்த நேரிடும். ஆனால் நான் அதை செய்யமாட்டேன், அனைவரையும் மதிக்கிறேன். எனவே, யாராவது எதிர்மறை அல்லாத ஒரு கட்சியைத் தொடங்கினால், நாங்கள் மோசமாகப் பேசவோ அல்லது மற்றவர்களைப் புண்படுத்தவோ தேவையில்லை என்றால், அவர்களுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்ய நான் எனது பங்களிப்பை அளிப்பேன். இந்தியாவில் நேர்மறையான அணுகு முறையைக் கொண்ட அத்தகைய கட்சியை எனது குரு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் மட்டுமே தர முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஏனெனில் அவர் ஒரு அரசியல் காரணத்திற்காக இருந்தாலும் யாரையும் காயப்படுத்தவில்லை. எனவே, அவர் கட்சியைத் தொடங்கினாலும் அவர் ஒருபோதும் யாரையும் காயப்படுத்த மாட்டார்.
தலைவர் தனது ஆன்மீக அரசியலைத் தொடங்கிய பிறகு, அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதால், அவருடன் சேர்ந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்திற்காக எனது சிறந்த சேவையைச் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.
சினிமா விருந்துகள் போதை மாத்திரைகள் இல்லாமல் நடப்பது இல்லை என்று விஷால் பட நடிகை புகார் கூறி இருக்கிறார்.
இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி பட உலகில் கொக்கைன் போதை பொருட்கள் புழக்கம் இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பின. பெரிய நடிகர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தால் சிறைக்கு செல்வார்கள் என்று கங்கனா ரணாவத்தும் சாடினார். ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், விக்கிகவுசல் உள்ளிட்ட பலரது பெயர்கள் போதை பொருள் சர்ச்சையில் அடிபடுகின்றன.

கன்னட பட உலகிலும் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக டி.வி. நடிகை அனிகா கைதாகி உள்ளார். இவர் போதைபொருட்களை வாங்கி நடிகர், நடிகைகளுக்கு விற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தெலுங்கு பட உலகிலும் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழில் விஷாலுடன் ஆம்பள படத்தில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகை மாதவி லதா இதுகுறித்து கூறும்போது, “தெலுங்கு சினிமாவில் போதை பழக்கம் உள்ளது. சினிமா விருந்துகள் போதை மாத்திரைகள் இல்லாமல் நடப்பது இல்லை. முன்னணி நடிகர்கள் அரசியல் செல்வாக்கினால் போதை பொருள் வழக்கில் இருந்து தப்பி உள்ளனர். போதை பொருள் வழக்கை விசாரித்த அதிகாரியையும் வேறு துறைக்கு மாற்றி விட்டனர்” என்றார். இந்த குற்றச்சாட்டு பரபரப்பாகி உள்ளது.
எண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கூறி இருக்கிறார்.
நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

“எனக்கு பிடித்த கதாபாத்திரம் என்று எதுவும் இல்லை. ஆனால் இதற்கு முன்பு நடித்த கதை சாயலில் மீண்டும் நடிக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். அப்படி நடித்தால் ரசிகர்களுக்கு போரடித்து விடும். கொரோனாவில் எல்லோரும் கஷ்டத் தில் இருக்கிறோம். இந்த கஷ்டகாலம் விரைவில் முடிவுக்கு வந்து அனை வரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

கொரோனா ஊரடங்கில் குடும்பத்தோடு அதிக நேரம் ஒதுக்க முடிந்தது. கொரோனாவால் எனது எண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது. எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இனிமேல் எனக்கு சந்தோஷத்தை கொடுக்கும் விஷயங்களுக்கு மட்டும் கஷ்டப்பட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். வாழ்க்கை மேன்மையாக இருக்க உணவு கட்டுப்பாடு, யோகா, தியானங்கள் பக்கம் திரும்ப வேண்டும். தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்த நம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு சமந்தா கூறினார்.
காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சந்தானம், முடங்கிய தன்னுடைய படத்தை தூசி தட்டி ஆரம்பிக்க இருக்கிறார்.
முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக அசத்தி வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது பிஸ்கோத், டிக்கிலோனா உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
இவர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த ‘மன்னவன் வந்தானடி’ திரைப்படம் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 80 சதவீகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில காரணங்களால், இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவில்லை. இந்நிலையில், தயாரிப்பாளர் வருண்மணியன் இந்த படத்தை கைப்பற்றியுள்ளதாகவும், மீதி உள்ள 20 சதவிகித படப்பிடிப்பை தொடங்க முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை மீண்டும் தொடங்கினால் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயார் என சந்தானமும் கூறியுள்ளதாக தெரிகிறது. எனவே விரைவில் இந்த படத்தின் 20 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். எனவே செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ’மன்னவன் வந்தானடி’ படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்க்கில் அரைகுறை ஆடை அணிந்து நடனம் ஆடியதாக கோமாளி நடிகையை பொதுமக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அந்த படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த அவர், தொடர்ந்து வாட்ச்மேன், பப்பி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள், டான்ஸ் வீடியோவை அடிக்கடி பதிவு செய்து வருவார். இதற்கென்று தனி ரசிகர்கள் உண்டு. ஆனால், இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலை மூலம் பகிர்ந்த தகவல் பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஒரு பார்க்கில் நடிகை சம்யுக்தா ஹெக்டே நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது அவரது உடை குறித்து அங்கிருப்பவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. சம்யுக்தாவின் நண்பரை அவர்கள் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையாக பகிர்ந்து இந்த சம்பவம் குறித்து நியாயம் கேட்டுள்ளார்.
திரையுலகை ஆண்டது போதும்., தமிழகத்தை ஆள வா என்று சூர்யாவின் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மதுரையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் வழக்கம் போலவே மதுரையின் சுவர்களை நிரப்பி வருகின்றன. விஜய்யின் திருமண நாளுக்கு போஸ்டர், மாஸ்டர் எப்போது வரும் என போஸ்டர், மாஸ்டர் ஓடிடியில் வரக்கூடாது என போஸ்டர், என தினமும் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோல் அஜித் ரசிகர்களும், வலிமை திரைப்படம் தியேட்டரில் திரையிடப்படும் வரை வேறு எந்த படத்தையும் எந்த தளத்திலும் காண மாட்டோம் என உறுதிமொழியை ஏற்று அதை போஸ்டராக அடித்து ஒட்டினர். இந்நிலையில் சூர்யா ரசிகர்களும் போஸ்டர் ஒட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

செப்டம்பர் 5 ஆம் தேதி சூர்யா திரையுலகிற்கு வந்து 23 ஆண்டுகள் ஆகும் நிலையில், சேகுவாரா போல சூர்யாவை சித்தரித்து 'திரையுலகை ஆண்டது போதும்... தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே...!' என்று உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டதுடன், தமிழக சட்டமன்றத்தின் படத்தையும் அதில் இடம்பெறச் செய்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது கருப்பு கண்ணாடி என்ற படத்தை இயக்கி வரும் இயக்குனருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அணி கிரியேஷன்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன் ஜி, தயாரித்து இயக்கும் படம் "கருப்பு கண்ணாடி". இப்படத்தில் கலைஞர் டிவி தொகுப்பாளர் தணிகை கதாநாயகனாகவும், புதுமுக நடிகை குவின்ஸி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் சரண் ராஜ், நடிகர் கஜரஜ், பாடகர் வேல்முருகன், நடிகை சுபாஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கருப்பு கண்ணாடி திரைப்படம் சைக்கோ த்ரில்லர் வகையை சார்ந்தது. இறுதி கட்டத்தில் இப்படம் இருக்கும் நிலையில், இயக்குனர் நியூட்டன் ஜி-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம் பற்றி திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி, சூளைமேடு சௌராஷ்டிரா நகரைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஸ்வாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் என்பவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில், கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அதே ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி புழல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். சிறையில் மின்சார வயரை கடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தமிழில் ‘நுங்கம்பாக்கம்’ என்ற திரைப்படம் தயாரானது. ’உளவுத்துறை’ மற்றும் ’ஜனனம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ரமேஷ் செல்வன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படம் வெளியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே தயாராகிவிட்டாலும், அரசியல் எதிர்ப்பு காரணமாகவும், சட்டச்சிக்கல் காரணமாகவும் இந்த படம் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் அரசியல் மற்றும் சட்டப்பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து இப்படத்தை அக்டோபர் மாதம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மிரட்டல் பட நடிகை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தற்போது பிரபல நடிகை ஷர்மிளா மந்த்ரேவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவர் தமிழில் வினய், சந்தானத்துடன் ‘மிரட்டல்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அதேபோல் விமல் ஆஸ்னா ஜவேரி நடிப்பில் திரைக்கு வந்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.
தற்போது ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விமல், ஷ்ரேயா நடிக்கும் ‘சண்டக்காரி’, அட்டகத்தி தினேஷ், தீப்தி நடிக்கும் ‘நானும் சிங்கிள்தான்’ போன்ற தமிழ் படங்களையும் தயாரித்து வருகிறார். பெங்களூருவை சேர்ந்த இவர் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். ஷர்மிளா மந்த்ரே தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கொரோனா பாசிடிவ் வந்துள்ளது. அனைவருக்கும் லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். நான் டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
அறிமுக இயக்குனர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தினேஷ், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் பல்லு படாம பாத்துக்க படத்தின் முன்னோட்டம்.
அறிமுக இயக்குனர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பல்லு படாம பாத்துக்க’. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டியும் நடித்துள்ளார். மேலும் ஆனந்த் பாபு, ஜெகன், மொட்ட ராஜேந்திரன், ஷா ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜாம்பி கதைக்களத்தை மையமாக கொண்டு முழுக்க முழுக்க காமெடி படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. பாலமுரளி பாலு இசையமைத்துள்ள இப்படத்திற்கு பல்லு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் உள்ளதால் இப்படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளது.






