என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், மறைந்த நடிகையின் வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறியிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்று இருப்பவர். இவரது நடிப்பு திறமையை பல்வேறு தரப்பினரும் பாராட்டுவது உண்டு. ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்பு ஒரு டான்ஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அதன் பின் சினிமாவில் நுழைந்து அவர் படிப்படியாக தன்னுடைய நடிப்பின் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்தார். காக்கா முட்டை படத்தில் அவரது நடிப்பு அதிகம் பாராட்டுகளை அவருக்கு பெற்றுத் தந்தது. அந்த படத்திற்கு பிறகு தான் ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமா வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு போனது. தற்போது அவர் பல படங்களில் நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு பழம்பெரும் நடிகை மனோரமா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த மனோரமாவை ஆச்சி என ரசிகர்கள் அழைப்பதுண்டு. அவர் 2015ல் உடல்நல குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை தீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மும்பை :
பிரபல இந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
நடிகை ரியா போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், சுஷாந்த் சிங்கிற்காகவும் போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து நடிகை ரியா, அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர், வேலைக்காரர் மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என 12-க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.
கைதான ரியா உள்ளிட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பிரபல தமிழ் நடிகை ரகுல்பிரீத் சிங், இந்தி நடிகை சாரா அலிகான், பேஷன் டிசைனர் சிமான் கம்பாட்டா ஆகியோருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் சுஷாந்த் சிங்கின் திறன் மேலாளர் ஜெயா ஷாவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போதைப்பொருள் பயன்படுத்தும் மேலும் சில சினிமா பிரபலங்கள் குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் மற்றும் திறன் மேலாண்மை நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி துருவ் சிட்கோபேகருக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர். இதனால் போதைப்பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனேயும் சிக்கலாம் என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல்பிரீத் சிங் உள்ளிட்டோருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.
பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், ஏற்றுக்கொள்ளுங்கள், கற்றுக் கொள்ளுங்கள், வளருங்கள் என்று கூறியிருக்கிறார்.
வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
தான் திரையுலகில் நுழைந்த 11 ஆண்டுகளில் திரையுலகில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக கடிதமொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "நான் சினிமாவுக்குள் நுழைந்த 11 ஆண்டுகளில் பல விஷயங்கள் மாறிவிட்டன. பிலிம் ரீலிலிருந்து டிஜிட்டல் சினிமாவுக்கும், இணை இயக்குநர்களிலிருந்து குறும்பட இயக்குநர்கள் வரை அறிமுகமாகி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு திரைத்துறையில் ஆதிக்க செலுத்துவதாகட்டும், கமர்சியல் படங்களில் இருந்து கதைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களுக்கு மாறியுள்ளது.

பெரிய திரையிலிருந்து மொபைல் திரைகளுக்கு மாறியதாகட்டும், இயக்குநர் நடிகர்களாகவும், இசையமைப்பாளர்கள் ஹீரோக்களாக மாறியிருக்கிறார். கொரோனா காரணமாக ஓடிடி தளத்தால் உலக சினிமா பரவலாக்கப்பட்டு விட்டது. வேறு எந்த பத்தாண்டுகளும் இந்த அளவு மிகப்பெரிய மாற்றங்களைப் பார்த்திருக்காது. இறுதியாக, மாற்றம் ஒன்றே மாறாதது. ஏற்றுக்கொள்ளுங்கள், கற்றுக் கொள்ளுங்கள், வளருங்கள். அது மட்டுமே ஒரே வழி" இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
பாலா தயாரிப்பில் ஆர்.கே. சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ள ‘விசித்திரன்’ படத்தின் முன்னோட்டம்.
மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில் ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். ‘ஜோசப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே அதன் தமிழில் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹீரோயினாக பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகாது என அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறி உள்ளார்.
கோவை மாவட்ட தலைமை விஜய் நற்பணி இயக்கம் சார்பில் மாஸ்டர் படம் வெற்றி பெற வேண்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் நடந்தது. இதில் மாஸ்டர் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாக வாய்ப்பு இல்லை. மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் தான் வெளிவரும். தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி அளித்த பின்னர் திரைப்படம் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும்.

கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால், அதனை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தியேட்டர்களை விரைவில் திறக்கவில்லை என்றால் பலரும் கஷ்டப்படுவார்கள். எனவே விரைவில் தியேட்டர்கள் திறக்கப்படும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான பாலாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா, தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக மலையாளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஜோசப்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார்.
இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன், இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்திற்கு ‘விசித்திரன்’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.

இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் ஆர்கே. சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். பத்மகுமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பாடகரும், இசையமைப்பாளருமான கிரிஷ் உருவாக்கி உள்ள வெற்றி வேலா என்ற இசை ஆல்பத்தை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
‘அழகிய அசுரா’ என்ற படம் மூலம் நடிராக அறிமுகமானவர் கிரிஷ். இதில் கதாநாயகனுக்கு நண்பராக கிரிஷ் நடித்திருந்தார். பின்னர், கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் ‘மஞ்சள் வெயில்’ பாடலை பாடியதன் மூலம் சிங்கராக அறிமுகமானார்.
இந்த பாடல் சூப்பர் ஹிட்டாகவே தொடர்ந்து பல பாடல்களை பாடி வந்தார். பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய இவர், ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ என்ற படம் மூலம் கதாநாயகனாக மாறினார். பின்னர், சூர்யாவின் ‘சிங்கம் 3’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். நடிகர், பாடகர் என பிரபலமான கிரிஷ் தற்போது ஒருசில படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.
இந்நிலையில், கிரிஷ் இசையமைப்பில் தற்போது முருகனின் அறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்து, ‘வெற்றி வேலா’ என்ற இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதனை சூர்யா வெளியிட்டார். இது குறித்து, கிரிஷ் கூறியதாவது: “முருகனுக்கு, 'ரொமாண்டிக்' பாடல் இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி தான் இந்த இசை ஆல்பம் இருக்கும். முருகனின் அறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்து, பழநி, திருப்பரங்குன்றம், திருச்செந்துார், சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என 6 பாடல்கள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்று உள்ளன” என அவர் கூறினார்.
இந்தி பட உலகில் பாலியல் வேட்டை நடத்துபவர்கள் அதிகம் உள்ளனர் என நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக சாடியுள்ளார்.
இந்தி பட உலகில் மீ டூ புகார் சில மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது இந்தி நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இந்த சர்ச்சை விவாதமாகி வருகிறது.
இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத்தும் தனக்கு நடிகர்களால் பாலியல் தொல்லை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகள் வருமாறு: பாயல் கோஷ் சொன்ன பாலியல் புகாருக்கு அனுராக் காஷ்யப் மிகவும் தகுதியானவர். அவர் திருமணம் செய்த பெண்களுடன் உண்மையாக இல்லை. அவர்களை ஏமாற்றி உள்ளார். இந்தி பட உலகில் பல பெண் பித்தர்கள் உள்ளனர்.

பாயல் கோஷ் சொன்ன பாலியல் தொல்லை சம்பவம் எனக்கும் பெரிய கதாநாயகர்களால் ஏற்பட்டு உள்ளது. வேன் அல்லது அறைக்குள் கதவை பூட்டியோ அல்லது நடன நிகழ்ச்சியிலோ மோசமான சம்பவங்கள் நடக்கும். ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்துவார்கள். இந்தி பட உலகில் பாலியல் வேட்டை நடத்துபவர்கள் அதிகம் உள்ளனர். தினமும் ஒரு இளம் பெண்ணுடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருமணமான இரண்டே வாரத்தில் பாலியல் புகார் கூறி கணவரை, பிரபல நடிகை போலீசில் சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இவ்வாறு சுய விளம்பரத்திற்காக அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர் பூனம் பாண்டே.

கடந்த செப்டம்பர் 10-ந் தேதி பூனம் பாண்டே - சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை வெளியிட்டு ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்றெல்லாம் காதலர் குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். திருமணம் முடிந்த கையோடு பூனம் பாண்டே தன் கணவருடன் கோவாவுக்கு சென்றார்.

கோவாவுக்கு சென்ற இடத்தில் சாம் பாம்பே தன்னை பலாத்காரம் செய்ததுடன், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக பூனம் பாண்டே போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின்பேரில் கோவா போலீசார் சாம் பாம்பே மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். திருமணமாகி 2 வாரமே ஆன நிலையில், காதல் கணவர் மீது பூனம் பாண்டே பாலியல் புகார் அளித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், இதெல்லாம் ஒரு சவாலா என்று ஆதங்கமாக கூறியிருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட் பண்ணணும், யார்கிட்டயாவது பேசிக்கிட்டே இருக்கணும்... இப்படி நமக்கு ஏகப்பட்ட அழுத்தங்கள். தனியா இருக்கிறதுல சிலருக்கு பயம் இருக்கு. ஆனா, பல வருடங்களாக நான் தனியாக வாழ்ந்து பழகினவள்.

சென்னை வந்தா அப்பாவை மீட் பண்ணுவேன். ஆனாலும், தனியாதான் இருப்பேன். தனிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும். தனியா இருந்தா போரடிக்கும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கு. உங்களுக்கு நீங்களே போரடிக்கிறீங்கன்னா, மத்தவங்களுக்கும் அப்படித்தானே இருப்பீங்க.
சமையல், வீட்டைச் சுத்தம் பண்றது, துணி துவைக்கிறதுனு எல்லா வேலைகளையும் நான்தான் பண்றேன். ‘பிரபலங்கள் எல்லாம் பாத்திரம் தேய்ப்பாங்களா’னு யாராவது கேட்டா ஆச்சர்யமா இருக்கு. லண்டன்ல இருந்தவரை குப்பையை வெளியில கொண்டுபோய் கொட்டறதுவரை நான்தான் பண்ணியிருக்கேன்.

வீடு சுத்தமா இல்லைனா எனக்கு மூளை வேலை செய்யாது. ஊரடங்கு தொடங்கியபோது நிறைய பேர் என்கிட்ட பாத்திரம் கழுவற சவாலில் சேரச் சொல்லிக் கேட்டாங்க. பாத்திரம் கழுவறதும் வீட்டைப் பெருக்கிறதும் சவால் கிடையாது. வீட்டை சுத்தமா வெச்சிருக்கிறது உங்க பொறுப்பு. இப்படியே போனா பல்லு தேய்க்கிற சவால் வந்தாலும் ஆச்சர்யமில்லை’ இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
கருப்பன் படத்தில் நடித்து பிரபலமான தன்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தில் வெற்றி கூட்டணி அமைந்துள்ளது.
சுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.
இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன், எடிட்டர் டான் போஸ்கோ கூட்டணியில், இது கதிர்வேலன் காதல் உருவானது. தற்போது சசிகுமார் நடிப்பில் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் உருவாகி உள்ளது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாததால் இன்னும் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் படக்குழுவினர் இருக்கிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன், எடிட்டர் டான் போஸ்கோ கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகி உள்ளது. கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த தன்யா ரவிச்சந்திரன், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் மற்ற நடிகர்களின் விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் என்கிற ராக், கோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளி இருக்கிறார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன். இவரை ரசிகர்கள் த ராக் என்று அழைக்கின்றனர். பாஸ்ட் ஆண்ட் பியூரியஸ், ஜூமாஞ்சி, ஸ்கைஸ்க்ராப்பர், ஸ்கார்ப்பியன் கிங் உள்பட பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்று இருக்கிறார். தற்போது பிளாக் ஆடம் படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்து வருகிறார்.

டுவைன் ஜான்சன் படப்பிடிப்புக்கு செல்ல புறப்பட்டபோது தனது வீட்டு கேட் திறக்காததால் அதை கையால் உடைத்து எறிந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “நான் படப்பிடிப்புக்கு செல்ல புறப்பட்டபோது புயலால் மின் தடை ஏற்பட்டது. ஆனாலும் படப்பிடிப்புக்கு சென்றாக வேண்டும். வீட்டின் வாயில் கேட் திறக்கவில்லை.

கேட்டை திறப்பதற்கான ஹைட்ராலிக் சிஸ்டம் வேலை செய்யவில்லை. அதை சரிசெய்யும் தொழில்நுட்ப நிபுணர்கள் வந்து சேர 45 நிமிடங்கள் ஆகும் என்றனர். எனக்காக நூற்றுக்கணக்கானோர் நான் வந்தால்தான் வேலையை தொடங்க முடியும் என்ற நிலையில் படப்பிடிப்பு தளத்தில் காத்திருந்தனர். இதனால் வாயில் கேட்டை பிடித்து இழுத்து தள்ளி உடைத்து செங்கல் சுவரில் இருந்து முழுமையாக பெயர்த்து எடுத்து புல்வெளியில் வீசினேன். எனக்கு நேரம் சரியில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.






