என் மலர்
சினிமா செய்திகள்
வில்லன் நடிகருக்கு 200 பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று நடிகை பாயல் கோஷ் புகார் கூறியுள்ளார்.
தமிழில் தேரோடும் வீதியிலே படத்திலும் தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்துள்ள பாயல் கோஷ் தமிழில் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். தற்போது மீண்டும் பாயல் கோஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

“அனுராக் காஷ்யப் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் 2014-ல் பாம்பே வெல்வெட் படத்தை அவர் இயக்கியபோது நடந்தது. அவரது அலுவலகத்துக்கு பட வாய்ப்பு கேட்டு சென்றபோது என்னையே உற்றுபார்த்தார். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் நடிகை என்ற அடையாளம் இல்லாமல் வரும்படி அழைத்தார். நான் சல்வார் கமீஸ் அணிந்து சாதாரண பெண்ணாக சென்றேன். அவர் எனக்கு உணவு பரிமாறி சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னேறிய கதைகளை சொன்னார். அவர் மீது பற்று உருவானது.

பிறகு இன்னொரு நாளில் மீண்டும் அவரது இடத்துக்கு அழைத்தார். அப்போது குடித்து இருந்தார். சிகரெட் இல்லாத எதையோ புகைத்தார். அதில் வேறுமாதிரி வாசனை வந்தது. என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்று சோபாவில் உட்கார வைத்து என்மீது படுக்க முயன்றார். நான் விட்டு விடும்படி கெஞ்சினேன். அப்போது நடிகைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பெண்கள் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துள்ளனர் என்று பெருமையாக கூறினார். நான் உடன்படவில்லை என்பதை தெரிந்து மனதை மாற்ற முயன்றார். ஒருவழியாக அவரது வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். மீண்டும் பலமுறை என்னை அழைத்தார். நான் போகவில்லை.”
இவ்வாறு பாயல் கோஷ் கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா பல விவகாரங்களில் அடிப்படை சாராம்சம் கூட தெரியாமல் பேசி வருவதாக பிரபல நடிகர் கடுமையாக சாடியுள்ளார்.
நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். சூர்யாவின் அந்த அறிக்கை பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அரசியல்வாதிகள் முதல் திரையுலகினர் வரை பலர் சூர்யாவின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்தாலும், பாஜகவினர் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில், சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவி, சூர்யாவை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது: “நீட்தேர்வு மட்டுமின்றி பல விவகாரங்களில் சூர்யா, அடிப்படை சாராம்சம் கூட தெரியாமல் பேசி வருகிறார். முழு விவரங்கள் தெரியாமல் இதுபோன்று பேசுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று ராதாரவி கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனரும், தயாரிப்பாளருமான பாலா செய்த உதவிக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் மிஷ்கின் டுவிட் செய்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ இப்படத்தை பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் பாலா தயாரித்திருந்தார். பிசாசு படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. முருகானந்தம் தயாரிக்க உள்ள இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில், பாலாவின் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ‘பிசாசு’ டைட்டிலை தனக்கு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து இயக்குனர் மிஷ்கின் டுவிட் செய்துள்ளார். அதில் “நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா. ‘பிசாசு 2’ இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்கு சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களை பதிக்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.
நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா @bstudios_offl . 'பிசாசு 2' இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்கு சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களை பதிக்கிறேன். pic.twitter.com/WcmdMVotJX
— Mysskin (@DirectorMysskin) September 21, 2020
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான், அடுத்ததாக அட்லீ இயக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ள அட்லீ, அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்திற்கு ‘சங்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2-ந் தேதி வெளியாக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ஷாருக்கான் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஜீரோ படத்திற்கு பின் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதனால் அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
திரையுலகில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் நேர்ந்ததாக நடிகை கஸ்தூரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறினார். ஆனால் அனுராக் கஷ்யப் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை கஸ்தூரி, “அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார். சட்டத்தின் படி, உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் நிரூபிக்க இயலாது. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட பெயர்களில் ஒருவர் அல்லது அனைனைவரின் பெயரையும் அழிக்கக்கூடும். எதுவும் நல்லதல்ல” என பதிவிட்டிருந்தார்.

கஸ்தூரியின் இந்த பதிவிற்கு நெட்டிசன் ஒருவர் “இதுவே உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு நடந்திருந்தால், இப்படித்தான் சட்டம் பேசுவீங்களா?” என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த கஸ்தூரி, “எனக்கு நெருக்கமானவர் என்ன. அது எனக்கே நடந்திருக்கிறது. மூடிய கதவுகளுக்கு பின்னால். அது அப்படியே தான் இருக்கிறது” என கூறியிருந்தார். திரையுலகில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பதாக கஸ்தூரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் பணியாற்றிய ரூபன், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் பணியாற்றியவர் ரூபன். இவர் விஜய்யின் கில்லி, விக்ரமின் தில், தூள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இரண்டு முகம் உள்பட சில படங்களில் கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ரூபனுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் உறுதியானது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை ரூபனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. பின்னர் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை மருத்துவ குழுவினர், திருச்சியில் உள்ள ஓயாமரி மயானத்தில் அடக்கம் செய்தனர். 54 வயதாகும் ரூபனுக்கு சங்கீதா என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
நடிகர் கார்த்திகேயா வலிமை படம் குறித்து டுவிட் போட்டு அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
அஜித்தின் 60-வது படம் வலிமை. வினோத் இயக்கும் இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக இது தயாராகி வருகிறது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படம் குறித்து இதுவரை எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை.

இந்நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய வலிமை பட வில்லன் கார்த்திகேயாவிற்கு அஜித் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறியிருந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கார்த்திகேயா பதிவிட்டுள்ளதாவது: மிகுந்த அன்புடன் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அஜித் ரசிகர்களுக்கு நன்றி. கொஞ்சம் பொறுமையா இருங்க. நீங்க எதிர்பார்த்தத விட சிறப்பான ஒரு அப்டேட் வரப்போகுது என கூறி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பிரபல பாடகர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆஜித், கேப்ரில்லா ஆகியோர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல பின்னணிப் பாடகரும் கிராமிய பாடகருமான வேல்முருகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் என கூறப்படுகிறது.
’சுப்பிரமணியபுரம்’ படத்தில் இடம்பெற்ற ’மதுர குலுங்க குலுங்க’ ’நாடோடிகள்’ படத்தில் இடம்பெற்ற ’ஆடுங்கடா’ ’ஆடுகளம்’ படத்தில் இடம்பெற்ற ’ஒத்த சொல்லால’ உள்பட பல கிராமிய திரைப்பாடல்கள் பாடி இசை ரசிகர்களை கவர்ந்தவர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நடிகை ஓவியாவின் காலை ஒரு பாம்பு சுற்றி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கானோர் மனதில் இடம்பிடித்தவர் ஓவியா. இவர் தனது சமூக வலைதளங்களில் அடிக்கடி ஒருசில கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.


இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை ஓவியா வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது காலில் பாம்பு ஒன்று தன்னைத்தானே முழுங்குவதை போன்ற ஒரு டாட்டூவை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஓவியாவின் காலை பாம்பு சுற்றியது போன்று உள்ள இந்த டாட்டூ வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
புதிய வெப் தொடரில் நடிக்க இருக்கும் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷனின் சம்பளம் கேட்டு பிரபலங்கள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
இந்தி நடிகர்கள் திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். முன்னணி நடிகர்களுக்கு ஒரு படத்தில் சம்பளம், லாபத்தில் பங்கு தொகை என்ற ரீதியில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. தற்போது இந்தி நடிகர், நடிகைகள் பலர் வெப் தொடர்களில் நடிக்க வந்துள்ளனர். சயீப் அலிகான், அபிஷேக் பச்சன், மாதவன், நவாசுதின் சித்திக், ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி ஆகியோர் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள்.

இந்த வரிசையில் ஹிருத்திக் ரோஷனையும் புதிய வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த தொடரில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் ரூ.80 கோடி சம்பளம் கேட்டு உள்ளதாக தகவல் பரவி உள்ளது.
சேக்ரட் கேம்ஸ் தொடரில் நடித்த சயீப் அலிகான் சம்பளத்தை விட இது பல மடங்கு அதிகம் என்கின்றனர்.

வெப் தொடருக்கு இவ்வளவு பெரிய தொகையை ஹிருத்திக் ரோஷன் சம்பளமாக கேட்டு இருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் அக்ஷய்குமாரும் புதிய வெப் தொடரில் நடிக்க தயாராகிறார். அவரும் ரூ.80 கோடி சம்பளம் கேட்கிறாராம்.
கொரோனாவில் இருந்து மீண்டதை ஆசிர்வாதமாக கருதுகிறேன் என்று மணிரத்னம் பட நடிகை மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் ‘தக்க தைய்ய தைய்யா’ என்ற பாடலுக்கு நடனமாடி பிரபலமானவர் இந்தி நடிகை மலைக்கா அரோரா. சமீபத்தில் இவரது காதலன் அர்ஜூன் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 46 வயதான மலைக்கா அரோராவும் தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் தொற்று பாதிப்பில் இருந்து குணமானதாக அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இறுதியில் பல நாட்களுக்கு பிறகு எனது அறையைவிட்டு நான் வெளியே வந்து உள்ளேன். இது சுற்றுலா வந்தது போல உணர்வை தருகிறது.

குறைந்த வலி, அசவுகரியத்துடன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்ததை ஆசிர்வாதமாக கருதுகிறேன். மருத்துவ ஆலோசனைகள் வழங்கிய டாக்டர்கள் மற்றும் மும்பை மாநகராட்சி, குடும்பத்தினர், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
வசந்த பாலன் இயக்கிய அங்காடித்தெரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அங்காடித் தெரு. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சிந்து. தொடர்ந்து சினிமா, டிவியில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

கொரோனா காலகட்டத்தில் சக கலைஞர்களுக்கு உதவிகள் செய்தும் வந்தார். இந்நிலையில் சிந்துவுக்கு புற்றுநோய் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பிளாக் பாண்டி வெளியிட்டுள்ள வீடியோவில் அவரும் சிகிச்சையில் இருக்கும் சிந்துவும் பேசி இருக்கிறார்கள்.

மருத்துவ உதவிக்காக சிரமப்படும் நிலையில் இருக்கும் அவர் பொருளாதார உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.






