என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கொரோனா தொற்றில் நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டு மீண்டுள்ளனர். நடிகர் விஷால், நடிகைகள் நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, ஷர்மிளா மந்த்ரே, இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட மேலும் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 

    அந்த வகையில், ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தமன்னா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

    தமன்னா

    தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமன்னா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் பிரகாஷ் ராஜ் கிரீன் இந்தியா சேலஞ்சுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், நடிகை திரிஷா அதை செய்து முடித்துள்ளார்.
    சமூக வலைதளங்களின் வாயிலாக புதிய புதிய சேலஞ்ச்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர். தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தனறு மரம் நடும் ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்ற ஒன்றை தொடங்கி வைத்தார்.


    இந்த சேலஞ்சை விஜய், மகேஷ் பாபு, பிரபாஸ், நாகர்ஜுனா,  கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் செய்து அசத்தினர். சமீபத்தில் இந்த சேலஞ்சை செய்து முடித்த பிரகாஷ் ராஜ், நடிகர்கள் சூர்யா, மோகன் லால், ரக்‌ஷித் ஷெட்டி மற்றும் நடிகைகள் திரிஷா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரை கிரீன் இந்தியா சேலஞ்சுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

    அதன்படி நடிகை திரிஷா கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று இரண்டு மரக்கன்றுகளை நட்டுள்ளார். மேலும் அனைவரும் மரக்கன்றுகள் நட்டு இந்தியாவை பசுமையாக்குவோம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் நடிகர் சூர்யா இந்த சேலஞ்சை ஏற்காமல் மவுனம் காத்து வருகிறார்.

    பி.விருமாண்டி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘க.பெ ரணசிங்கம்’ படத்தின் பலம், பலவீனம் குறித்து இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.
    அறிமுக இயக்குனர் பி.விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படம் அக்டோபர் 2-ந் தேதி ஓடிடி-யில் வெளியானது. வெளிநாட்டில் இறந்துபோன கணவனின் உடலை மீட்டு, சொந்த ஊருக்கு கொண்டுவர போராடும் பெண்ணின் கதை தான் க/பெ ரணசிங்கம். 

    முதல் படத்தையே நேர்த்தியாக உருவாக்கியுள்ள பி.விருமாண்டியை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில், இயக்குனர் சேரன் படக்குழுவினரை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “மண்ணையும் மக்களின் முக உணர்வுகளையும் அச்சு அசலாக பதிவு செய்ததில் இயக்குனரும், மக்களின் மொழியில் உயிரையும் சுவாசத்தையும் பேச வைத்ததில் தம்பி சண்முகமும் அசுர வெற்றியை அடைந்திருக்கிறார்கள்.

    சேரன்

    ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி இருவரின் முகமும் இதுவரை நினைவில். எடுத்துக்கொண்ட கதையும் களமும் மக்களின் வாழ்வியலையும் அரசியலையும் பேசுவதால் தவிர்க்க இயலாத படமாக என்றும் நிற்கும். படத்தின் இறுதிக்காட்சிதான் முகத்தில் அறைகிறது. மக்களை திசைதிருப்ப அரசியல் எதுவேண்டுமானலும் செய்யும் என சொல்கிறது. அதுவே படத்தின் பலம். நீளம் அதிகம் என்பது பலவீனம்”. இவ்வாறு சேரன் பதிவிட்டுள்ளார்.
    ‘மாஸ்டர்’ படம் ஒரு மாஸ்டர் பீஸ் என்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் எனவும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
    நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.


    கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இதனால் மாஸ்டர் படம் பற்றிய அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

    விஜய் சேதுபதி

    இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் மாஸ்டர் படம் பற்றி நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “அது ஒரு மாஸ்டர் பீஸ். ரசிகர்களின் எதிர்பார்ப்பை மாஸ்டர் நிச்சயம் பூர்த்தி செய்யும்” என அவர் தெரிவித்துள்ளார். இதனால் மாஸ்டர் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
    நடிகர் பிரபு கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. சென்னை தி. நகரில் இருக்கும் அவரின் இல்லத்தில் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


    அந்த நிகழ்ச்சியில் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு கலந்து கொள்ளவில்லை. பிரபுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதால் தான் அப்பாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் பரவியது.

    பிரபு

    இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிரபு, தனக்கு கொரோனா பாதிப்பு எல்லாம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அவர் நிகழ்ச்சியில் பங்கேற்காததன் காரணம், மழை பெய்தபோது வழுக்கி விழுந்ததால் பிரபுவுக்கு காலில் அடிபட்டதாம். அடிபட்ட காலோடு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பாததால் அவர் வரவில்லையாம்.
    உடல் எடையைக் குறைப்பதற்காக கீட்டோஜெனிக் டயட்டில் இருந்து வந்த இளம் நடிகை மிஷ்டி முகர்ஜி சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்துள்ளார்.
    இந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், இளம் நடிகை மிஷ்டி முகர்ஜி. இவர் உடல் எடையைக் குறைப்பதற்காக கீட்டோஜெனிக் டயட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது சிறுநீரகம் செயலிழந்ததால் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    மிஷ்டி முகர்ஜி

    ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளியன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 27. அவர் கடைபிடித்து வந்த கீட்டோடயட் தான் அவரது சிறுநீரகம் செயலிழந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. நடிகை மிஷ்டி முகர்ஜியின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிம்பு, லாரன்ஸ் பட நடிகைகள் இருவர் கலந்துகொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
    பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியில் இந்நிகழ்ச்சி இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இதன் 14-வது சீசன் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களை நடிகர் சல்மான் கான் அறிமுகம் செய்து வைத்தார். 

    ஜாஸ்மின், நிக்கி டம்போலி

    அவற்றில் ஜாஸ்மின் மற்றும் நிக்கி டம்போலி ஆகியோர் தமிழ் சினிமாவில் நடித்தவர்கள். ஜாஸ்மின் என்பவர் வானம் படத்தில் சிம்புவின் காதலியாக நடித்திருந்தார். அதேபோல் நிக்கி டம்போலி, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இன்று தொடங்க உள்ளது.
    ஏ.ஆர்.கே.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து ஸ்பெஷல் ஆபிசர் வேடத்தில் ஏ.ஆர்.காமராஜ் நடித்து இயக்கும் படம் ‘பிறர் தர வாரா’ படத்தின் முன்னோட்டம்.
    ஏ.ஆர்.கே.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து ஸ்பெஷல் ஆபிசர் வேடத்தில் ஏ.ஆர்.காமராஜ் நடித்து இயக்கும் படம் ‘பிறர் தர வாரா’. இதில் இவருடன் சம்பத் ராம், ருத்ரன், அபு, ஹரி, புருஷ், சேகர், ராஜன், நிவேதா லோகஸ்ரீ, இன்னும் பலர் நடித்துள்ளனர்.

    கோவை, பொள்ளாச்சி, கோபி, உடுமலை, ஊட்டி ஆகிய ஊர்களில் இதுவரை படப்பிடிப்பு நடைபெறாத இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. டேவிட் - கோகுல் இருவரும் ஒளிப்பதிவையும், ஹரிபிரசாத் படத்தொகுப்பையும், ஜாக் வாரியர் இசையையும் கவனித்துள்ளனர்.

    சிட்டியில் குழந்தைகள் கடத்தல் தீவிரமாகிறது. குழந்தைகளை கடத்துவது யார்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பதை கண்டறிந்து கைது செய்ய ஸ்பெஷல் ஆபிசரை நியமிக்கிறார் கமிஷனர். ஸ்பெஷல் ஆபிசர் துப்பு துலக்குகிறார். இதன் பின்னால் இருக்கும் பெயரை கேட்டதும் ஆபீசர் அதிர்ச்சி அடைகிறார். யார் அவர்கள்? எதற்காக இதில் ஈடுபட்டார்கள் என்பதை கேட்டதும் இன்னும் அதிர்ச்சி அவருக்கு அதிகமாகிறது. இறுதியில் அவர்களை ஸ்பெஷல் ஆபிசர் பிடித்தாரா இல்லையா என்பதை திருப்பங்கள் நிறைந்து உருவாக்கி வருகிறார்கள்.

    கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் நிலையில், நான் இதில் கலந்துக் கொள்ள வில்லை என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
    கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4ம் தேதி (நாளை) முதல் ஒளிப்பரப்பாகிறது. இதற்கான புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் லீக்கானது.

    லீக்கான பட்டியலில், நடிகை ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ஆர்ஜே அர்ச்சனா, செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் ஆகிய பெண் போட்டியாளர்களும், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆரி, ரியோ, சிங்கர் அஜீஸ், மாடல் பாலாஜி முருகதாஸ் ஆகிய ஆண் போட்டியாளர்கள் பெயர் இடம் பெற்றது. மேலும் நிகழ்ச்சி ஆரம்பித்து சில நாட்களில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக பாடகர் வேல்முருகன், நடிகை காயத்ரி செல்ல இருப்பதாவும் கூறப்பட்டது.

    காயத்ரி

    இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான பணிகள் இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், நடிகை காயத்ரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.

    நடிகை காயத்ரி, விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    சிம்பு நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் உருவாக இருக்கிறது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இப்படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சிம்புவின் 39-வது படத்தை சுசீந்திரன் இயக்க இருப்பதாகவும், சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அடுத்த வாரம் திண்டுக்கலில் தொடங்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    சிம்பு

    30 நாட்களில் படப்பிடிப்பை முடித்து விட்டு பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதில் சிம்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிராமத்து இளைஞனாக நடிக்க இருக்கிறார்.
    சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப்போற்று படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டிருக்கிறார்.
    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படம் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது. 

    இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    ஜி.வி.பிரகாஷின் பதிவு

    இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘சூரரைப் போற்று படத்தின் டிரைலர் மிக விரைவில் வெளியாக இருக்கிறது. பின்னணி இசை பணிகள் முடிந்து விட்டது என்று கூறியிருக்கிறார்.

    காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி படங்களில் நடித்த சோனியா அகர்வால், திரிஷா, நயன்தாரா கிட்ட கேட்பீங்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
    காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மதுர உள்ளிட்ட படங்களில் நடித்த சோனியா அகர்வால் டைரக்டர் செல்வராகவனை திருமணம் செய்து பின்னர் விவகாரத்து பெற்றார். தற்போது சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, 

    ’நான், திரிஷா, நயன்தாரா மூணு பேரும் ஒரே வயதுக்காரர்கள். 82-83ல பிறந்தவர்கள். ஆனால் என்னிடம் `நீங்க அம்மா கேரக்டர்ல நடிப்பீங்களா'னு கேட்டுட்டு வரும்போது எனக்கு ஆச்சர்யமா இருக்கு. இதே கேள்வியை நீங்க திரிஷாகிட்டயோ, நயன்தாராகிட்டயோ கேட்பீங்களானு கேட்டிருக்கேன். 

    சோனியா அகர்வால்

    ஒருவேளை நான் வயசானவ மாதிரி மாறியிருந்தாலோ, உடம்பை பிட்டா வெச்சுக்கலைன்னாலோகூட ஓகே. நான் இளமையா இருக்கேன். உடற்கட்டை பராமரிக்கிறேன். அப்படியிருக்கும்போது ஏன் அம்மா கேரக்டருக்கு என்னை யோசிக்கிறீங்க? நானும் ராதிகா மேடம், குஷ்பூ மேடம் வயசை எட்டினதும் அம்மா கேரக்டர் பண்றேனே. இப்ப எனக்கு அதுக்கான வயது இல்லை.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×