என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவரின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டிருக்கிறார். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கும் ஸ்ருதி ஹாசன், தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்து வருகிறார்.

    ஸ்ருதிஹாசன்

    கொரோனா ஊரடங்கில் உடற்பயிற்சி செய்வது, பாடுவது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது பள்ளி பருவத்தில் குழந்தையாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பழைய நியாபகங்களை நினைவு கூர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வெற்றி பெற்றதால் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். தற்போது விஜய், விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர் படத்தை உருவாக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

    இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ’மாநகரம்’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. 

    விஜய் சேதுபதி

    தற்போது இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ’மாஸ்டர்’ படத்தில் வில்லனாகவும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் இந்த படத்தின் டைட்டில் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    சைலன்ஸ் படத்தைத் தொடர்ந்து மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் இரண்டு படங்கள் நேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீசாக இருக்கிறது.
    புதிய படங்களை ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், அனுஷ்காவின் சைலன்ஸ், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி நடித்துள்ள டேனி உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டியில் வந்தன. சூர்யா நடித்துள்ள சூரரை போற்று வருகிற 30-ந்தேதி ஓ.டி.டியில் வருகிறது. 

    தீபாவளி பண்டிகையில் விஷாலின் சக்ரா, சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர், நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களையும் ஓ.டி.டி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

    மாறா

    இந்த நிலையில் மாதவன் நடித்துள்ள மாறா படம் ஓ.டி.டியில் ரிலீசாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் நாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். திலீப் குமார் இயக்கி உள்ளார். மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்து 2015-ல் திரைக்கு வந்த சார்லி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி உள்ளது. மேலும் மாதவன் நடித்து இயக்கிய ராக்கெட்ரி படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது.
    மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பின்னணி பாடகர்கள் மோட்ச தீபம் ஏற்றி பக்திப்பாடல்கள் பாடினர்.
    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த சில தினங்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த பின்னணி பாடகர்கள் அவரது நினைவாக மோட்ச தீபம் ஏற்றினர்.

    நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியின் சகோதரியும், பின்னணி பாடகியுமான எஸ்.பி.சைலஜா, அவரது கணவர் சுபலேகா சுதாகர், பின்னணி பாடகர்கள் மனோ, அனுராதாஸ்ரீராம், நகைச்சுவை நடிகர் மயில்சாமி, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பின்னணி பாடகர்கள், உள்ளூர் இசை கலைஞர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தீபம் ஏற்றும் பாடகர்கள்

     தொடர்ந்து பாடகர்கள் எஸ்.பி.சைலஜா, மனோ, அனுராதாஸ்ரீராம் ஆகியோர் பக்தி பாடல்கள் பாடினர். பின்னர் அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
    தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கி இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், அந்த சந்திப்புதான் பெரிய மிராக்கிள் என்று கூறியிருக்கிறார்.
    பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி என மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது பாணியிலிருந்து முற்றிலும் மாறி முழுக்க ரசிகர்கள் ரசனைக்கு ஏற்ப ரஜினியின் ‘பேட்ட’ படம் இயக்கினார். இப்படத்தை அடுத்து தனுஷை வைத்து ஜகமே தந்திரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    இதற்கிடையில் ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் ‘மிராக்கிள்’ என்ற தலைப்பில் ஒரு கதையை இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இதில் பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த ஆந்தாலஜி திரைப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரஜினி - கார்த்திக் சுப்புராஜ்

    இப்படம் தொடர்பாக கார்த்திக் சுப்புராஜிடம் உங்கள் வாழ்க்கையில் நடந்த மிராக்கிள் எது என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு கார்த்திக் சுப்புராஜ், நான் இயக்குனர் ஆனதே பெரிய மிராக்கிள் தான். நான் படம் இயக்குவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் பேட்ட படத்திற்காக ரஜினி சாரை சந்தித்ததும், அவரை வைத்து படம் இயக்கியதுதான் என் வாழ்க்கையில் நடந்த பெரிய மிராக்கிள் என்று கூறினார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளனர். 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் மீண்டும் மோத கார்த்தி தயாராகி இருக்கிறார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முயற்சித்தது. ஆனால் கொரோனா ஊரடங்கால் முடியாமல் போனது. அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் மாநில அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

    இதனிடையே ‘சூரரைப்போற்று’ உள்ளிட்ட ஒரு சில படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டன. ஆனாலும் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் தான் திரையிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறது படக்குழு. இந்நிலையில் மாஸ்டர் படத்தை 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடும் திட்டத்தில் படக்குழுவினர் இருப்பதாக கூறப்படுகிறது. 

    கார்த்தி - விஜய்

    இதனிடையே பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாகவும், நல்ல ஒரு பண்டிகை நாளில் படத்தை வெளியிட காத்திருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார். 

    எனவே ‘சுல்தான்’ திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என தெரிகிறது. அப்படி வெளியானால் மாஸ்டர் திரைப்படமும் சுல்தானும் ஒரே நாளில் திரைக்கு வரும். கடந்த 2019-ம் ஆண்டு பிகில், கைதி ஆகிய படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்து வசூலை வாரிக்குவித்ததும் குறிப்பிட்டத்தக்கது.
    நடிகர் சிம்புவுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகையின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
    சிம்பு நடிப்பில் வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சனா கான். இதை தொடர்ந்து இவர், தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது இந்தி படம் ஒன்று உருவாகி வருகிறது.

    இந்நிலையில் தற்போது சனா கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு திடீர் முடிவை அறிவித்துள்ளார். இனிமேல் திரைப்படம் உள்ளிட்ட எவற்றிலும் நடிப்பதில்லை. இனி இறைவனின் ஆணைப்படி, தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு வாழ்வது என முடிவெடுத்து இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

    சிம்புடன் சனாகான்

    சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் டிக்டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இவர் பின் தொடர்ந்தவர்கள் அதிக பேர். இந்நிலையில் சனாகானின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறி சேவை செய்த இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
    இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா நர்ஸ் படிப்பில் பட்டம் பெற்றவர். கொரோனா இந்தியாவில் பரவத் தொடங்கிய காலம் முதல் நர்ஸ் பணிக்கு திரும்பி கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்காக பணிபுரிந்து வந்தார். 

    நடிகையாக இருந்து, நர்ஸ் பணிக்கு திரும்பும் ஆவலைக் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையில் படித்து நர்ஸ் பட்டம் பெற்றேன். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நான் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர முடிவு செய்தேன். நர்சாக, நடிகையாக நாட்டிற்கு சேவை செய்ய ஆவலாக உள்ளேன். தயவு செய்து வீட்டில் இருங்கள். அரசுக்கு ஆதரவு அளியுங்கள் என்று தெரிவித்திருந்தார். 

    ஷிகா மல்கோத்ரா

    கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா வார்டுகளில் பணிபுரிந்து வந்த ஷிகா மல்கோத்ரா தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அலட்சியம் காட்டாமல், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
    தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன், என் கனவு அது மட்டும்தான் என்று பேட்டியளித்துள்ளார்.
    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் உடன் சுஹாசினி மணி ரத்னமும் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளனர். இதில் ‘இளமை இதோ இதோ’ என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படம் குறித்து கல்யாணி பிரியதர்ஷன் கூறும்போது, ‘இளமை இதோ இதோ’ படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட்கள் நடைபெற்றது. நாயகன் காளிதாஸ் ஜெயராம் என்னுடைய குடும்ப நண்பர். சிறந்த நடிகர். படப்பிடிப்பு மிகவும் ஜாலியாகவும் சிறந்த அனுபவமாகவும் இருந்தது. 



    செட்டில் 5 பேர்தான் இருந்தோம். நானே மேக்கப் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் பார்த்தேன். இந்த அனுபவம் சிறப்பாக இருந்தது’ என்றார். 

    பெண் இயக்குனர் படத்தில் நடித்த அனுபவம் குறித்த கேள்விக்கு, என்னை பொருத்தவரை ஆண் இயக்குனர், பெண் இயக்குனர் என்று பார்க்க முடியவில்லை. இயக்குனர்கள் எல்லோரும் குரு. அவர்களை சொல்லுவதை திறமையாக செய்ய வேண்டும் அதுதான் என் வேலை. அதை சிறப்பாக செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

    கல்யாணி பிரியதர்ஷன்

    என் கனவு ஒன்று மட்டும்தான். ஒரே ஒரு படம் மட்டும் இயக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அது இப்போ இல்லை. விரைவில் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்’ என்றார்.

    'புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, வேண்டுதலுக்காக கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வரும் நிலையில், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டுள்ளதால், இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.

    சிம்பு

    இதற்கு முன்னதாக சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை முதல் தொடர்ந்து 40 நாட்கள் சிம்பு கலந்துக் கொள்ள இருக்கிறார். படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக நடிகர் சிம்பு நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். மேலும் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு தரிசனமும் செய்திருக்கிறார். இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    சிம்பு

    சிம்பு - சுசீந்திரன் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாகவும், இசையமைப்பாளராக தமனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.


    சுப்ரமணியம்சிவா இயக்கத்தில் சமுத்திரகனி, ஆத்மியா நடிப்பில் உருவாகி இருக்கும் வெள்ளை யானை படத்தின் முன்னோட்டம்.
    திருடா திருடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுப்ரமணியம்சிவா. அதன்பின் பொறி, யோகி, சீடன் என்ற படங்களை இயக்கியவர், வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். சின்ன இடைவெளிக்குப் பின் சமுத்திரகனியை நாயகனாக வைத்து இவர் இயக்கியிருக்கும் படம் வெள்ளை யானை.

        வெள்ளை யானை படக்குழு

    ‘மனம் கொத்திப் பறவை’ ஆத்மியா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை, வைட் லாம்ப் டாக்கீஸ் சார்பில் எஸ். வினோத் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல்களை இயக்குனர் ராஜு முருகன், உமாதேவி, அறிவு, அந்தோணிதாசன் ஆகியோர் எழுதி உள்ளனர்.
    சூரியின் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் அதனை சட்ட ரீதியாக சந்திக்க இருப்பதாகவும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
    நிலம் வாங்கித் தருவதாக கூறி 2 கோடியே 70 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மீதும், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீதும் வழக்குப்பதிவு செய்யக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சூரி மனு அளித்தார். இதன்பேரில் அவர்கள் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நடிகர் விஷ்ணு இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சி கரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது உண்மையில் திரு. சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோவுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தை திரும்பத் தர வேண்டும். 

    விஷ்ணு விஷால்

    "கவரிமான் பரம்பரை என்ற படத்துக்காக 2017ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. 

    நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம். உண்மை வரும்வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் உண்மையான தகவல்களுடன் இது பற்றி செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்” என குறிப்பிட்டு உண்மை ஒருநாள் வெல்லும் என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார்.
    ×