என் மலர்
சினிமா செய்திகள்
நடிகை ராஷி கண்ணாவின் சமீபத்திய கவர்ச்சி போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, மேதாவி, சைத்தான் கா பட்சா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார், அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். படங்களில் பெரும்பாலும் கவர்ச்சியான வேடங்களில் நடித்திராத ராஷி கண்ணா தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாக உள்ள தளபதி 65 படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. கொரோனா பிரச்சனை முடிவடைந்ததும் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மாஸ்டர் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். ‘தளபதி 65’ என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார்.

இப்படம் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. படத்தின் அறிவிப்பு தாமதமானாலும், படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். அதாவது தளபதி 65 படம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. தற்போது விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு தொடங்கியுள்ளதாம். படப்பிடிப்புக்கு செல்லும் போது படம் குறித்து அறிவிக்கலாம் என தயாரிப்பு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
சிதம்பரம் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பட்டியலினத்துத் தாயொருத்தி தரையில் வீசப்படுவதா? அவரென்ன மண்புழுவா? தலைவியாய்க் கூட அல்ல.. மனுஷியாய் மதிக்க வேண்டாமா? என் வெட்கத்தில் துக்கம் குமிழியிடுகிறது. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டிய துயரங்களுள் இதுவும் ஒன்று”. என வேதனை தெரிவித்துள்ளார்.
மாதவ் மீடியா நிறுவனம் தயாரிப்பில் சிம்பு - சுசீந்திரன் கூட்டணியில் உருவாகும் படத்தில் பிரபல இயக்குனர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
மாதவ் மீடியா நிறுவனம் தமிழ்த் திரையுலகிற்கு நம்பிக்கையளிக்கும் வகையில் படங்களைத் தயாரித்து வருகிறது. 'ஜீரோ' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இரண்டு படங்கள் தயாரிப்பில் உள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓ மணப்பெண்ணே' மற்றும் சசி - ஹரிஷ் கல்யாண் இணையும் படம் ஆகியவை ஆகும்.
தற்போது தங்களுடைய தயாரிப்பில் ஐந்தாவதாக உருவாகும் பிரம்மாண்ட தயாரிப்பை அறிவித்துள்ளது. முன்னணி நடிகரான சிம்பு நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். சென்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து தயாராகியுள்ளார். அவருக்கு பொருந்தும் வகையில் இந்தக் கதையை செதுக்கியுள்ளார் சுசீந்திரன்.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி உள்ளார்.
ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி என தொழில்நுட்பக் குழுவினரும் இந்தப் படத்துக்கு வலு சேர்த்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு முடிவு செய்து மும்முரமாக பணிபுரிந்து வருகிறது.

2021-ம் ஆண்டு மக்களை மகிழ்விக்க இந்தப் படம் வெளியாகவுள்ளது. தொடர்ச்சியாக தரமான படங்களை மட்டுமே தயாரிக்க முடிவு செய்துள்ள மாதவ் மீடியா நிறுவனம், இந்தப் படமும் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் வகையில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், சட்டசபையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். மேலும், பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விப்ரி நிறுவனம் சார்பில் விஷ்ணு இந்தூரி இப்படத்தை தயாரிக்கிறார். விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டிருந்த தலைவி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. அதில் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது அதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதையடுத்து படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை கங்கனா பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போதைப்பொருள் விவகாரத்தில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் ராகிணி, சஞ்சனா மோதிக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னட திரை உலகில் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அவர்கள் பரப்பன அக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நடிகைகள் 2 பேரும் மோதிக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சிறையில் இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவு வரை புத்தகம் படித்துவிட்டு தூங்கவிடாமல் செய்வதாக நடிகை ராகிணி மீது சஞ்சனாவும், அதிகாலையில் எழுந்து யோகா பயிற்சி செய்வதால் தன்னால் தூங்க முடியவில்லை என்று சஞ்சனா மீது ராகிணியும் சிறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகைகள் 2 பேரையும் சிறை அதிகாரிகள் சமாதானப்படுத்தினாலும், அவர்கள் தினமும் சண்டை போட்டு கொள்வதாக கூறப்படுகிறது. மேலும் இருவர் இடையே சில நேரங்களில் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாகவும், அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் ராகிணி, சஞ்சனாவிடம் அமலாக்கத்துறையினர் 5 நாட்கள் விசாரணை நடத்திவிட்டு சென்ற பிறகு தான், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகிணி முதலில் கைதான பின்பு தான் சஞ்சனா கைதாகி இருந்தார்.
இதனால் உன்னால் (ராகிணி) தான், நான் கைதாக நேரிட்டதாக சஞ்சனா கூறுவதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாகவும் 2 நடிகைகளும் சண்டை போட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறையில் நடிகைகள் மோதிக் கொள்ளும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாரதிராஜாவை தாக்கி கருத்து வெளியிட்டதற்காக வருந்துவதாக கூறி ‘இரண்டாம் குத்து’ படத்தின் இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘இரண்டாம் குத்து’ படத்தின் போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிராஜா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் பாரதிராஜாவை தாக்கி கருத்து வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாரதிராஜாவை தாக்கி கருத்து வெளியிட்டதற்காக வருந்துவதாக கூறி ‘இரண்டாம் குத்து’ படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘இரண்டாம் குத்து’ படத்தை இயக்கி, நடித்துள்ளேன். அதன் போஸ்டர்கள், டீசருக்கு இயக்குனர் பாரதிராஜா எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையை படித்துவிட்டு வந்த கணத்தின் வெப்பத்தில் எனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு ‘டுவிட்’ போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம்? என்று தெரியாமல் செய்தது. அதற்கு பிறகு நாம் அவசரத்தில் இதை செய்திருக்க கூடாது என்று மனம் கூறியது. ஆகவே நான் போட்ட ‘டுவிட்டர்’ பதிவுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் பாரதிராஜா. அவருடைய சாதனைகளில் ஒரு சதவீதமாவது நாம் செய்து விட மாட்டோமா... என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு இயக்குனர்களுக்கு, இயக்குனர் பாரதிராஜா வழிகாட்டியாக இருந்திருக்கிறார். இருக்கிறார். எப்போதும் இருப்பார்.
அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றியிருக்க கூடாது. இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் டைரக்டர் சந்தோஷ் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் ஒரு பாடலுக்கு கோமாளி பட நடிகை குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் வாத்தி கம்மிங் என்ற பாடல் யூடியூப்பில் 80 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருப்பதாக படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்த பாடலுக்கு பலரும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா, அவரது ஸ்டைலில் நடனம் ஆடி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் திரைப்படம் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால், படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் லூடோ கேம் விளையாடும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிக்க 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து பெரும் வெற்றியையும், வசூலையும் குவித்த படம் 'திரிஷ்யம்'. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் ஆனது. இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் பூஜையுடன் கொச்சியில் ஆரம்பமானது.
மோகன்லால், அவரது மனைவியாக மீனா, மகள்களாக ஹன்சிபா ஹாசன், எஸ்தர் அலி ஆகியோர் முதல் பாகத்தில் நடித்தனர். இரண்டாம் பாகத்திலும் அவர்களே நடிக்கிறார்கள். கேபிள் டிவி ஆபரேட்டர் ஜார்ஜ் குட்டி ஆக மோகன்லால், அவரது மனைவி ராணி ஜார்ஜ் ஆக மீனா இரண்டாம் பாகத்திலும் அதே கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

'திரிஷ்யம் 2'வின் ஜார்ஜ் குட்டி குடும்பப் புகைப்படத்தை மோகன்லால் சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டார். அது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. தற்போது படப்பிடிப்பில் மோகன்லால், மீனா மற்றும் மகள்களாக நடிப்பவர்களுடன் லூடோ கேம் விளையாடும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து பிரபலமான நடிகை பாவனாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
கேரளாவைச் சேர்ந்த நடிகை பாவனா, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் நடித்துள்ளார். கன்னடப் படங்களில் நடித்தபோது, கன்னடத் தயாரிப்பாளரும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபருமான நவீனைக் காதலித்தார்.
ஐந்து ஆண்டு காதலுக்கு பின்னர் நவீன், பாவனா கடந்த 2018ம் ஆண்டு திருணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க விருப்பம் கொண்டுள்ள பாவனா தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் கிடைக்காததால் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்ளுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

தற்போது இந்த லாக்டவுனில் உடல் எடையை கூடிவிட்டதாக கூறி மிரர் செல்பி புகைப்படமொன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் கிடைத்தாலும், அப்படி ஒன்றும் நீங்கள் வெயிட் போடவில்லை... இதெல்லாம் வெயிட்டா... வேறு ஏதோ நல்ல செய்தி சொல்ல போறீங்களா... என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் எல்லோரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ரஜினி பட நடிகை கூறியிருக்கிறார்.
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை வைத்துப் பல்வேறு சர்ச்சைகள் உருவாகின. சுஷாந்த் சிங் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போதை மருந்து தடுப்புப் பிரிவு நடத்திய விசாரணையில் சுஷாந்தின் காதலி ரியா உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே ரியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ரியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நடிகை ஹூமா குரேசி தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: ரியா சக்ரபோர்த்தியிடம் எல்லோரும் மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்தக் கொலைச் சதி பற்றிப் பேச ஆரம்பித்த நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும். உங்களது நோக்கம் நிறைவேற ஒரு பெண்ணின், அவரது குடும்பத்தின் வாழ்க்கையை நாசமாக்கியது குறித்து நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்" இவ்வாறு ஹூமா குரேசி தெரிவித்துள்ளார்.

இந்தி நடிகையான ஹூமா குரேசி காலா படத்தில் ரஜினி காதலியாக நடித்தார். அடுத்து அஜித்தின் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று பிரபல இயக்குனர் சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தற்போது ‘லாபம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய்சேதுபதி நடிக்கும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா.. நமக்கெதற்கு மாத்தையா?.. மாற்றய்யா?

இவ்வாறு சீனுராமசாமி கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் கதையில் நடிக்க வேண்டாம் என்பதற்காக இப்படி பதிவு செய்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.






