search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கங்கனா ரணாவத்
    X
    கங்கனா ரணாவத்

    சட்டசபையில் கங்கனா ரணாவத் - வைரலாகும் புகைப்படம்

    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், சட்டசபையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். மேலும், பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விப்ரி நிறுவனம் சார்பில்  விஷ்ணு இந்தூரி இப்படத்தை தயாரிக்கிறார்.  விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

    தலைவி படப்பிடிப்பில் கங்கனா ரணாவத்

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டிருந்த தலைவி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. அதில் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது அதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதையடுத்து படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை கங்கனா பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    Next Story
    ×