என் மலர்
சினிமா செய்திகள்
ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படம் 4 மொழிகளில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த அசுரன் பெரிய வெற்றி பெற்றது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜெகமே தந்திரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஓ.டி.டியில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் கர்ணன் பட வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளன. ஓரிரு மாதங்களில் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி படமொன்றிலும் அக்ஷய்குமாருடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை தமிழிலும் வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் ராம்குமார் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராம்குமார் ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய ராட்சசன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கூட்டணியில் தயாராகும் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2.70 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் சூரி சமீபத்தில் சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து புகார் மனு அளித்திருந்தார். அதில், வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக தயாரிப்பாளர் அன்புவேல் ராஜா 40 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி வைத்திருந்ததாகவும், அதனை கேட்டபோது நிலம் வாங்கி தருவதாக கூறி, மேலும் பணம் பெற்று மொத்தம் 2.70 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் கூறியிருந்தார்.
காவல் ஆணையாளரின் உத்தரவின்பேரில் இந்த புகாரின் மீது அடையாறு போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு தயாரிப்பாளர் அன்புவேல் ராஜா, ரமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் ஆணையாளரின் உத்தரவின்பேரில் இந்த புகாரின் மீது அடையாறு போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு தயாரிப்பாளர் அன்புவேல் ராஜா, ரமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பெரிய மாற்றம் நடைபெற இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகிறது. தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி, சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முன்னணி நடிகர் நாகார்ஜுனா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஜூனியர் என்.டி.ஆர், நானி ஆகியோர் சீசன் 1, 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.
கடந்த சீசன்-3ல் நாகார்ஜுனா சில காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற, அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் சில வாரங்கள் நிகழ்ச்சியை நடத்தினார்.

தற்போது சீசன் 4 துவங்கியுள்ள நிலையில், நாகார்ஜுனா நடித்து வரும் 'வைல்ட் டாக்' என்கிற படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. அதில் அவர் கலந்து கொள்ள இருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு விடுப்பு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக வேறு யாரை தொகுத்து வழங்குவார்கள் என்று விரைவில் தெரியவரும்.
தமிழில் கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியது. இந்த சீசனையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
சினிமா நடிகைகள் பலரும் தாங்கள் கட்டுலுடன் இருக்கிறோம் என்பதை நிரூபிக்க பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்கள். இதில் பல நடிகைகளின் போட்டோக்கள் வைரலாகி இருக்கிறது.
இந்நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் டாப்ஸி மாலத்தீவிற்கு ஓய்வெடுக்க சென்றிருக்கிறார். அங்கு மீண்டுகளுடன் விளையாடுவது, விதவிதமான உணவுகளை சாப்பிடுவது என சமூக வலைத்தளத்தில் ஸ்டோரி போட்டிருக்கிறார். மேலும் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேலானோர் லைக்குகளை கொடுத்து இருக்கிறார்கள். மேலும் சமூக வலைத்தளத்தில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமாக இருக்கும் ஜோடி, புதியதாக வாங்கி இருக்கும் விலையுயர்ந்த காரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். இவர் தமிழில், சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன், விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஆர்யாவின் ராஜா ராணி படத்தில் நடித்த நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது பகத் பாசில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். பல கோடி மதிப்புள்ள போர்ஷ் எனும் காரை அவர் வாங்கியுள்ளார். பச்சை நிறத்தில் இருக்கும் இந்த காருடன், பகத் மற்றும் நஸ்ரியா ஜோடியாக சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவரது இசையில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஐங்கரன், ஜெயில் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அறிமுக இயக்குனர் அகிலன் இயக்கும் இந்த புதிய படத்தை நவீரா சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் இதர நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த வெற்றி மாறன் ‘வடசென்னை’ 2ம் பாகத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வடசென்னை’. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து இப்படத்தின் 2-ம் பாகம் வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் அசுரன் திரைப்படம் வந்ததால், வடசென்னை படத்தின் 2-ம் பாகம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவின. மேலும் இயக்குனர் வெற்றிமாறன், சூரியை வைத்து ஒருபடமும், சூர்யாவை வைத்து ஒரு படமும் இயக்குவதால் வடசென்னை 2 உருவாகாது என்று கூறப்பட்டது.

இந்நிலையில், விரைவில் வட சென்னை-2 திரைப்படம் வரும் என்றும், அதற்கான கதையை எழுதிக் கொண்டிருப்பதாகவும் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
பா.விஜய் இயக்கத்தில், ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் உருவாகும் மேதாவி படத்தின் முன்னோட்டம்.
மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் “மேதாவி”. பிரபல பாடல் ஆசிரியரும் இயக்குனருமான பா.விஜய் இப்படத்தை இயக்குகிறார். ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் – ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கின்றார்.
நகைச்சுவை பங்கிற்கு சாரா, “கைதி” படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு மேற்கொள்ள, சான்லோகேஸ் படத்தொகுப்பை செய்கிறார்.
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி ஒருவர் விரைவில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில் போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களில் ஒருவராக அர்ச்சனா இடம்பெறுவார் என கூறப்பட்டது. ஆனால் அர்ச்சனா தொகுப்பாளராக பணிபுரியும் சேனல் நிர்வாகம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என தடை போட்டதால் அப்போது அவர் செலவில்லை. தற்போது அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டதால், அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல தயாராகி வருகிறாராம். விரைவில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
‘இரண்டாம் குத்து’ படத்தைக் கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டிருந்த பாரதிராஜாவுக்கு அப்படத்தின் இயக்குனர் பதிலடி கொடுத்துள்ளார்.
ஹரஹர மஹாதேவகி என்கிற அடல்ட் காமெடு படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படமும் ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த படமாக இருந்தது. இந்த இரண்டு படங்களுக்கும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனால் தற்போது மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்கி உள்ளார் சந்தோஷ். ‘இரண்டாம் குத்து’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் டீசரை நடிகர் ஆர்யா நேற்று வெளியிட்டார். அதில் ஆபாச வசனங்கள், காட்சிகள் அதிகமாக உள்ளதால் ரசிகர்களும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் படத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே இயக்குனர் பாரதிராஜா ‘இரண்டாம் குத்து’ படத்தைக் கடுமையாக சாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு அப்படத்தின் இயக்குனர் சந்தோஷ், டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், “அவர் மீது மரியாதை இருக்கிறது. 1981ல் வெளிவந்த ‘டிக் டிக் டிக்’ படத்தைப் பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ,” என பதிவிட்டுள்ளார்.
இரண்டாம் குத்து படத்தின் போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் குத்து பட போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து மூத்த இயக்குனரும், தமிழ் திரைப்பட நடப்பு தயரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப் பட்டிருக்கிறது. மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப் பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர் களை உருவாக்குவது சாத்தியப் பட்டிருக்கிறது. உலகம் எங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ எத்தனை சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சாதாரண மல்ல.
பல கலைஞர்கள் கட்டியமைத்த கூடு. தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக் காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்.
சினிமா வியாபாரமும் தான்... ஆனால் வாழைப்பழத்தை பயன்படுத்தி கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அந்த வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது. இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த சினிமாவைக் கட்டமைத்தார்கள்? சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை.

இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத் தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது? நான் கலாச்சார சீர்கேடு எனக் கூவும் நபரல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன். கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன். ஆனால் “இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்.
இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்? இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது... நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன்.
இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா?? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன். இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப்பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன். சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்.
எத்தனை கற்பழிப்புகள்...? குழந்தைச் சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்பதை மக்களும் உணர்ந்து கொள்ளுங்கள்.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சுல்தான்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்கின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது: “3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கதையை கேட்ட நாள் முதல் இன்றுவரை, எங்களை தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நான் நடித்ததிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் இது. கடின உழைப்புடன் சிறந்த பங்களிப்பை கொடுத்த படக்குழுவுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
இப்படத்தை பண்டிகை தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.






