என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் அமிதாப் பச்சனுக்கு மகளாக நடிக்க உள்ளாராம்.
    கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் தெலுங்கில் அவர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

    தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா, தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான், இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக மிஷன் மஜ்னு போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    ராஷ்மிகா மந்தனா

    இந்நிலையில், மேலும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி தந்தை மகள் பற்றிய கதையம்சத்தில் உருவாகும் அப்படத்தை விகாஸ் பால் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் மகளாக ராஷ்மிகா நடிக்க உள்ளார்.
    சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.
    சென்னை:

    விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. ஜனவரி 13ல் படத்தை தியேட்டர்களில் திரையிட படக்குழு முடிவு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்  லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். 

    இந்த சந்திப்பின்போது, தியேட்டர்களில் பார்வையாளர்கள் அனுமதியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக  அதிகரிக்கும்படி கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    ஊமை விழிகள் பட புகழ் அரவிந்தராஜ் இயக்கத்தில், ஜெ.எம்.பஷீர் நடிப்பில் உருவாகி வரும் தேசிய தலைவர் படத்தின் புதிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.

    தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான இவர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை, 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்', 'கருப்பு நிலா' என விஜயகாந்த் நடித்த வெற்றி படங்களை தந்த அரவிந்தராஜ் இயக்குகிறார். 

    போஸ்டர்

    இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளத்தில் லீக்காகி உள்ளது. அதில், பசும் பொன் முத்துராமலிங்க தேவர் இளமை தோற்றத்திலும், கொஞ்சம் வயதான தோற்றத்திலும் இருக்கிறார். பின்னணியில் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. 

    போஸ்டரை பார்க்கும் போது, போராட்ட காலத்தில் யாரும் அறிப்படாத பல உண்மை சம்பவங்கள் இப்படத்தில் இடம் பெறும் என்று எதிர்பார்க்க படுகிறது. உண்மைச் சம்பவங்களை படமாக்கினால் படத்திற்கு பிரச்சனைகள் ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
    பாலாஜி சய்யபுரெட்டி இயக்கத்தில் கிரண் அப்பாவரம், கோமலி பிரசாத் நடிப்பில் உருவாகி வரும் ‘செபாஸ்டியன் பி.சி. 524’ படத்தின் முன்னோட்டம்.
    இளம் நடிகர் கிரண் அப்பாவரம் தனது முதல் படமான ‘ராஜா வாரு ராணி வாரு’ படத்தின் மூலம் பார்வையாளர்களை ஈர்த்து, திரைத்துறையின் கவனத்தை பெற்றவர். அப்படம் அசலான கிராமத்து கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது. அவரது இரண்டாவது படமான ‘எஸ்ஆர் கல்யாணமண்டபம்’ ஹிட் பாடல்களால் பிரபலமானது. தற்போது அவரது மூன்றாவது படமாக ‘செபாஸ்டியன் பி.சி. 524’ ஒரு அசலான கதையுடன் வந்து கொண்டிருக்கிறது. 

    கிரண் அப்பாவரம்

    ப்ரமோத் மற்றும் ராஜு தயாரிப்பில் உருவாகும் படம் ‘செபாஸ்டியன் பி.சி. 524’. பாலாஜி சய்யபுரெட்டி இயக்கும் இப்படத்தில் கிரண் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக கோமலி பிரசாத் நடித்துள்ளார். மேலும் நம்ரதா தரேகர், ஸ்ரீகாந்த் ஐயங்கார், சூர்யா, ரோஹினி ரகுவரன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ராஜ் கே நல்லி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விப்லவ் நிஷாதம் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
    புதிய கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த சில வராங்களுக்கு திட்டமிடப்பட்டு இருந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு சுமார் 8 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகளும் தடைபட்டன. கடந்த மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. 

    இந்நிலையில் வெளிநாடுகளில் புதுவகை கொரோனா வைரஸ் இன்னும் வீரியமாக பரவி வருகிறது. இதனால் சில நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கும். எனவே எப்.எம்.எஸ் எனப்படும் வெளிநாட்டு திரையீட்டு உரிமையும் முக்கிய பங்கு வகிக்கும். 

    மாஸ்டர், ஈஸ்வரன் பட போஸ்டர்

    ஆனால் இந்த பொதுமுடக்கத்தால் அடுத்த சில வராங்களுக்கு திட்டமிடப்பட்டு இருந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. லாபத்தில் கணிசமாக பாதிக்கும் என்பதால் முன்னணி நடிகர்கள் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.
    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்திலிருந்து பிரபல நடிகர் திடீரென விலகி உள்ளாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என இவர் எடுத்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

    இவர் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

    பாரதிராஜா, கிஷோர்

    இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். தற்போது அவர் படத்திலிருந்து விலகி உள்ளாராம். பாரதிராஜா நடிக்கும் காட்சிகளை சத்யமங்கலம் வனப்பகுதியில் படமாக்க திட்டமிட்டு இருந்தார்களாம். அங்கு கடும் குளிர் நிலவுவதாலும், அது அவரது உடலுக்கு ஒத்துழைக்காது என்பதாலும் பாரதிராஜா அப்படத்திலிருந்து விலகி உள்ளாராம்.

    இதனால் பாரதிராஜாவுக்கு பதிலாக கிஷோர் அக்கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். நடிகர் கிஷோர் ஏற்கனவே வெற்றிமாறனின் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.
    ஐதராபாத்:

    நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று இருந்த போது படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்த் தனிமைப்படுத்திக்கொண்டார்.

    இந்தநிலையில் திடீரென ரஜினிகாந்த் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள், சில நாட்கள் மருத்துவமனையிலேயே ஓய்வு எடுக்க அறிவுரை வழங்கினர்.

    இதனை ஏற்று ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் செய்தி குறிப்புகளை வெளியிட்டது.

    அதில், ரஜினி உடல் நிலை தற்போது நன்றாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்த் ஒருவாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் எளிதான வேலைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று ஏற்படக்கூடிய சூழல்களை தவிர்க்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளை மருத்துவர்கள் வழங்கி இருந்தனர். 

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஆஸ்பத்திரியில் இருந்து காரில் வெளியே வந்த ரஜினி, ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்றார். இதையடுத்து விமானம் மூலம் சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.
    மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி படத்திலிருந்து இயக்குனர் ஹலீதா ஷமீம் விலகியுள்ளாராம்.
    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஜெயேந்திராவுடன் இணைந்து தயாரித்து வருகிறார். கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த ஆந்தாலஜி படத்தை எடுக்கின்றனர்.

    நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி படத்தை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், கவுதம் மேனன், ரதீந்திரன் பிரசாத், ஹலீதா ஷமீம், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குனர்கள் இயக்குவதாக இருந்தது.

    ஹலீதா ஷமீம்

    இந்நிலையில், இந்த ஆந்தாலஜி படத்திலிருந்து இயக்குனர் ஹலீதா ஷமீம் விலகியுள்ளாராம். அவருக்குப் பதிலாக இயக்குநர் சர்ஜுன் ஒப்பந்தமாகி உள்ளார். ‘ஏலே’ மற்றும் ‘மின்மினி’ படத்தின் பணிகள் இருந்ததால், அவர் ‘நவரசா’ படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ‘ஏலே’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது, ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதேபோல் ‘மின்மினி’ படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆன போட்டியாளர் யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். 

    அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா மற்றும் அர்ச்சனா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்றதால் அனிதா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    அனிதா

    தொகுப்பாளினி, செய்தி வாசிப்பாளர், நடிகை என பன்முகத்திறமை கொண்டவர் அனிதா. இவர் சூர்யாவின் காப்பான், ரஜினியின் எந்திரன் 2.0 போன்ற படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிக்பாஸ் 4-வது சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அர்ச்சனா, தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. தற்போது 80 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தவர் அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டுக்குள் அன்புதான் ஜெயிக்கும் என்று தொடர்ச்சியாக கூறி வந்த அர்ச்சனா, தன்னுடைய தலைமையில் ஒரு குரூப்பை உருவாக்கி வைத்திருந்தார்.

    ரியோ, நிஷா, ஜித்தன் ரமேஷ், கேபி, சோம் ஆகியோர் அதில் இடம்பெற்று இருந்தனர். அந்த குரூப்பிற்கு அன்பு கேங் என்றும் அழைத்து வந்தனர். இதைப்பார்த்த இதர போட்டியாளர்கள் அர்ச்சனா குரூப்பிஸம் செய்து வருவதாக குற்றம் சாட்டினர். ரசிகர்களும் அதே மனநிலையில் இருந்ததால் கடந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார்.

    அர்ச்சனா

    இதனை தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் அர்ச்சனா கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், “அர்ச்சனா சமையல், டாஸ்க் மற்றும் என்டெர்டெய்ன்மெண்ட் ஆகிய விஷயங்களில் டாப்பராக இருந்தார். ஆனால் ஆரியிடம் அன்பை காட்டுவதில் மட்டும் தோற்று விட்டார்” என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த அர்ச்சனா, “ஆரிக்கு அன்பு காட்டியது உங்களுக்கு காட்டப்படவில்லை. அதான் பிக்பாஸ்” என பதிவிட்டுள்ளார்.

    அர்ச்சனாவின் அந்த பதிவை பார்த்த மற்றொரு நெட்டிசன், மோசமான எடிட்டிங் என்று சொல்லப்போகிறீர்களா என கேட்டிருந்தார். அதற்கு பதில் கூறிய அர்ச்சனா, தவறான எடிட்டிங்னு நானா சொன்னேன், நீங்க தான் சொல்றீங்க. அது நல்ல எடிட்டிங் தான், ஆரிக்காக மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். நல்ல எடிட்டிங் என்று சூசகமாக ஆரியை கிண்டல் செய்துள்ளார் அர்ச்சனா. 
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

    இதுவரை நடந்த மூன்று சீசன்களில் இடையிடையே படங்களின் புரமோஷனுக்காக நடிகர், நடிகைகள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வது வழக்கம். இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புரமோஷனுக்காக வரும் நடிகர், நடிகைளை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு பதிலாக அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலிடம் வந்து உரையாடி விட்டு செல்கின்றனர்.

    கமல், ஜெயம் ரவி

    ஏற்கனவே கமலின் விக்ரம் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சென்றிருந்தனர். இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி ‘பூமி’ படத்தின் புரமோஷனுக்காக சென்றுள்ளார். ஜெயம் ரவியை அகம் டிவி வழியே பார்த்த போட்டியாளர்கள் ஆச்சர்யத்தில் திளைத்தனர். லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம் வருகிற பொங்கல் பண்டிகையன்று நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    நயன்தாரா பற்றி நடிகை ஆண்ட்ரியா தெரிவித்த சர்ச்சை கருத்து, நயன்தாராவின் ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகை மட்டுமல்லாமல் இவர் சிறந்த பாடகியும் ஆவர். ஆண்ட்ரியா ‘வடசென்னை’ ‘தரமணி’ போன்ற படங்களில் தனது வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். 

    அதிலும் வட சென்னை படத்தில் ஆடையில்லாமல் இவர் நடித்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிசாசு 2 படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார். 

    இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஆண்ட்ரியா, சர்ச்சை கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ‘திரையுலகில் நடிகைகள் முன்னணி கதாநாயகியாக வளர, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அப்போது தான் இவர் இந்த நடிகரின் படத்தில் நடித்துள்ள நடிகை என்று அடையாளம் காண முடிகிறது.

    நயன்தாரா, ஆண்ட்ரியா

    நடிகை நயன்தாராவின் வளர்ச்சிக்கு ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தேவைப்பட்டது. ஆனால் என்னுடைய வளர்ச்சிக்கு சிறந்த படங்களின் கதைகள் மட்டுமே தேவைப்பட்டது. அதே போல் ஒரு கதைக்கு தேவை என்றால் மட்டும் தான், நான் சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கிறேன் ” என மிக வெளிப்படையாக பேசியுள்ளார். இது நயன்தாராவின் ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது.
    ×