என் மலர்
சினிமா செய்திகள்
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி விரைவில் குணமடைய நடிகர் மம்மூட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்த மாறுபாட்டை தவிர ரஜினிக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி விரைவில் குணமடைய வேண்டி கமல்ஹாசன், சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராகவா லாரன்ஸ் உள்பட பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி டுவிட்டரில், “விரைவில் குணமடையுங்கள் சூர்யா... அன்புடன் தேவா” என பதிவிட்டுள்ளார். ரஜினியும், மம்மூட்டியும் மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் சூர்யா, தேவா என்கிற பெயரில் நண்பர்களாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தி நடிகர் சல்மான் கான் தனது 55-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
இந்தி சினிமா துறையில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சல்மான்கான். இவர் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் 1965 ஆம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பிறந்தார். இவர் தனது நடிப்பு திறனால் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், நடிகர் சல்மான் கான் இன்று (டிசம்பர் 27) தனது 55-வது வயதில் அடியெடுத்துவைக்கிறார். தனது பிறந்தநாளையொட்டி நேற்று இரவே மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள தனது பண்ணைவீட்டிற்கு சல்மான் கான் சென்றார்.
அங்கு தனது நண்பர்கள் மற்றும் பாலிவுட் துறையினருடன் இணைந்து சல்மான் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
55-வது பிறந்தநாளை கொண்டாடிவரும் சல்மான் கானுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற திரை நட்சத்திரங்களின் திருமணங்கள் பற்றிய முழு தொகுப்பு.
2020 ஆம் ஆண்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலரின் வாழ்வாதாரம் முடங்கியது. குறிப்பாக சினிமா தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கொரோனா காரணங்களால் பல பிரபலங்களின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. பல முக்கிய பிரபலங்களின் திருமணங்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் நடந்தது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்களின் பட்டியல் பின்வருமாறு...













மகத் - பிராச்சி மிஸ்ரா
அஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன் ஜில்லா படங்களில் நடித்தவர் மகத். மேலும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர்,2012 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிம்பு மற்றும் அனிருத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யோகிபாபு - மஞ்சு பார்கவி
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ஆரணியில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

அஸ்வின் ராஜா - வித்யாஸ்ரீ
கும்கி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் நகைச்சுவை நடிகர் அஸ்வின் ராஜா. இவர் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி தனது காதலியான வித்யாஸ்ரீயை திருமணம்செய்து கொண்டார். கொரோனா பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்த நேரத்தில் காமெடி நடிகர் அஸ்வின் ராஜாவின் திருமணம் எளிமையாக நடைபெற்றது.

நிதின் - ஷாலினி
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நிதின். இவருக்கும் ஷாலினி என்ற பெண்ணுக்கும் துபாயில் ஏப்ரல் 15ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. கொரோனா ஊரடங்கால் திருமணம் தள்ளி போனது. பின்னர், ஜூலை 26 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிதின் - ஷாலினி திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ராணா - மிஹீகா
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல நடிகராக இருப்பவர் ராணா. 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார். இவர் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மிஹீகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கொரோனா காலம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

ஆரவ் - ராஹி
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு வெற்றி பெற்றவர் ஆரவ். இவர் ஓ காதல் கண்மணி மற்றும் சைத்தான் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் 6 ஆம் தேதி ராஹி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். ராஹி, கவுதம் மேனன் இயக்கிவரும் ஜோஷ்வா என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

மியா ஜார்ஜ் - அஷ்வின் ஃபிலிப்
2014-ம் ஆண்டு 'அமர காவியம்' என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் மியா ஜார்ஜ். அதை தொடர்ந்து இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, வெற்றி வேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் அஷ்வின் ஃபிலிப் என்ற தொழில் அதிபரை கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

ஆர்கே சுரேஷ் - மது
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஆர்கே சுரேஷ். இவர் சினிமா பைனான்சியரான மது என்பவரை கடந்த அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். தங்களின் திருமணத்தை சில நாட்களுக்கு பிறகு நடிகர் ஆர் கே சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் அக்டோபர் 21 ஆம் தேதி அறிவித்தார்.

பாக்கியராஜ் கண்ணன் - ஆஜா
சிவகார்த்திகேயன் நடித்த, ரெமோ, கார்த்தி நடிப்பில், விரைவில் வெளியாக உள்ள,சுல்தான் படங்களை இயக்கியவர், பாக்கியராஜ் கண்ணன். இவருக்கும், ஆஜா என்பவருக்கும் அக்டோபர் 26 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

காஜல் அகர்வால் - கவுதம் கிட்சிலு
தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. காஜல் அகர்வாலுக்கு தொழிலதிபரான கவுதம் கிட்சிலுவுடன் அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. கொரோனா காலம் என்பதால் இருவீட்டார் மட்டுமே கலந்துக்கொண்டனர்.

சனா கான் - முஃப்தி அனஸ்
தமிழில் சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சனா கான். அதற்குப் பிறகு 'தம்பிக்கு எந்த ஊரு', 'பயணம்', 'ஆயிரம் விளக்கு' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். நடிகை சனா கானுக்கு குஜராத் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான முஃப்தி அனஸ் என்பவருக்கும் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

நிஹாரிகா- சைத்தன்யா
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நிஹாரிகா. தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திராவின் மகளான நிஹாரிகா தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இவர் ஹைதராபாத்தை சேர்ந்த மென்பொறியாளர் சைத்தன்யாவை டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி உதய்ப்பூரில் உள்ள அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார்.
சுந்தரபாண்டிய ராஜா, ஜோதிஷா நடிப்பில் சுல்தான் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் தப்பா யோசிக்காதீங்க படத்தின் விமர்சனம்.
நாயகன் சுந்தரபாண்டிய ராஜா, செய்யாத தவறுக்காக வேலையை இழக்கிறார். சுமார் ஆறு மாத காலமாக வீட்டிலேயே இருக்கும் சுந்தரபாண்டிய ராஜா, வீட்டில் மதிப்பை இழக்கிறார். இவரது மனைவியான ஜோதிஷா வேலைக்குச் செல்வதால், வீட்டு வேலைகளை சுந்தரபாண்டிய ராஜாவை செய்ய சொல்கிறார்.


குடும்பப் பெண்கள் வீட்டில் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யும் சுந்தரபாண்டிய ராஜாவின் வாழ்க்கை என்ன ஆனது? மீண்டும் வேலைக்குச் சென்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சுந்தரபாண்டிய ராஜா, பெண்கள் வீட்டில் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்து காண்பித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஜோதிஷா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
வேலைக்குச் செல்லும் மனைவி, வீட்டில் இருக்கும் கணவன் இவற்றை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சுல்தான். படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கிறது. மனைவி வேலைக்குச் சென்றவுடன் வீட்டில் இருக்கும் கணவன் துணி துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது அன்றாட நபர்களை சந்திப்பது என்று ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார். ஆனால் சுவாரசியமில்லாமல் திரைக்கதை நகர்வது படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. தேவையில்லாத காட்சிகளால் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

பெண் இசையமைப்பாளர் ஸ்டெர்லின் நித்யா இப்படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். இவரது இசை அதிக கவனம் ஏற்படுத்தவில்லை. எஸ்ஆர் வெற்றியின் ஒளிப்பதிவு தெளிவு இல்லை.
மொத்தத்தில் 'தப்பா யோசிக்காதீங்க' தேவையற்றது.
பிரபல இயக்குனர் வி.இசட்.துரை, டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் 'டிஸ்டண்ட்' படத்தின் முன்னோட்டம்.
முகவரி, தொட்டி ஜெயா, இருட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை, டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'டிஸ்டண்ட்' எனும் புதிய படத்தை தயாரித்துள்ளார். இதில் சுரேஷ் நல்லுசாமி கதாநாயகனாகவும், சவுந்தர்யா நஞ்சுந்தன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
திரில்லருடன் கலந்த சைன்ஸ் பிக்ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஜிகே என்பவர் இயக்கியுள்ளார். இவர் பல விருதுகளை பெற்ற அசரீரி எனும் குறும்படத்தை இயக்கியவர். மேலும் இவரது 'காதலின் தீபம் ஒன்று' குறும்படம் யூடியூப்பில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலானது.
இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. விஜய் சித்தார்த் இதற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் சாக்ஷி அகர்வாலின் நீச்சல் உடை புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சாக்ஷி சின்ட்ரெல்லா, டெடி, புரவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சாக்ஷி அகர்வால் எப்போதும் சமூகவலைதளத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருவார். உடற்பயிற்சி, ரசிகர்களுக்கு அறிவுரை என வீடியோ, கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் சாக்ஷி தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

விடுமுறைக்காக கோவா சென்று இருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால் அங்கு இருக்கும் கடற்கரையில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து இருக்கிறார்.
தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று லைக்குகளை குவித்து வருகிறது.
பிரபல நடிகராக வலம் வரும் சோனு சூட் சாலையோர உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து ரியல் ஹீரோ என பெயர் எடுத்தவர் சோனு சூட். இவர் தற்போது ரசிகர் ஒருவர் தொடங்கிய சாலையோர உணவகத்திற்கு சர்பிரைசஸ் விசிட் கொடுத்துள்ளார்.

ரசிகரின் சாலையோர உணவகத்திற்கு சென்ற சோனு சூட் சமையலுக்கு உதவி செய்தும் அங்கு சாப்பிட்டும் மகிழ்ந்தார். சோனு சூட் உணவகத்திற்கு வந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலர் அங்கு திரண்டனர். அவர்களுடன் கைகுலுக்கியும், புகைப்படம் எடுத்துக் கொண்டும் உற்சாகப்படுத்தினார்.

இது குறித்து சோனு சூட் கூறும்போது, அனில் என்பவரது உணவகத்தை சமூக வலைதளத்தில் பார்த்தேன். இந்த உணவகத்தில் சாப்பிட விரும்பினேன். இன்று பார்வையிட வாய்ப்பு கிடைத்தது. இங்கு ஃப்ரைட் ரைஸ் மற்றும் கோபி மஞ்சுரியன் சாப்பிட்டேன் என்றார்.
சோனு சூட்டின் சமூக சேவையை பார்த்து அவர் மீதான ஈர்ப்பு அதிகரித்தது. அதனால் தான் அவருடைய பெயரை எனது சாலையோர உணவகத்திற்கு வைத்தேன் என்றார் உரிமையாளர் அனில்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தில் பிரபல நடிகர் இணைந்து இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பாரதிராஜா, விலகி உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பிரபல நடிகர் வாகை சந்திரசேகர் இணைந்திருப்பதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

இப்படத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ஒரு பக்க கதை படத்தின் விமர்சனம்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படம் மூலம் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் போது, சுற்றியுள்ள உலகம் அதை எவ்வாறு உணர்கிறது என்பதையும் அதன் மூலம் ஏற்படும் சவால்களையும் சுவாரசியமாக சொல்லி கவனம் ஈர்த்தவர் பாலாஜி தரணிதரன். ஒரு பக்க கதை படத்திலும் அதேபோன்ற களத்தை ஆனால் வித்தியாசமான கதையுடன் கொடுத்து அசத்தி இருக்கிறார்.



படம் தொடங்கும்போதே ஸ்ரீமத் பாகவத புராண கதையுடன் தொடங்குகிறது. அதிலேயே படத்தின் மையக்கருவை விளக்கிவிடுகிறார்.
நடுத்தர வர்க்க குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் காளிதாஸ் ஜெயராமும் மேகா ஆகாசும். இருவரும் பள்ளிக்காலத்தில் இருந்தே நண்பர்கள். காதலர்களாகவும் மாறுகிறார்கள். இருவரது காதலையும் அவர்களது குடும்பங்கள் ஏற்றுக்கொள்கின்றன. காளிதாஸ் அரியர்களை முடித்துவிட்டு வேலைக்கு சேர்ந்ததும் திருமணம் செய்துவைப்பதாக உறுதி கூறுகிறார்கள்.

இந்நிலையில் மேகா ஆகாஷ் கர்ப்பமாகிறார். காளிதாசுடன் இணையாமலேயே மேகா ஆகாஷ் கர்ப்பமானது எப்படி? இது அறிவியலா? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா? இன்னும் பல கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் தருகிறது படம்.
சற்று பிசகினாலும் ஆபாசமாகி விடும் ஒரு கதைக்களத்தை கையில் எடுத்து அதில் சிறிதுகூட ஆபாசம் இல்லாமல் குடும்பத்துடன் பார்த்து சிரித்து ரசிக்கும் படமாக இயக்குனர் பாலாஜி தரணிதரன் கொடுத்து இருக்கிறார். படம் தொடங்கியது முதல் இறுதிக்காட்சி வரை நம்மை படத்துடன் பின்னி பிணைத்து ரசிக்க வைக்கிறார். முக்கிய காட்சிகளை வசனங்கள் இல்லாமல் காட்சிமொழி மூலம் உணர்த்தும்போது பாலாஜியின் திறமை பளிச்சிடுகிறது.

மேகா ஆகாஷ் கர்ப்பமானதை வீட்டில் சொல்லும் காட்சி அதற்கு உதாரணம்.
காளிதாஸ் ஜெயராமும் மேகா ஆகாசும் பாலாஜி தரணிதரனின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். எந்த காட்சியிலும் நடிகர்களாக தெரியவே இல்லை. இரு தரப்பு பெற்றோர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு பொருந்துகிறார்கள். கடவுளாக மாறும் அந்த குழந்தையும் சிறப்பான நடிப்பு.
கோவிந்த் வசந்தாவின் இசை படத்துக்கு விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது. பிரேம்குமாரின் ஒளிப்பதிவும் படத்துக்கு வண்ணம் கூட்டியுள்ளது. பாலாஜி தரணிதரனுடன் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதிய மரியாவும் பாராட்டப்பட வேண்டியவர்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் எப்போது பார்த்தாலும் சிரித்து ரசிக்க வைக்கும் படம். அதே போன்ற ஒரு அற்புத படைப்பை ஒரு பக்க கதை மூலம் கொடுத்து மீண்டும் தன்னை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் பாலாஜி தரணிதரன்.
மொத்தத்தில் 'ஒரு பக்க கதை' சுவாரஸ்யம்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை நித்யா மேனன், எனக்கு கதை சொல்வது கஷ்டமா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.
நித்யா மேனன் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அவருக்கு இயக்குனர்கள் கதை சொல்வது கஷ்டம் என்று கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. இதற்கு நித்யா மேனன் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறும்போது, “எனக்கு இயக்குனர் கதை சொல்வது ரொம்ப கஷ்டம் என்று பேசுகின்றனர். எல்லா விஷயங்களிலும் எனது விதிமுறை என்பது தனித்துவமானதாகத்தான் இருக்கும். எனக்கு கதை சொல்வது கஷ்டம் என்ற பேச்சு இருப்பது எனக்கும் தெரியும். ஆனால் கதை கேட்கிற நேரத்தில் எனக்கு நிறைய சந்தேகங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்படி கேட்பதால் நித்யா மேனனுக்கு கதை சொல்வது ரொம்ப கஷ்டம் என்று பேசுகிறார்கள்.

நல்ல கதை, தெளிவான அம்சங்கள் இருந்தால் தவிர நான் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன். என்னை கவர்கிற மாதிரியான கதைகள் இல்லாத படங்களை ஒப்புக்கொள்வது இல்லை. அவற்றில் நடிக்கவும் விரும்ப மாட்டேன். அதனால்தான் அப்படி பேசுகிறார்கள்” என்றார்.
ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்த மாறுபாட்டை தவிர ரஜினிக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து பிரபலங்கள் ரஜினியை தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
இந்த நிலையில் இன்று ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஜினியின் ரத்த அழுத்த மாறுபாடு, நேற்று இருந்ததை விட இன்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ரஜினிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் எந்த ஆபத்தான முடிவும் வரவில்லை. ரஜினியை சந்திக்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. அவரது டிஸ்சார்ஜ் குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்த மாறுபாட்டை தவிர ரஜினிக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து பிரபலங்கள் ரஜினியை தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
இந்த நிலையில் இன்று ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஜினியின் ரத்த அழுத்த மாறுபாடு, நேற்று இருந்ததை விட இன்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ரஜினிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் எந்த ஆபத்தான முடிவும் வரவில்லை. ரஜினியை சந்திக்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. அவரது டிஸ்சார்ஜ் குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனராக இருக்கும் ராகவா லாரன்ஸின் அடுத்த படத்தை பிரபல தயாரிப்பாளர் இயக்க இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகங்களும் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து காஞ்சனா முதல் பாகத்தை ஹிந்தியில் 'லட்சுமி' என்ற பெயரில் ராகவா லாரன்ஸ் ரீமேக் செய்தார்.

இதையடுத்து ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. 'ருத்ரன்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்தப் படத்தின் இயக்குனர் பெயரை படக்குழு அறிவிக்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்கும் பைவ் ஸ்டார் கதிரேசனே இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பைவ் ஸ்டார் கதிரேசன் இதற்குமுன் பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா ஆகிய படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






