என் மலர்tooltip icon

    சினிமா

    நித்யா மேனன்
    X
    நித்யா மேனன்

    எனக்கு கதை சொல்வது கஷ்டமா? நித்யா மேனன் விளக்கம்

    தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை நித்யா மேனன், எனக்கு கதை சொல்வது கஷ்டமா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.
    நித்யா மேனன் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அவருக்கு இயக்குனர்கள் கதை சொல்வது கஷ்டம் என்று கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. இதற்கு நித்யா மேனன் பதில் அளித்துள்ளார். 

    அவர் கூறும்போது, “எனக்கு இயக்குனர் கதை சொல்வது ரொம்ப கஷ்டம் என்று பேசுகின்றனர். எல்லா விஷயங்களிலும் எனது விதிமுறை என்பது தனித்துவமானதாகத்தான் இருக்கும். எனக்கு கதை சொல்வது கஷ்டம் என்ற பேச்சு இருப்பது எனக்கும் தெரியும். ஆனால் கதை கேட்கிற நேரத்தில் எனக்கு நிறைய சந்தேகங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்படி கேட்பதால் நித்யா மேனனுக்கு கதை சொல்வது ரொம்ப கஷ்டம் என்று பேசுகிறார்கள். 

    நித்யா மேனன்

    நல்ல கதை, தெளிவான அம்சங்கள் இருந்தால் தவிர நான் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன். என்னை கவர்கிற மாதிரியான கதைகள் இல்லாத படங்களை ஒப்புக்கொள்வது இல்லை. அவற்றில் நடிக்கவும் விரும்ப மாட்டேன். அதனால்தான் அப்படி பேசுகிறார்கள்” என்றார்.
    Next Story
    ×