என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாலசந்தர் இயக்கிய "மரோசரித்ரா'' (தெலுங்குப்படம்) சென்னையில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
    பாலசந்தர் இயக்கிய "மரோசரித்ரா'' (தெலுங்குப்படம்) சென்னையில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

    கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்த படம் இது.

    "மூன்று முடிச்சு'' படத்துக்குப்பிறகு, பாலசந்தரின் "அவர்கள்'', "நினைத்தாலே இனிக்கும்'' ஆகிய படங்களில் கமலஹாசனும், ரஜினிகாந்தும் சேர்ந்து நடித்தார்கள்.

    "அவர்கள்'' படத்தில் கமல், ரஜினியுடன் சுஜாதா நடித்தார். "பேசும் பொம்மை'' ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்தது!

    படம் நன்றாக இருந்தும், சரியாக ஓடவிëëலை. தன்னுடைய சிறந்த படம் ஓடவில்லையே என்பதில் பாலசந்தருக்கு வருத்தம் உண்டு.

    ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'', பாரதிராஜாவின் "16 வயதினிலே'' ஆகிய படங்களிலும் கமலும், ரஜினியும் சேர்ந்து நடித்தனர்.

    இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்தார்கள். எனினும் இப்படி சேர்ந்து நடித்துக் கொண்டிருப்பதை விட, தனித்தனியாக நடித்தால்தான் இருவரும் முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும் என்று நினைத்தார்கள். "இனி இருவரும் தனித்தனியாகவே நடிப்போம்'' என்று அறிவித்தார்கள்.

    அவர்கள் எண்ணியதுபோலவே, இருவரும் நடிப்பில் புதிய பரிமானங்களை வெளிப்படுத்தி, புதிய சிகரங்களைத் தொட்டார்கள்.

    பின்னர் பாலசந்தர் தயாரித்த பல படங்களில் தனித்தனியே நடித்தார்கள்.

    பாலசந்தர் டைரக்ட் செய்த படங்களிலேயே, மிக பிரமாண்டமான வெற்றிப்படம் "மரோசரித்ரா.''

    பாலசந்தரின் நெருங்கிய நண்பரான அரங்கண்ணல், 1978-ல் இதை தெலுங்கில் தயாரித்தார். கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்தனர்.

    படத்தில் சரிதா தெலுங்குப்பெண். கமலஹாசன் தமிழ் இளைஞன். அவர்களுக்கிடையே ஏற்படும் காதலை அற்புதமாக சித்தரித்த படம் "மரோசரித்ரா.''

    கறுப்பு -வெள்ளையில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம், ஆந்திராவில் திரையிடப்பட்டு மகத்தான வெற்றி பெற்றது. இக்கதையை தமிழில் தயாரிக்க அரங்கண்ணல் யோசித்தபோது "தெலுங்குப்படத்தை அப்படியே தமிழ்நாட்டிலும் திரையிட்டுப் பார்ப்போமே'' என்று பாலசந்தர் கூறினார்.

    அதன்படி, சென்னை `சபையர்' தியேட்டரில் இப்படம் பகல் காட்சியாக திரையிடப்பட்டது. தமிழ் ரசிகர்களையும் இப்படம் வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, இளைஞர்களும், இளம் பெண்களும் கூட்டம் கூட்டமாக `சபையர்' தியேட்டரை நோக்கிப் படையெடுத்தனர். தினமும் "ஹவுஸ்புல்'' காட்சியாகப் படம் ஓடியது.

    இப்போது 25 வாரம் ஓடினால், "வெள்ளி விழா'' என்று பெரிதாக விழா எடுக்கப்படுகிறது. "மரோசரித்ரா'' மொத்தம் 596 நாட்கள் ஓடியது. அதாவது ஒரு வருடமும் 231 நாட்களும்!

    பெங்களூரிலும் "மரோசரித்ரா'' 2 1/2 வருடம் ஓடி, சாதனை புரிந்தது.

    "ஏக் துஜே கேலியே''

    "மரோசரித்ரா''வை, "ஏக் து ஜே கேலியே'' என்ற பெயரில் எல்.வி.பிரசாத் இந்தியில் தயாரித்தார். அவரே பெரிய டைரக்டர். அப்படியிருந்தும், டைரக்ஷன் பொறுப்பை பாலசந்தரிடம் ஒப்படைத்தார்.

    இந்திப்பதிப்பில் கமலஹாசனும், ரதியும் ஜோடியாக நடித்தனர். படம் கலரில் தயாராகியது.

    "மரோசரித்ரா'' போலவே, "ஏக்துஜே கேலியே''வும், மாபெரும் வெற்றி பெற்றது. வடநாட்டில் இந்தப்படம் 80 வாரங்கள் ஓடியது.

    "மரோசரித்ரா'' பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "மரோசரித்ராவின் கிளைமாக்ஸ் காட்சி (உச்சகட்டம்) ஒரு அற்புதமான விஷயம்.

    வில்லனிடம் சிக்கி, கதாநாயகி துடிதுடிப்பதாக வரும் காட்சி. அலையில் சிக்கிய புடவை, அங்கும் இங்கும் நீரில் வருவதை படமாக்கும்போது, குறிப்பிட்ட ஒரே பிரேமில் அந்தப்புடவை கேள்விக்குறி மாதிரி வந்தது. உடனே அதை கேமிராவில் படம் பிடித்தேன்.

    வில்லனிடம் சிக்கி கதாநாயகி புழுவாய்த் துடிக்கிறாள் என்பதை உணர்த்தும் விதத்தில், அக்காட்சி அமைந்ததுதான் அற்புதமான விஷயம்.

    "ஏக் துஜே கேலியே'' படப்பிடிப்பின்போதும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வழக்கமாக படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில், கடைசி நாள் படப்பிடிப்பு நடந்தது. கதாநாயகனும், கதாநாயகியும் உல்லாசமாக சுற்றித்திரிந்த அந்தப் பகுதியில், ஒரு பாறையில் இரண்டு பேர் பெயரும் எழுதப்பட்டிருக்கும்.

    அந்தப் பாறையின் உச்சியில், எழுத்துக்களுக்கு கொஞ்சம் மேலே கடைசி நாளன்று இரண்டு காக்கைகள் சோகமாக வந்து உட்கார்ந்ததை பார்த்தேன். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அதை எப்படியும் படம் பிடித்து காட்டிவிட வேண்டும் என்று துடித்தேன்.

    கேமராமேன் லோகு, அப்போது அங்கு இல்லை. உடனே அவருடைய உதவியாளரை கூப்பிட்டு, நானே அந்தக் காட்சியை படம் பிடித்தேன். படத்திலும் சேர்த்தேன்.

    சில நேரங்களில், நம்மையும் அறியாமல் சில சம்பவங்கள் நமக்காகவே நடக்கிற மாதிரி அமையும்போது, ரொம்ப எச்சரிக்கையாக இருந்து அதை படத்திலே சேர்த்து விடுவேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
    எந்திரன் படத்தின் கதை திருட்டு விவகாரத்தில் 11 ஆண்டுகளாக இயக்குநர் சங்கர் நேரில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார். 

    இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்ட சென்னை ஐகோர்ட்டு, தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது.

    கடந்த 10 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 2019ம் ஆண்டு தீர்ப்பு வழக்கப்பட்டது. அதில், கலாநிதிமாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், இயக்குனர் சங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது என்றும் கூறிய நீதிமன்றம், கதை ஒரே மாதிரி இருப்பதாக கூறி கதைக்கும் சினிமாவுக்கும் உள்ள 16 ஒற்றுமைகளை பட்டியலிட்டுக் காட்டி அதன் மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாக தெரிகிறது. அதனால், எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட சங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம் என்று உத்தரவிட்டது.

    சங்கர்

    இந்த நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது புகார்தாரர் ஆருர் தமிழ்நாடன் நேரில் ஆஜர் ஆகி வழக்கு விசாரணைக்குத் தயாராக இருப்பதாக வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், இயக்குனர் சங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆஜராகவில்லை.

    இதையடுத்து எழும்பூர் பெருநகர 2வது மாஜிஸ்திரேட் இயக்குநர் சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார். மேலும் பிப்ரவரி 19ம் தேதி முதல் விசாரணையை தொடங்க உள்ளதாகவும் அறிவித்தார். இந்த வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக இயக்குநர் சங்கர் நேரில் ஆஜராகவில்லை என்ற புகாரின் அடிப்படையிலேயே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
    நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாராவை இணைத்து வைக்க பிரபல இயக்குனர் ஒருவர் முயற்சி செய்து வருகிறார்.
    சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு ’விண்ணை தாண்டி வருவாயா’ என்ற சூப்பர்ஹிட் படம் உருவாகியது. அதன் பின் 2016ஆம் ஆண்டு இதே கூட்டணியில் ‘அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படம் வெளியானது.

    இந்த நிலையில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்க கவுதம் மேனன் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் கவுதம் மேனன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

    சிம்பு - கவுதம் மேனன்

    சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ’வல்லவன்’ மற்றும் ’இது நம்ம ஆளு’ ஆகிய இரண்டு படங்களில் இதற்கு முன்பு நடித்திருக்கிறார்கள். 
    சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை பார்த்து பிரபல கிரிக்கெட் வீரர் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
    இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரராக இருப்பவர் ரஹானே. அண்மையில் நடந்த ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.

    இந்நிலையில் ரஹானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது கடைசியாக என்ன தமிழ் திரைப்படம் பார்த்தீர்கள் என ரசிகர் கேட்டதற்கு, சூர்யாவின் சூரரைப் போற்று பார்த்ததாகவும், மிகவும் பிடித்திருந்ததாகவும், சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் அவர் பதிலளித்தார். 

    ரஹானே

    மேலும் தனக்கு இதை பரிந்துரை செய்தது கிரிக்கெட் வீரர் அஷ்வின் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று இதுவரை 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்ற திரைப்படத்திற்கு விஜய் சேதுபதி உதவி செய்துள்ளார்.
    தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி உள்ளது “வாய்தா” திரைப்படம். அறிமுக இயக்குநர் மகிவர்மன் C.S. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் வாய்தா படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிறார். 

    ‘ஜோக்கர்’, ‘கே.டி. என்கிற கருப்பத்துரை’ படம் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், ‘நக்கலைட்ஸ்’ புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    வாய்தா

    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை விஜய் சேதுபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘வாய்தா’ திரைப்படம் இதுவரை 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    கிரவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் பி.பிரபாகரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திடல் படத்தின் முன்னோட்டம்.
    கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் பற்றிய கதையாக உருவாகியிருக்கும் படம் திடல். இப்படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் எஸ்.கே.எஸ்.கார்த்திக் கண்ணன்.
    இவர் இயக்குநர் முகி மூர்த்தி, முத்து செல்வன், செல்வா போன்றவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.

    இந்தத் 'திடல்', ஒரு கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள் பற்றிய கதை.
    முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த கிராமத்துச் சிறுவர்கள் வளர்ந்து கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர்கள். ஊரில் உள்ள சிலர் அவங்களை இங்கு விளையாடக்கூடாது என்று அசிங்கம் படுத்துகிறார்கள். அவர்கள பக்கத்து ஊர்களுக்குப் போய் விளையாட, அங்கும் புறக்கணிக்கப்படுகிறார்கள். தங்களுக்கான ஒரு திடலை அடைந்தே தீருவது என்று அவர்கள் எண்ணம் கிரவுண்ட் கிடைத்ததா இல்லையா என்பது தான் முடிவு.

    இப்படத்தில் பிரபு, அன்பு, சாகுல், யோகேஷ், கர்ணா என 5 நாயகர்கள் அறிமுகமாகிறார்கள். மற்றும் முக்கியமான திருப்புமுனைக் கதாபாத்திரத்தில் வினோதினி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு சேகர்ராம், ஜெரால்டு, இசை ஸ்ரீசாய் தேவ். வி. எடிட்டிங் ரோஜர், கலை - சிவா, நடனம்-ஜாய் மதி, ஸ்டண்ட்- ஓம் பிரகாஷ்.

    இப்படத்தின் கதையை எழுதி முக்கிய பாத்திரத்தில் நடித்து தனது கிரவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் பி.பிரபாகரன்.
    பிரபல பாடகர்களான இருவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைத்து நடிகர்களாக மாற்றியிருக்கிறார் குஷ்பு.
    குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’அரண்மனை 3’. இதில் சுந்தர் சி, ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விசாகா சிங், சாக்‌ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடந்து வருகின்றன.

    கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிகர்கள் மட்டுமின்றி பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருமே நடிகர்களாக மாறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது முன்னணி பாடகர்கள் இருவர் அரண்மனை 3 படத்தில் நடிகர்களாகியிருக்கின்றனர். இந்தத் தகவலை நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    சங்கர் மகாதேவன் - குஷ்பூ - ஹரிஹரன்

    பிரபல பாடகர்களான ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் அரண்மனை 3 படத்தில் ஒரு பாடலை பாடியதோடு அந்த பாடலுக்கு அவர்களே நடித்துள்ளனர். இதை படத்தின் தயாரிப்பாளரான குஷ்பு அந்த புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.
    ஜெயலலிதா வேடத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத் அடுத்ததாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, ஏ.எல். விஜய் இயக்கும் 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் வேடத்தில், தான் நடிக்கவுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது 'நான் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கும் அரசியல் படத்தின் கதை, திரைக்கதை உருவாக்கம் தற்போது நடைபெற்று வருகிறது. இது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல. ஆனால் அரசியல் வரலாற்றுப் படம். பல முக்கியமான நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். 

    இந்திரா காந்தி

    இந்திய அரசியலின் முக்கியமான தலைவரின் வேடத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஒரு புத்தகத்தின் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார். ரிவால்வர் ராணி படத்தில் கங்கனாவுடன் இணைந்து பணியாற்றிய சாய் கபீர், இந்திரா காந்தி தொடர்பான இப்படத்தை இயக்கவுள்ளார்.
    பிரபல நடிகர் அர்ஜூனின் உறவினரும் கன்னட நடிகருமான துருவா சார்ஜா, தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.
    நடிகர் அர்ஜூனின் உறவினரான துருவா சார்ஜா கன்னடத்தில் முன்னணி கதநாயகனாக திகழ்கிறார். அவர் அடுத்து நடித்துள்ள பொகுரு படம் தமிழில் செம திமிரு என்ற பெயரில் ஒரே நாளில் வெளியாகிறது. 

    வரும் 19ந்தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா, சம்பத், பவித்ரா லோகேஷ், ரவிஷங்கர் உள்ளிட்டோர் நடிக்க நந்தா கிஷோர் இயக்கி உள்ளார். ஷிவார்ஜூன், பிகே,கங்காதர் தயாரித்துள்ள படத்தை தமிழில் அர்ஜூனே வெளியிடுகிறார். 

    சார்ஜா

    படத்தின் டிரெய்லருக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபகலாமக கன்னட படங்கள் கர்நாடகாவை தாண்டி பிற மாநிலங்களிலும் பெரிய வெற்றி பெறுகின்றன. கேஜிஎப், அவனே ஸ்ரீமன் நாராயணா வரிசையில் இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார்.
    கதாநாயகர்கள் வில்லன் வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அர்ஜுன், கார்த்திக், அரவிந்தசாமி உள்ளிட்டோர் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி வில்லன் வேடம் ஏற்றுள்ளார். இந்தநிலையில் விஷாலும் வில்லனாக நடிக்க தயாராகி வருகிறார். 

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து 2018ல் திரைக்கு வந்த இரும்புத்திரை படம் வெற்றிகரமாக ஓடியது. இதில் கதாநாயகியாக சமந்தாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்து இருந்தனர். இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். விஷால் கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிப்பார் என்று தெரிகிறது. 

    விஷால்

    இந்த படத்தில் அர்ஜுனின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஷாலை அணுகி உள்ளனர். முதலில் இரும்புத்திரை கதையை கேட்டதும் வில்லன் வேடத்தில் நடிக்கத்தான் விஷால் விருப்பம் தெரிவித்தார். பின்னர் அர்ஜுனை வில்லனாக்கினார்கள். தகவல்களை திருடும் சைபர் குற்றங்களை மையப்படுத்தி இரும்புத்திரை படம் தயாராகி இருந்தது.
    பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
    ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். 

    பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தயாரிப்பாளர் பதிவு

    இந்நிலையில் இப்படத்தின் டீசரை பிப்ரவரி 1 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    சூர்யாவுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்கும் பிரியங்கா மோகன் மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் டாக்டர். நெல்சன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

    இந்நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் பிரியங்கா மோகன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன்

    லைகா நிறுவனம் தயாரிக்கும் டான் படத்தை இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×