என் மலர்
சினிமா செய்திகள்
நடிகை ஸ்ருதிஹாசனின் புதிய காதலர் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் எனும் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பிரபாஸின் சலார் படத்திலும் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

ஏற்கனவே இவர் காதல் வலையில் சிக்கியதும், அதிலிருந்து காதல் முறிவு ஏற்பட்டு சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்ததும் அனைவரும் தெரிந்த விஷயம். இந்த நிலையில் ஸ்ருதிஹாசனின் புதிய காதலர் என்று கூறி இணையத்தில் புகைப்படத்துடன் கூடிய தகவல் கசிந்து வருகிறது.

நேற்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ருதிஹாசன் ஆண் நபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் இதுதான் ஸ்ருதிஹாசனின் புதிய காதலர் என்று கூறி வருகின்றனர். ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஸ்ருதிஹாசன் கூறவில்லை.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, யாரும் என்னை வந்து சந்திக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் பொங்கலுக்கு ஈஸ்வரன் திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இந்நிலையில், சிம்பு ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பிப்ரவரி 3 ஆம் தேதி என் பிறந்தநாள் அன்று நான் ஊரில் இருக்க மாட்டேன் என்பதால் என் வீட்டின்முன் ரசிகர்கள் காத்திருக்க வேண்டாம்.

மேலும், என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கு என் பிறந்தநாளில் நான் உங்களுடன் இருக்க வேண்டும். ஆனால் சில முன் தீர்மானங்களால் தான் வெளியூர் செல்லவுள்ளதாகவும், அதனால் பிப்ரவரி 3 ஆம் தேதி மாநாடு படத்தின் டீசர் வெளியாகும். உங்கள் அன்பிற்குக் கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு சிலம்பரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சங்கை குமரேசன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி கதையின் நாயகனாக நடித்துள்ள ‘முன்னா’ படத்தின் முன்னோட்டம்.
முன்னா படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி கதையின் நாயகனாக நடித்து படத்தை இயக்கியிருக்கிறார் சங்கை குமரேசன். ராமு முத்துச்செல்வன் தயாரித்துள்ள இப்படத்தில், புது முகங்கள் நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து, ராஜாமணி, சண்முகம், வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘‘நல்ல கருத்துள்ள படங்களுக்கு மக்கள் எப்போதும் வரவேற்பு கொடுப்பார்கள். அந்த வரவேற்பு, ‘முன்னா’ படத்துக்கும் கிடைக்கும்’’ என்று கூறுகிறார், இயக்குனர் சங்கை குமரேசன்.
படத்தை பற்றி அவர் கூறியதாவது: ‘‘கலைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடி கூட்டத்தை சேர்ந்த ஒருவன் நாகரிக வாழ்க்கையை அனுபவிக்க ஆசைப்படுகிறான். அதிர்ஷ்டவசமாக அந்த வாழ்க்கை அவனுக்கு அமைகிறது. அந்த வாழ்க்கையில் அவன் மகிழ்ச்சி அடைந்தானா, இல்லையா? என்பதற்கான விடை, ‘முன்னா’ படத்தில் இருக்கிறது’’ என்கிறார் இயக்குனர் சங்கை குமரேசன்.
சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா. இவர் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், நடிகர் சத்யராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நடிகர் சத்யராஜ், சூர்யாவுடன் முதன்முறையாக இணைந்துள்ளார். சூர்யா 40 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் சர்வர் சுந்தரம். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பட், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்தது. சில முறை ரிலீஸ் தேதிகள் அறிவித்தும் தள்ளிப்போனது.

இந்நிலையில் இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் படமும் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமாரின் இளைய மகனான தர்ஷன், பிரபல இயக்குனரின் படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளாராம்.
கூடல் நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இதையடுத்து அவர் விஜய்சேதுபதி ஹீரோவாக அறிமுகமான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பின்னர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்து கவனம் பெற்றார்.
அடுத்ததாக இவர் இயக்கி உள்ள மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த இரு படங்களிலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் தர்ஷன் ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம். சிவாஜியின் மகன் ராம்குமாரின் இளைய மகனான தர்ஷன், கூத்துப் பட்டறையில் முறையாக நடிப்பு பயிற்சி பயின்றுள்ளாராம்.
ஏற்கனவே சிவாஜி குடும்பத்தில் இருந்து பிரபு, ராம்குமார், துஷ்யந்த், விக்ரம் பிரபு ஆகியோர் நடிக்க வந்துள்ள நிலையில், தற்போது தர்ஷனும் நடிகராக களமிறங்கி உள்ளார்.
‘சூர்யா 40’ படத்தில் நடிகர் சூர்யா முதல்வராக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார். சூர்யா 40 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சூர்யா 5 கெட்அப்களில் நடிப்பதாகவும், அதில் ஒன்று முதலமைச்சர் வேடம் என சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வந்தது. இந்நிலையில், அதனை திட்டவட்டமாக மறுத்துள்ள அப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
ராம் கோபால் வர்மா இயக்கி உள்ள ‘டி கம்பெனி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது
ராம் கோபால் வர்மா தற்போது 'டி கம்பெனி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தாவூத் இப்ரஹிம் கஸ்காரின் டி கம்பெனி பற்றியதுதான் இத்திரைப்படம். தாவூத் இப்ரஹிம், கடந்த 1993-ல் நடந்த மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தேடப்படும் முக்கியக் குற்றவாளி என்பது அனைவரும் அறிந்த கதையே.
கடந்த 2002-ல் 'கம்பெனி' என்றொரு திரைப்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கினார். இத்திரைப்படம் தாவூத் இப்ரஹிம், சோட்டா ராஜன் பற்றி அரசல்புரசலாக வெளிவந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

ஆனால், இப்போது உருவாகியுள்ள 'டி கம்பெனி' திரைப்படமானது கராச்சியில் உள்ள தாவூத் இப்ரஹிம், சோட்டா ராஜனின் நெருங்கியக் கூட்டாளிகள் சொன்ன உண்மைக் கதைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் ஸ்னீக் பீக் அண்மையில் வெளியாகி டிஜிட்டல் தளங்களில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ஃப்ர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
‘மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுரேஷ் காமாட்சி, அடுத்ததாக நாவல் ஒன்றை அடிப்படையாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார்.
'அமைதிப்படை-2', 'கங்காரு', போன்ற படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இவர் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குனராக அறிமுகமான படம் ‘மிக மிக அவசரம்’. இப்படத்தையும் அவரே தயாரித்திருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அடுத்ததாக இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ம.காமுத்துரை எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்கிற நாவலைத் தழுவி அப்படம் உருவாகவுள்ளதாம்.
அந்த நாவலை படமாக்குவதற்கான உரிமையை ம.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமாட்சி. தற்போது அதில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஷால், அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
விஷால் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகி இருந்தது. நாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருந்தனர். தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்துக்கு அங்கும் அமோக வரவேற்பு கிடைத்து வசூலை அள்ளியது.

இந்நிலையில், இப்படம் பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. அதில் நடிகர் விஷால் வில்லனாக நடிக்க உள்ளாராம். தமிழில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் விஷால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நடிகர் விஷால் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஹரி, அடுத்ததாக இயக்கும் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளாராம்.
சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி, அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். தற்போது இதில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ஹரியும் - ஜிவி பிரகாஷும் ஏற்கனவே கடந்த 2008-ல் வெளியான சேவல் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சனிடம் ‘தளபதி 65’ படத்தின் அப்டேட் கேட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்ததாக ‘டான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.
இதனிடையே டான் படக்குழுவினருக்கு தளபதி 65 பட இயக்குனர் நெல்சன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன், டாக்டர் மற்றும் விஜய் சார் படம் அப்டேட் எதுவும் இல்லையா? என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நெல்சன், அடேய் வாழ்த்து சொன்னதுக்கு இப்படியா என பதிவிட, ஏதோ உங்களுக்கு என்னால முடிஞ்சது என சிவகார்த்திகேயன் கமெண்ட் செய்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.






