என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், தனது பாடிகார்ட் டான் ஹேஹர்ஸ்டை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.
    பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், பேவாட்ச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள இசைக் கலைஞர் டோமி லீ என்பவரை கடந்த 1995 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். அவரிடம் இருந்து 1998 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். 2006-ம் ஆண்டு கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணமும் நிலைக்கவில்லை. 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

    ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே இருவரும் பிரிந்தனர். 2014-ம் ஆண்டு மீண்டும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதுவும் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்றனர். கடந்தாண்டு ‘பேட்மேன்’ உட்பட பல படங்களை தயாரித்த ஜான் பீட்டர்ஸ் (வயது 75) என்பவரை திருமணம் செய்தார். ஆனால் 12 நாட்களுக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்தார்.

    பமீலா ஆண்டர்சன்

    இந்நிலையில், தனது பாடிகார்ட் டான் ஹேஹர்ஸ்டை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது ரகசிய திருமணம் வான்கூவர் நகரில் அண்மையில் நடைபெற்றதாகவும், மிகவும் நெருங்கிய நட்பு வட்டத்திற்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது பமீலாவின் ஆறாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாலசந்தர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதை, கமலஹாசன் விளக்கினார். "என்னுடைய திரை உலகத் தந்தை அவர்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
    ஏவி.எம். நிறுவனம் தயாரித்த "களத்தூர் கண்ணம்மா'' (1960) படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் கமலஹாசன். அதன்பின் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

    அதன் பின்னர் நாலைந்து வருடம் குழந்தையாகவும் நடிக்க முடியவில்லை; வாலிபனாகவும் நடிக்க முடியவில்லை. எனவே நடனம் கற்றுக்கொண்டார். சில படங்களில் உதவி நடன இயக்குனராகவும், உதவி டைரக்டராகவும் பணியாற்றினார்.

    இந்த சமயத்தில்தான் அவர் பாலசந்தர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

    அதுபற்றி கமலஹாசன் கூறியிருப்பதாவது:-

    "ஜெமினிகணேசன்தான் என்னை முதன் முதலாக பாலசந்தரிடம் அழைத்துச் சென்றார்.

    அப்போது, "அன்னை வேளாங்கண்ணி'' படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்த ஜெமினி, "என்னடா இது! இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கே! நடிக்க வேண்டாமா?'' என்று கேட்டார்.

    "நீங்க வேற! யார் சார் கூப்பிடறாங்க!'' என்றேன்.

    உடனே அவர் என்னை பாலசந்தரிடம் கூட்டிப்போய் அறிமுகம் செய்து வைத்தார். "ரொம்ப சின்னப் பையனா இருக்கானே!'' என்றார், பாலசந்தர்.

    உடனே ஜெமினிகணேசன், பாலசந்தர் போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றி, எனக்குப் போட்டு விட்டு, "இப்போது பாருங்க! பெரிய பையனா இல்லே?'' என்று கேட்டார்.

    பாலசந்தர், "எனக்கு கண் தெரியவில்லையே!'' என்றார். ஒரே சிரிப்பு.

    இது நடந்து கொஞ்ச நாளில் பாலசந்தருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எனக்கு ஒரே வருத்தம்.

    சில நாட்கள் கழித்து அவர் குணம் ஆனதும், என்னைப் பற்றி விசாரித்து இருக்கிறார். "அந்தப் பையனைப் பார்த்தது நினைவு இருக்கிறது. அழைத்து வாருங்கள்'' என்று கூறி ஆள் அனுப்பினார்.

    அவரை போய்ப் பார்த்தேன். அரங்கேற்றத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். அதன்பின் நடந்தது, உங்களுக்குத் தெரியும்.

    "கமலஹாசன் ஒரு ஆக்டர்'' என்பதை திருப்பித் திருப்பி ஆணி அடிச்ச மாதிரி சொல்லிக்கொண்டே இருந்தது பாலசந்தர் ஒருவர்தான்.

    நான் அவருக்குத் தோல்விப் படங்களைக் கொடுத்திருக்கிறேன். என்றாலும், விடாமல் என்னை பயன்படுத்தியிருக்கிறார். அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மன்மதலீலை, மூன்று முடிச்சு, நிழல் நிஜமாகிறது, தப்புத் தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், மரோசரித்ரா, வறுமையின் நிறம் சிவப்பு... இப்படி தொடர்ந்து அவர் படங்களில் நடித்தேன். அவர் எடுத்த "ஆய்னா''வில் (இந்தி "அரங்கேற்றம்'') கூட ஒரு சின்ன ரோலில் வருவேன். அவர் என்னை பயன்படுத்தினார்.... உருவாக்கினார். பெருமைக்குரிய திரையுலகத் தந்தையாக அவர் எனக்குக் கிடைத்தார்.

    அவர் என்னிடம் ரொம்பப் பிரியமாக இருப்பார். அதே சமயம், அவரிடம் அதிகமாகத் திட்டு வாங்கியவனும் நான்தான்.

    எனக்கு வந்த கடிதங்களில் "பொக்கிஷம்'' என 2 கடிதங்களைப் பாதுகாத்து வருகிறேன். இரண்டையுமே எழுதியவர், மதிப்பிற்குரிய பாலசந்தர்தான்.

    நூறு படங்களில் நான் நடித்து முடித்ததற்கான விழாவுக்கு, உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அவரால் வர இயலவில்லை. என்னை அவர் வீட்டுக்கு வரச்சொன்னார். வணங்கிய என்னை வாழ்த்தி, முன்பே அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்து "இங்கேயே படி'' என்றார். அந்தக் கடிதம்:-

    எனது கமலுக்கு ஒரு மாபெரும் விழா எடுக்கும்பொழுது, அதில் நான் பங்கு கொள்ள முடியாமல் போனது துர்பாக்கியம். நூறு உனக்கு பெரிதல்ல. இன்னும் ஆயிரம் நூறுகள் போடப்போகிறாய். இன்னும் எத்தனையோ சாதனைகள் செய்யப் போகிறாய். உனது சாதனைகள் அனைத்தும், எனக்கும் பெருமை தேடித்தரும் என்று எண்ணுகிறவன் நான்.

    கமல் ஒரு தனி நபரல்ல. ஒரு பெரிய நிறுவனம்.

    வாழ்க உனது நாமம்! வாழ்க உனது பெருமை!

    வாழ்த்துக்களுடன்

    அன்பன்,

    கே.பாலசந்தர்.''

    இக்கடிதத்தை, கண்களில் நீர் துளிக்கப் படித்தேன்.

    மற்றொரு கடிதம்: "பதினாறு வயதினிலே'' படத்தைப் பார்த்துவிட்டு பாச மிகுதியால் "மை டியர் ராஸ்கல்'' என்று ஆரம்பித்து, பாலசந்தர் எழுதியது என் நடிப்புத் திறமைக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு இதுதான் எனக் கருதுகிறேன்.

    அவருடைய திரைப்படங்களில், டைட்டில் கார்டில் "திரைக்கதை, வசனம், டைரக்ஷன் - கே.பாலசந்தர்'' என்று போட்டிருக்கும். மூன்றிலும் அவர் சிறந்தவர்.

    "என்னுடைய கலை உலகத் தந்தை மூன்றிலுமே சிறந்தவர்'' என்று சொல்லக்கூடிய பெருமிதத்தை எனக்குத் தந்திருக்கிறார்.''

    இவ்வாறு கமலஹாசன் கூறியுள்ளார்
    மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
    கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. சிம்பு, திரிஷாவுக்கு இந்த படம் நல்ல பெயரை பெற்று தந்தது.
     அதனைத்தொடந்து சிம்பு, கவுதம் மேனன் கூட்டணியில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற திரைப்படம் வெளியானது. இப்படமும் சூப்பர் ஹிட்டானது.

    இந்நிலையில், தற்போது 'மாநாடு', 'பத்துதல' படங்களில் நடித்துவரும் சிம்பு மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

    சிம்பு

    இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வேல்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது. மீண்டும் இக்கூட்டணி ஹாட்ரிக் வெற்றி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இது சிம்புவின் 47 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
    டார்லிங், சார்லி சாப்ளின் 2 படங்களில் நடித்து பிரபலமான நிக்கி கல்ராணி, குரங்கு குட்டிகளுக்கு உணவு கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    டார்லிங் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கேட்ட சிவா, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

    தற்போது இவரது நடிப்பில், வட்டம், ராஜ வம்சம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் இவர் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

    நிக்கி கல்ராணி

    தற்போது இவர் குரங்களுக்கு உணவு கொடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குரங்குகளிடம் கொஞ்சி அன்பு காட்டும் இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.


    தமிழில் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஸ்ரீநாத், வருண் தவான் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
    விக்ரம் வேதா, இவன் தந்திரன், நேர்கொண்ட பார்வை படங்களில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் சமீபத்தில் மாதவனுடன் இணைந்து நடித்த மாறா படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அடுத்து கலியுகம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இந்தி நடிகர் வருண் தவான் - நடாஷா தலால் குறித்து இன்ஸ்டாவில் வாழ்த்து தெரிவித்த ஷ்ரத்தா, தனது பதிவில் சினிமா துறையில் நடிகைகள் தங்கள் திருமணத் திட்டங்களை அறிவிக்கும்போது கிடைக்கும் பொதுவான எதிர்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

    இதனை பார்த்து எரிச்சலடைந்த வருண் தவானின் ரசிகர்கள், அவரை கடுமையாக திட்டினர். இந்த கமெண்டுகளுக்கு பதில் அளித்த ஷ்ரத்தா, "நான் நேற்று ஆணாதிக்கம் குறித்த ஒரு கருத்தை கூறினேன், ஒரு நடிகர் திருமணம் செய்துகொள்வதால் வேலையில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நான் சொன்னபோது இது உங்கள் அனைவருக்கும் தவறாக தெரிகிறது, ஆனால் ஒரு நடிகையை அவ்வாறு கூறும்போது அது ஏன் தவறாக தெரியவில்லை? நடிகைகளும் தங்கள் ரசிகர்கள் மீதான அன்பை வெளிப்படுத்துகின்றனர்’ என குறிப்பிட்டார்.

    ஷ்ரத்தா ஶ்ரீநாத்

    பொதுவாக நடிகைகள் திருமணம் செய்துகொள்ளும்போது அவர்கள் தொடர்ந்து நடிப்பார்களா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்கு நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகும் புதிய படத்தில் டாக்டர் நடிகை நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

    தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன், தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.


    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஆனந்தி தற்போது ஏமாலி பட நடிகர் சாம் ஜோன்சுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
    ஏமாலி, தர்மபிரபு, லியா படங்களில் நாயகனாக நடித்தவர் சாம் ஜோன்ஸ். மதுரையை கதைக்களமாக கொண்டு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படத்தை அவர் தயாரித்து நாயகனாக நடிக்கிறார். இதில் சாம் ஜோன்சுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். 

    இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தாமரை செல்வன் இயக்குகிறார். இப்படத்தின் கதையை நடிகர் சாம் ஜோன்ஸின் தந்தை எம்.ஜோன்ஸ் எழுதியுள்ளார். கதையின் முக்கியதுவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார். 

    சாம் ஜோன்ஸ்

    தெலுங்கு நடிகை சுலேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தயாரிப்பு தரப்பு சார்பில் கூறப்பட்டுள்ளது.
    பா.இரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    இயக்குனர் பா.இரஞ்சித், தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது.

    இந்த வெற்றியைத்தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிதாக ஐந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி அறிவித்திருந்தார். இதில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி, மற்றும் அறிமுக இயக்குனர்கள் சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஆகிய ஐந்து இயக்குனர்களும் புதிதாக தயாரிக்க உள்ள ஐந்து திரைப்படங்களையும் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ’ரைட்டர்’ என்ற படத்தில் சமுத்திரகனி நடிப்பில் அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    துருவ் விக்ரம்

    இந்நிலையில், நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
    பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கபடதாரி படத்தின் விமர்சனம்.
    போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார் நாயகன் சிபிராஜ். இவர் பணி செய்யும் எல்லைக்குட்பட்ட பகுதியில் மெட்ரோ பாலத்துக்கு அடியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட 3 பேரின் மண்டை ஓடுகளும், எலும்புகளும் கண்டெடுக்கப்படுகின்றன. தன் கட்டுப்பாட்டுப் பகுதியில் இது நடந்திருப்பதால் கிரைம் பிரிவு ஆய்வாளரிடம் தன்னையும் இந்த வழக்கை விசாரிக்கும் குழுவில் சேர்த்துக்கொள்ள கேட்கிறார். ஆய்வாளர் மறுக்க, தன்னுடைய ஆர்வத்தில் ரிஸ்க் எடுத்து கொலை பற்றிய தகவல்களைச் சேகரிக்கிறார்.

    இந்த கேஸ் விஷயத்தில் குழப்பம் அடையும் சிபிராஜுக்கு ஒரு கட்டத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் இறந்த 3 பேர் யார்? அவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற உண்மையை சிபிராஜ் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ் கம்பீரமான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். கிரைம் வழக்கு மீதான ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் காட்டுவது என கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். ஆனால், இவரது நடிப்பில் ஏதோ ஒன்று குறைவது போல் படம் முழுக்க தோன்றுகிறது. நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதாவுக்கு டூயட், காதல் காட்சிகள் இல்லை. கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

    படத்திற்கு மற்றொரு கதாநாயகனாக வருகிறார் நாசர். தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதுபோல் ஜெயப்பிரகாஷின் நடிப்பும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. வில்லனாக சம்பத் மைத்ரேயா நடித்துள்ளார். இவரது நடிப்பும் படத்துடன் ஒட்டாதது போல் இருக்கிறது. நடிகை ரம்யாவாக வரும் சுமன் ரங்கநாதன், சாய் தீனா, ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், தனஞ்ஜெயன் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    கன்னடத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கவலுதாரி’என்ற கிரைம் திரில்லர் படத்தை தமிழில் ‘கபடதாரி’ எனும் பெயரில் ரீமேக் செய்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. ‘சைத்தான்’,‘சத்யா’படங்களுக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள மூன்றாவது படம் இது. கொலை அதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என திரைக்கதையை அழகாக நகர்த்தி இருக்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் திரைக்கதையின் சுவாரஸ்யம் குறைகிறது. ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.

    கிரைம் திரில்லர் படத்துக்கு தேவையான இசையை கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் சைமன் கே.கிங். இவரது பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ஒளிப்பதிவில் வித்தியாசம் காண்பித்து கவனிக்க வைத்திருக்கிறார் ராசாமதி.

    மொத்தத்தில் ‘கபடதாரி’ கவனம் குறைவு.
    சாய் பல்லவி நடித்த தெலுங்கு படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்து வந்தார்.

    சாய் பல்லவி

    சேகர் கம்முலா என்பவர் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
    நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான ரேகாவிற்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேகா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து இருக்கின்றார்.

    இவர் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பொழுதே கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை 1996ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

    ரேகா

     சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் கவர்ந்தார்.

    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரேகா தனது பெண்ணுடன் இருக்கின்ற புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். ரேகாவை போலவே பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் ரேகாவின் மகளை விரைவில் திரையில் பார்க்க வேண்டும் என்று ரேகாவின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா, தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.
    நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது. அவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் கடந்தாண்டு பீட்டர்பால் என்பவரை காதலித்து 3-வது திருமணம் செய்து கொண்டார். பீட்டர்பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்தது சர்ச்சையை கிளப்பியது. 

    இதனால் வனிதாவுடன் நடிகைகள் சிலர் கடுமையாக மோதவும் செய்தனர். பின்னர் பீட்டர் பால், குடிபோதைக்கு அடிமையாக இருப்பதாக கூறி அவரைப் பிரிந்தார். 

    இந்நிலையில் நடிகை வனிதா மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். கடந்த 1995-ல் வெளியான விஜய்யின் சந்திரலேகா படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் வனிதா. அதன்பிறகு அவர் நடித்த சில படங்கள் சரியாக ஓடாததால் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். தற்போது வனிதாவுக்கு புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. 

    வனிதா

    இது முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படமாம். படத்துக்கு அனல் காற்று என்றும் பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா நடித்த பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆடம் தாசன் இந்த படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தில் நடிப்பதற்காக வனிதா உடல் எடையை குறைத்து இருக்கிறார்.
    ×