என் மலர்
சினிமா செய்திகள்
அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி இயக்கத்தில் தர்ஷன், லாஸ்லியா நடிப்பில் உருவாக உள்ள ‘கூகுள் குட்டப்பன்’ படத்தின் முன்னோட்டம்.
மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. ‘கூகுள் குட்டப்பன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம்.

மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, யூடியூப் பிரபலம் ராகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்க உள்ளனர். இவர்கள் இருவரும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் ஆவர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரவி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் ரிலீஸ் தேதியை அப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் மிரட்டலான போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் அல்லு அர்ஜுன், ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளார். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதி புஷ்பா படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ரஜினிகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கதை கேட்டுள்ளாராம்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். இவர் தயாரிப்பில் இவரது உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரீஷ் சரவணன் இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகும் கூகுள் குட்டப்பன் என்ற படத்தின் பூஜை இன்று காலை தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷனும், லாஸ்லியாவும் நாயகன்- நாயகியாக நடிக்கிறார்கள். கே.எஸ். ரவிக்குமாரும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
இந்த பூஜையில் பத்திரிகையாளர்கள், கே.எஸ். ரவிக்குமாரிடம் ரஜினியை வைத்து மீண்டும் இயக்குவீர்களா? என்று கேட்டனர்.

அதற்கு கே.எஸ். ரவிக்குமார் கூறியதாவது ரஜினி சார் வாரத்துக்கு ஒருமுறை என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டு தான் இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு நேரில் சந்திக்க சென்றேன். அப்போது எங்கள் கூட்டணியில் அறிவிக்கப்பட்டு நின்றுபோன ராணா படத்தின் கதையை மீண்டும் சொல்லுமாறு கேட்டார்.
நான் ஒரு நாள் அவகாசம் கேட்டு கதையை நன்கு படித்து விட்டு மீண்டும் சென்று முழுக்கதையையும் கூறினேன். மிகவும் ஆர்வமுடன் கேட்டவர் கதையின் வேகம் அப்படியே இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இதை படமாக எடுக்கலாம் என்று கூறினார். எனவே அது படமாவது ரஜினி கையில் தான் இருக்கிறது. இணைய வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
புது ஹீரோ கூட நடிக்க மாட்டேன்னு நிறைய பேர் சொன்னதாக ட்ரிப் பட நடிகர் பிரவீன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ட்ரிப். அறிமுக நாயகன் பிரவீன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 5-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயின்கள் நடிக்க மறுத்தது குறித்து நாயகன் பிரவீன் கூறியதாவது: “3 வருடங்களுக்கு முன் ஒரு உதவி இயக்குனர் மூலமாகத் தான் எனக்கு ட்ரிப் பட வாய்ப்பு கிடைத்தது. திரிஷா, நயன்தாரா, சமந்தா தவிர எல்லா ஹீரோயின்களிடமும் கதை சொல்லிட்டோம்.

யாரும் நடிக்க சம்மதிக்கல. புது ஹீரோ கூட நடிக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்லி நடிக்க மறுத்தார்கள். அந்த சமயத்தில் கதையும், கதாபாத்திரமும் மிகவும் பிடித்துப் போனதால் நடிகை சுனைனா நடிக்க ஒத்துக்கொண்டார். எனது முதல் படத்தில் சுனைனா ஹீரோயினாக நடித்ததை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்” என பிரவீன் கூறினார்.
பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட தர்ஷனும், லாஸ்லியாவும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார்களாம்.
மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம்.
மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இதில் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்க உள்ளனர். இவர்கள் இருவரும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் ஆவர். இப்படத்திற்கு ‘கூகுள் குட்டப்பன்’ என பெயர் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை லாஸ்லியா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவரும் இப்படத்தின் நாயகன் தர்ஷனும் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல், அடுத்ததாக இயக்கும் பிரம்மாண்ட படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை சுருதிஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார்.
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். தெலுங்கில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.

இந்நிலையில், சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க சுருதிஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார். சுருதிஹாசனின் பிறந்தநாளான இன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் சுருதிஹாசன் புகழ் பெற்ற நடிகையாக இருப்பதால் அவரை இப்படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். இதன்மூலம் நடிகை சுருதிஹாசன், பிரபாஸுடன் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையரங்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. இதையடுத்து 8 மாதங்களுக்கு பின் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்ட திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்தன. தற்போது வரை அதே நடைமுறையே தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் பிப்ரவரி 28-ந் தேதி வரையிலான நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அரசு, திரையரங்குகள் 50 சதவீதத்துக்கும் மேலான இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு அடுத்ததாக நடிக்கும் படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடிக்க உள்ளார்.
கன்னடத்தில் நாரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.
சிம்பு, கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என் கிருஷ்ணா இயக்க உள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர், அசுரன் நடிகர் டீஜே, கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல இயக்குனர் கவுதம் மேனன், வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். பத்து தல படத்தின் இயக்குனர் ஓபிலி என் கிருஷ்ணா இயக்குனர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ஆர்யா, சைக்கிளில் 400 கி.மீ. பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகனான ஆர்யா உடற்பயிற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். அத்துடன் சைக்கிள் பந்தய வீரராகவும் இருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி சைக்கிள் சவாரி செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் 100 கி.மீ. வரை சைக்கிள் பயணம் செய்ததாக கூறி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது 400 கி.மீ. தூரம் சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சைக்கிளுடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆர்யாவின் சைக்கிள் பயண சாதனையை நடிகர் விவேக்கும் டுவிட்டரில் பாராட்டி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆர்யா, உங்களின் 400 கி.மீ. சைக்கிள் பயணத்துக்கு வாழ்த்துகள். நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். விளையாட்டு வீரர்களுக்கும் உந்துதலாக இருக்கிறீர்கள்’’ என்று பதிவிட்டுள்ளார். விவேக் பாராட்டுக்கு ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் பாலாஜியை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்த நிலையில், அவரே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் கவலை வேண்டாம் படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பாடம், துருவங்கள் பதினாறு, மூக்குத்தி அம்மன் படங்களிலும் நடித்து இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.
ஏற்கனவே நடிகர் மகத்தை யாஷிகா ஆனந்த் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. அதனை மறுத்தார். தற்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜியுடன் யாஷிகா இணைந்து இருப்பது போன்ற புகைப்படம் வலைத்தளத்தில் வெளியானது. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் பேசப்பட்டது.
இதனால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன. இதற்கு விளக்கம் அளித்துள்ள யாஷிகா, “நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகினோம். அவர் வளர்ச்சியில் சந்தோஷப்படுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
டைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும்.
டைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும். அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியதில் பாலசந்தருக்கு பெரும் பங்கு உண்டு.
"அபூர்வ ராகங்கள்'' கதை புதுமையானது. விக்கிரமாதித்தன் கதையில், விக்கிரமாதித்தனிடம் வேதாளம் பல விடுகதைகளை போடும்.
அதில் ஒரு விடுகதை:-
"தந்தையும், மகனுமான இருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, மணலில் இரண்டு பெண்கள் நடந்து சென்ற கால் தடங்களைப் பார்க்கிறார்கள். அந்த கால் தடங்களை பின்பற்றிச் சென்று அந்த இருவரையும் கண்டுபிடிப்பது என்றும், பெரிய கால் தடத்துக்கு உரியவளை தந்தையும், சிறிய கால் தடத்துக்கு உரியவளை மகனும் திருமணம் செய்து கொள்வது என்றும் முடிவு செய்கிறார்கள்.
அவ்வாறே, கால் தடங்களை பின்பற்றிச் செல்லும் தந்தையும், மகனும் அந்த 2 பெண்களையும் கண்டுபிடிக்கிறார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், பெரிய பாதங்களுக்கு உரியவள் மகள். சிறிய பாதங்களுக்கு உரியவள் தாய்!
ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்த இரு பெண்களையும் தந்தையும், மகனும் மணந்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உறவு முறை என்ன?'' - இதுதான் வேதாளத்தின் விடுகதை.
அதற்கு விடை கூறமுடியாமல் விழிப்பான், விக்கிரமாதித்தன்.
வேதாளத்தின் விடுகதையை அடிப்படையாக வைத்து, அபூர்வராகங்கள் கதையைப் பின்னினார் பாலசந்தர்.
இதில் ஸ்ரீவித்யா தாய்; ஜெயசுதா மகள்.
மேஜர் சுந்தரராஜன் தந்தை; கமலஹாசன் மகன்.
ஸ்ரீவித்யாவை கமலஹாசன் காதலிப்பார்.
மேஜர் சுந்தரராஜன், ஜெயசுதாவை மணக்க விரும்புவார்!
கத்திமேல் நடப்பது போன்ற கதை.
கடைசியில், ஸ்ரீவித்யாவின் காணாமல் போன கணவன் திரும்பி வருவார். அவர்தான் ரஜினிகாந்த்!
கொஞ்ச நேரமே வந்தாலும், கதையை முடித்து வைக்கும் கதாபாத்திரம்!
தாடி -மீசையுடன், ஸ்ரீவித்யாவின் பங்களா கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைவார், ரஜினிகாந்த்.
"யார் இந்தப் புதுமுகம்?'' என்று படம் பார்க்கிறவர்கள் கேட்கும்படியாக அமைந்தது, அக்காட்சி.
பாலசந்தர் கண்டுபிடித்த வைரம்
கர்நாடகத்தை சேர்ந்தவர். கறுப்பு நிறம். தமிழை லாவகமாகப் பேசக்கூடிய ஆற்றல் அவ்வளவாக இல்லை. அப்படியிருந்தும், ரஜினிகாந்த் ஒரு வைரம் என்பதை கண்டுபிடித்து, அபூர்வராகங்களில் அறிமுகப்படுத்தினார், பாலசந்தர்.
"ரஜினிகாந்த் கண்களில் ஒருவித பிரகாசத்தைக் கண்டேன். எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரமாக வருவார் என்று அப்போதே கணித்தேன்'' என்று கூறுகிறார், பாலசந்தர்.
ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதோடு பாலசந்தர் நின்றுவிடவில்லை. அவரை பட்டை தீட்டும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
"மூன்று முடிச்சு'' படத்தில், முக்கிய வேடம் கொடுத்தார். இதில் கமலஹாசன் நடித்திருந்தாலும், அவர் ஏற்றிருந்தது "கவுரவ வேடம்'' போன்றதுதான்.
ஸ்டைல் மன்னன் என்று பிற்காலத்தில் புகழ் பெற்ற ரஜினிகாந்த், சிகரெட்டை தூக்கிப்போடும் ஸ்டைலை முதன் முதலாகச் செய்து காட்டியது, இந்தப் படத்தில்தான்.
இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. குழந்தை நட்சத்திரமாகப் புகழ் பெற்றிருந்த ஸ்ரீதேவி, கதாநாயகியாக நடித்த முதல் படம் இதுதான்.
மூன்று முடிச்சு பெரிய வெற்றிப்படம் அல்லவென்றாலும், ரஜினிகாந்துக்கு கணிசமான ரசிகர்களைத் தேடிக்கொடுத்தது.
பாலசந்தர் படத்தில் அறிமுகமானது பற்றி ரஜினிகாந்த் கூறியதாவது:-
"திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற பிறகு, மீண்டும் பெங்களூர் சென்று கண்டக்டர் வேலை பார்த்துக்கொண்டே பொழுது போக்காகக் கன்னடப் படங்களில் நடிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.
தமிழ்ப்படத்தில் நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. ஆனால் நான் எதிர்பாராதவிதமாக பாலசந்தர் சாரை சந்தித்து, அவர் மூலமாக "அபூர்வ ராகங்கள்'' படத்தில் அறிமுகமானேன்.
அந்த `அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்பின்போதுதான், ஒரு நாள் என்னையே எனக்கு உணர்த்தினார், அவர். என்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, அவற்றை எப்படி எல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பனவற்றை எடுத்துக் கூறினார்.
அன்று அவர் வழங்கிய ஆலோசனைகள் அனைத்தும் எனக்குப் பெரிதும் உதவின. இன்றும் உதவி வருகின்றன.''
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

இவர் தற்போது, கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே, ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், ஹரி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் படக்குழுவினர் இதை உறுதி படுத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
நடிகர் அருண் விஜய்யும் பிரியா பவானி சங்கரும் ஏற்கனவே மாஃபியா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.