என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் சந்தானம், அடுத்ததாக தெலுங்கு பட ரீமேக் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.
    தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் கைவசம் டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், பாரிஸ் ஜெயராஜ், சபாபதி என ஏராளமான படங்களை வைத்துள்ளார். 

    இந்நிலையில், நடிகர் சந்தானம் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரியா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சந்தானம் நடிக்க உள்ளாராம்.

    சந்தானம்

    இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிகை ரியா சுமன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா தான் இப்படத்தை இயக்க உள்ளாராம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிக்பாஸ் பிரபலம் ஒருவர் திடீரென மரணமடைதிருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    மலையாள பாடகரான சோம்தாஸ், மோகன்லால் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். 42 வயதாகும் சோம் தாசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் கொல்லத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

    சோம்தாஸ்

    இந்நிலையில், நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சோம்தாசின் மறைவு மலையாள திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
    ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க உள்ள புதிய படத்தில், கே.ஜி.எப். பட வில்லன் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
    சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி, அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

    ராமச்சந்திர ராஜு

    இந்நிலையில், கே.ஜி.எப். படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு, இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் அவர் அருண் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழ் திரையுலகில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம்வரும் நமீதா, தனக்கு தற்கொலை செய்து கொள்ளும் சிந்தனைகள் அதிகம் வந்ததாக தெரிவித்துள்ளார்.
    நடிகை நமீதா 2004-ல் ‘எங்கள் அண்ணா’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவரது உடல் எடை கணிசமாக கூடியது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தன. பின்னர் காதலர் வீரேந்திராவை திருமணம் செய்து கொண்டார். தற்போது உடல் எடையை குறைத்துள்ளார். 

    இந்த நிலையில் தனது உடல் எடை கூடிய, எடை குறைத்த இரண்டு புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சினிமா வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் பற்றிய பதிவை வெளியிட்டுள்ளார். 

    அதில் கூறியிருப்பதாவது: ‘‘10 வருடத்துக்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் சில நிமிடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் மன அழுத்தம் பற்றிய விழிப்புணர்வுக்காகவே பதிவிட்டுள்ளேன். உடல் எடை கூடியபோது, எனக்கு அதிக மன அழுத்தமும் அசவுகரியமும் இருந்தது. யாருடனும் பழக முடியவில்லை. இரவில் தூக்கம் வரவில்லை. அதிக உணவை சாப்பிட்டேன். 

    நமீதா

    தினமும் பீட்சா சாப்பிட்டேன். எடை கூடி எனது தோற்றமே மாறியது. எடை 97 கிலோவாக இருந்தது. சிலர் நான் மதுவுக்கு அடிமையாகி விட்டதாக பேசினர். ஆனால் எனக்கு சினைப்பை, மற்றும் தைராய்டு நோய்கள் இருந்தது எனக்குத்தான் தெரியும். தற்கொலை செய்து கொள்ளும் சிந்தனைகள் அதிகம் வந்தன. எனக்கான மன அமைதி கிடைக்கவில்லை. 

    ஐந்தரை வருட மன அழுத்தத்துக்கு பிறகு இறுதியில் எனது கிருஷ்ணரையும் மகா மந்திராஸ் தியானத்தையும் கண்டுபிடித்தேன். டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்லவில்லை. எனது தியானமும் கிருஷ்ணருக்காக செலவிட்ட நேரமும்தான் சிகிச்சை. இறுதியில் அமைதியையும் அன்பையும் கண்டுபிடித்தேன். நீங்கள் வெளியில் தேடும் விஷயங்கள் உங்களுக்குள் இருக்கிறது என்பதுதான் இதன் நீதி''. இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.
    அனுபவங்கள் பதிவு: ஜனவரி 03, 2019 23:04 IST சிவாஜிகணேசன் நடித்த "எதிரொலி'' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.
    சிவாஜிகணேசன் நடித்த "எதிரொலி'' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.

    இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-

    "சிவாஜியின் அலங்கார நிபுணரான ராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். என் நாடகங்களைப் பார்த்தவர். என் கதையில் சிவாஜி நடிக்க வேண்டும், அதை மாதவன் இயக்க வேண்டும் என்று விரும்பினார்.

    நானும் சரி என்று சொல்லிவிட்டேன். மாதவனுடன் உட்கார்ந்து ஒரு கதை தயார் செய்தோம்.

    சிவாஜியிடம் கதை சொல்ல ஏற்பாடு நடந்தது.

    "நான் நாலைந்து நாட்கள் சூரக்கோட்டைக்குப் போகிறேன். அங்கு ஓய்வு எடுக்கும் வேளையில், கதையும் கேட்கலாமே. அவர்கள் இரண்டு பேரையும் சூரக்கோட்டைக்கு அழைத்துக்கொண்டு வந்துடுங்க'' என்றார், சிவாஜி.

    இதை, ராமகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அவருக்கு சிவாஜி ஏற்கனவே ஒரு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார். இது இரண்டாவது படம்.

    கதை சொல்வதற்காக அதுவரை நான் எந்த வெளிïருக்கும் போனதில்லை. முதல் தடவையாக சூரக்கோட்டைக்கு சென்றேன்.

    அங்கு, சிவாஜியின் வீடு பெரிதாக இருந்தது. நிறைய அறைகள் இருந்தன. மாதவன் அப்போது சிவாஜியை வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். நான் சூரக்கோட்டையில் மாதவனுடன் நான்கைந்து நாள் தங்கினேன்.

    சிவாஜி அவ்வப்போது என்னை பார்ப்பார். "சாப்பிட்டீங்களா?'' என்று கேட்பார்.

    நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவ்வப்போது வேட்டைக்குப் போவார். ஆனால், கதை கேட்க என்னை அழைக்கவில்லை.

    சும்மா உட்கார்ந்து இருப்பது, எனக்கு போரடித்தது. இதுபற்றி ராமகிருஷ்ணனிடம் கூறினேன். `ஓய்வு எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறார். அவரே உங்களைக் கூப்பிடுவார்' என்றார்.

    அதேபோல, மூன்றாவது நாள் சிவாஜி என்னை அழைத்து கதை கேட்டார். நான் சொன்னேன். அவருக்குப் பிடித்து இருந்தது. "கதை நன்றாக இருக்கிறது. பண்ணலாம்'' என்று சொல்லிவிட்டார்.

    ஆனால், பிறகு என்னுடன் பேசவில்லை. ஒருவேளை மாதவனிடம் பேசியிருக்கலாம். சிவாஜி பிசியாக இருந்ததால், படம் தள்ளிக்கொண்டே போயிற்று. இதற்கிடையே, ராமகிருஷ்ணன் இறந்து போனார். அதனால், அப்படம் தயாரிக்கப்படவில்லை.

    இதன் பிறகு, சிவாஜியை வைத்து ஜி.என்.வேலுமணி தயாரித்த "எதிரொலி'' படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    முதல் நாள் படப்பிடிப்பு. சிவாஜியை முதன் முதலாக நான் இயக்கிடும் நேரம். எனது கை -கால் நடுங்கின. "பராசக்தி'', "மனோகரா'' படங்களைப் பார்த்து பிரமித்துப்போன எனக்கு, அவரை எப்படி இயக்குவது என்ற தடுமாற்றம்.

    அவர் நடிப்பைப் பார்த்து ராத்தூக்கம், பகல் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவன் நான். அவரை இயக்கும் நேரம் வந்ததும், கை-கால் வெடவெடத்தன.

    நிலைமையை சரி செய்து கொண்டு, முதல் காட்சியை அவருக்குச் சொன்னேன். பொதுவாக முதல் நாள் என்றால், ஒரு `சக்சஸ்' அல்லது `வெற்றி' என்று கூறும் வழக்கமான காட்சியாக இல்லாமல், ஒரு நீள வசனத்தை அவரைப் பேசச் சொன்னேன். அப்போது, கே.ஆர்.விஜயாவும் உடன் இருந்தார்.

    "நான் உங்களுக்கு இப்படி ஒரு காட்சி வைத்துள்ளேன். சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள். மாற்றி அமைத்துக் கொள்ளலாம்'' என்று சிவாஜியிடம் சொன்னேன்.

    அவர் உடனே, "அய்யய்யோ... நீங்கதான் டைரக்டர். நான் எதுவுமே சொல்லமாட்டேன். நினைக்கவும் மாட்டேன். எப்படி நடிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களோ அப்படியே நடிக்கிறேன்'' என்றவர், வசனத்தைப் படித்துக் காட்டும்படி கூறினர்.

    நான் படித்துக்காட்டினேன். "நான் எப்படி பேசவேண்டும் என்பதையும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்க!'' என்றார், சிவாஜி.

    "என்ன சார் இது... நீங்க போய் என்னிடம் கேட்கறீங்க... உங்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பது சரியா வராது!'' என்றேன்.

    "இல்லை பாலு! நீங்க எத்தனையோ வெற்றி நாடகங்களை டைரக்ட் செய்திருக்கீங்க. எனக்கும் சொல்ல வேண்டியதுதானே... இந்த படம் என்கிற கப்பலுக்கு நீங்கதான் கேப்டன்'' என்று விடாப்பிடியாகச் சொன்னார், சிவாஜி.

    இவ்வாறு சிவாஜி சொன்ன பிறகு எனக்கு தைரியம் வந்தது. படப்பிடிப்பு படுவேகமாக நடந்தது.

    இப்படி நடந்து வந்த படப்பிடிப்பின் நடுவே, ஒரு நாள் சிவாஜி என்னைத் தனியாக அழைத்தார். பட்டென்று ஒரு கேள்வி கேட்டார்.

    தனது மனசை நீண்ட நாள் உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை அவர் கேட்டதும், நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கேட்ட கேள்வி:-

    "ஏன் பாலு... எனது நடிப்புக்கு ஏற்றபடி ஒரு காட்சியை எனக்காக வைக்கக்கூடாதா....?''

    - இதுதான் சிவாஜி கேட்ட கேள்வி.

    நான் திடுக்கிட்டேன். "என்ன சார்... என்ன சொல்றீங்க?'' என்று கேட்டேன்.

    "இல்லை. நான் நடிக்கும்படியான ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே'' என்று மíண்டும் சொன்னார்.

    எனக்குப் பெரும் அதிர்ச்சி. "அப்படியானால், நீங்கள் இதுவரை நடித்ததெல்லாம் நடிப்பு இல்லையா?'' என்று நான் கேட்க, "இல்லை... அப்படி சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும்... நான் நன்றாக நடிப்பதாகச் சொல்கிறார்கள். நவரச நடிப்பும் கலந்து தரும்படி ஒரு காட்சி வைக்கக்கூடாதா?'' என்று சிவாஜி கேட்டார்.

    "இது அப்படி ஒரு கதை அல்ல. ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கை பற்றிய இயல்பான கதை. மிதமிஞ்சிய நடிப்பு இந்தக் கதையில் தேவைப்படாதே'' என்று நான் சொல்ல, "அப்படியென்றால் சரி. கதையும், காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்துவிட்டன. எனது ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை'' என்று சொல்லி முடித்துவிட்டார், சிவாஜி.

    அவர் சந்தேகப்பட்டபடி சிவாஜி ரசிகர்கள் இந்தப்படத்தை ஏற்கவில்லை. அதனால் படம் வெற்றி அடையவில்லை.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்
    சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் புதிய படத்தில், மேலும் ஒரு ஹீரோயின் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

    இந்நிலையில், நடிகர் சூர்யா அடுத்ததாக தயாரிக்கும் படத்தை புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்குகிறார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை வந்து, அனைவரது மனதையும் கொள்ளைக் கொண்ட ரம்யா பாண்டியன் இப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

    வாணி போஜன், சூர்யா

    அவருடன் இணைந்து, பல்வேறு படங்களில் தன் நடிப்பால் முத்திரை பதித்து வரும் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மித்துன் மாணிக்கம். பாடகர் க்ரிஷ், இந்தப் படத்துக்கு இசையமைக்கவுள்ளார். 

    பட பூஜையின் போது எடுத்த புகைப்படம்

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது. இதில் படக்குழுவினருடன்  ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன்,  தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ஆர்.ரவி கிருஷ்ணன், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், சக்தி பிலிம் பேக்டரி பி.சக்திவேலன், கலரிஸ்ட் பாலாஜி கோபால், இயக்குனர் ஜே.ஜே ஃபிரடெரிக் உள்ளிட்ட பலர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலந்து கொண்டனர்.
    செந்தில்குமார் இயக்கத்தில் அங்காடித்தெரு மகேஷ், மேக்னா நடிப்பில் உருவாகி இருக்கும் வீராபுரம் படத்தின் முன்னோட்டம்.
    சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220. இப்படத்தை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகனாக அங்காடித்தெரு மகேஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக மேக்னா நடித்துள்ளார். சதீஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    வீராபுரம் படக்குழு

    இந்த படத்திற்கு இரட்டையர்களான ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற அறிமுக இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்கிறார். மேலும் கணேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். மணல் கடத்தல் கும்பலுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் படம் தயாராகி இருக்கிறது என்கிறது படக்குழு.
    வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சூரிக்கு அப்பாவாக நடிக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    விஜய் சேதுபதி, சூரி

    இந்நிலையில், விஜய் சேதுபதி என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சூரிக்கு அப்பாவாக நடிக்கிறாராம். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அப்பா வேடத்தில், முதலில் இயக்குனர் பாரதிராஜா நடிப்பதாக இருந்தார். பின்னர் அவர் விலகியதால் விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே ‘ஆரஞ்சு மிட்டாய்’, சீதக்காதி போன்ற படங்களில் வயதானவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்வது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை சனம் ஷெட்டி. இவரும் பிக்பாஸ் 3 போட்டியாளரான தர்ஷனும் காதலித்து வந்தனர். ஆனால் நிச்சயதார்த்தம் நடந்த பிறகு, இருவரிடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் திருமணம் நின்றது. 

    இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே நெற்றி வகிடில் குங்குமம் வைத்து காணப்பட்ட சனம் ஷெட்டி, தற்போது நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னரும் சில சமயங்களில் அதுபோன்று காணப்படுகிறார்.

    சனம் ஷெட்டி

    இதுப்பற்றி ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் சனம் ஷெட்டியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சனம், எல்லாருமே இதே கேள்வியை தான் கேட்கிறார்கள். எனக்கு இப்போது வரை திருமணம் நடைபெறவில்லை. உங்கள் அனைவரது ஆசீர்வாதத்துடன் கண்டிப்பாக ஒருநாள் அது நடக்கும். 

    மேலும், எங்கள் வீட்டில் திருமணமான பெண்கள் மட்டுமின்றி மற்ற பெண்களும் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பது வழக்கமான ஒன்று தான் என்று பதிலளித்த சனம், திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

    ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்தாண்டே ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. 

    தனுஷ்

    இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெட்பிளிக்ஸில் இப்படம் வெளியாக உள்ளதாம். 

    மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் மக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து, ஏராளமான முன்னணி நடிகர்கள் ஓடிடி முடிவை கைவிட்டு வரும் நிலையில், தனுஷ் படம் ஓடிடி-யில் வெளியாக உள்ளது ரசிகர்களிடையேயும், திரையுலகினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள ‘டான்’ படத்தில் மெர்சல் பட நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடிக்கும் படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்க உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். டான் படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். 

    எஸ்.ஜே.சூர்யா

    இந்நிலையில், பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக விஜய்யின் மெர்சல் படத்தில் வில்லனாக மிரட்டிய எஸ்.ஜே.சூர்யா, இப்படத்தில் வில்லனாக நடிக்கிறாரா அல்லது குணசித்திர வேடத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வாரிசு நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷ் பட பிரபலம் ஒருவர், தற்போது விவாகரத்து செய்ய உள்ளாராம்.
    மலையாள திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் ஜோமோன் டி ஜான். இவர் தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களிலும் பணியாற்றி உள்ளார். அண்மையில் வெளியான பாவக் கதைகள் எனும் ஆந்தாலஜியில் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தது இவர்தான். 

    ஜோமோன் டி ஜான், அன் அகஸ்டின்

    இவர் கடந்த 2014-ம் ஆண்டு பிரபல இயக்குனர் அகஸ்டினின் மகளும், நடிகையுமான அன் அகஸ்டினை திருமணம் செய்து கொண்டார். காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்கள், தற்போது விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்துள்ளார்களாம். நடிகை அன்னிடம் இருந்து விவாகரத்து கோரி ஜோமோன், நீதிமன்றத்தை நாடியுள்ளார். வருகிற பிப்ரவரி 9-ந் தேதி அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
    ×