என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    எந்திரன் கதை திருட்டு வழக்கில் 11 ஆண்டுகளாக ஆஜராகவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இயக்குனர் சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
    சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக இயக்குனர் சங்கர் நேரில் ஆஜராகவில்லை என்ற புகாரின் அடிப்படையில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியானது. இதற்கு இயக்குனர் சங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடி வாரண்ட்
     பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனது வழக்கறிஞர் திரு.சாய் குமரன், நீதிமன்றத்தை இன்று அணுகி இந்தச் செய்தி குறித்து அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக அப்படி எந்த வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார்.

    சங்கர் அறிக்கை

    இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது, அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும், நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலைத் தந்துள்ளது. 

    இது போன்ற பொய்யான செய்திகள் இனி பரவாது என்பதை உறுதி செய்ய, எனது இந்த அறிக்கையை பகிர வேண்டும் என்று தயவுகூர்ந்து அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    ஹலீதா ஷமீம் இயக்கி இருக்கும் ஏலே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சமுத்திரகனி படப்பிடிப்பில் இயக்குனர் சாமி ஆடினார் என்று கூறினார்.
    சில்லுக்கருப்பட்டி படத்தை தொடர்ந்து ஹலீதா ஷமீம் இயக்கி இருக்கும் புதிய படம் ஏலே. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

    இதில் சமுத்திரகனி பேசும்போது, பெரிய படைப்பான ஏலே படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இந்த படத்தில் புதுப்புது முகங்கள், புதுப்புது சத்தங்கள் கேட்டது மகிழ்ச்சி. படப்பிடிப்புக்கு சென்ற முதல் 8 நாட்கள் என்னை பிணமாக்கி விட்டார்கள். நான் பிணமாக இருக்கும் காட்சியை படமாக்கினார்கள். ஹலீதா சிறப்பான இயக்குனர். பல இடங்களில் அவரை வியந்து பார்த்து இருக்கிறேன். 

    சமுத்திரகனி

    இப்போ இருக்கிற ஹலீதாவை நான் 40 நாட்கள் பார்க்கவில்லை. 40 நாட்களும் சாமி ஆடினார்கள். ஆனால், சிரித்துக் கொண்டே சாமி ஆடினார்கள் என்றார்.
    டார்லிங், மொட்ட சிவா கெட்ட சிவா படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிக்கி கல்ராணி 7 ஆண்டுகள் நிறைவானதையொட்டி புது வீட்டுக்கு சென்று இருக்கிறார்.
    கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வெளிவந்த ‘1983’ எனும் மலையாளப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார் நிக்கி கல்ராணி அதனை தொடர்ந்து பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவில் 2015ம் ஆண்டு வெளிவந்த ‘டார்லிங்’ படம் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ‘‘யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்கா, சார்லி சாப்ளின் 2, தேவ், கீ,” உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.  

    நிக்கி கல்ராணி

    திரையுலகில் 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், புதிய வீட்டிற்கும் குடி பெயர்ந்துள்ளார் நிக்கி கல்ராணி. அடுத்ததாக இவரது நடிப்பில் ராஜவம்சம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    மாடல் அழகி பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்துக் கொண்ட நடிகர் மகத், திருமண நாளில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    அஜித்தின் 'மங்காத்தா’, விஜய்யின் ’ஜில்லா’, சிம்புவின் ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் மகத். இதைத் தொடர்ந்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாம் சீசனில் மகத் போட்டியாளராக கலந்துக் கொண்டார்.

    மகத்தும் பிரபல மாடல் ஆழகி பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இதில் மகத்தின் நண்பர் சிம்பு உள்ளிட்ட சில பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

    மகத்

    இன்று திருமண நாள் கொண்டாடும் இவர்கள், ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளனர். பிராச்சியின் வயிற்றை முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்ட மகத், "நாங்கள் இருவரும் அழகிய குழந்தையால் ஆசீர்வதிக்கப் பட்டுள்ளோம். இந்த வருடம் மே மாதத்தில் எங்கள் குழந்தை வருகிறது. இந்த சிறந்த பரிசுக்கு நன்றி பிராச்சி மிஸ்ரா. லவ் யூ" என்று தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
    மகாபாரதத்தை போர் இல்லாம படிச்சு பாருங்க சார் என்று சுல்தான் பட டீசரில் கார்த்தி சொல்லும் வசனம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
    ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். 

    பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று வெளியிடுவதாக அறிவித்தார்கள்.

    சுல்தான்

    அதன்படி இன்று வெளியான டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் மகாபாரதத்தை போர் இல்லாம படுச்சு பாருங்க சார் என்று கார்த்தி சொல்லும் வசனம் கவனம் பெற்றிருக்கிறது.
    பிரபல நடிகர் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
    தமிழ் சினிமாவில் ‘ராசாவே உன்ன நம்பி’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக  களம் இறங்கியவர் ராஜ்கிரண். அதைத்தொடர்ந்து ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றிகரமாக இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கிறார்.  

    மகனுடன் ராஜ்கிரண்

    இந்நிலையில் நடிகர் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராஜ்கிரண், “இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவது பிறந்த நாள்.  ‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார். அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    யோகிபாபு

    இந்நிலையில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே விஜய்யுடன் மெர்சல், சர்கார், பிகில் போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில், தற்போது 4-வது முறையாக கூட்டணி சேர உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    அறிமுக இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி நாயர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆலம்பனா’ படத்தின் முன்னோட்டம்.
    வைபவ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஆலம்பனா. கமர்சியல் பேண்டஸி படமாக உருவாகி வரும் இதை அறிமுக இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்குகிறார். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை போன்ற படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர். இப்படத்தில் வைபவ்விற்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். 

    மேலும் முனிஷ்காந்த், திண்டுக்கல் ஐ லியோனி, காளிவெங்கட், ஆனந்த்ராஜ், முரளிசர்மா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும், தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்க, வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
    எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷால் இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ளார். 

    விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத்

    இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு, தற்போது முடிவை மாற்றி திரையரங்கில் வெளியிட முன்வந்துள்ளனர். அந்த வகையில் இப்படம் வருகிற பிப்ரவரி 19-ந் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    நடிகை அனுஷ்கா சர்மா முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா சர்மா. இவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் பிரம்மாண்டமாக நடந்தது. இத்தம்பதிக்கு கடந்த மாதம் 11-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. 

    அனுஷ்கா சர்மா வெளியிட்ட புகைப்படம்

    இந்நிலையில், தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அனுஷ்கா சர்மா, அக்குழந்தைக்கு ‘வாமிகா’ என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். செல்ல மகளை பார்த்து சிரித்தபடி இருக்கும் விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
    பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக யாஷிகா நடிக்க உள்ளார்.
    இயக்குனராக புகழ் பெற்ற எஸ்.ஜே.சூர்யா, தற்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘இறைவி’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது ராதா மோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ள அவர், மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

    எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா

    இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘கடமையை செய்’ என பெயரிட்டுள்ளனர். முத்தின கத்திரிக்காய் படத்தின் இயக்குனர் வெங்கட் ராகவன் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக யாஷிகா நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
    ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் எனிமி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ படத்தில் நடித்து வருகிறார்கள். 

    இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிர்ணாளினி நடிக்க உள்ளதாக அறிவித்த படக்குழு, ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பதை வெளியிடாமல் இருந்தது.

    மம்தா மோகன்தாஸ்

    இந்நிலையில், எனிமி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல மலையாள நடிகையான மம்தா மோகன்தாஸ் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். இவர் ஏற்கனவே தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையறத் தாக்க போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×