என் மலர்
சினிமா செய்திகள்
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் வித்யா பிரதீப் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் பவுடர் படத்தின் முன்னோட்டம்.
சாருஹாசன் நடித்த 'தாதா 87', ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, அடுத்ததாக பவுடர் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். வித்யா பிரதீப் முதன்மை வேடத்தில் நடிக்க மனோபாலா, வையாபுரி, ஆதவன் அகல்யா வெங்கடேசன், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

த்ரில்லர் கலந்த பிளாக் காமெடியாக படமாக தயாராகிறது. பெரும்பாலான மக்கள் பவுடர் பூசிய போலியான முகத்தோற்றத்துடன் தங்கள் அடையாளத்தை மறைத்து காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படி வாழும் 18 விதமான கதாபத்திரங்களை பற்றிய படம்தான் பவுடர். ராஜா பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைத்துள்ளார். ஜெய ஸ்ரீ விஜய் இப்படத்தை தயாரித்துள்ளார்.
பிரபல இயக்குனர் கவுதம் மேனன் அடுத்ததாக இயக்கி நடித்துள்ள ஆந்தாலஜி படத்தில் அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார்.
இயக்குனர் கவுதம் மேனன் தற்போது ஆந்தாலஜி படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளியான புத்தம் புது காலை மற்றும் பாவக் கதைகள் போன்ற ஆந்தாலஜி படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது நவரசா மற்றும் குட்டி ஸ்டோரி ஆகிய ஆந்தாலஜி படங்களில் பணியாற்றி வருகிறார்.

அந்தவகையில், இவர் இயக்கும் குட்டி ஸ்டோரி என்கிற ஆந்தாலஜி படம் வருகிற பிப்.12-ந் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இந்த ஆந்தாலஜி படத்தின் ஒரு பகுதியை கவுதம் மேனன், இயக்கியதோடு மட்டுமல்லாமல் அதில் ஹீரோவாகவும் அவரே நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில், கேங்ஸ்டராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் ஜெயம் ரவி. இவர் தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஜெயம் ரவி அடுத்ததாக பூலோகம் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், அப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அதில் வட சென்னையை சேர்ந்த கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். பூலோகம் படத்தில் பாக்ஸராக நடித்திருந்த ஜெயம் ரவி, இப்படத்தில் கேங்ஸ்டராக நடிக்க உள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நிபுணர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர்.
அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஹேம்நாத் தாக்கல் செய்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணையில் உள்ளது.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும், சித்ரா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர்.
அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஹேம்நாத் தாக்கல் செய்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணையில் உள்ளது.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும், சித்ரா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம், ஒரே நாளில் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி.யில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக கூறப்படுவது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தயாரிப்பு தரப்பின் இந்த முடிவால் தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரசிகர்களும் ஓடிடி வெளியீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், படத்தை ஓடிடி-யில் வெளியிடும் தினத்தன்றே தியேட்டர்களிலும் வெளியிடலாமா என தயாரிப்பாளர் யோசித்து வருகிறாராம்.

ஏற்கனவே ஈஸ்வரன் படத்தை இந்தியாவில் தியேட்டரில் வெளியிடும் தினத்தன்று, வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் முயற்சி செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த முடிவு கைவிடப்பட்டது.
அப்படி இருக்கையில், ஜகமே தந்திரம் படத்தை தியேட்டரிலும், ஓடிடியிலும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திரையரங்க உரிமையாளர்கள் சம்மதிப்பார்களா என்பது கேள்விக்குறி தான். விரைவில் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ, அடுத்ததாக தயாரிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனையும் படைத்தது. மாஸ்டர் படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். மாஸ்டர் படம் கொடுத்த உத்வேகத்தால் அடுத்தடுத்து படங்களை அவர் தயாரிக்க உள்ளாராம்.

அந்த வகையில், சேவியர் பிரிட்டோ அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தில், அவரின் மருமகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவுக்கும், அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக டிக்கிலோனா பட இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர் தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை புதுமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சந்தானத்தின் டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி, அடுத்ததாக இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் வீரர் நடராஜன் சமீபத்திய பேட்டியில், தனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க இயக்குனர்கள் சிலர் வீடு தேடி வந்ததாக கூறி உள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி.நடராஜன், சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியினருடன் வலைப்பயிற்சி பவுலராக சென்றார். பின்னர் அந்த தொடரில் ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டதுடன், பந்து வீச்சில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஆஸ்திரேலிய தொடருக்கு பின் தமிழகம் திரும்பிய நடராஜன், சில தினங்களுக்கு முன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்துக் கொண்டார். இந்நிலையில், நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: “எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க இயக்குனர்கள் சிலர் என் வீடு தேடி வந்தனர். ஆனால் இப்போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை. கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்த விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள டாக்டர் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டாக்டர் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அதன்படி தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், டாக்டர் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் நெல்சன் மற்றும் படக்குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், அண்மையில் வெளியான தெலுங்கு பட டீசரை பார்த்து பாராட்டி உள்ளார்.
தெலுங்கில் குரு பவன் இயக்கத்தில் சுமந்த், ஸ்ரீகாந்த், பூமிகா, தன்யா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘இதே மா கதா’. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் அஜித் பாராட்டியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தின் டீசரை பார்த்து அஜித் என்ன சொன்னார் என்பதை படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி அஜித் படக்குழுவினரிடம் கூறியதாவது: “எனது நீண்ட நாள் நண்பர் ராம்பிரசாத் காரு உங்களது, ‘இதே மா கதா’ டீசரைக் காட்டினார். டீசர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் வரும் காட்சிகளை உண்மையாகவே நேசித்தேன், அவற்றை எடுத்த விதமும் அருமை.
எனக்கு பைக் ரைடிங் மிகவும் பிடிக்கும், அதனால் நான் உடனடியாக இந்த டீசருடன் கனெக்ட் ஆகிவிட்டேன். உங்கள் அனைவரையும் சீக்கிரமே நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன். படம் வெற்றியடைய உங்கள் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார். இதில் அஜித் குறிப்பிட்டுள்ள ராம்பிரசாத் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘குட்டி ஸ்டோரி’ என்கிற ஆந்தாலஜி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில், ஏற்கனவே சில்லுக்கருப்பட்டி, புத்தம் புது காலை, பாவக் கதைகள் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கி உள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘குட்டி ஸ்டோரி’. முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்துள்ள இந்த ஆந்தாலஜி படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். இதில் நலன் குமாரசாமி இயக்கியுள்ள பாகத்தில் அவர் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘அருவி’ பட புகழ் அதிதி பாலன் நடித்துள்ளார்.
இந்நிலையில், குட்டி ஸ்டோரி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அதன் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற பிப்.12-ந் தேதி திரையரங்குகளில் இந்த ஆந்தாலஜி படம் வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தனது நடிப்பை கடுமையாக விமர்சனம் செய்வேன் என தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா தனது சினிமா வாழ்க்கை குறித்து அளித்துள்ள பேட்டி வருமாறு: “நான் 20 வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருக்கிறேன். ஆனாலும் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் இருக்கிறது. சில நேரம் எனது படங்களை பார்ப்பது இல்லை. திரைக்கு வந்த பிறகு 100 நாட்கள் காத்திருந்து பார்த்த படங்களும் உண்டு.
நான் நடித்த சில குறிப்பிட்ட காட்சிகளை பார்க்காமல் தவிர்த்தும் இருக்கிறேன். ஆனாலும் படத்தில் நான் செய்துள்ள தவறை மக்கள் பொறுத்து மன்னித்து ரசிப்பார்கள் என்று நினைப்பது உண்டு. எனது மனைவி நடிகையாக இருக்கிறார். சகோதரரும் நடிக்கிறார். அவர்களுக்கு தன்னம்பிக்கை உண்டு. அவர்கள் நடித்த காட்சியை விரும்புவார்கள்.

ஆனால் நான் அப்படி இல்லை எனது நடிப்பை கடுமையாக விமர்சனம் செய்வேன். சரியாக நடிக்கவில்லை. இன்னும் சிறப்பாக நடித்து இருக்கலாம் என்று கூறிக்கொள்வேன். சினிமாவுக்கு வந்து 20 வருடங்களுக்கு மேலான பிறகும் இன்னும் நான் சிறப்பாக நடித்து இருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.'' இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.






