என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஓவியா, சமீபத்தில் நடந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.
    பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சென்னை வந்தபோது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘கோபேக் மோடி' என்ற ஹேஷ்டேக் உருவானது. அதில் நடிகை ஓவியாவும் மோடிக்கு எதிரான பதிவை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியாவை பலர் கண்டித்தனர்.

    நடிகை காயத்ரி ரகுராமும் “வாயை மூடு. உன்னை அவமதிப்பதற்கு எதுவும் இல்லை. இது தி.மு.கவின் திசை திருப்பும் வேலைதான். ஓவியாவை வேலைக்கு அமர்த்தி இதை செய்ய வைத்துள்ளனர்'' என்று சாடினார். ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. 

    ஓவியா

    இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஓவியா தனது சமூக வலைத்தள பக்கத்தில், “ஜெய்ஹிந்த் கருத்து சுதந்திரம்'' என்று பதிவிட்டுள்ளார். கருத்து சொல்ல உரிமை இருக்கிறது என்று எதிர்ப்பாளர்களுக்கு இதன் மூலம் பதிலடி கொடுத்து இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி ஓவியாவின் பதிவை வைரலாக்கி வருகிறார்கள். 
    இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது ஹெல்மட் அணியாததற்கு அபராதம் செலுத்தியுள்ளார்.
    இந்தி நடிகர் விவேக் ஓபராய் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் மோட்டார் சைக்கிள் ஓட்டும் வீடியோ ஒன்றை தனது வலைத்தள பக்கத்தில் பதிவேற்றினார்.

    இந்த வீடியோவில் அவர் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது ஹெல்மட் அணியவில்லை. 

    சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய இந்த வீடியோவை கண்ட மும்பை போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மட் அணியாமல் இருந்ததற்காக அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். சாந்தாகுரூஸ் போக்குவரத்து போலீசார் இதற்கான ரசீதை அவருக்கு வழங்கினர்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு கங்கையாற்றில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்.
    சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.  

    இதனை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்திலும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் நடிக்க சிம்பு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    சிம்பு

    இந்நிலையில் சிம்பு திடீரென உத்திரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு பிரசித்திப் பெற்ற கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார்.

    அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கங்கையாற்றில் தீபம் வழிபாடு செய்தது திருமணத்திற்கான பரிகாரம் என்று கூறப்படுகிறது.
    டைரக்டர் கே.பாலசந்தரிடம் கோவி.மணிசேகரன் 2ஷி ஆண்டு காலம் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த காலத்தில் டைரக்ஷன் துறையில் அவர் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.
    டைரக்டர் கே.பாலசந்தரிடம் கோவி.மணிசேகரன் 2ஷி ஆண்டு காலம் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த காலத்தில் டைரக்ஷன் துறையில் அவர் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.

    பாலசந்தரிடம் பணியாற்றியபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கோவி.மணிசேகரன் கூறுகிறார்:

    "விஜயதசமி அன்று இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவியாளனாகச் சேர்ந்தேன். `அரங்கேற்றம்' படம்தான் எனக்கும் ஆரம்ப அரங்கேற்றம்.

    அவரது சிந்தனை நான்கு திசைகளிலும் சிறகடிக்கும். சிந்தனை அளவுக்கு அவரிடம் சினமும் குடிபுகுந்திருந்தது. ஆயினும் முரட்டுக்கோபம் அல்ல; முன்கோபம்.

    எவருக்கும் `அது இது' என்று எடுத்துச் சொல்லமாட்டார். புத்தி உள்ளவன் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் அந்த குருகுலத்து ஏணிப்படிகளை எண்ணலானேன். நானே யோசிப்பேன்; நானே ஆய்வேன்; நானே புரிந்து கொள்வேன்.

    அரங்கேற்றம் டைட்டிலில் ஒரு குடுகுடுப்பைக்காரன் `நல்ல காலம் வருது, நல்ல காலம் வருது' என்று குடுகுடுப்பையைக் குலுக்குவான். அவன் உருவத்தின் மீது என் பெயர் வரும். துணை டைரக்ஷன் - கோவி.மணிசேகரன் என்று! ஆம்; தனி டைட்டில் கார்டுதான்!

    இப்படி தனி டைட்டில் போட்டது குறித்து எங்கள் குழுவில் பிரச்சினை எழுந்தது. குரு கே.பாலசந்தர் சொன்னார்: "அவர் இலக்கிய சாம்ராட் விருது பெற்றவர். நான் அவரை இறக்கி மதித்தால், அவருடைய வாசகர்கள் என்னை இறக்கி மதிப்பிடுவார்கள். எனவே இதுதான் அறம்.''

    அவரது பதில், பலருக்கு இரும்பைக் காய்ச்சி இறக்கியது போலிருந்தது. அன்று முதலே, என் மீது சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டது.

    இந்திப்படம் செய்கிற போதுகூட, பாலசந்தர் என்னை இறக்கிப் பார்த்ததில்லை. அவருக்கு எழும் இலக்கிய ஐயங்களை நான் அண்ணாந்து வழங்கியதில்லை; அடிபணிந்து வழங்கியிருக்கிறேன்.

    இருமுறை அவர் என்னை கோபித்துக் கொண்டிருக்கிறார்.

    ஒன்று: வசனத்தாளில் திருத்தப்பட்ட வசனங்களை வரிசையாக எழுதத் தவறியது.

    மற்றொன்று: மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, கன்னடத்தில் அதிகமாகப் பேசப்பட்ட கலை நுணுக்கங்கள் நிறைந்த படம் அருகேயுள்ள ஒரு திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தைப் பார்க்க விரும்பினேன். துணைக்கு வர யாரும் இல்லை. ஒரு துணை நடிகையும் அந்தப் படத்தைப் பார்க்கத் துடித்தாள்.

    இயக்குனருக்கு எங்கே தெரியப்போகிறது என்று நினைத்து படத்துக்குப்போனோமë. திரும்பி வரும்போதுதான் தெரிந்தது, கருகருவென ஆசான் காத்திருந்தது!

    நடிகையோ ஓடி ஒளிந்து கொண்டாள். நான் அகப்பட்டுக்கொண்டேன். கே.பி.யின் கண்களில் கோபம். என்னை ஏசிவிட்டு, பிறகு ஒரு குழந்தைக்குக் கூறுவது போல் சொன்னார்:

    "கோவி! நீங்கள் பிரபல எழுத்தாளர். அவளோ நடிகை. நாளை இது பத்திரிகைகளில் வந்தால் எவருடைய பெயர் எப்படிக் கெடும் யோசித்தீர்களா?''

    இவ்வாறு பாலசந்தர் கூறியதும், நான் தலை குனிந்தேன். தவறுக்காக மன்னிப்பு கேட்டேன்.

    பாலசந்தரிடம் 2ஷி ஆண்டுகள் பணியாற்றினேன். அவரிடம் இருந்து விடைபெறும் நேரம் வந்தது. கண்ணீருடன் விடைபெற்றேன். அவர் கண்களும் கலங்கின.''

    இவ்வாறு கோவி.மணிசேகரன் கூறினார்.

    "பாலசந்தரிடம் இருந்து ஏன் விலகினீர்கள்?'' என்று கேட்டதற்கு மணிசேகரன் சொன்னார்:

    "சினிமா துணை டைரக்டராக பணியாற்றியபோது, எனக்கு கிடைத்த வருமானம் குறைவு. அதற்குமுன் புத்தகம் எழுதுவதன் மூலம்தான் வாழ்க்கை நடந்தது. சினிமாவில் பணியாற்றியபோது, மனைவியின் நகைகளை விற்று குடும்பம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    "திரைத்தொழில் கற்று என்ன சாதித்து விடப்போகிறீர்கள்?'' என்று என் அன்பு மனையாள் கண்ணீருடன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை.

    தவிரவும், பாலசந்தரின் முக்கிய உதவியாளராக விளங்கிய அனந்துடன் எனக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது.

    இத்தகைய காரணங்களால், நான் பிரிய நேர்ந்தது'' என்று கூறிய மணிசேகரன், தொடர்ந்து சொன்னார்:

    இந்த சமயத்தில், என் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

    நான் எழுதிய "தென்னங்கீற்று'' என்ற நாவல், புத்தகமாக வெளிவந்தது. அதைப் பாராட்டி, "இந்து'' நாளிதழில் விமர்சனம் வெளியாகியிருந்தது.

    பெங்களூரைச் சேர்ந்த பாபாதேசாய் என்ற படத்தயாரிப்பாளர், அந்த விமர்சனத்தைப்  படித்துவிட்டு, அதைப் படமாக்க விரும்பி, என்னைத் தேடி வந்தார்.

    "இந்து பத்திரிகையில் விமர்சனம் படித்தேன். கதை முழுவதையும் சொல்லுங்கள்'' என்று கூறினார். எனக்கே புரியாத எதிர்பாராத அதிர்ச்சி.

    நான் கதையை ஆங்கிலத்தில் சொன்னேன். பாலசந்தர் பட்டறையில் இருந்ததால், சினிமாவுக்கு ஏற்றபடி கதை சொல்லப் பழகியிருந்தேன். பட அதிபரை கவரும் விதத்தில் கதையைச் சொல்லி கலக்கினேன்.

    கதையைக் கேட்டதும் அவர் கண்களில் நீர் மல்கியது. "இக்கதையை கன்னடத்தில் படமாக எடுக்கிறேன். கதைக்கு என்ன விலை?'' என்று கேட்டார்.

    வெறும் கதையை விற்பதற்கா 2ஷி ஆண்டுகள் திரைத்தவம் செய்தேன்!

    "தமிழில் எடுப்பதானால், கதையைத் தருகிறேன். அதுவும் வசனத்தை நானே எழுதி, டைரக்ட் செய்ய வேண்டும்'' என்று கூறி, பாலசந்தரிடம் பணியாற்றியது பற்றி விவரித்தேன்.

    பாலசந்தர் பெயரைச் சொன்னதும், பாபாதேசாய் மகிழ்ந்து போனார். "தமிழிலும், கன்னடத்திலும் எடுப்போம். ஒரே நேரத்தில் இரு மொழிகளில் எடுக்க உங்களால் முடியுமா?'' என்று கேட்டார்.

    "ஏன் முடியாது?'' என்று திருப்பிக் கேட்டேன்.

    "அப்படியென்றால் ஆகட்டும். திரைக்கதை எழுதத் தொடங்கலாம்'' என்று கூறிவிட்டு, முறைப்படி ஒப்பந்தம் போட்டு, அட்வான்சும் வழங்கினார்.'' 
    மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பவானி கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
    விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியின் பவானி கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் மார்க்கெட் உயர்ந்து வருகிறது. தெலுங்கில் விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் குட்டி பவனியாக நடித்த மாஸ்டர் மகேந்திரனுக்கும் பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

    ஆர் கே சுரேஷ்

    இப்படிப்பட்ட பவானி கதாபாத்திரத்திற்கு முதன்முதலில் தேர்வு செய்யப்பட்டவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தானாம். சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்த முகின் நடிக்கும் புதிய படத்தை கவின் என்பவர் இயக்கி வருகிறார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கொள்ளையடித்தவர் முகின். இவர் தற்போது கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்திற்கு வேலன் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தை கவின் என்பவர் இயக்குகிறார்.

    தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். அழகான ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகும் இதில் முகினுக்கு ஜோடியாக மீனாக்‌ஷி நடிக்கிறார். மேலும் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    வேலன் படக்குழுவினர்

    இப்படத்தின் படப்பிடிப்பு அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு முறைகளை, முறையாக கடைப்பிடித்து, பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
    நந்தா கிஷோர் இயக்கத்தில் துருவா சார்ஜா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘செம திமிரு’ படத்தின் விமர்சனம்.
    தந்தை மீது பாசமாக இருக்கும் நாயகன் துருவா சார்ஜா சிறுவயதில் இருக்கும் போது தந்தையை இழக்கிறார். இவரது தாய் துருவா சார்ஜாவின் நன்மைக்காக இரண்டாவது திருமணம் செய்துக் கொள்கிறார். இதை புரிந்துக் கொள்ளாமல் தாயிடம் சண்டைப் போடுகிறார். மேலும் இரண்டாவது தந்தையை விட்டு பிரிந்து தன்னுடன் வருமாறு அழைக்கிறார். இதற்கு அவரது தாய் மறுப்பு தெரிவிப்பதால், விரக்தி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி திமிரு பிடித்தவனாக மாறுகிறார்.

    வளர்ந்து பெரியவனாக மாறும் துருவா சார்ஜா, ஊரில் இருப்பவர்களை மிரட்டி பணத்திற்காக எதுவும் செய்பவராக மாறுகிறார். இந்நிலையில், நிலத்தை அபகரிக்கும் சம்பத், துருவா சார்ஜா இருக்கும் ஏரியாவை அபகரித்து அங்கிருக்கும் மக்களை வெளியேற்ற நினைக்கிறார். இதற்கு துருவா சார்ஜாவும் துணை நிற்கிறார்.

    விமர்சனம்

    இறுதியில் துருவா சார்ஜா, தனது தாயுடன் இணைந்தாரா? ஏரியா மக்களை சம்பத்துடன் இணைந்து விரட்டினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக வரும் துருவா சார்ஜா, இளம் வயது நடிகராகவும், வாலிபனாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறார். திமிரு பிடித்தவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். நடனத்தில் அப்லாஸ் வாங்குகிறார்.

    விமர்சனம்

    நாயகியாக வரும் ராஷ்மிகா மந்தனா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துருவா சார்ஜா லவ் டார்ச்சர் பண்ணும் போது பார்ப்பவர்களை பரிதாபப்பட வைக்கிறார் ராஷ்மிகா. துருவா சார்ஜாவின் தாயாக வருபவரும், தந்தையாக வரும் ரவி சங்கரும் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். தனக்கே உரிய பாணியில் வில்லத்தனத்தில் அசத்தி இருக்கிறார் சம்பத்.

    ஆக்‌ஷன், சென்டிமென்ட், காதல் என கமர்சியல் படத்திற்கு தேவையான அனைத்தையும் வைத்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் நந்தா கிஷோர். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். படம் நீளமாக இருப்பதாலும், டப்பிங் படம் என்பதாலும் முழுமையாக ரசிக்க முடியவில்லை. தேவை இல்லாத காட்சிகளை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். மேலும் ஹீரோ கடைசியாக மாறும் காட்சியை இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    விமர்சனம்

    சந்தன் ஷெட்டி இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். விஜய் மில்டனின் ஒளிப்பதிவோடு பாடல் காட்சிகளை பார்க்கும் போது சிறப்பாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளிலும் விஜய் மில்டன் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘செம திமிரு’ திமிரு கொஞ்சம் குறைவு.
    நெல்சன் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக ரஜினி பட நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப தேர்வு நடைபெற்று வருகிறது.

    இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் சமீபத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    நவாசுதீன் சித்திக் - விஜய்

    இந்நிலையில், விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திக்கை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. நவாசுதீன் சித்திக் இதற்கு முன் ரஜினி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான அஞ்சலியிடம் ரசிகர்கள் பலரும் லிப்ட் கேட்டு வருகிறார்கள்.
    2007ம் ஆண்டு வெளியான "கற்றது தமிழ்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. ராம் இயக்கியிருந்த இந்த படம் அஞ்சலிக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. அந்த வெற்றியை அடுத்து கடந்த 2010ல் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த "அங்காடி தெரு" படத்தில் நடித்த அஞ்சலி தனக்கான தனி இடத்தை உருவாக்கிக்கொண்டார். தொடர்ந்து எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி உள்ளிட்ட பல படங்களில் வித்யாசமான கதாபாத்திரம் ஏற்று முன்னணி நடிகையானார். 

    அஞ்சலி

    கடந்த வருடன் இவருடைய நடிப்பில் பாவக்கதைகள், நிசப்தம், நாடோடிகள் 2 படங்கள் வெளியானது. தற்போது தமிழ், தெலுங்கு மொழிபடங்களில் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி வீட்டு வாசலில் யமாஹா பைக் ஓட்டும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், எங்களுக்கு லிப்ட் கிடைக்குமா? என ஏக்கத்துடன் கேட்டு கமண்ட் அடித்து வருகிறார்கள்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், அவரது சகோதரி ரேவதி சுரேஷை பாராட்டி இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணிக்காயிதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஒரு சில மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தனது சகோதரி ரேவதி சுரேஷ் உடல் எடையைக் குறைத்திருப்பதை அறிந்து தான் பெருமைப்படுவதாக கூறியுள்ளார். 

    உடல் எடை அதிகமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தற்போதைய புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் ரேவதி சுரேஷ், “நான் அதிக எடையுடன் குண்டாக இருந்ததால் என்னை எப்போதும் என் தாய் மற்றும் தங்கையுடன் ஒப்பிட்டு பலரும் விமர்சிப்பார்கள். ஒரு கட்டத்தில் என்னைப் பார்த்து நானே வெறுக்க ஆரம்பித்தேன். என்னை எனது சகோதரி கீர்த்தி சுரேஷ் எப்போதும் பாதுகாத்திருக்கிறார். அவர் தனது நண்பர்கள் அனைவரும் என்னை விட உன்னை தான் பிடித்திருக்கிறது என்று சொல்லியதாக என்னிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார். அதைக்கேட்டு நான் சிரித்தேன். என்னை வலிமையான, திறமையான பெண்ணாக பார்ப்பதாக எனது அம்மா என்னிடம் கூறியிருக்கிறார். 

    கீர்த்தி சுரேஷ்

    அதையே என் கணவரும் சொல்லக்கேட்கும் போது வியப்பாக இருந்தது. எனது யோகா டீச்சர் எனக்குள் இருக்கும் பலத்தை புரிய வைத்து எனக்கு பயிற்சி அளித்தார்கள். அதன் விளைவாக இப்போது 20 கிலோவுக்கும் மேல் எடை குறைந்துள்ளது” என கூறியுள்ளார். தனது சகோதரியின் இந்த பதிவுக்கு கமெண்ட் செய்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், “அப்படி போடு லவ், லவ், லவ். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.
    போர்க்களம்தான் என் உண்மையான காதலன் என்று பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    ரஜ்னீஷ் கை இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்து வரும் படம் ‘தாக்கட்’. இப்படம் குறித்து கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''சண்டையில் ஆறுதல் தேடுவது என்பது உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றலாம். வாள்களின் சத்தங்களுக்கு இடையே காதலில் விழுவது சாத்தியமில்லை என்று நீங்கள் நினைக்கலாம். 

    கங்கனா ரனாவத்

    உங்களைப் பொறுத்தவரை போர்க்களம் என்பது ஒரு மோசமான உண்மை. ஆனால், யுத்தம் செய்யப் பிறந்த ஒருவருக்கு இவ்வுலகில் வேறு இடம் கிடையாது. இது துடிப்பான ரத்தம் கொண்ட ஒரு பெண்மணியின் வாக்குமூலம். என்னுடைய போர்க்களம்தான் என்னுடைய ஒரே உண்மையான காதலன். அந்த ஒரே இடம் மட்டும்தான் நான் வேறு இடமாக உணராத ஒரே இடம்''. இவ்வாறு கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
    பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் ராஜமெளலி இயக்கி வரும் அடுத்த படத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
    பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி வருகிறார். முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

    அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது. பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடிக்கிறார்கள். 

    ஆர் ஆர் ஆர்

    தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. ஆர்ஆர்ஆர் படம் அக்டோபர் 13 அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தை தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.
    ×