என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானார். வடசென்னை, பிகில் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.


தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக நடிகர் டேனியல் பாலாஜி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சீதக்காதி, புரியாத புதிர் படங்களில் நடித்த காயத்ரி தற்போது பரியேறும் பெருமாள் நடிகருடன் இணைந்திருக்கிறார்.
தமிழில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சீதக்காதி, புரியாத புதிர் படங்களில் நடித்தவர் காயத்ரி. இவர் விஜய் சேதுபதியுடன் மாமனிதன் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை அடுத்து காயல் என்னும் படத்தில் காயத்ரி நடித்திருக்கிறார். இதில் பரியேறும் பெருமாள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லிங்கேஷ்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் ஐசக் வர்கீஸ், ஸ்வாகதா, ரமேஷ்திலக், பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். அனுமோள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரித்திருக்கும் இப்படத்தை தமயந்தி இயக்கி இருக்கிறார். விரைவில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது.
தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான ராய்லட்சுமி தற்போது பிகினி உடையில் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம்தான் பிரபலமானார். அதன்பிறகு ‘கற்க கசடற’, ‘குண்டக்க மண்டக்க’, ‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’, ‘மங்காத்த’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.
படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே தனது அடுத்த படத்தின் வாய்ப்புக்காக உடல் எடையை குறைத்து வருகிறார்.
இதையடுத்து பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது பின்க் நிற பிகினி அணிந்து ஒரு கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமயந்தி இயக்கத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ் , காயத்ரி, ஸ்வாகதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காயல்’ படத்தின் முன்னோட்டம்.
ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கும் புதிய படம் காயல். இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ் , காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ்திலக், ரேடியோ சிட்டி பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். அனுமோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சாதி மாற்று திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் படமாக உருவாகி இருக்கும் காயல் திரைப்படம் காதலும் பயணமும் கலந்த ஒரு திரைவடிவம். ஒரு பெண்ணுடைய தேர்வை அங்கீகரிக்காத சமூகத்தை நோக்கி கேட்கப்படும் கேள்வியே இத்திரைப்படத்தின் ஆணிவேராக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் தமயந்தி.
முழுக்க முழுக்க கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.

கார்த்திக் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில், பி.பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பில், ஜஸ்டின் கெனன்யாவின் இசையமைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
சென்னை போயஸ் தோட்ட இல்லத்திலேயே ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி இன்று செலுத்திக்கொண்டார்.
ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பிய நிலையில் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பிய நிலையில் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
ஆடுகளம் படத்தில் திரிஷா நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ஆடுகளம். சேவல் சண்டையை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் சிறந்த இயக்குனர், நடிகர், ஒளிப்பதிவாளர் உள்பட ஆறு பிரிவுகளில் தேசிய விருது வென்றது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாப்சி நடித்திருந்தார். அவரது கதாபாத்திரத்திற்கும் பாராட்டுக்கள் கிடைத்தன.

ஆனால் இப்படத்தில் டாப்சி நடித்த ஐரின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானது திரிஷா தான், அவர் சில காட்சிகளில் நடித்த பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியதால், பின்னர் டாப்சியை ஒப்பந்தம் செய்தனர். இந்நிலையில், ஆடுகளம் படத்தில் திரிஷா நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரகுல் பிரீத் சிங், கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ நிதி திரட்டி வருகிறார்.
தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக வந்த ரகுல் பிரீத் சிங் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பாலிவுட்டிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ரகுல் பிரீத் சிங், கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ நிதி திரட்டி வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் நிதியை ஆக்சிஜன் மற்றும் உயிர் காக்கும் உபகரணங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் பிரீத் சிங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாக்டவுன் சமயத்தில் காதலர் சாந்தனுவுடன் இருப்பதாக தெரிவித்துள்ள சுருதிஹாசன், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ள சுருதிஹாசன், அடுத்ததாக பிரபாஸின் சலார் படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே இவர் காதல் வலையில் சிக்கியதும், அதிலிருந்து காதல் முறிவு ஏற்பட்டு சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்ததும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது அவர், சாந்தனு ஹசரிகா என்பவரைக் காதலித்து வருகிறார்.

இந்த லாக்டவுன் சமயத்தில் காதலர் சாந்தனுவுடன் இருப்பதாக சுருதிஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்துக்கொண்ட விதவிதமான புகைப்படங்களையும் பகிர்ந்து, “லாக்டவுனில் என்னுடைய சிறந்தவருடன் இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். சுருதிஹாசனின் இந்தப் பதிவுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது.
பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, தற்போது சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர், தற்போது சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.
உலகம் முழுவதும் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சி தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்கிறார்கள். அந்த நிகழ்ச்சியை தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். ‘மாஸ்டர் செஃப் இந்தியா - தமிழ்’ என்ற பெயரில் இந்நிகழ்ச்சி தயாராகியுள்ளது.

உலகளவில் பிரபலமான இந்நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதால், இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏற்கனவே ரசிகர்களிடம் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக இந்நிகழ்ச்சி அமையுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக 4000 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று இல்லை என்று வந்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
லண்டன்:
இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை விருது விழா’, பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள ‘ஓ2’ அரேனாவில் நடத்தப்பட்டது. இதில் 4,000 பேர் கலந்து கொண்டனர். மேலும் இதில் கலந்து கொள்பவர்கள், மாஸ்க் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே அனைவரும் கலந்து கொண்டனர்.
கொரோனாவுக்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த விருது விழா நடத்தப்பட்டது. மேலும் இதில் கலந்து கொண்ட 4,000 பேரில் 2,500 பேர் முன்களப் பணியாளர்கள் மற்றும் 1,500 பேர் கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்களாவர்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக 4000 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று இல்லை என்று வந்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். மேலும் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவ்விருது விழாவில், பெண்களே உயரிய விருதுகளை வென்று ஆதிக்கம் செலுத்தினர். டுயா லிபா, லிட்டில் மிக்ஸ், டெய்லர் ஷிப்ட் ஆகியோர் உயரிய விருதுகளை வென்றனர்.
பிரபாஸை வைத்து ‘சலார்’ எனும் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல், அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தை இயக்க உள்ளார்.
கே.ஜி.எப் எனும் மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். அடுத்ததாக கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கி முடித்துள்ள இவர், தற்போது பிரபாஸை வைத்து ‘சலார்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சலார் படத்தை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்க உள்ள புதிய படத்தில், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டியில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி, அடுத்ததாக இந்தி படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் தியா, மாரி 2 போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டு தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரேயா நடிப்பில் வெளியான ‘சத்ரபதி’ என்ற படத்தை தற்போது இந்தியில் ரீ-மேக் செய்ய உள்ளனர். இதில் நாயகனாக தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்க, வி.வி.விநாயக் இயக்க உள்ளார்.
இந்தப் படத்தில் சாய் பல்லவியை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இதில் நடிக்க சாய் பல்லவி ஓகே சொல்லிவிட்டால், அவர் தமிழ், தெலுங்கு, மலையாளத்தை தொடர்ந்து இந்தியிலும் கால்பதித்து விடுவார்.






