என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் பூர்ணா, அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.
    நடிகை பூர்ணா 2004-ல் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் திரிஷ்யம்-2 ரீமேக்கில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

    பாலகிருஷ்ணா

    இவ்வாறு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் பூர்ணா, அடுத்ததாக அகந்தா எனும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு (வயது 60) ஜோடியாக நடிக்க உள்ளாராம். படத்தில் இவருக்கு ஐபிஎஸ் அதிகாரி வேடமாம். அழுத்தமான கதாபாத்திரம் என்பதால் இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம். மேலும் இப்படம் தனக்கு ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் படமாக அமையும் என்று நம்புகிறாராம் பூர்ணா.
    டாக்டர் படத்தை ஓ.டி.டி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்க சம்மதித்தும், அதில் வெளியிட முடியாமல் படக்குழு தவித்து வருகிதாம்.
    சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் கொரோனாவால் திரைக்கு வராமல் பல மாதங்களாக முடங்கி உள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் 26-ந்தேதி படம் வெளியாகும் என்று அறிவித்து தேர்தலால் தள்ளி வைத்தனர். பின்னர் ரம்ஜான் பண்டிகையில் வெளியிட முயன்று ஊரடங்கினால் தடைபட்டுள்ளது.

    இதையடுத்து டாக்டர் படத்தை ஓ.டி.டி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்க சம்மதித்துள்ளதாகவும், சாட்டிலைட் உரிமையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

    சிவகார்த்திகேயன்

    ஆனால் டாக்டர் படத்தின் சாட்டிலைட் உரிமை ஏற்கனவே விற்கப்பட்டு விட்டதால் அதை திரும்ப பெறுவதில் சிக்கல் உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் படத்தை ஓ.டி.டி.யிலும் வெளியிட முடியாமல் படக்குழுவினர் தவிப்பில் உள்ளனர். மேலும் ஓடிடி வெளியீட்டிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    கோல்டன் குளோப் விருது அமைப்புக்கு எதிராக நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரைப்பட துறையினர் கண்டனங்கள் எழுப்பி வருகிறார்கள்.
    திரைப்பட துறையில் சர்வதேச அளவில் ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக கருதப்படுவது கோல்டன் குளோப் விருதுகள். சிறந்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறந்த திரைப்படங்களுக்கு வருடம்தோறும் ஹாலிவுட் பாரின் பிரெஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு மூலம் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த அமைப்பில் 90 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கடந்த 19 வருடங்களாக இந்த அமைப்பில் கருப்பினத்தவர் யாரும் உறுப்பினர்களாக இல்லை என்றும் வெள்ளை நிறத்தவர்கள் மட்டுமே தொடர்ந்து உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    கோல்டன் குளோப் விருது

    இதையடுத்து கோல்டன் குளோப் விருது அமைப்புக்கு எதிராக நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரைப்பட துறையினர் கண்டனங்கள் எழுப்பி வருகிறார்கள். இந்த சர்ச்சையை தொடர்ந்து பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் 1989, 1996, 1999 ஆகிய வருடங்களில் தனக்கு வழங்கப்பட்ட 3 கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்ப்புகளை தொடர்ந்து கோல்டன் குளோப் விருது அமைப்பில் கருப்பினத்தவர்களையும் உறுப்பினர்களாக சேர்க்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
    "திரை உலகிற்கு வந்தபோது நான் வெறும் களிமண். என்னை நடிகை ஆக்கியவர் பாலசந்தர் என்று சரிதா கூறினார்.
    "திரை உலகிற்கு வந்தபோது நான் வெறும் களிமண். என்னை நடிகை ஆக்கியவர் பாலசந்தர் என்று சரிதா கூறினார்.

    பாலசந்தர் இயக்கிய 15 படங்களில் நடித்தவர் சரிதா. மாபெரும் வெற்றி பெற்ற "மரோசரித்ரா'' படத்தின் கதாநாயகி.

    அவர் பாலசந்தர் பற்றி கூறியிருப்பதாவது:-

    "நான் ஒரு "அ.கெ.மு'' என்ன, புரியவில்லையா? அதுதான் "அறிவு கெட்ட முண்டம்.'' பாலசந்தர் சார் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்! அப்படி அவர் கூப்பிடுவதற்கு நான் ரொம்பவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

    திரை உலகிற்கு வருவதற்கு முன் நான் வெறும் களிமண். இதை சொல்வதற்கு எனக்கு கொஞ்சம் கூட தயக்கமோ, வெட்கமோ கிடையாது.

    என்னை பக்குவமாக "மோல்ட்'' செய்து, நல்ல நடிகை என்று பெயர் வாங்கித் தந்தவர் பாலசந்தர். நடிப்பு என்றால் என்ன, அதன் எல்லைகள் என்ன, கனபரிமாணங்கள் என்ன, இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு பாலசந்தர் பல்கலைக்கழகத்தை விட உயர்ந்த இடம் வேறு என்ன இருக்கிறது?

    பாலசந்தர் படத்தில் நடிக்கிற எந்த ஆர்டிஸ்டுமே அவர் செய்து காட்டுகிற நடிப்பிலே, பத்து சதவீதம் வெளிப்படுத்தினால் போதும், சிறந்த நடிகராக வரமுடியும்.

    தமிழில் என்னுடைய முதல் படமான தப்புத்தாளங்களில் நடிக்கும்போது, எனக்கு என்ன தெரியும் என்று நினைக்கிறீர்கள்? வெறும் ஜீரோதான் நான்!

    நான் ஓரளவு நடிக்கக் கற்றுக்கொண்ட பிறகு பாலசந்தர் சார் என்னிடம் "உன் திறமைக்கு சவாலாக இருக்கக்கூடிய வித்தியாசமான ரோல்களாகப் பார்த்து ஒத்துக்கொள். ஒரு சீனில் அழுகிற மாதிரி, இன்னொரு சீனில் இருக்கக் கூடாது. வித்தியாசம் இருக்க வேண்டும். எந்த ஒரு நடிகையின் நடிப்பின் சாயலும் உனக்கு வந்து விடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்'' என்றார்.

    இப்போது கூட எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. "நூல்வேலி'' தெலுங்குப் படத்திலே ஸ்ரீதேவி நடிச்சி இருந்தாங்க. அதை நான் ஒருதரம் பார்த்தேன். தமிழில் நான் நடிக்கிறபோது, தெலுங்கில் ஸ்ரீதேவி உதட்டைக் கடித்த மாதிரி செய்தேன்.

    பாலசந்தர் அதை சட்டென்று கண்டுபிடித்துவிட்டார். "உன்னோட பாணியில் புதுவிதமா அதைச்செய். ஸ்ரீதேவி மாதிரி செய்ய வேண்டுமென்றால், தமிழிலும் ஸ்ரீதேவியையே இந்த வேடத்திற்கு போட்டிருப்பேனே!'' என்றார்.

    சாதாரணமாக செட்டுக்கு போய்விட்டால் அந்த கேரக்டர் பற்றியே நினைத்துக்கொண்டு இருப்பேன். மனதை வேறு எங்கேயும் அலைபாய விடமாட்டேன். அதுவும் பாலசந்தர் சார் படம் என்றால், இன்னும் இறுக்கமாக இருப்பேன்.

    டைரக்டர் என்னிடம் ஒரு காட்சியை சொல்லி விட்டு, "எப்படி செய்யலாம் என்று யோசித்து வை'' என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் டயம் கொடுப்பார்.

    `இப்படி செய்யலாமா, அப்படி செய்யலாமா' என்று மனதுக்குள் நூறு முறை ஒத்திகை பார்த்துக் கொள்வேன்.

    "என்ன, இந்த சீனை எப்படி செய்யப்போறே?'' என்று அவர் என்னைக் கேட்கும்போது, நாலைந்து விதமாய் செய்து காட்டுவேன். பளிச்சென்று அவருக்கு ஒருவிதம் பிடித்து விடும். "அப்படியே செய்'' என்று சொல்லி, சில மாற்றங்களை மட்டும் செய்து காட்டுவார். அதை அப்படியே நடித்துக்காட்டினால் போதும். காட்சி பிரமாதமாக அமைந்துவிடும்.''

    இவ்வாறு சரிதா கூறியுள்ளார்.

    பாலசந்தர் டைரக்ஷனில், சிவகுமார், சரிதாவும் இணைந்து நடித்த படம் "அக்னிசாட்சி.'' பாலசந்தரின் லட்சிய படங்களில் ஒன்று.

    அந்தப்படம் தயாராகும்போது நடந்த நிகழ்ச்சிகள் பற்றி சிவகுமார் எழுதியிருப்பதாவது:-

    "புதுக்கவிதையில் நாட்டம் உள்ள, சிறு வயதில் மனதில் காயம் ஏற்பட்ட கண்ணம்மா என்பவள்தான் "அக்னி சாட்சி''யின் கதாநாயகி. அவளை நேசிக்கும் அற்புத மனிதன் அரவிந்தன் (நான்).

    `என் தலைவா! உன் பெயரை, ஒரு பேப்பரில் எழுதித் தடவிப்பார்! அதில் ஈரப்பசை இருக்கும்...! ஏனெனில், உன் திருநாமம், என் உதட்டு எச்சில்களால், ஒரு நாளைக்கு ஆயிரம் முறைகளுக்கு மேல் குளிப்பாட்டப்பட்டதல்லவோ...!' என்று அரவிந்தன் மீது, தான் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவாள்.

    கண்ணம்மா கருத்தரிப்பாள். வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கு ஒரு கவிதை எழுதுவாள்!

    "அன்புக்குழந்தையே! அம்மா எழுதுகிறேன்... தாய்ப்பால் வருவதற்கு முன்பு, தபால் வருகிறதே என்று பார்க்கிறாயா...!'' என்று துவங்கும் பாடலைப் படமாக்கும்போது, சரிதா, அளவு கடந்த களைப்பு காரணமாக கே.பி. எதிர்பார்த்தபடி செய்யவில்லை.

    "இந்த சீன் படத்தில் வரவே வராதுன்னு நெனைச்சு இப்படி நடிக்கிறியா?'' என்று சீறினார். அந்தக் கோபத்தின் உக்கிரமë தாங்காமல் சரிதா மயக்கமாகி விட்டார். அப்படியும் அவர் விடவில்லை. தண்ணீர் தெளித்து எழுப்பி, நடிக்க வைத்தார்.

    படத்தின் கிளைமாக்ஸ்... சரிதா பிரசவத்தில் இறந்து போவது கதை. "ஒரு `பிரேம்' கூட சரிதா பிரசவ வேதனைப்படுவதைக் காட்டமாட்டேன்...! உன் மூலம் ஆஸ்பத்திரியில் அவள் முடிவைச் சொல்லப்போகிறேன்'' என்று என்னிடம் சொல்லி, பிரமாதமாக அந்தக் காட்சியைப் படமாக்கினார்.

    பின்னணி இசை (ரீ-ரிக்கார்டிங்) சேர்க்காமல் படத்தை மேனா தியேட்டரில் கே.பி. அவர்களும் நானும் சரிதாவும் பார்த்தோம்.

    படத்தின் உச்சகட்டக் காட்சியைப் பார்த்து நான் கேவிக்கேவி அழுதேன். சரிதா கிட்டத்தட்ட மூர்ச்சையடைந்து விட்டார். அவ்வளவு அழுத்தம். கே.பி.தான் எங்களைத் தேற்றினார்.

    அப்படி இழைத்து இழைத்து அவர் உருவாக்கிய படம், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. பல மாதங்கள் டைரக்டர் படுத்து விட்டார்.

    மல்யுத்த மேடைதானே திரையுலகம்...! மீண்டும் சிலிர்த்து எழுந்தார்! `சிந்து பைரவி' படம் உருவாக்கினார்.''

    இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.
    அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற போது ரஜினியுடன் செல்பி எடுத்துக் கொண்ட பிரபல நடிகரின் மகள் புகைப்படம் வைரலாகி வருகிறது.
    ரஜினி நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் உருவாகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நேற்றுடன் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளை நிறைவு செய்த நடிகர் ரஜினி இன்று சென்னை திரும்பினார்.

    ரஜினி - லட்சுமி மஞ்சு

    இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற போது ரஜினியுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை லட்சுமி மஞ்சு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    90 களில் சூப்பர் ஹீரோவாக வலம் வந்த முகேஷ் கண்ணா, கொரோனாவால் இறந்துவிட்டதாக வந்த வதந்தியை தொடர்ந்து, அவரே விளக்கம் அளித்துள்ளார்.
    90 களில் சூப்பர் ஹீரோவாக இருந்தவர் சக்திமான். இந்த தொடரை தயாரித்து நடித்து வந்தவர், பிரபல நடிகர் முகேஷ் கண்ணா. 1997 முதல் 2005 வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இந்த தொடர் ஒளிபரப்பானது. 

    இந்நிலையில் இந்தியாவில் பல பிரபலங்களை பாரபச்சம் இல்லாமல் தாக்கி, சிலரது உயிரை பலி வாங்கி வரும், கொரோனா தொற்றுக்கு, நடிகர் முகேஷ் கண்ணா ஆளாகி, இறந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் யாரோ கொளுத்தி போட அந்த வதந்தி பாலிவுட், திரையுலகினர் மத்தியில் பரபரப்பானது.

    சக்திமான் நடிகர்

    இந்த வதந்தி குறித்து அறிந்த முகேஷ் கண்ணா, உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். அதில், 'தான் நல்ல உடல்நலத்தோடு ஆரோக்கியமாக இருப்பதாகவும், இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டு கொண்டார். மேலும் இதுபோன்ற வதந்தி பரப்புபவர்களை பிடித்து அடிக்க வேண்டும் என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    கொரோனா வருமா என கவனக்குறைவாக இருந்த எனக்கே இப்போது கொரோனா தாக்கியுள்ளது என்று நடிகர் சென்றாயன் கூறியுள்ளார்.
    மூடர் கூடம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சென்றாயன். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட சென்றாயன் தமிழக மக்களிடையே அதிகமாக பிரபலமானார். தற்போது சென்றாயனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “வணக்கம் மக்களே. நான் நடிக்கல, உண்மையாவே ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன். வாழ்க்கையில ஜெயிக்கணும், சினிமாவுல ஜெயிக்கணும் என எப்பவுமே வாழ்க்கையை பாசிடிவாகவே பார்ப்பவன் நான். ஆனா எனக்கே கொரோனா பாசிடிவ்னு வந்துடுச்சு.. ஆரம்பத்துல கொரோனா வருமா என கவனக்குறைவாக இருந்த எனக்கே இப்போது கொரோனா தாக்கியுள்ளது. என் வீட்டில் நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். மனைவி, குழந்தைகள் வேறு அறையில் உள்ளனர்.

    சென்ராயன்

    மனைவி மட்டும் அவ்வப்போது உணவு கொடுக்க வருவார். அதனால் கொரோனா ரொம்ப டேஞ்சரஸ் ஃப்ளோ.. மக்களே கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார். 
    சந்தானம் படங்களில் அதிகமாக தோன்றும் பிரபல நடிகர் 'லொள்ளு சபா' மாறன், தன்னை பற்றி வெளியான செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
    கில்லி, தலைநகரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் 'செங்கல்பட்டு' மாறன் இன்று காலமானார். ஆனால் இந்த தகவலுடன் 'லொள்ளு சபா' மாறனின் புகைப்படம் இணைந்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

    இதுபற்றி, நடிகர் சந்தானம் படங்களில் அதிகமாக தோன்றும் பிரபல நடிகர் 'லொள்ளு சபா' மாறனிடம் தொடர்பு கொண்டதற்கு, “அட அது நான் இல்லப்பா... அதுவேற மாறன்.. நான் ரொம்ப நல்லா இருக்கேன்.

    மாறன்

    சில ஊடகங்களில் என் புகைப்படத்தை போட்டு அந்த செய்தியை வெளியிட்டன. பின்னர் அதே ஊடகங்களில் இருக்கும் நண்பர்கள் சிலர் என்னை தொடர்பு கொண்டு தெளிந்த பின், மீண்டும் அவற்றை சரி செய்து விட்டனர். நேற்றைய தினம் கூட நகைச்சுவை நடிகர் அண்ணன் நெல்லை சிவா மரணமடைந்தார். தினமும் நிகழும் இப்படியான மரண சம்பவங்கள் மிகவும் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.” என்றார்.
    தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் சிகிச்சைக்காக சிவகுமார் குடும்பத்தினர் நிவாரண நிதி வழங்கி இருக்கிறார்கள்.
    தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

    கார்த்தி சூர்யா

    இந்நிலையில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கி இருக்கிறார்கள். மேலும், தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் முதல் அமைச்சர் சந்திப்பிற்கு பின் பேட்டி அளித்துள்ளார்.
    கொரோனா பாதிப்பு காரணமாக காலமான இயக்குனர் கே.வி.ஆனந்தின் ‘கோ’ படத்தில் சிம்பு நடித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    கொரோனா பாதிப்பு காரணமாக பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் சமீபத்தில் காலமானார். இவர் இயக்கிய திரைப்படங்களில் ஒன்று ’கோ’. ஜீவா, கார்த்திகா நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    இந்த திரைப்படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒருசில காட்சிகளும் படமாக்கப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் சிம்பு அந்த படத்தில் விலகியதை அடுத்து ஜீவா இந்த படத்தில் இணைந்தார்.

    சிம்பு
     
    இந்த நிலையில் சமீபத்தில் கேவி ஆனந்துக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்ட சிம்பு, ‘கோ’ படத்தை மிஸ் செய்தது தனக்கு வருத்தமானது என்றும் ஆனால் கண்டிப்பாக விரைவில் அவருடன் பணிபுரிந்த திட்டமிட்டிருந்தேன் என்றும் ஆனால் அவர் மறைந்துவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.

    சிம்பு

    இந்த நிலையில் ‘கோ’ படத்தில் சிம்பு பணியாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
    கொரோனா 2வது அலை காரணமாக உணவின்றி தவித்து வரும் சாலையோர மக்களுக்கு சூர்யா ரசிகர்கள் உதவி செய்து வருகிறார்கள்.
    கொரோனா 2வது அலையால் இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர் சூர்யா ரசிகர்கள் உதவி வருகின்றனர்.

    சூர்யா ரசிகர்கள்

    கடந்த ஆண்டு ஊரடங்கில் 144 தடை உத்தரவு போடப் பட்டதிலிருந்து தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் 145 நாட்கள் சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவுகளை வழங்கினார்கள். தற்போது மீண்டும் ஊரடங்கு போடப்பட்டு இருப்பதால் சாலையோரம் இருக்கும் மக்களுக்கு உணவு வழங்க களத்தில் இறங்கியிருக்கிறார்கள். தினமும் அவர்களுக்கு ஊரடங்கு முடியும் வரை உணவுகளை வழங்க முடிவு செய்திருக்கிறார்கள்.
    முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அனுஷ்கா திருமணம் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டு இருக்கிறது.

    சமீபத்தில் துபாய் தொழில் அதிபர் ஒருவருடன் அனுஷ்காவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளதாகவும், அந்த தொழில் அதிபர் அனுஷ்காவை விட வயதில் இளையவர் என்றும் செய்திகள் வெளியானது.

    அனுஷ்கா

    இந்நிலையில் அனுஷ்காவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அனுஷ்கா மிகவும் குண்டான தோற்றத்தில் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டாக இருந்த அனுஷ்கா, உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது மீண்டும் குண்டானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    ×