என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கும் கமல், ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பணிகள் காரணமாக புதிய படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்து இருந்தார். தற்போது மீண்டும் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபடத் தயாராகி உள்ளார். அவர் கைவசம் இந்தியன் 2, விக்ரம் ஆகிய 2 படங்கள் உள்ளன. இந்தியன் 2 படப்பிடிப்பு பல மாதங்களாக முடங்கி உள்ளது.
இதனால் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு படத்தையும், இந்தியில் அந்நியன் பட ரீமேக்கையும் இயக்க போகிறார். இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்க தடை கேட்டு லைகா நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது.
இந்நிலையில், கமல்ஹாசன் இந்த பிரச்சனையில் தலையிட்டு ஷங்கரையும், தயாரிப்பாளரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் படத்தின் கதையில் சிறிய மாற்றம் செய்யும்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கமல் அறிவுறுத்தி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. அந்தப் பணியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விக்ரம் படத்திலும் கமல் நடிக்க இருக்கிறார். இரு படங்களிலும் மாறி மாறி நடிக்க கமல் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
15 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு பரிசோதித்ததில் தனக்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததாக நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. திரைப்பிரபலங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “15 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு பரிசோதித்ததில் எனக்கு நெகட்டிவ் என வந்தது. எனது ரசிகர்கள், நலம் விரும்பிகள் அனைவரது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. இந்த ஊரடங்கு கொரோனா பரவாமல் தடுக்க உதவி செய்யும் என எதிர்பார்க்கிறேன். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் 15 நாள் தனிமைப்படுத்தலுக்கு பின் குழந்தைகளை சந்தித்தபோது அவர்கள் மீது, அன்பையும், முத்தங்களையும் பரிமாறிக்கொண்டதை வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.
Meeting family after testing negative and 15 days of quarantine. Missed the kids soo much 🖤 pic.twitter.com/ubrBGI2mER
— Allu Arjun (@alluarjun) May 12, 2021
நடிகர் மாறன், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கில்லி படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் மாறன். இதையடுத்து டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், கொரோனாவால் மரணமடைந்தது திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித், நடிகர் மாறன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், “கடக்க முடியாத துயரம். எப்போதும் கட்டுக்கடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தைக் கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள் ணா!! என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை. நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மாறன், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘மாஞ்சா கண்ணன்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டதை அடுத்து அவர் சென்னை திரும்பி உள்ளார்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. கொரோனா அச்சத்திற்கு நடுவிலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.
தற்போது நடிகர் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னை திரும்பினார். விரைவில் அவர் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

டப்பிங் பேசி முடித்த பின் வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ‘அண்ணாத்த’ படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தை ரம்ஜான் பண்டியன்று வெளியிட உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், டாக்டர் படம் திட்டமிட்டபடி ரிலீஸாக முடியாத சூழல் உருவாகி உள்ளது.
இதையடுத்து இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் உலா வந்தன. இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள், டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிடுமாறு படக்குழுவினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தினமும் டாக்டர் பட அப்டேட் கேட்டு பலரும் எங்களைத் தொடர்பு கொள்கிறீர்கள். முழு படமும் முடித்து கையில் ரெடியாக உள்ள நிலையில், கொரோனா காரணமாக அதை வெளியிட முடியாமல், பல பொருளாதார பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ளோம். படம் நல்லபடி ரிலீஸ் ஆக எனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன்.
மறுபக்கம், கொரோனா இரண்டாவது அலையில் சுற்றங்களையும், நண்பர்களையும் இழந்து கொண்டிருக்கிறேன். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா படம் குறித்த முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் ரவிஷங்கர் வெளியிட்டுள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புஷ்பா படம் குறித்த முக்கிய அப்டேட்டை, இப்படத்தின் தயாரிப்பாளர் ரவிஷங்கர் வெளியிட்டுள்ளார். அதன்படி புஷ்பா படம் பாகுபலி, கேஜிஎப் பட பாணியில் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.250 கோடி என தெரிவித்துள்ள அவர், இன்னும் 45 நாட்கள் படப்பிடிப்பு எஞ்சியுள்ளதாக கூறியுள்ளார். கொரோனா பரவல் குறைந்த பின் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் அருள்நிதியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ளார். அரசியலில் பிசியாக இருந்தாலும், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி. இவர் கைவசம் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக், கண்ணை நம்பாதே, ஏஞ்சல் போன்ற படங்கள் உள்ளன.

இந்நிலையில், இவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி உதயநிதி அடுத்ததாக நடிக்கும் படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர் அருள்நிதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டணி உறுதியானால் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையும். உதயநிதியும், அருள்நிதியும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கில்லி, டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் மாறன் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் வசித்து வந்தவர் திரைப்பட துணை நடிகர் மாறன். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நடிகர் மாறன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 48. 2004-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர், இதையடுத்து டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். மேலும் கானா பாடல்களையும், மேடை கச்சேரிகளிலும் பாடி வந்துள்ளார்.

சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் மரணம் அடைந்த நிலையில், தற்போது நடிகர் மாறனும் மரணமடைந்திருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா காலகட்டத்தில் நடிகர் நடிகைகள் உதவ மனம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அமிதாப் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஏற்கனவே கொரோனா தொற்றில் சிக்கி சிகிச்சை பெற்று மீண்டார். சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிர் இழந்த சம்பவமும், மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக வெளியாகும் தகவல்களும் அமிதாப்பச்சனை கவலையடைய வைத்துள்ளது.
இதையடுத்து டெல்லியில் உள்ள கொரோனா சிகிச்சை மருத்துவ மையத்துக்கு அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி உதவி வழங்கி உள்ளார். 300 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவ மையத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வழங்கி இருக்கிறார்.

கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு நடிகர் நடிகைகள் உதவ மனம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று விமர்சனங்கள் வருகின்றன. இதற்கு பதில் அளித்து அமிதாப்பச்சன் கூறும்போது “செய்த உதவிகளை வெளியே சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. கொரோனா ஆரம்பித்ததில் இருந்து சிகிச்சை பெறுவோருக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏராளமான உதவிகளை செய்து இருக்கிறேன்'' என்றார்.
பழம்பெரும் மலையாள நடிகரும், தேசிய விருதுபெற்ற கதாசிரியருமான மாதம்பு குன்சுகுட்டன் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது பழம்பெரும் மலையாள நடிகரும், கதாசிரியருமான மாதம்பு குன்சுகுட்டன் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இவருக்கு வயது 80.

சுமார் 40 வருடங்களுக்கு மேலாக மலையாள திரையுலகில் நடிகராகவும், கதாசிரியராகவும் வலம்வந்த இவர், கடந்த 2000-ல் வெளியான கருணம் படத்துக்கு சிறந்த திரைக்கதை எழுதியதற்காக தேசிய விருது பெற்றார். சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் மரணம் அடைந்தனர். திரையுலகினர் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அஞ்சலிதேவியின் மகளாக, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஜெயசித்ரா, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, 200 படங்களுக்கு மேல் நடித்தார்.
அஞ்சலிதேவியின் மகளாக, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஜெயசித்ரா, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, 200 படங்களுக்கு மேல் நடித்தார்.
ஜெயசித்ராவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் காக்கிநாடா. ஆனால் ஜெயசித்ரா பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். தந்தை மகேந்திரா. இவர் கால்நடை டாக்டராகவும், வக்கீலாகவும் இருந்தார். தாயார் ஜெயஸ்ரீ. ஜெயசித்ராவுக்கு பெற்றோர் வைத்த பெயர் லட்சுமி கிருஷ்ணவேணி ரோகினி பார்வதிதேவி என்பதாகும்!
ஜெயசித்ராவின் தாயாரும் நடிகைதான். அந்த காலக்கட்டத்தில் ஜெயஸ்ரீ பிரபல நடிகையாக விளங்கினார். அவர் 1954-ம் ஆண்டு "ரோஜலு மாராயி'' (தெலுங்கு "காலம் மாறிப்போச்சு'') படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அன்னதாத்தா, டைகர்ராமுலு உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்தார்.
1955-ம் ஆண்டு "மகாவீரபீமன்'' என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் திரவுபதியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின்னர் "தெய்வபலம்'', "சிவகாமி'' உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். மொத்தம் 40 படங்கள் வரை நடித்து இருக்கிறார்.
திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகு ஜெயஸ்ரீ திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். பின்னர் தனது குழந்தையான ஜெயசித்ராவை நன்றாக வளர்க்கவேண்டும், நிறையப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்.
இந்த நிலையில் 5 வயது குழந்தையாக இருந்தபோது "பக்தபோதனா'' என்ற தெலுங்கு படத்தில் நடிகை அஞ்சலி தேவிக்கு மகளாக ஜெயசித்ரா நடித்தார்.
ஜெயசித்ரா படிக்கும் போதே நாட்டியமும் கற்று வந்தார். பரதநாட்டியத்தை முழுமையாக கற்றுக்கொண்டபின், ஜெயசித்ராவின் 11-வது வயதில் நாட்டிய அரங்கேற்றம் சென்னை வாணிமகாலில் நடந்தது. நடன அரங்கேற்றத்துக்கு சிவாஜிகணேசன் தலைமை தாங்கினார்.
முழுக்க முழுக்க படிப்பிலேயே ஆர்வம் காட்டிவந்த ஜெயசித்ராவிற்கு நடிகையாகும் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் அவரோ சினிமாவில் நடிக்க சிறிதும் ஆர்வம் இல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில் 7-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த ஜெயசித்ராவை விட்டலாச்சாரியா தனது படத்தில் நடிக்கவைக்க நினைத்தார். ஒரு தெலுங்கு படத்திற்கு நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க வைக்க "கேமரா டெஸ்ட்'' எடுத்தனர். ஆனால், உருவத்தில் குமரிப்பெண்ணாக இருந்தாலும், குரல் இன்னும் குழந்தைக் குரலாக இருக்கிறது என்று கூறி, "நீ இப்போது நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க முடியாது. பிறகு வாய்ப்புத் தருகிறேன்'' என்று கூறிவிட்டார், விட்டலாச்சாரியார்.
திரைத்துறைக்கு வந்தது பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-
"நான் சென்னை வித்யோதயா பள்ளியில் 11-ம் வகுப்பு வரை படித்து உள்ளேன். எனது தாயார் என்னை படிக்கவைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். நான் வழுவூர்ராமையா பிள்ளைமகன் சாம்ராஜிடம் பரதநாட்டியமும், சின்னசத்தியம் மாஸ்டர், எம்.எஸ்.சைவா ஆகியோரிடம் குச்சுப்புடி நடனமும் கற்றேன்.
இந்தநிலையில்தான் விட்டலாச்சாரியாவின் பீதலபாட்லு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு அப்போது நடிக்க ஆர்வம் இல்லை. அந்த சமயத்தில் 7-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். படத்தில் நடிப்பதற்காக கேமரா டெஸ்ட் எடுத்தனர். நான் பேசும்போது தொண்டை கீச், கீச் என்றதால், "இன்னும் குழந்தைத்தனம் போகவில்லை, பிறகு வாய்ப்பு தருகிறேன்'' என்றார், விட்டலாச்சாரியார்.
அதன்பின்னர் டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது அழைத்துச்சென்று, இரண்டு வசனங்களை பேசச்சொன்னார். நானும் பேசினேன். நான் பேசியதை கேட்டு சந்தோஷப்பட்ட டைரக்டர், "தமிழ்நாட்டிற்கு ஒரு சிறந்த கதாநாயகி கிடைத்துவிட்டார்'' என்று படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் அழைத்து மகிழ்ச்சி பொங்க கூறினார்.''
இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.
குறத்தி மகனில் நடிக்க ஒப்பந்தம் செய்தபோதுதான், "ஜெயசித்ரா'' என்ற பெயரை கோபாலகிருஷ்ணன் சூட்டினார்.
இந்தப்படத்தில், குறவர் இனத்தைச் சேர்ந்த இளைஞனை பணக்காரரின் மகளான ஜெயசித்ரா விரும்புவார். இந்தக் காதலை தந்தை ஏற்காததால், ஜெயசித்ரா குறத்தி வேடம் போட்டுக்கொண்டு காதலனுடன் சென்றுவிடுவார்.
இப்படத்தில் ஜெயசித்ரா துருதுருவென்று நடித்து, ரசிகர்களிடம் `சபாஷ்' பெற்றார்.

எனது தந்தை கங்கை அமரன் அவர்களும், எனது தம்பி ப்ரேம்ஜியும், நானும் என் குடும்பமும் எங்கள் குடும்பத்தின் குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம் என்று வெங்கட் பிரபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் வெங்கட் பிரபு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எனது தந்தை திரு.கங்கை அமரன் அவர்களும், எனது தம்பி ப்ரேம்ஜியும், நானும் என் குடும்பமும் எங்கள் குடும்பத்தின் குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம். முன்னொருபோதும் பார்த்திராத இப்படிப்பட்ட பேரிடர் காலத்தில் ஒரு பேரிழப்பில் திக்கித் திணறிக்கொண்டு இருக்கிறோம்.
இந்த நிலையில் எங்களை அரவணைத்துத் தேற்றித் தோள்கொடுத்து நிற்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக என் ஆத்மார்த்தமான நன்றிகளையும் சிரம்தாழ்ந்த வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாகவும் எங்கள்மீது நீங்கள் அனைவரும் பொழிந்து வரும் பிரதிபலனில்லா அன்பில் நெகிழ்ந்துபோய் இருக்கிறோம்.

காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் எங்கள் குடும்ப நண்பர் டாக்டர் திரு.தீபக் சுப்ரமணியம் அனைவரது அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள். உடன் பணிபுரியும் சக தோழர்கள், நண்பர்கள், சக திரைப்பட, ஊடக சகோதர சகோதரியர், ரசிகர்கள் அனைவரது அஞ்சலிக்கும் பிரார்த்தனைகளுக்கும் நாங்கள் கடமைப்பட்டு இருக்கிறோம்.
தம் வாழ்வின் மிக முக்கிய தருணத்தின் அலுவல்களுக்கிடையிலும் என் அன்னையின் நிறைவு நாட்களிலும் ஆத்மசாந்திக்கான வழிமுறைகளிலும் எங்களோடு இமயம் போல் நின்று வலுவூட்டித் தேவைப்பட்ட அத்தனை உதவிகளையும் தக்க நேரத்தில் செய்து தந்த என் நண்பர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.