என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரஜினியுடன் நடித்த நடிகை ஒருவர் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை ஒன்றை கொரோனா நோயாளிகளுக்காக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
    ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’காலா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை ஹூமா குரேஷி.

    இந்தியாவில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து டெல்லியில் 100 படுக்கை வசதியுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையில் நிறுவும் முயற்சியில் ஹூமா குரேஷி ஏற்படுத்தி வருகிறார்.

    இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்பட அனைத்து வசதியுடன் கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் மருத்துவ உதவிகள் மற்றும் மருத்துவரின் சிகிச்சை கிடைக்கும் வகையிலும் அவர் தனது உதவியை செய்து வருகிறார்.

    ஹூமா குரேஷி,

    ஒவ்வொரு கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமாகும் வரை மருத்துவ உதவிகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த முயற்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் தான் நடனமாடும்போது கர்ப்பமாக இருந்ததாக பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
     'உன்னை தேடி' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதன் பிறகு, 'ஆனந்த பூங்காற்றே', 'ரோஜா வனம்', 'வெற்றி கொடி கட்டு', 'பேரழகன்', 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' மற்றும் 'சந்திரமுகி' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

     'சித்திரம் பேசுதடி' திரைப்படத்தில் "வாழ மீனுக்கு" என்ற ஒரே ஒரு பாடலில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுமேஷ் மேனனை 2007-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    விஜய் - மாளவிகா

    இந்நிலையில் ஒரு நேர்காணலில், தனது தமிழ் சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அப்போது விஜய்யுடன் குருவி படத்தில் 'டண்டானா டர்னா' பாடலில் நடனம் ஆடிய தருணத்தைப் பகிர்ந்துக் கொண்டார். விஜய்யுடன் டான்ஸ் ஆட கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்றிருந்தேன். ஆனால் அப்போது நான் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததால், நன்றாக நடனம் ஆட முடியாமல் போனதில் வருத்தமுண்டு. அந்த பாடலில் எளிதாக உடலை அசைப்பது போன்ற ஸ்டெப் தான் இருக்கும். அது எனது கடைசிப் படமும் கூட. ஒரு வேளை கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால், மனதில் பதியும்படி, சிறந்த நடனத்தை கொடுத்திருப்பேன் என்றார் மாளவிகா.
    பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளரும் பாடகருமான ஆஜித்துக்கு, பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டவர் ஆஜித். இவர் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான கேப்ரில்லாவுடன் சேர்ந்து நடனமாடி வந்தார்.

    இந்நிலையில் கேப்ரில்லாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவருடன் நடனமாடி வந்த ஆஜித்துக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஆஜித்

    இதுகுறித்து பதிவிட்டுள்ள ஆஜித், "எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடைய உடல்நிலை சீராகவே உள்ளது. உங்களுடைய பிரார்த்தனைக்கு நன்றி. அனைவரும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வீட்டை விட்டு வெளியே சென்று வரவும். பாதுகாப்பாக இருங்கள். விரைவில் இயல்புநிலை திரும்பும் என நம்புவோம்" என்று ஆஜித் தெரிவித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரெஜினா கசண்ட்ரா, தற்போது ஆக்‌ஷன் பயிற்சியில் தீவிரம் காண்பித்து வருகிறார்.
    கண்ட நாள் முதல் படம் மூலம் அறிமுகமான ரெஜினா கசான்ட்ரா தொடர்ந்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். சமீபத்தில் வெளியான ‘சக்ரா’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் உருவாகும் புதிய படத்துக்காக ரெஜினா கசான்ட்ரா தயாராகி வருகிறார்.

    ரெஜினா

    இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் ரெஜினா நடிக்கிறார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நிவேதா தாமஸ் நடிக்கிறார். கொரியன் மொழியில் உருவான ‘மிட்நைட் ரன்னர்ஸ்’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்துக்காக இருவரும் கராத்தே உள்ளிட்ட முக்கிய ஆக்‌ஷன் பயிற்சிகளை எடுத்து வருகின்றனர். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை ஒரே நேரத்தில் தமிழிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
    சகோதரர் அபிஜித் குறித்து ஒரு உருக்கமான கருத்தை நடிகை அமலாபால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அமலா பால். பிசியான நடிகையான அமலா பால் தற்போது கொரானா காலம் என்பதால் வீட்டில் குடும்பத்துடன் பொழுதை செலவிட்டு வருகிறார். அமலா பால் அவரது சகோதரர் அபிஜித் மீது அதிகம் அன்பு கொண்டவர்.

    தனது சகோதரர் அபிஜித் குறித்து ஒரு உருக்கமான கருத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், உன்னை எனது சகோதரன் என்பதை, விட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மேலே இருக்கிறாய். எனக்கு அப்பா, அம்மா அன்பு கிடைக்காதபோது, அப்பாவும், அம்மாவாகவும் இருக்கிறாய். எனது வாழ்க்கையின் கடினமான நேரங்களில் என்னோடு இருந்து என்னை சந்தோஷப்படுத்தியிருக்கிறார். 

    அமலாபால்

    இதுவரை ஒரு முறை கூட என்னை குறை கூறியதில்லை. என்னை வழிநடத்தியது நீ, என் வீடு, குடும்பம், ஆசீர்வாதம், சிறந்த நண்பன் ஆகியவை எல்லாமே நீதான். ஜிது நீ நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உன்னை நேசிக்கிறேன் என ரொம்பவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
    எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ஜெய், அதுல்யா நடிப்பில் உருவாகி வரும் ‘எண்ணித்துணிக’ படத்தின் முன்னோட்டம்.
    ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘எண்ணித்துணிக’. இது ஒரு திகில் படம். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே கேப்மாரி படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். எஸ். தினேஷ் குமார் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

    படத்தைப் பற்றி இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் கூறியதாவது: “எண்ணி துணிக படத்தின் வில்லன் கதாபாத்திரம், சர்வதேச கடத்தல்காரன். இந்த வில்லன் வேடத்துக்காக பல நடிகர்களை தேர்வு செய்து பார்த்தோம். மிக ஸ்டைலாகவும், கலக்கலானதாகவும் அந்த கதாபாத்திரம் இருப்பதால் யாரும் பொருந்தவில்லை. வம்சி கிருஷ்ணா கச்சிதமாக பொருந்தினார்.

    ஜெய், அதுல்யா

    படத்தின் தயாரிப்பாளர் அமெரிக்காவில் இருப்பதால், வில்லன் கதாபாத்திரத்துக்கான உடைகளை அங்கேயே வாங்கி அனுப்பி வைத்தார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி நாயர் நடிக்கிறார். ‘சீதக்காதி’ பட புகழ் சுனில்ரெட்டி அரசியல்வாதியாக வருகிறார்”. என கூறினார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் சுதா கொங்கரா, அடுத்ததாக பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2016-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது.

    இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உயர்ந்துள்ளார். 

    சுதா கொங்கரா

    இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸ் உடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் சுதா கொங்கரா பிரபாஸுக்கு கதை சொன்னதாகவும், அந்த கதை பிரபாஸுக்கு பிடித்துப்போனதால் அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
    அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிகை ஷிவானியும் இணைந்துள்ளார்.
    இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘ஆர்ட்டிகிள் 15’. இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. 

    கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ், இப்படத்தை இயக்குகிறார். உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    ஷிவானி

    இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகளான ஷிவானியும் ‘ஆர்ட்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கில் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே அன்பறிவு என்ற படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. 

    ‘ஆர்ட்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து முடிந்துள்ளது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்..
    தனக்கு எதிராக லைகா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஐகோர்ட்டில் இயக்குனர் ஷங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    நடிகர் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

    அதில், பல உண்மை தகவல்களை மறைத்து லைகா நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக இயக்குனர் சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். முதலில் இந்த படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்ததாகவும், பின் அவரை சமாதானப்படுத்தி, படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன் வந்ததாகவும் கூறியுள்ளார்.

    கடந்த 2017 செப்டம்பரில் படத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டதாகவும், 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பைத் துவங்க முடிவு செய்ததாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    படத்தை தயாரிக்க ரூ.270 கோடி செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதைக் குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியதாகவும், அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பைத் துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை ஏற்படுத்தியதாகவும் லைகா மீது புகார் தெரிவித்துள்ளார் ஷங்கர்.

    ஷங்கர்

    தில்ராஜு படத்தை தயாரித்திருந்தால் இப்படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும் எனவும், அரங்குகள் அமைத்துத் தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீட்டில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானதாகவும் பதில் மனுவில் கூறியுள்ளார்.

    நடிகர் கமல்ஹாசனுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டதாலும் படப்பிடிப்பு தாமதமானதாகவும், அதற்கு தான் பொறுப்பல்ல என்றும் இயக்குனர் சங்கர் தனது பதில் மனுவில் விளக்கம் அளித்துள்ளார். இதுதவிர படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானதாகவும் அவர் கூறியுள்ளார்.

    பட தயாரிப்புப் பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு தான் பொறுப்பல்ல எனவும், வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் துவங்கத் தயாராக இருப்பதாக கூறியும், அதைக் கருத்தில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் ஷங்கர்.

    2020 ஜூன் முதல் 2021 மே வரையிலான ஓராண்டு காலத்தை வீண்டித்தது லைகா நிறுவனம் தான் எனவும், இதன் காரணமாகத் தனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் ஷங்கர். மேலும் இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களுக்கு சேர வேண்டிய ஊதியத் தொகை கிடைக்காததால், தற்போது வேறு படங்களில் பணியாற்ற சென்று விட்டதாகவும் இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

    எனவே, தனக்கு எதிராக லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த பதில் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார் ஷங்கர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
    மிகுந்த விழிப்புணர்வோடு நோய்க்கு முந்தினால் மட்டுமே நோயை வெற்றிகொள்ள முடியும் என அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
    விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘இன்று நேற்று நாளை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டது குறித்து இயக்குனர் ரவிக்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவர் பதிவிட்டுள்ளதாவது: “முன்னெச்சரிக்கையோடு இருந்தேன் இருந்தும் கொரோனா என்னை தொற்றியது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு மருந்துகளை எடுத்துக்கொண்டேன். என்னோடு அருகிலேயே இருந்த என் குழந்தை நறுமுகைக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனது மனைவி பிரியாவின் அன்பும், சலிப்பற்ற உணவு உபசரிப்பும் மீண்டுவர ரொம்பவும் உதவியது.  

    அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனே பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம். நோய் தொற்ற ஆரம்பித்த 7 நாட்கள் மிக முக்கியமான நாட்கள், அதற்குள் மருந்துகள் எடுத்துக்கெள்வது அவசியம். 

    ரவிக்குமார்

    காலதாமதம் செய்வதும் “எனக்கு வராது அதெல்லாம் ஒன்னும் இல்லை” “டெஸ்ட் பண்ணுனா கொரோனான்னு சொல்லிடுவாங்க” இப்படியாக அலட்சியமாக பரிசோதனையை தள்ளிபோடுவதும் நோய் உடலுக்குள் வீரியமடையவே உதவிசெய்யும். மிகுந்த விழிப்புணர்வோடு நோய்க்கு முந்தினால் மட்டுமே நோயை வெற்றிகொள்ள முடியும்.

    நோய் தொற்றுக்கு ஆளான பிறகு பேஸ்புக் மற்றும் செய்திகள் வாயிலாக இறந்தவர்கள் பற்றிய நியூஸ் கேட்க கேட்க மனபதற்றம் ஏற்படுகிறது. துளியும் தூக்கம் வரவில்லை. அதுவும் நம் மனநிலைமையை பாதிக்கிறது. நோயுற்ற காலத்தில் முடிந்த அளவு நியூஸ் பார்க்காமல் இருப்பது நல்லது.

    உறவுகளுக்குள்ளும், நட்புகளுக்குள்ளும் நிறைய தொற்று ஏற்பட்டுள்ளது. அன்பானவர்களுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான், சிறிய சந்தேகம் இருப்பினும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். தாமதம் செய்யாமல் உங்கள் மருத்துவரை அணுகுங்கள். மீண்டு வருவோம்” என பதிவிட்டுள்ளார்.
    நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டென்னிஸ் ஜோசப், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    கேரள திரையுலகில் முன்னணி இயக்குனர் மற்றும் திரைக்கதை வசனகர்த்தாவாக இருந்தவர் டென்னிஸ் ஜோசப். இவர் கோட்டயத்தில் உள்ள ஏற்றமானூர் பகுதியில் வசித்து வந்தார். வீட்டில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    டென்னிஸ் ஜோசப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டென்னிஸ் ஜோசப், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 

    டென்னிஸ் ஜோசப்

    டென்னிஸ் ஜோசப், மலையாள சினிமாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியராக அறியப்பட்டவர். கதை வசனத்தோடு, பல படங்களையும் இயக்கியுள்ளார். அப்பு, மனுஅங்கிள், அக்ராஜன், தொடர்கதா, அதர்வம் உள்ளிட்ட மலையாள மொழி திரைப்படங்கள் இவர் இயக்கத்தில் வெளிவந்துள்ளது.

    டென்னிஸ் ஜோசப் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான மனு அங்கிள் படம் 1989-ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது. அதே ஆண்டு சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான கேரள மாநில அரசு விருதும் அப்படத்திற்கு கிடைத்தது. மரணம் அடைந்த டென்னிஸ் ஜோசப் உடலுக்கு மலையாள திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்துள்ள மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

    யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் வருகிற மே 14-ந் தேதி ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி

    இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் காலமானதால் மாநாடு படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிடப்படாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்னொரு தேதியில் அப்பாடலை வெளியிடுவோம் என கூறியுள்ள அவர், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
    ×