search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஆடுகளம் படத்தில் திரிஷா நடித்தபோது எடுத்த புகைப்படங்கள்
    X
    ஆடுகளம் படத்தில் திரிஷா நடித்தபோது எடுத்த புகைப்படங்கள்

    ஆடுகளம் படத்தில் தனுஷுடன் நடித்த திரிஷா - வைரலாகும் புகைப்படங்கள்

    ஆடுகளம் படத்தில் திரிஷா நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ஆடுகளம். சேவல் சண்டையை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் சிறந்த இயக்குனர், நடிகர், ஒளிப்பதிவாளர் உள்பட ஆறு பிரிவுகளில் தேசிய விருது வென்றது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாப்சி நடித்திருந்தார். அவரது கதாபாத்திரத்திற்கும் பாராட்டுக்கள் கிடைத்தன.

    ஆடுகளம் படத்தில் திரிஷா நடித்தபோது எடுத்த புகைப்படம்

    ஆனால் இப்படத்தில் டாப்சி நடித்த ஐரின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானது திரிஷா தான், அவர் சில காட்சிகளில் நடித்த பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியதால், பின்னர் டாப்சியை ஒப்பந்தம் செய்தனர். இந்நிலையில், ஆடுகளம் படத்தில் திரிஷா நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 
    Next Story
    ×