என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனா அரக்கனை எதிர்கொள்ள தாராளமாக நிவாரண நிதி வழங்கலாம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர்.
    சென்னை:

    கொரோனா 2-ம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    கொரோனா அரக்கனை எதிர்கொள்ள தாராளமாக நிவாரண நிதி வழங்கலாம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர். 

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரூ.1 கோடி வழங்கி உள்ளார். 

    தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சௌர்ந்தயா நிதி வழங்கினார். 
    கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
    தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

    இதையடுத்து நடிகர் சிவக்குமார், தனது குடும்பத்தினர் சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். அதேபோல் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கி இருந்தனர். 

    அஜித்

    இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், தற்போது ரூ.25 லட்சம் ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கி உள்ளார். முதலில் அவர் 2.5 கோடி வழங்கியதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அஜித் 25 லட்சம் கொடுத்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
    கமல் சார், சினிமாவில் நீங்க ஒரு வரலாறு, அதையே தொடருங்கள் என பிரபல இயக்குனர் சமூக வலைதளம் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியை தழுவினார். கமல்ஹாசன், பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அவரது கட்சி சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியை தழுவினர். 

    தேர்தலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். மகேந்திரன், சந்தோஷ் பாபு மற்றும் பத்மபிரியா ஆகியோர் அக்கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், அரசியலை தூக்கி எறிந்துவிட்டு சினிமா பயணத்தை தொடருமாறு திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    இயக்குனர் மோகன் ஜியின் டுவிட்டர் பதிவு

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “கமல் சார். சினிமாவில் நீங்க ஒரு வரலாறு. அதையே தொடருங்கள். கொள்கை தெளிவில்லாத அரசியல் இப்படித்தான் இருக்கும். அரசியலை தூக்கி எறிந்துவிட்டு கலை பயணத்தை தொடருங்கள். சென்னையில் ஒரு மாபெரும் படப்பிடிப்பு தளம் இல்லை. இதற்காக போரடுங்கள். இதை செய்தாலே வரலாறு பேசும் உங்களை” எனக் குறிப்பிட்டுள்ளார். 
    கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
    தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

    இதையடுத்து நடிகர் சிவக்குமார், தனது குடும்பத்தினர் சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். அதேபோல் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.25 லட்சம் வழங்கினார்.

    இயக்குனர் சி.எஸ்.அமுதன்

    இந்நிலையில், நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளார். இதேபோல் ‘தமிழ் படம்’ இயக்குனர் சி.எஸ்.அமுதனும், ரூ.50 ஆயிரத்தை கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கி உள்ளார்.
    கொரோனா டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் ஆகியும், அதற்கான முடிவுகள் இன்னும் வரவில்லை என பிரபல நடிகை புகார் தெரிவித்துள்ளார்.
    கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த வாரம் நடிகை பியாவின் சகோதரர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். மருத்துவ உதவி கிடைக்காததால் அவர் உயிரிழந்ததாக நடிகை பியா தெவித்தார்.

    இதனைத் தொடர்ந்து நடிகை பியாவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஒரு வாரம் ஆகியும், அதற்கான முடிவுகள் இன்னும் வரவில்லை என நடிகை பியா தற்போது புகார் தெரிவித்துள்ளார்.

    நடிகை பியா

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “கடந்த மே 7ம் தேதி என்னுடைய மொத்த குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை முடிவுகள் வரவில்லை. அதுகுறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். கடவுளின் அருளால் என் குடும்பம் பாதுகாப்பாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

    நடிகை பியா, தமிழில் ஏகன், கோவா, கோ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற லூசிபர் படத்தின், தெலுங்கு ரீமேக்கை சிரஞ்சீவியை வைத்து இயக்க மோகன்ராஜா ஒப்பந்தமானார்.
    மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளை துவங்கிவிட்டார் பிருத்விராஜ். 

    தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாராகவுள்ள இப்படத்திற்கு கடந்த ஜனவரி மாதமே பூஜை போடப்பட்டது. இருப்பினும் இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை. 

    மோகன் ராஜா

    இப்படத்தை இயக்க பிரபல இயக்குனர் மோகன் ராஜா ஒப்பந்தமானார். அவரிடம் இப்படத்தின் கதையில் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்யச் சொல்லியுள்ளார் சிரஞ்சீவி. மோகன்ராஜா செய்த மாற்றங்கள் சிரஞ்சீவியை ஈர்க்காததால், படத்திற்கு வேறு ஒரு இயக்குனரை ஒப்பந்தம் செய்யலாமா என்று மகன் ராம்சரணுடன் ஆலோசித்து வருகிறாராம் சிரஞ்சீவி. இதனால் மோகன்ராஜா இந்தப்படத்தில் நீடிப்பாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
    பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்
    பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.

    மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன். படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மினி சகோதரிகள், முதன் முதலில் கதாபாத்திரம் ஏற்று நடித்த "ஏழைபடும்பாடு'' படத்தில், இவர்தான் பத்மினிக்கு ஜோடி.

    கடிதப் போக்குவரத்து மூலம் கோபியின் நட்பை பெற்ற வாலி, ஒருமுறை ரேடியோ நாடகத்தில் நடிக்க திருச்சிக்கு வந்த கோபியிடம், "நான் சென்னைக்கு வந்து சினிமாவில் பாட்டு எழுத முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்.

    "வாங்க, வாலி! நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம்'' என்று ஊக்கம் அளித்தார், கோபி.

    1958 டிசம்பர் முதல் வாரத்தில், வாலி சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணியில் இருந்த ஸ்ரீரங்கத்து நண்பர் செல்லப்பாவின் அறையில் தங்கினார்.

    அப்போது தியாகராய நகரில், சின்னையாப்பிள்ளை ரோட்டில் உள்ள வீட்டில் வி.கோபாலகிருஷ்ணன் வசித்து வந்தார். தன்னைத்தேடி வருவோருக்கு, முடிந்த உதவிகளை எல்லாம் செய்பவர் அவர்.

    தினமும் திருவல்லிக்கேணியில் பஸ் பிடித்து, தி.நகர் வாணி மஹாலில் இறங்கி கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் போவார், வாலி. தன்னைப் பார்க்க வரும் திரை உலகப் பிரமுகர்களிடம் வாலியை கோபி அறிமுகப்படுத்துவார்.

    அதுமட்டும் அல்ல. தன்னுடைய ஸ்கூட்டரின் பின்னால் வாலியை உட்கார வைத்துக்கொண்டு தினமும் யாராவது பட அதிபர்கள், டைரக்டர்கள், இசை அமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார். "இவர் நல்ல கவிஞர். சினிமாவுக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்தால், பிரமாதமாக எழுதுவார்'' என்று கூறி, சான்ஸ் கேட்பார்.

    வாலி, தன்னுடைய பாடல்கள் சிலவற்றை ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பார். சிலர் அந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு, புன்னகை புரிவார்கள். சிலர் படித்துப் பார்க்காமலேயே புன்னகை செய்வார்கள்.

    இந்த புன்னகைகளால் வாலிக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை.

    அந்தக் காலக்கட்டத்தில், "பாதை தெரியுது பார்'' என்ற படத்தை, குமரி பிலிம்சார் எடுத்துக்கொண்டு இருந்தனர். இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன்,, பொதுவுடமைக் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் எழுதிய "சின்னச் சின்ன மூக்குத்தியாம்'' என்ற பாடலை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.

    எம்.பி.சீனிவாசனிடம் வாலியை அறிமுகப்படுத்திய கோபாலகிருஷ்ணன், பாதை தெரியுது பார் படத்தில் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

    "கோபி! கே.சி.எஸ்.அருணாசலம், ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய மூன்று பேரும்தான் இந்தப் படத்துக்கு பாட்டு எழுதுகிறார்கள். புதிதாக வேறு பாட்டை பயன்படுத்தக்கூடிய கட்டம் எதுவும் படத்தில் இல்லை. ஆனாலும், பொதுவுடமை கருத்தையும், சமூக விழிப்புணர்வையும் எடுத்துக் காட்டக்கூடிய பாட்டு எதுவும் இருந்தால், "டைட்டில் சாங்'' ஆகப் பயன்படுத்த முயற்சி செய்கிறேன்'' என்றார், சீனிவாசன்.

    உடனே வாலி, தான் எழுதி வைத்திருந்த பாட்டை, அதற்கான மெட்டுடன் பாடிக்காட்டினார்.

    பாட்டை கேட்ட சீனிவாசன், "மிஸ்டர் வாலி! இப்போது நீங்க பாடிக்காண்பித்த பாட்டு நன்றாக இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், என்னை பெரிதாக கவரவில்லை. சாரி!'' என்று கூறிவிட்டு, உள்ளே போய்விட்டார்.

    "கவலைப்படாதீங்க, வாலி! வேறு இடத்தில் முயற்சி செய்யலாம்'' என்று ஆறுதலாகக் கூறிவிட்டு, வாலியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார், கோபி.

    (1958-ல் எம்.பி.சீனிவாசனால், நிராகரிக்கப்பட்ட பாடல், 1967-ல் எம்.ஜி.ஆர். படத்தில் இடம் பெற்று, மகத்தான வெற்றி பெற்று பட்டி தொட்டி எல்லாம் எதிரொலித்தது. அதுதான், "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்?'' என்ற பாடல். இந்தப் பாடல் இடம் பெற்ற படம் "படகோட்டி.'')

    "மெல்லிசை மன்னன்'' எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில், ஏராளமான பாடல்கள் இயற்றி இருக்கிறார், வாலி.

    ஆனால், முதன் முதலாக இவர்கள் சந்தித்துக் கொண்டபோது, வாலியின் பாடல் விஸ்வநாதனைக் கவரவில்லை.

    அதுபற்றி, வாலி எழுதியிருப்பதாவது:-

    "ஒருநாள், அதிகாலை என்னை ஒரு இசையமைப்பாளர் வீட்டுக்கு கோபி தன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார். எனக்கு அந்த இசையமைப்பாளரிடம் ஏற்கனவே அளவு கடந்த அபிமானமும், மரியாதையும் உண்டு. அவர் மூலம் எனக்கு எப்படியும் படத்துறையில் பாட்டெழுதும் ஒரு வாய்ப்பைப் பெற்று தந்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிப் போனார், கோபி.

    அந்த இசையமைப்பாளருக்கு கோபியிடம் மிகுந்த பிரியமுண்டு. கோபியை ஆரத்தழுவி அவர் வரவேற்றார். என்னை அவரிடம் கோபி அறிமுகப்படுத்திவிட்டு, என் ஊர், என் கல்வி இவை பற்றியெல்லாம் ஒரு சிறிய முன்னுரையை வழங்கிவிட்டு, என் பாட்டு நோட்டை என் கையிலிருந்து வாங்கி, அந்த இசையமைப்பாளரிடம் கொடுத்தார்.

    அவர் அதை ஆர்வத்தோடு, வாங்கி, சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, நின்று நிதானமாகப் படித்தார். பிறகு, என் பாட்டு நோட்டை என்னிடம் திருப்பித் தந்துவிட்டு, காபி வரவழைத்து எங்கள் இருவருக்கும் வழங்கினார்.

    பிறகு, கோபியை தனியாக அழைத்து அந்த இசையமைப்பாளர் சன்னமான குரலில் காதோடு காதாக ஏதோ சொன்னார்.

    "வாங்க வாலி போகலாம்...'' என்று கோபி என்னை அழைத்து வந்துவிட்டார்.

    ஸ்கூட்டரில் போகும்போது என்னைப் பற்றி அந்த இசையமைப்பாளர் என்ன சொன்னார் என்று கோபியைக் கேட்டேன். அவர் சொன்னதை கோபி அப்படியே என்னிடம் சொன்னார்:

    "கோபி, இவர் எழுதியிருக்கிற பாட்டெல்லாம் ரொம்ப சுமாரா இருக்கு. சினிமாவில் முன்னுக்கு வர்றதுக்கான வாய்ப்பே இவருக்கு இருக்கிற மாதிரி தெரியவில்லை... பாவம்! மெட்ராசில் இவர் இருந்து கஷ்டப்படறதை விட, படிச்சவரா இருக்கிறதனாலே, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஏதாவது வேலைக்குப் போகச் சொல்லுங்க...''

    அந்த இசையமைப்பாளர் சொன்னதை ஒருவரி விடாமல் கோபி என்னிடம் சொல்லிவிட்டு மவுனமாக ஸ்கூட்டரை ஓட்டினார்.

    அந்த இசையமைப்பாளர் வேறு யாருமல்ல. பிற்காலத்தில் என் முன்னேற்றத்திற்கு முழு முதற்காரணமாக விளங்கிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான், அன்று என்னை வேறு வேலை தேடிப்போவது உசிதம் என்று தன் மனதில் பட்டதை வெளிப்படையாகக் கோபியிடம் சொன்னவர்.

    நான் ஸ்ரீரங்கம் திரும்பிவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். ஓரிரு நாளில் மூட்டை முடிச்சோடு நான் ஊருக்குத் திரும்ப இருந்தபோதுதான், படத்தில் முதன் முதலாகப் பாட்டு எழுதும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

    கர்நாடகத்தைச் சேர்ந்த பட அதிபரும், நடிகருமான கெம்பராஜ், "நளதமயந்தி'', "கற்கோட்டை'', "ராஜவிக்கிரமா'' ஆகிய படங்களைத் தயாரித்துவிட்டு, 1958-ல் "அழகர் மலைக்கள்ளன்'' என்ற படத்தைத் தயாரித்தார்.

    ஒருநாள் காலை, கோபாலகிருஷ்ணன் காரில் வாலியை அவரிடம் அழைத்துச் சென்றார். தெலுங்கு இசை அமைப்பாளர் கோபாலம், ஆர்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருந்தார்.

    வாலி அவருக்கு வணக்கம் செலுத்தினார்.

    பாட்டுக்கான மெட்டை ஆர்மோனியத்தில் இசை அமைப்பாளர் வாசித்துக்காட்டினார். "ஒரு தாய் பாடும் தாலாட்டுப்பாட்டு இது'' என்று வாலியிடம், காட்சியை விளக்கினார்கள்.

    உடனே வாலி, காகிதத்தை எடுத்தார். "நிலவும், தாரையும் நீயம்மா; உலகம் ஒரு நாள் உனதம்மா'' என்ற பல்லவியை எழுதிக் காட்டினார்.

    அதைப் பார்த்துவிட்டு, இசை அமைப்பாளர் அசந்து போனார். இசையுடன் வார்த்தைகள் வெகுவாகப் பொருந்தின.

    முக்கால் மணி நேரத்தில் முழுப்பாடலையும் எழுதி முடித்தார், வாலி. பட அதிபர் கெம்பராஜ் வந்து, பாட்டைக்கேட்டார். அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. வாலியைத் தட்டிக்கொடுத்தார்.

    "நாளை ரிக்கார்டிங். கார் அனுப்புகிறேன். வந்துவிடுங்கள்'' என்று சொன்னார். மகிழ்ந்து போனார், வாலி.

    மறுநாள் கோல்டன் ஸ்டூடியோவில் சுசீலா பாட, வாலியின் முதல் பாடல் ஒலிப்பதிவு ஆகியது
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனாக்சி சின்ஹா, பிரபல நடிகர் மூலம் தெலுங்கில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
    பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் தமிழில் ரஜினியுடன் இணைந்து லிங்கா படத்தில் நடித்திருந்தார். தற்போது நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தெலுங்கில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

    சோனாக்சி சின்ஹா, நாகார்ஜுனா,

    தெலுங்கில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் நாகார்ஜூனா இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி ஹிட்டான படம் 'சோக்காடே சின்னி நாயனா'. இந்தநிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் துவங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைக்க இருக்கிறார்.
    இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
    தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

    நேற்று நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கினார்கள். தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாயை முதலமைச்சரிடம் வழங்கி இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் மற்றவர்கள் போல் நானும் பொருளாதார பிரச்சினையில் இருப்பதாக பேட்டியளித்துள்ளார்.
    விஜய்சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள லாபம் படப்பிடிப்பு முடிந்து கொரோனாவால் திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகும் சலார் படத்திலும் நடிக்கிறார்.

    ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், ''கொரோனா காலத்தில் படப்பிடிப்பு நடத்துவது சிக்கலாக உள்ளது. கொரோனா தொற்று முடிவது வரை காத்திருக்கவும் முடியாது. முக கவசம் அணியாமல் படப்பிடிப்பு அரங்கில் இருப்பதும் இயலாத காரியம்.

    மற்றவர்கள் போல் எனக்கும் பொருளாதார பிரச்சினை இருப்பதால் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே படப்பிடிப்புகள் தொடங்கியதும் நான் படப்பிடிப்புக்கு செல்வேன்.

    ஸ்ருதிஹாசன்

    கடந்த 11 ஆண்டுகளாக சுயமாக சம்பாதிக்கிறேன். எனது தேவைகளை நானே பூர்த்தி செய்கிறேன். எனது செலவுகளையும் நானே கவனித்துக்கொள்கிறேன். சொந்த வாழ்க்கை மற்றும் தொழில் தொடர்பான முடிவுகளை நானே எடுக்கிறேன். சுயமாக செயல்படுவதில் பெருமை கொள்கிறேன்.

    கொரோனா தொற்றுக்கு முன் சொந்தமாக வீடு வாங்கி இருக்கிறேன். கடவுள் எனக்கு எப்போதும் துணையாக இருக்கிறார் என்று நம்புகிறேன். கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி தற்போது வீட்டில் இருக்கிறேன். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்'' என்று கூறியுள்ளார்.
    மங்காத்தா, ஜில்லா படங்களில் நடித்தவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான மகத் வீட்டில் விசேஷத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
    அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மகத். அதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார்.

    இவர் தனது பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது மனைவி பிராச்சி மிஸ்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கு மகத் வளைகாப்பு நடத்தி இருக்கிறார். இவர் மனைவிக்கு மஞ்சள் பூசி முத்தமிட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.


    கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் இளம் தயாரிப்பாளர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
    விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் சாருஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தாதா87. இப்படத்தை கலை சினிமாஸ் சார்பில் ம.கலைச்செல்வன் தயாரித்திருந்தார். தற்போது கலைச்செல்வன் உயிரிழந்துள்ளார்.

    கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த கலைச்செல்வன், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
    ×