என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள சந்திரமுகி படத்தின் 2-ம் பாகத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
    ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் சந்திரமுகி. இப்படத்தின் 2-ம் பாகம் பி.வாசு இயக்கத்தில் தயாராக உள்ளது என்றும், ராகவா லாரன்ஸ் கதாநாயகாக நடிப்பார் என்றும் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் பட வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. 

    இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ படத்தில் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து இயக்குனர் பி.வாசு சமீபத்திய பேட்டியில் கூறுகையில், “சந்திரமுகி 2-ம் பாகத்துக்கான கதை, திரைக்கதை உருவாக்கும் பணிகள் நடக்கிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சிக்கான இணைப்பு சரியாக அமைய வேண்டும் என்பதால் அவசரப்படாமல் வேலை செய்கிறோம். அடுத்த மாதம் இறுதியில் இந்த பணிகள் முடிவடையும். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளோம்.

    பி.வாசு, ராகவா லாரன்ஸ்
    பி.வாசு, ராகவா லாரன்ஸ்

    சந்திரமுகி படத்தில் நடித்தவர்கள் 2-ம் பாகத்தில் கிடையாது. ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற தகவல் உண்மை இல்லை. ‘சந்திரமுகி 2’ படத்தின் கதை வேறு மாதிரி இருக்கும். சந்திரமுகி படத்தில் ஒரு சம்பவம் நடந்தது. சந்தரமுகி 2-ம் பாகத்தில் இன்னொரு சம்பவம் இருக்கும். ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விரைவில் முடித்துவிட்டு ‘சந்திரமுகி 2’ படப்பிடிப்பில் இணைவார்” என்றார்.
    ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
    மும்பை:

    பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த விஷயத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளது எனவும் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் மும்பை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான அமலாபாலின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் அமலாபால். தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

    இந்நிலையில், தற்போது புதிய கவர்ச்சி புகைப்படங்களை அமலாபால் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.


    முன்னணி நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா, வடசென்னை படத்தை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்திருக்கிறார்.
    தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தது.

    இந்நிலையில் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 16 நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளதாகவும், ஒரு பெண்ணை மையப்படுத்திய கதை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஆண்ட்ரியா

    இதற்குமுன் இயக்குனர் வெற்றிமாறன், சங்கத்தலைவன் என்ற படத்தினை தயாரித்து வெளியிட்டிருக்கிறார். ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘அதிகாரம்’ திரைப்படத்துக்கான கதையை எழுதி, பைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தவமாய் தவமிருந்து, சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் படங்களில் நடித்த பத்மபிரியா மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
    சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமானவர் பத்மபிரியா. இப்படம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதேசமயம் மலையாள திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். 2014 ஆம் ஆண்டு ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

    பத்மபிரியா

    தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் பத்மபிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பத்மபிரியா, மலையாளத்தில் பிஜுமேனன் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் பல படங்களில் நடிக்க பத்மபிரியா ஆர்வம் காண்பித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தடையறத் தாக்க, மீகாமன், தடம் படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வருகிறார்.
    தயாரிப்பாளராக இருந்த உதயநிதி பின்னர் முழுநேர நடிகராக மாறி தமிழ் படங்களில் நடித்து வந்தார். அதன்பின் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பி இருக்கிறார் உதயநிதி.

    மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நிதி அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரவ் இப்படத்தில் இணைந்திருக்கிறார்.

    ஆரவ் - உதயநிதி
    ஆரவ் - உதயநிதி

    உதயநிதியுடன் படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆரவ் தனது சமூக வலைத்தள பக்கக்தில் பகிர்ந்து இருக்கிறார். இதற்குமுன் மார்க்கெட் ராஜா என்ற படத்தில் ஆரவ் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தெலுங்கு நடிகரை வைத்து புதிய படம் இயக்கும் இயக்குனர் லிங்குசாமி, தன்னுடைய படத்தின் வில்லன் நடிகரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
    தமிழில் ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, தற்போது தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்க உள்ளார். 

    இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது. ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். 

    ஆதி
    நடிகர் ஆதி

    அதிரடி ஆக்ஷன் படமான இதில் வில்லன் வேடத்தில் மாதவன் நடிக்க இருப்பதாகவும், சில தினங்களுக்கு முன்பு ஆர்யா நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது வில்லனாக ஆதி நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

    நடிகர் ஆதி தமிழில், மிருகம், ஈரம், மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70 சதவீதம் முடிந்துள்ளது.
    மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

    ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படம் உருவாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்து காடுகளில் நடத்தினர். பின்னர் கொரோனா பரவலால் படப்பிடிப்பு பல மாதங்களாக முடங்கியது. ஊரடங்கு தளர்வில் மீண்டும் ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தினர். அதன்பின் இரண்டாவது அலை காரணமாக மீண்டும் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

    பொன்னியின் செல்வன்
    பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. ‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று (PS 1) என்று எழுதப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் ‘தல 61’ படம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
    போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை உருவாக்கி இருந்தார்கள். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானதால், போனிகபூர் - அஜித் - எச்.வினோத் கூட்டணி மீண்டும் இணைந்து வலிமை படத்தை தற்போது உருவாக்கி இருக்கிறார்கள்.

    இப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

    அஜித்
    அஜித் - எச்.வினோத் - போனிகபூர்

    இந்நிலையில், அஜித்தின் அடுத்த படமான ‘தல 61’ பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து போனிகபூர் - அஜித் - எச்.வினோத் ஆகியோர் மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
    தமிழில் இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்திகா சிங், போட்டோஷூட் எடுக்கும் போது தவறி விழுந்து இருக்கிறார்.
    சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்திகா சிங், தேசிய குத்துச் சண்டை வீராங்கனை. இறுதிச்சுற்று பெரிய வெற்றி பெற்றதால் குத்துச் சண்டையை மூட்டை விட்டு முழு நேர நடிகை ஆனார்.

    இறுதிச்சுற்று படத்திற்குப் பிறகு தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்தார். இவர் நடித்து முடித்துள்ள வணங்காமுடி படம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில், ரித்திகா சிங் குளம் அருகே போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குளத்தில் தவறி விழுந்து இருக்கிறார்.

    ரித்திகா சிங்

    அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை ரித்திகா சிங், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    ரவி சீனிவாசன் இயக்கத்தில் முருகானந்தம், மேக்னா ஹெலன், பாக்யராஜ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் கபாலி டாக்கீஸ் படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படம் கபாலி டாக்கீஸ். இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். இவர், கதாநாயகன் படத்தின் இயக்குனராவார். ஏற்கனவே இவர் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" "மரகத நாணயம்" படங்களில் காமெடியில் நடித்து கலக்கியவர்.

    மேலும் இதில் கதாநாயகியாக மேக்னா ஹெலன் மற்றும் கே.பாக்யராஜ், ஜி.எம்.குமார், இமான் அண்ணாச்சி, சார்லி, மதன் பாப், டான்சர் டியாங்கனா, பி.எல்.தேனப்பன். வேலு பிரபாகரன், வர்ஷன், நவீன், ராஜ்குமார், சக்ரி, ஷீலா, சாய்பிரியா இன்னும் பலர் நடித்துள்ளனர்.

    கபாலி டாக்கீஸ் படக்குழு
    கபாலி டாக்கீஸ் படக்குழு

    ஜெயசீலன் - முனிகிருஷ்ணன் இருவரும் கலையையும், ராதிகா - சங்கர் இருவரும் நடன பயிற்சியையும், தவசி ராஜ் சண்டை பயிற்சியையும், சினேகன், மதுரகவி, தமிழ் இயலன், விஜயசாகர் நால்வரும் பாடல்களையும் எழுத, ராஜேஷ் கண்ணா படத்தொகுப்பையும் சபேஷ் - முரளி இரட்டையர் இசையையும் கவனிக்க, ஆர்.சுரேஷ்குமார் இணை தயாரிப்பில் மெளலி பிக்சர்ஸ் சார்பில் பி.சந்திரமெளலி தயாரித்துள்ளார். கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து ரவிசீனிவாசன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் பா.இரஞ்சித், தான் அடுத்ததாக இயக்க உள்ள படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார்.
    இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.இரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். 

    தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கி முடித்துள்ளார் பா.இரஞ்சித். இப்படம் வருகிற ஜூலை 22-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ள பா.இரஞ்சித், சமீபத்திய பேட்டியில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    பா.இரஞ்சித்
    பா.இரஞ்சித்

    அதன்படி, அப்படத்திற்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ள பா.இரஞ்சித், இது முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக உருவாக உள்ளதாக கூறியுள்ளார். இதில் நடிக்கப்போகும் நடிகர், நடிகைகள் யார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.
    ×