என் மலர்
சினிமா செய்திகள்
வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பெயர் பெற்ற சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இதையடுத்து இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் தேசிய விருது பெற்றது. பின்னர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு, தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தை இயக்க உள்ளார் சீனு ராமசாமி.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 40’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூர்யா 40 படக்குழு வெளியிட்ட போஸ்டர்
இந்நிலையில், ‘சூர்யா 40’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற ஜூலை 22-ந் தேதி மாலை 6 மணிக்கு ‘சூர்யா 40’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இப்படத்தின் டைட்டிலும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சூர்யா வருகிற ஜூலை 23-ந் தேதி பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில், அதை முன்னிட்டு ‘சூர்யா 40’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
#Suriya40FirstLook on July 22 @ 6 PM!#Suriya40#Suriya40FLon22nd@Suriya_offl@pandiraj_dir@immancomposer@RathnaveluDop@priyankaamohanpic.twitter.com/ZzMNetQf8y
— Sun Pictures (@sunpictures) July 19, 2021
சூர்யா பட இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரனின் திடீர் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சூர்யா நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஸ்ரீ’. ஸ்ருதிகா, காயத்ரி ஜெயராமன், விஜயகுமார், ஸ்ரீவித்யா உள்பட பலர் நடித்திருந்த இப்படத்தை புஷ்பவனம் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு டி.எஸ்.முரளிதரன் இசையமைத்திருந்தார். குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் ‘வசந்தசேனா’ என்கிற பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.

ஸ்ரீ படத்தின் போஸ்டர்
இந்நிலையில், ஸ்ரீ படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ். முரளிதரன் சென்னையில் நேற்று காலமானார். இவர் ‘கோத்தம்’ என்ற இந்தி படம் உள்பட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரனின் திடீர் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, எல்.கே.ஜி போன்ற படங்களில் நடித்து பிரபலமான பிரியா ஆனந்த், அடுத்ததாக பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ளாராம்.
சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘காசேதான் கடவுளடா’. தற்போது இப்படத்தை ரீமேக் செய்கின்றனர். ஆர்.கண்ணன் இயக்கும் இப்படத்தில் சிவா ஹீரோவாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிரியா ஆனந்த், சிவா
இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே வணக்கம் சென்னை மற்றும் சுமோ ஆகிய படங்களில் சிவாவுடன் இணைந்து பணியாற்றி உள்ள பிரியா ஆனந்த், தற்போது 3-வது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. சுமார் ஓராண்டுக்கு மேலாக இப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாததால் இப்படம் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டது.

ராகவா லாரன்ஸ்
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு 2022-ம் ஆண்டில் தொடங்கப்படும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதற்கு முன் கதிரேசன் இயக்கும் ருத்ரன், துரை செந்தில்குமார் இயக்கும் அதிகாரம் போன்ற படங்களில் நடித்து முடிக்க ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளாராம்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிதி அகர்வாலுக்கு, தற்போது தமிழ் பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
ஜெயம் ரவி ஜோடியாக பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து பிரபலமானவர் நிதி அகர்வால். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நிதி அகர்வால் ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனதால், அவர் கோபமடைந்துள்ளார். நடிகை நிதி அகர்வால் பள்ளியில் படித்தபோது நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அவர் ரகசியமாக வைத்திருந்த இந்த புகைப்படங்களை யாரோ வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டனர்.

நிதி அகர்வால்
அந்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள். இதனால் கோபமடைந்த நிதி அகர்வால், இதுகுறித்து கூறியதாவது, “என்னுடைய குறிப்பிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பகிரப்படுவதை பார்க்கிறேன். அந்த புகைப்படத்தை பகிர வேண்டிய அவசியம் இல்லை. மனசாட்சி உள்ளவர்கள் இந்த புகைப்படத்தை பகிரவே மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தபோது கார்த்தியிடம் பேசிய விஜய் “உங்கள் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நன்றாக நடிக்கிறீர்கள்” என்று பாராட்டி உள்ளார்.
விஜய் நடிக்கும் பீஸ்ட், கார்த்தியின் சர்தார் ஆகிய 2 படங்களின் படப்பிடிப்புகளும் சென்னை பூந்தமல்லி அருகே ஒரே ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. சர்தார் படத்தில் கார்த்தி வயதான தந்தை மற்றும் மகனாக இரு வேடங்களில் நடிக்கிறார். அவர் வயதானவராக நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
சர்தார் படத்துக்காக போடப்பட்ட முதியவர் கெட்-அப் உடன் நடிகர் கார்த்தி திடீரென்று விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு அரங்குக்கு சென்றுள்ளார். முதியவர் கெட்-அப்பில் இருந்ததால், அங்கு கார்த்தியை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையாம்.
இதனால் சில நிமிடங்கள் ஓரமாக நின்று படப்பிடிப்பை பார்த்துக்கொண்டு இருந்த அவர், பின்னர் நடிகர் விஜய் அருகில் சென்று நான்தான் கார்த்தி என்று தன்னை அறிமுகம் செய்துள்ளார். கார்த்தியின் தோற்றத்தை பார்த்த வியந்து போன நடிகர் விஜய் உங்களை அடையாளமே தெரியவில்லை என்று சொன்னாராம். பின்னர் இருவரும் நலம் விசாரித்தனர்.

விஜய், கார்த்தி
அப்போது கார்த்தியிடம் பேசிய விஜய் “உங்கள் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நன்றாக நடிக்கிறீர்கள்” என்று பாராட்டி உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் சுமார் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டு இருந்த கார்த்தி, பின்னர் தனது சர்தார் படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்டுச் சென்றாராம்.
தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக வலம்வரும் நிவேதா பெத்துராஜ், பார்ட்டி, பொன் மாணிக்கவேல், விராட பருவம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், தெலுங்கில் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘விராட பருவம்’. வேணு உடுகுலா இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ், நக்சலைட்டாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராணா
ராணா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விதார்த், தன்யா பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவாகி வரும் கார்பன் படத்தின் முன்னோட்டம்.
நடிகர் விதார்த் நடிப்பில் 25 வது திரைப்படமாக உருவாகும் படத்திற்கு “கார்பன்” என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ், பாவ்லின் ஜெஷிகா, மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், மூர்த்தி, டபுட் செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி மற்றும் பல பிரபலங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் கதையை சரியாக பிரதிபலிக்கும் பொருட்டே, இத்தலைப்பை வைத்ததாக இயக்குநர் ஶ்ரீனிவாசன் கூறியுள்ளார். படத்தில் விதார்த் கதாப்பாத்திரம், கனவில் காண்பெதெல்லாம் நிஜத்தில் பிரதியெடுத்ததுபோல் நடக்கும். நாம் கார்பன் பேப்பரில் எழுதும்போது அச்சுப்பிசகாமல் அடி பேப்பரில் பதிவது போல் இந்த சம்பவம் நடைபெறுவதால் படத்திற்கு ‘கார்பன்’ தலைப்பு பொருத்தமாக இருக்குமென இத்தலைப்பை வைத்ததாக கூறியுள்ளார் இயக்குநர்.

தன்யா, விதார்த்
சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயச்சந்திரன் கலை இயக்கம் செய்ய, பிரவீன் கே.எல் எடிட்டிங் செய்துள்ளார். கனல் கண்ணன் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்ற, விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு 38 நாட்களில் முடிக்கப்பட்டது பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் திருக்கோயிலூரில் படமாக்கப்பட்டுள்ளது. பென்ச்மார்க் பிலிம்ஸ் சார்பில் ஜோதி முருகன் மற்றும் ஸ்ரீனிவாசன் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
பாப் நட்சத்திரங்கள் ஒமர் குடிங் மற்றும் லெஸ்லீ லூயிஸ் ஆகியோர் ஏடிஜி மற்றும் கைபா பிலிம்ஸுடன் இணைந்து ‘என்டூரேஜ்’ பாடலை உருவாக்கி உள்ளனர்.
நடிகர் நெப்போலியன் மற்றும் இசையமைப்பாளர்-நடிகர் ஜி வி பிரகாஷ் ஆகியோரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் டெல் கே கணேசன் தற்போது ஒமர் குடிங் மற்றும் லெஸ்லீ லூயிஸின் புதிய பாப் மற்றும் ராப் இசை ஆல்பத்தை தயாரித்து வெளியிடுகிறார்.
பாப் மற்றும் ராப் இசை உலகில் தனக்கென்ன ஒரு சொந்த பாணியை உருவாக்கியுள்ள ‘பிக் ஓ’ என்று அழைக்கப்படும் பிரபலமான பாடகர் ஒமர் குடிங், 'களோனியல் கசின்ஸ்' பாடகர் லெஸ்லீ லூஸிஸுடன் இணைந்து ‘என்டூரேஜ்’ பாடலை உருவாக்கியுள்ளார். கெய்பா பிலிம்ஸ் தயாரித்த இந்த பாடலுக்கு ஏடிஜி என பிரபலமாக அறியப்படும் அஸ்வின் கணேசன் இசையமைத்துள்ளார்.

என்டூரேஜ் போஸ்டர்
பாடலைப் பற்றி டெல் கணேசன் கூறுகையில், “மிகக் குறுகிய காலத்தில் பாடல் அற்புதமான வரவேற்பை பெற்றது. இந்த பெரும் வரவேற்பின் காரணமாக பாடலுக்கான இசை வீடியோவை வெளியிட நாங்கள் முடிவு செய்தோம்” என தெரிவித்துள்ளார்.
கைபா பிலிம்ஸ் இந்தப் பாடலை தயாரித்துள்ளது. டெல் கே. கணேசன் மற்றும் ஜி.பி. திமோத்தீஸ் ஆகியோர் உருவாக்கிய இந்த தயாரிப்பு நிறுவனம், செலிபிரிட்டி ரஷ், கிறிஸ்மஸ் கூப்பன், டெவில்ஸ் நைட் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளது. இதை தவிர சமீபத்தில் வெளியான லியாம் நீசனின் தி மார்க்ஸ்மேன் படத்தை விநியோகம் செய்தது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அங்கு அமிதாப் பச்சன், சித்தார்த் மல்ஹோத்ரா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ராஷ்மிகா
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில், அதிக பாலோவர்களை கொண்ட தென்னிந்திய நடிகையாக உயர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 19 மில்லியனை தாண்டியுள்ளது. இதன்மூலம் காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் பிரீத் சிங், சுருதிஹாசன் போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளியுள்ளார் ராஷ்மிகா.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் பணியாற்றி வரும் பிரபலம், அடுத்ததாக ஷங்கர் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர், ஜானி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்துக்கு நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அவர் அடுத்ததாக பணியாற்ற உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ள தெலுங்கு படத்திற்கு நடன இயக்குனராக ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

ஜானி, ஷங்கர்
ஏற்கனவே ஷங்கர் இயக்கிய பாய்ஸ், காதலன் போன்ற படங்களில் டான்ஸராக பணியாற்றியுள்ள ஜானி, தற்போது முதன்முறையாக அவரது படத்தில் நடன இயக்குனராக பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






