என் மலர்tooltip icon

    சினிமா

    டெல் கணேசன், ஜிவி பிரகாஷ்
    X
    டெல் கணேசன், ஜிவி பிரகாஷ்

    ஜிவி பிரகாஷை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் புதிய முயற்சி

    பாப் நட்சத்திரங்கள் ஒமர் குடிங் மற்றும் லெஸ்லீ லூயிஸ் ஆகியோர் ஏடிஜி மற்றும் கைபா பிலிம்ஸுடன் இணைந்து ‘என்டூரேஜ்’ பாடலை உருவாக்கி உள்ளனர்.
    நடிகர் நெப்போலியன் மற்றும் இசையமைப்பாளர்-நடிகர் ஜி வி பிரகாஷ் ஆகியோரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் டெல் கே கணேசன் தற்போது ஒமர் குடிங் மற்றும் லெஸ்லீ லூயிஸின் புதிய பாப் மற்றும் ராப் இசை ஆல்பத்தை தயாரித்து வெளியிடுகிறார்.

    பாப் மற்றும் ராப் இசை உலகில் தனக்கென்ன ஒரு சொந்த பாணியை உருவாக்கியுள்ள ‘பிக் ஓ’ என்று அழைக்கப்படும் பிரபலமான பாடகர் ஒமர் குடிங்,  'களோனியல் கசின்ஸ்' பாடகர் லெஸ்லீ லூஸிஸுடன் இணைந்து ‘என்டூரேஜ்’ பாடலை உருவாக்கியுள்ளார். கெய்பா பிலிம்ஸ் தயாரித்த இந்த பாடலுக்கு ஏடிஜி என பிரபலமாக அறியப்படும் அஸ்வின் கணேசன் இசையமைத்துள்ளார்.

    என்டூரேஜ் ஆல்பம் போஸ்டர்
    என்டூரேஜ் போஸ்டர்

    பாடலைப் பற்றி டெல் கணேசன் கூறுகையில், “மிகக் குறுகிய காலத்தில் பாடல் அற்புதமான வரவேற்பை பெற்றது. இந்த பெரும் வரவேற்பின் காரணமாக பாடலுக்கான இசை வீடியோவை வெளியிட நாங்கள் முடிவு செய்தோம்” என தெரிவித்துள்ளார்.

    கைபா பிலிம்ஸ் இந்தப் பாடலை தயாரித்துள்ளது. டெல் கே. கணேசன் மற்றும் ஜி.பி. திமோத்தீஸ் ஆகியோர் உருவாக்கிய இந்த தயாரிப்பு நிறுவனம், செலிபிரிட்டி ரஷ், கிறிஸ்மஸ் கூப்பன், டெவில்ஸ் நைட் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளது. இதை தவிர சமீபத்தில் வெளியான லியாம் நீசனின் தி மார்க்ஸ்மேன் படத்தை விநியோகம் செய்தது.
    Next Story
    ×