என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், விரைவில் டோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.
    நெல்சன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம், அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து அயலான், டான், சிங்க பாதை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். 

    இதில், அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் டான் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதையடுத்து சிங்க பாதை படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அசோக் இயக்க உள்ளார்.

    சிவகார்த்திகேயன், ராம்குமார்
    சிவகார்த்திகேயன், ராம்குமார்

    இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஏற்கனவே ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு கிராமி விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    உலகளவில் இசைக்கென வழங்கப்படும் விருதுகளில் மிகவும் முக்கியமானது கிராமி விருதுகள். இந்த ஆண்டுக்கான 64-வது கிராமி விருதுக்கு, தற்போது பாடல்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன. 

    அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கீர்த்தி சனோன் நடிப்பில் இந்தியில் வெளியான ‘மிமி’ படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை டுவிட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஏ.ஆர்.ரகுமான்

    ஏ.ஆர்.ரகுமான்

    ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமான், அதே ஆண்டில் அந்த படத்திற்காக 2 கிராமி விருதுகளையும் வென்றார். தப்போது மீண்டும் அவர் இசையமைத்த பாடல்கள் கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் அவருக்கு மீண்டும் கிராமி விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரபல நடிகையாக இருக்கும் அமலாபால், தனது சமூக வலைத்தள பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். ஆனால் அவரது முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்தியது. மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். 

    அதன் பின்னர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். இதையடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம் போன்ற படங்கள் உள்ளன.

    அமலாபால்

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது புதிய புகைப்படங்களை பதிவு செய்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

    போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
    நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள ஹூமா குரேஷி, யோகிபாபு, புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

    வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம் பெறும் ‘நாங்க வேற மாரி...’ என்ற பாடலை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில், அடுத்த பாடலை அக்டோபர் 21ம் தேதி வெளியிட இருக்கிறார்கள். இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

    அஜித்

    வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்கள் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
    எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் கொம்புவச்ச சிங்கம்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் நவம்பர் 26ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


    சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கும் விழா டெல்லியில், வரும் 25ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    ஆண்டு தோறும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது இந்தியாவின் திரைப்பட விழாக்கள் இயக்குனரகம் வழங்கும். இந்த வருடம் தேசிய திரைப்பட விழா வரும் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விருது விழாவில், நடிகர் ரஜினிக்கு இந்தியத் திரைத்துறையில் மிக உயரிய கெளரவமான தாதா சாகேப் பால்கே விருது வழங்க இருக்கிறார்கள்.

    தமிழ்த் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல படங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இதற்காக 51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் மருமகன் ரோகித் உட்பட 7 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தமிழில் பல பிரம்மாண்ட படங்களை இயக்கியவர் ஷங்கர். இவரது மகளுக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனும் மதுரை பாந்தர் கிரிக்கெட் அணியின் உரிமையாளரின் மகனுமான ரோகித் தாமோதரன் என்பவருக்கும் ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ஷங்கரின் மருமகன் ரோகித் உட்பட 7 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    புதுவையில் கிரிக்கெட் பயிற்சியின் போது, பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் செய்து இருக்கிறார். அப்போது சங்க நிர்வாகிகள் பயிற்சியாளரிடம் மோதல் வேண்டாம் என கூறி அனுப்பி இருக்கின்றனர்.

    ரோகித் - ஷங்கர்
    ரோகித் - ஷங்கர்

    இதனை தொடர்ந்து சிறுமி குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் செய்தார். இது தொடர்பாக குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் சீண்டல், மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்க தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் உள்பட 7 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.
    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர், செய்தியாளர்களை சந்தித்து சிம்பு பட பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார்.
    சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இப்படம் வருகிற நவம்பர் 4ந் தேதி தீபாவளி அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால், நவம்பர் 25ந் தேதிக்கு தள்ளி ரிலீஸ் செய்வதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

    சிம்பு

    இந்நிலையில், டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, ‘சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தை வெளியிடவிடாமல் கட்டபஞ்சாயத்து செய்கிறார்கள். சிம்புக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் வருகிறது. மேலும் சிம்புக்கு நெருக்கடி கொடுக்கவே மாநாடு திரைப்படம் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு முன்பு உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்’என்றார்.
    சூர்யா நடித்து தயாரித்திருக்கும் ஜெய் பீம் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது ‘ஜெய் பீம்’ திரைப்படம் உருவாகி உள்ளது. ஞானவேல் இயக்கியுள்ள இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

    நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார்.

    சூர்யா

    சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் டிரைலரை அக்டோபர் 22 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
    அறிமுக இயக்குனர் குரு ராமானுஜம் இயக்கத்தில் வெற்றி, தியா மயூரி நடிப்பில் உருவாகி வரும் ‘ரெட் சேன்டில்’ படத்தின் முன்னோட்டம்.
    வலுவான கதைக் களத்தோடு உருவாகும் படம் ‘ரெட் சேன்டில்’. இதில் நாயகனாக வெற்றி நடித்துள்ளார். இவர் ‘ஜீவி’, ‘ 8 தோட்டாக்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். நாயகியாக தியா மயூரி நடிக்கிறார். வில்லனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். 

    முக்கியமான வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், மாரிமுத்து, ‘கபாலி’ விஷ்வாந்த், மாரி விநோத், 'கர்ணன்' ஜானகி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

    ‘கழுகு’ சத்ய சிவாவிடம் பணியாற்றிய குரு ராமானுஜம் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜெ.என்.சினிமா நிறுவனம் சார்பில் மிகப் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை  தயாரித்துள்ளார் பார்த்தசாரதி.

    படம் குறித்து இயக்குநர் குருராமானுஜம் கூறியதாவது, “இது ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாகும் படம். 2015-ல் நடந்த உண்மைச் சம்வத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளேன். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களின் உயிர் போலீஸ் தோட்டக்களுக்கு இரையானது என்பது வரலாறு. 

    உண்மையில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வறுமையை பயன்படுத்தி மூளைச் சலவை செய்து இத்தொழிலில் ஈடுபட வைப்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.
    தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் சசிகுமார், பட வெளியீட்டில் நடிகர் சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்க உள்ளார்.
    சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய சசிகுமார் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, கிடாரி, உடன்பிறப்பே உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். 

    தற்போது இவர் நடிப்பில் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ திரைப்படம் உருவாகி உள்ளது. பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்தில் மிருநாளினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    எம்.ஜி.ஆர்.மகன், ஜெய் பீம் படங்களின் போஸ்டர்
    எம்.ஜி.ஆர்.மகன், ஜெய் பீம் படங்களின் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளது. அதன்படி ‘எம்.ஜி.ஆர்.மகன்’ திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதேபோல் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் தீபாவளியையொட்டி ஓடிடி-யில் வெளியாக உள்ளதால், இந்த இரு படங்களுக்கு இடையே நேரடிப் போட்டி உருவாகி உள்ளது. 
    சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் தான் என்று கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் இதுகுறித்து விளக்கமளித்த பிரீதம் ஜுகல்கர், சமந்தாவை தான் சகோதரியாக பார்ப்பதாகவும், தங்களுக்கு இடையே தவறான உறவு இல்லை என்றும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    ஸ்ரீரெட்டி
    ஸ்ரீரெட்டி

    இந்நிலையில், சமந்தா விவாகரத்து விவகாரம் குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரீதம் ஜுகல்கர் உடனான நட்பு காரணமாக சமந்தா விவகாரத்து செய்ய வாய்ப்பே இல்லை. ஏனெனில், பிரீதம் ஒரு ஓரினச் சேர்க்கையாளர். அதனால் அவர்களுக்கிடையே எந்தவித தவறான உறவும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. 

    சமீபகாலமாக சமந்தா மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அந்த விஷயத்தில் கூட பிரச்சினை உருவாகி, இருவரின் பிரிவுக்கும் காரணமாகி இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
    ×