என் மலர்
சினிமா செய்திகள்
இயக்குனர் பாடலாசிரியராக இருக்கும் விக்னேஷ் சிவன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போடா போடி. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு ‘நானும் ரவுடி தான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது.
நானும் ரவுடி தான் படத்தின் மூலம் ஒன்றாக இணைந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிஜ வாழ்க்கையிலும் இணைய முடிவு செய்தனர். பின்பு இருவரும் காதலிப்பதாக கூறினார்கள். மேலும் இருவரும் அடிக்கடி ஒன்றாக இணைந்து வெளிநாடுகளுக்கு சென்று நேரத்தை செலவிடுவார்கள்.
விக்னேஷ் சிவன், நயன்தாரா வெளிநாட்டுக்கு மட்டுமில்லாமல் கோயில்களுக்கும் அடிக்கடி செல்வார்கள். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருக்கும் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘ நானும் ரவுடி தான்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவுப்பெற்றுள்ளது. இதனால் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘ 6 ஆண்டுகள் ஆகியது போல் தெரியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜெய், தான் நடித்து வரும் புதிய படத்திற்காக ரோபோட்ஸ்களுடன் சண்டை போட்டு இருக்கிறார்.
ராகுல் பிலிம்ஸ் சார்பில் கே.திருக்கடல் உதயம் தயாரிப்பில், ஜெய் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. ரோபோடிக்ஸ் டெக்னாலஜி மற்றும் அனிமேஷனை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் கதாநாயகியாக பானுஸ்ரீ, சினேகன், பழ.கருப்பையா, தயாரிப்பாளர் அழகிய தமிழ்மணி, தேவ்கில், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
அதிக பொருட்செலவில் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே நிறைந்த இப்படத்தில் ஜெய் ரோபோட்ஸ்களுடன் சண்டைபோடும் காட்சிகள் எடுக்கப்பட்டு விஷுவல் எபெக்ட்ஸ் வேலைகள் நடந்துக்கொண்டு இருப்பதாக படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இயக்குனருடன் ஜெய்
சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் ஐந்தாயிரம் துணை நடிகர்களோடு, பிக்பாஸ் சினேகன் போராட்டக்களத்தில் போராளியாக நடித்துள்ளார். இறுதிகட்ட வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை வீரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ஆம் நாள், இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை வீரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, வெள்ளம், சுனாமி, கொரோனா என எந்த பேரிடரிலும், களத்தில் முன் நின்று பணியாற்றிய காவல்துறைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு இவ்விழாவை இன்னும் சிறப்பிக்கும் பொருட்டு, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா மற்றும் வெஸ்லி எழுத்தில், சசிகலாவும், பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடிய, “வீரவணக்கம்” ஆல்பம் பாடலை இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார்.
பல படங்களில் காமெடி வேடம் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய கோவை சரளா, தற்போது நாயகியாக களமிறங்க இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் கோவை சரளா. 'வெள்ளி ரதம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், 'முந்தானை முடிச்சு' 'வைதேகி காத்திருந்தாள்' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர் கமல்ஹாசன் நடித்த 'சதிலீலாவதி' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்நிலையில் மைனா, கும்கி உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் கதையின் நாயகியாக கோவை சரளா நடிக்கவுள்ளார். பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள கோவை சரளா, தனது பேத்திக்கு நிகழ்ந்த அநீதிக்கு, நீதி வாங்கித்தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பிரபு சாலமன், தனது வழக்கமான படங்கள் போன்று முழுக்க முழுக்க மலை சார்ந்த பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார். விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி ‘விக்ரம்’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் - கமல் - பகத் பாசில்
வரும் நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அன்றைய தினத்தில் ’விக்ரம்’ படத்தின் முன்னோட்ட வீடியோ எனப்படும் கிளிம்ப்ஸ் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வருட கமல் பிறந்தநாளின் போது ‘விக்ரம்’ படத்தின் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
சூரிய கிரண் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘அரசி’ படத்தின் முன்னோட்டம்.
வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘அரசி’. தெலுங்கில் சத்யம், பிரம்மாஸ்திரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய சூரிய கிரண், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ரசி மீடியா மேக்கர்ஸ், வி.வி பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே.ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக்ராஜு சித்தார்த் ராய், சந்தானபாரதி, அபிஷேக், சாப்ளின் பாலு, அந்தோணி தாஸ், மீரா, கலக்கப்போவது யாரு சிவா, ஹரி ஆகியோர் நடிக்கின்றனர். செல்வா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். பாடல்களை ஆவடி. சே.வரலட்சுமி, முருகானந்தம் ஆகியோர் எழுதுகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும், பிசியான நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ், பிக்பாஸ் பிரபலத்திற்காக குரல் கொடுத்துள்ளார்.
மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படத்தை ‘கூகுள் குட்டப்பா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷனும், லாஸ்லியாவும் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் ஆவர். இப்படத்திற்கு ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கூகுள் குட்டப்பா படக்குழுவினருடன் ஜி.வி.பிரகாஷ்
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி கூகுள் குட்டப்பா படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ரொமாண்டிக் பாடல் ஒன்றை பாடி உள்ளார். இப்பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதி உள்ளார். விரைவில் இந்த பாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும்.
இதையும் படியுங்கள்.... சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவருக்கு வாய்ப்பளிக்கும் ஜிவி பிரகாஷ்
கோல்டன் விசா பெற்ற போது எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாடகி சித்ரா, அமீரக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.

பாடகி சித்ரா கோல்டன் விசா பெற்றபோது எடுத்த புகைப்படம்
ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், பிருத்விராஜ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட இந்திய பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல பின்னணி பாடகி சித்ராவுக்கும் கோல்டன் விசா வழங்கி உள்ளது. கோல்டன் விசா பெற்ற போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள சித்ரா, அமீரக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தனிநபரின் வாக்குக்கு எவ்வளவு மதிப்பு உண்டு என்பதை அரசியல் நையாண்டியுடன் ‘மண்டேலா’ படத்தில் சொல்லி இருந்தார்கள்.
உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அதில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து, அதிலிருந்து ஒரு படத்தை வேற்று மொழிக்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா சார்பாக 14 படங்கள் போட்டி போடுகின்றன, அதில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ படமும் உள்ளது. அந்த போட்டியில் இடம்பெற்ற ஒரே தமிழ் படம் இதுதான்.
இயக்குநர் ஷாஜி என். கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு இந்த 14 படங்களையும் பார்த்து, அதிலிருந்து ஒரு படத்தைத் தேர்வு செய்து இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்வர். அந்த ஒரு படம் ‘மண்டேலா’-வாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்.... மீண்டும் ஷாருக்கான் படத்தில் யோகிபாபு
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி, விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது. தற்போது வரலட்சுமி-யின் கைவசம் கன்னித்தீவு, காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்கள் உள்ளன.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், தற்போது மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். ‘அரசி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை வரலட்சுமி வழக்கறிஞராக நடிக்கிறார். தெலுங்கில் சத்யம், பிரம்மாஸ்திரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய சூரிய கிரண், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

அரசி படக்குழு
ரசி மீடியா மேக்கர்ஸ் மற்றும் வி.வி பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே.ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி ஆகியோர் தயாரிக்கிறார்கள். செல்வா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்.... சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுக்கு தனது மகனை அறிமுகம் செய்த வரலட்சுமி
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இவர்களது திருமண உறவு, அண்மையில் முடிவுக்கு வந்தது.
இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது. இதைத் தொடர்ந்து சமந்தா-வின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டன.

இந்நிலையில், விவாகரத்து விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறாக தகவல்களை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர், தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாக பேசியதால், அவர்மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சமந்தா.
இதையும் படியுங்கள்..... திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது - கணவரை பிரிந்தார் சமந்தா
பிக்பாஸ் 4-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழில் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த ஐந்து சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி உள்ளார்.
இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள், இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள். ஏற்கனவே பிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரீஷ் கல்யாண், ஆரவ், கவின், முகின், ரைசா வில்சன், ரம்யா பாண்டியன் ஆகியோர் கோலிவுட்டில் வெற்றிகரமான நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர்.

ரவீந்திரன் சந்திரசேகரன், பாலாஜி முருகதாஸ்
இந்நிலையில், பிக்பாஸ் 4-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவர் நடிக்க உள்ள படத்தை லிப்ரா புரடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரிக்க உள்ளார்.
இதையும் படியுங்கள்.... பிக்பாஸ் பாலாஜியுடன் காதலா? - யாஷிகா ஆனந்த் விளக்கம்






