என் மலர்
சினிமா செய்திகள்
வலைத்தளங்களில் தன்னைப் பற்றி அவதூறாக செய்திகள் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை சமந்தா வழக்கு தொடர்ந்திருந்தார்.
நடிகை சமந்தா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதும் தன்னைப்பற்றி அவதூறு தகவல்களை பரப்பியதாக சில யூ-டியூப் சேனல்கள் மீது நஷ்டஈடு கேட்டு ஐதராபாத்தில் உள்ள கூகட்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமந்தா சார்பில் ஐகோர்ட்டு வக்கீல் பாலாஜி மானநஷ்ட வழக்கு மனுவை தாக்கல் செய்தார்.
வலைத்தளங்களில் அவதூறாக செய்திகள் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுவில் குறிப்பிட்டார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நடிகை சமந்தாவின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதையும் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பக்கூடாது என உத்தரவிட்டார்.

மேலும் ஏற்கனவே யூ-டியூப் சேனல்களில் இடம்பெற்றுள்ள சமந்தாவின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளையும் நீக்கிவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதேபோல நடிகை சமந்தாவும் தனது சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட பதிவுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட வேண்டாம் எனவும் உத்தரவிட்டார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் பாலிவுட் படத்தில் இருந்து நடிகை நயன்தாரா விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதால் முடங்கி உள்ளது.

மகனுக்கு ஜாமீன் கிடைக்காததால் ஷாருக்கான் மன உளைச்சலில் இருப்பதனால் அவர் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், படப்பிடிப்பு தாமதமாகி வருவதால், இப்படத்தில் இருந்து நடிகை நயன்தாரா விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.
இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

மோகன்லால், கீர்த்தி சுரேஷ்
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கொரோனா உள்ளிட்ட சில பிரச்சினைகளால் 2 வருடங்களாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. இப்படம் கடந்த மார்ச் மாதம் ரிலீசாகும் என்று அறிவித்து வெளியாகவில்லை. பின்னர் ஓணம் பண்டிகையையொட்டி ஆகஸ்டு மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்தனர். அப்போதும் படம் வரவில்லை. இது மோகன்லால் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தை தியேட்டருக்கு பதிலாக ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பேச்சுவார்த்தை இறுதியானவுடன் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். இப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து விஜய் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களின் இந்த வெற்றி அரசியல் வட்டத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் தேர்தலில் தன் படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்று விஜய் கண்டிப்பாகக் கூறி, தடை போட்டிருந்தார்.
ஆனாலும் சோர்வடையாத விஜய் ரசிகர்கள் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். இளம் தலைமுறையினரை ஊக்குவிக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தார்களோ என்னவோ தேர்தலில் நின்ற பல நிர்வாகிகள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இந்தச் செய்தி விஜய் எட்டியவுடன் மகிழ்ச்சியுடன் புன்னகைத்து அவர்களின் வெற்றி விபரங்களைக் கண்காணித்துச் சொல்லக் கட்டளையிட்டார். வாக்கு எண்ணிக்கை நடந்த நாளில் விஜய்யின் அலுவலகம் பரபரப்பானது. தொடர்ந்து வந்த தேர்தல் நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து இறுதியாக 110 பேர் வெற்றி பெற்ற விபரம் வந்தவுடன் மக்கள் மன்றத்து ஆட்கள் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
இந்நிலையில் தேர்தல் நடந்து முடிந்த பல நாட்களுக்குப் பிறகு வெற்றி பெற்ற மக்கள் மன்ற நிர்வாகிகளை நேற்று அழைத்துப் பாராட்டியிருக்கிறார். வெற்றி பெற்ற குழுவினரோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டிருக்கிறார் விஜய்.
விக்ரம் பிரபு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக முத்தையா இயக்கத்தில் ‘புலிக்குத்தி பாண்டி’ படம் வெளியானது. இப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியானது. தற்போது ‘டாணாக்காரன்’ படத்தில் விக்ரம் பிரபு நடித்து இருக்கிறார். இப்படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டாணாக்காரன் படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் என்பவர் இயக்கி இருக்கிறார். சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பான காவல்துறையினரை ‘டாணாக்காரன்’ என்றுதான் அழைப்பார்கள். போஸ்டரிலும் விக்ரம் பிரபு அதே கெட்டப்பில் இருக்கிறார்.

எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு நடித்த அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கமிஷனர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளார்.
பட அதிபர் மைக்கேல் ராயப்பன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் சிம்பு நடித்த ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டேன். இந்த திரைப்படம் 50 சதவீதம் முடிவடைந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் சிம்பு என்னை அழைத்து, இந்த படத்தை இத்துடன் ரிலீஸ் செய்து விடலாம் என்றும், ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் நான் ஒரு திரைப்படத்தை இலவசமாக நடித்து தருவேன் என்றும் உறுதியளித்தார்.
எனவே நான் அந்த படத்தை வெளியிட்டேன். படம் சரியாக ஓடாததால் எனக்கு ரூ.15 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதன் பின்னர் என்னால் அடுத்த திரைப்படம் தயாரிக்க முடியவில்லை. அதேநேரம் சிம்பு தரப்பில், தன்னுடைய உறுதிமொழியை நிறைவேற்றாமல் என்னை ஏமாற்றும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள்.

சிம்பு - மைக்கேல் ராயப்பன்
இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நான் அளித்த புகாரின் பேரில், அப்போதைய தலைவரான விஷால் மற்றும் நிர்வாகிகள் பல முறை விசாரித்து விரைவில் ஒரு திரைப்படம் நடித்து தர வேண்டும் என்று கூறிய போது சம்மதம் தெரிவித்தார்கள். ஆனால் நிர்வாகம் மாறிய பின்னர் அதெல்லாம் முடியாது என்று தற்போதுவரை இழுத்தடித்து வருகிறார்கள்.
எனவே இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுத்து எனக்கு நல்லதொரு முடிவை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தொடக்கத்தில் இருந்தே பொய்யான உறுதியளித்து, எனக்கு பெரும் நஷ்டத்தை வரவழைத்து ஏமாற்றிய சிம்பு மற்றும் அவரது தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மகள் சௌந்தர்யா தொடங்கியுள்ள புதிய App-ஐ, நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது இன்று டெல்லியில் வழங்கப்பட்டது. ரஜினிக்கு விருது வழங்கப்பட்டத்தை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இவ்விழாவில் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றிருக்கிறார்.
இந்த முக்கியமான நாளில், ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யாவின் Hoote ஆப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குரல் பதிவு கொண்ட இந்தியாவின் முதல் சமூக வலைதள செயலியான இதனை நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த், தனது குரல் மூலமாக முதல் பதிவை Hoote செயலியில் பகிர்ந்து இருக்கிறார். இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த செயலியை உலகின் எந்த மூலையில் இருந்தும் பயன்படுத்தலாம்.
Hoote - Voice based social media platform, from India 🇮🇳 for the world 🌍🙏 https://t.co/Fuout7w2Tr
— Rajinikanth (@rajinikanth) October 25, 2021
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் நடனத்தை பார்த்து பிரபல நடிகர் ஒருவர் பட வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகைகள் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை எளிதாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அதற்கு உரியத் தொகையைப் பெற்றுக் கொள்கிறார்கள். தமிழில் மட்டும்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுப்பது என்பது கௌரவக் குறைச்சலாகவே பார்க்கப்படுகிறது.

ஜான்வி கபூர் - ரன்வீர் சிங்
சமீபத்தில் ரன்வீர்சிங் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கலந்து கொண்டிருக்கிறார். இதில் ஜான்விக்கு வைத்த வினாடி வினா போட்டியில் ஜான்வி தோற்றுப் போனார். தோற்றாலும் அவர் ரன்வீர்சிங்கிற்கு அங்கேயே மேற்கத்திய நடனம் ஒன்றை ஆடிக் காட்டியிருக்கிறார். இந்த ஆட்டத்தினால் ஜான்வி கபூருக்குத் தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் ரன்வீர்சிங்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, தனது 33வது படத்தை இன்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறார்.
’சார்பட்டா பரம்பரை’, ‘அரண்மனை 3’ படங்களுக்குப் பிறகு, ஆர்யா நடித்துள்ள ‘எனிமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்யாவின் அடுத்தபடம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஆர்யா - ஐஸ்வர்யா லக்ஷ்மி
இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தில் கதாநாயகியாக ’ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். மேலும் சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார்.
சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட பாடலாசிரியர் சினேகனை அழைத்து பரிசு கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா.
தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் தனது நீண்ட நாள் காதலியான, நடிகை கன்னிகா ரவியை ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். சினேகனின் திருமணத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.

சினேகன் - கன்னிகா திருமணத்திற்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளம் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா, சினேகனையும் அவரது மனைவி கன்னிகாவையும் தனது ஸ்டுடியோவிற்கு அழைத்து வாழ்த்தி இருக்கிறார். அதோடு சினேகனுக்கு சிறப்பு பரிசாக மோதிரம் ஒன்றை பரிசளித்து இருக்கிறார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருது பெற்றவர்களின் புகைப்படங்கள்.
67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. சிறந்த படம் அசுரன் தேர்வு செய்யப்பட்டு படத்தை தயாரித்த கலைப்புலி தாணுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகர் - தனுஷ், சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி, சிறந்த ஒலி அமைப்பு - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு), சிறந்த இசையமைப்பாளர் - டி.இமான் (விஸ்வாசம்), சிறப்பு ஜூரி விருது - பார்த்திபன் (ஒத்த செருப்பு) வழங்கப்பட்டது.
விருது பெற்றவர்களின் புகைப்படங்கள்

தாதாசாகேப் பால்கே விருது பெறும் ரஜினிகாந்த்

அசுரன் படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெறும் தனுஷ்

சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக துணை நடிகர் விருது பெறும் விஜய் சேதுபதி

சிறந்த ஒலி அமைப்பு - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)

சிறந்த இசையமைப்பாளர் - இமான் (விஸ்வாசம்)

சிறப்பு ஜூரி விருது - பார்த்திபன் (ஒத்த செருப்பு)

சிறந்த படம் - வெற்றிமாறன் (அசுரன்)

சிறந்த படம் - தயாரிப்பாளர் தாணு (அசுரன்)
சொகுசு கார் இறக்குமதி வழக்கில் தனி நீதிபதி கூறிய கருத்துக்கள் தன்னை புண்படுத்தின என முறையிட்டுள்ள விஜய், அதனை நீக்கக்கோரி மேல்முறையீடு செய்துள்ளார்.
நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அதன்பின் கட்ட வேண்டிய வரி பாக்கியை செலுத்திவிட்டார். என்றாலும், தனி நீதிபதியின் கருத்துகளை நீக்க வேண்டும் என விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையீடு மனு விசாரணையின்போது, பொதுப்படையாக நடிகர்களுக்கு எதிராக தெரிவிக்கும் கருத்து தேவையற்றது.
உயர்நீதிமன்ற தனி நீதிபதி கருத்து தனிப்பட்ட முறையில் தன்னை புண்படுத்தியுள்ளது. 32.30 லட்சம் ரூபாய் கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்டு விட்டது. கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது என விஜய் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






