என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.
திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை இந்தி திரையுல உலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் அமிதாப்பச்சன் ஏற்கனவே பெற்றுள்ளார்.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும், இயக்குனர் பாலச்சந்தருக்கும் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.

இன்று டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்கள் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நடிகர் தனுஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது. அசுரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருதை நடிகர் தனுஷ் பெற்றிருக்கிறார். அசுரன் படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி இருந்தார்.
தேசியவிருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நடிகர் தனுஷுக்கு வழங்கினார். இந்த விழாவில் மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்கள் தனுஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
டெல்லியில் நடைபெற்று வரும் 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விருது பெற்றிருக்கிறார்.
67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த படத்திற்கான விருது அசுரன் படத்திற்கு வழங்கப்பட்டது. அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் தேசிய விருதை பெற்றனர். தேசிய விருதை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, கலைப்புலி தாணு மற்றும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு வழங்கினார்.

விருது பெறும் வெற்றிமாறன்
அசுரன் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க, வெற்றிமாறன் இயக்கி இருந்தார். தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், பார்த்திபன் நடித்து வெளியான ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு ஜூரி சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.
புதுடெல்லி:

நாட்டின் ஒவ்வொரு பிராந்திய மொழிகளுக்கான சிறந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழில் சிறந்த பிராந்திய மொழி திரைப்படமாக அசுரன் படத்திற்கு வழங்கப்படுகிறது. சிறந்த நடிகருக்கான விருது தனுஷூக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கே.டி.கருப்புவுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது இமானுக்கும், பார்த்திபன் நடித்து வெளியான ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு ஜூரி சிறப்பு விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இம்முறை தமிழக திரையுலகிற்கு 7 தேசிய விருதுகள் கிடைக்கிறது.
நடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய திரைப்பட விருதில் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது இன்று வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று 67வது தேசிய திரைப்பட விருதுகள் விழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த பிராந்திய திரைப்படங்கள் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு விழா நடைபெறாமல் இருந்த நிலையில், 2019ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது.

நாட்டின் ஒவ்வொரு பிராந்திய மொழிகளுக்கான சிறந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழில் சிறந்த பிராந்திய மொழி திரைப்படமாக அசுரன் படத்திற்கு வழங்கப்படுகிறது. சிறந்த நடிகருக்கான விருது தனுஷூக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கே.டி.கருப்புவுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது இமானுக்கும், பார்த்திபன் நடித்து வெளியான ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு ஜூரி சிறப்பு விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இம்முறை தமிழக திரையுலகிற்கு 7 தேசிய விருதுகள் கிடைக்கிறது.
நடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய திரைப்பட விருதில் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது இன்று வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெங்களூரு சிறுவன்
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் முன்னோட்டம்.
நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம். இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ், அடுத்ததாக தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பிருத்விராஜ் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். மோகன்லால் நடித்த லூசிபர் படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். தற்போது மேலும் 3 படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் பாகுபலி படம் மூலம் பிரபலமான பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் வில்லனாக நடிக்க பிருத்விராஜிடம் பேசி வருகிறார்கள்.
சலார் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் தயாராகிறது. இதில் பிரபாஸ் ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். பிரசாந்த் நீல் இயக்குகிறார். சலார் படத்தில் பிறமொழி நடிகர்களையும் நடிக்க வைத்தால் அந்தந்த மாநிலங்களில் ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். இதை மனதில் வைத்தே தமிழ் நடிகையான சுருதிஹாசனை நாயகியாக தேர்வு செய்தனர்.

பிருத்விராஜ், சலார் படத்தின் போஸ்டர்
பிருத்விராஜுக்கு தமிழ், மலையாள பட உலகில் நல்ல மார்க்கெட் உள்ளது. அவரது படங்கள் வசூல் குவிக்கின்றன. எனவேதான் சலார் படத்தில் அவரை வில்லனாக நடிக்க வைக்க படக்குழுவினர் விரும்புகிறார்கள். ஏற்கனவே சில படங்களில் வில்லனாக நடித்துள்ள பிருத்விராஜ் சலார் படத்திலும் வில்லன் வேடம் ஏற்க சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ஜெயில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ளார்.
ஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்த பாலன். இதையடுத்து இவர் இயக்கிய ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’, ‘காவியத் தலைவன்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இவர் இயக்கிய வெயில் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து இவர் இயக்கத்தில் உருவான படம் ஜெயில், ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார்.
மேலும் நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒருசில காரணங்களால் இப்படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் முடங்கி உள்ளது.

ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படம்
இந்நிலையில், ஜெயில் படத்தின் முக்கிய அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டு உள்ளார். அதன்படி இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒத்த செருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பார்த்திபன் தற்போது ஒரே ஷாட்டில் தயாராகும் இரவின் நிழல் படத்தை இயக்கி உள்ளார்.
வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் பார்த்திபன் சில மாதங்களுக்கு முன்பு ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க உள்ளதாகவும், அப்படத்திற்கு ‘இரவின் நிழல்’ என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார். கதையை தயார் செய்துவிட்டு நடிகர்களை அழைத்தபோது பலரும் பின் வாங்கினார்கள். சிலர் பார்த்திபன் சொன்ன யோசனைக்கு ஒத்துக்கொண்டு நடித்தார்கள்.
இந்நிலையில், பார்த்திபன் தற்போது அந்த படத்தையே எடுத்து முடித்து விட்டார். படத்தைப் பார்த்த ஏ.ஆர்.ரகுமான் பார்த்திபனை பாராட்டி இருக்கிறார். இந்த மகிழ்ச்சியோடு டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ள பார்த்திபன், ‘இரவின் நிழல்’ படத்துக்கு இன்று இசை புயல் ஏ.ஆர்.ரகுமான், பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது.

இரவின் நிழல் படத்தின் போஸ்டர்
‘இது ஒரே ஷாட்டில் தயாராகும் முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும் உதாரண படமாகவும் இருக்கும்’ என்று பாராட்டி கீ-போர்டில் விரல் ஓட்டினார். வைரல் ஆகப்போகும் இசை பிரளயத்திற்காக” என்று பார்த்திபன் குறிப்பிட்டிருக்கிறார்.
இசையமைப்பாளர் இனியவன் மரணம் அடைந்த செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகளை மக்கள் கேட்கும் வண்ணம் இனிய இசை வழியில் தந்தவர் இனியவன். இவர் நேற்று மாரடைப்பினால் காலமானார்.
அவரது மரணம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “இசை அமைப்பாளர் இனியவன் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மிகச்சிறந்த இசை அமைப்பாளர். தஞ்சை மாவட்டத்துக்காரர். தேர்ந்த இயக்குனர்களிடம் இவர் கைகோர்த்திருந்தால் திரை இசையைக் கலக்கியிருப்பார்.
‘கவுரி மனோகரி’ படத்தில் கே.ஜே.ஜேசுதாசும் - எஸ்.பி.பியும் இணைந்து பாடிய “அருவி கூட ஜதியில்லாமல் சுரங்கள் பாடுது” பாடல் கேட்டால் இவர் ஆற்றல் புரியும். தலைவர் பிரபாகரனுக்குப் பிடித்த பாடல் அது என்று ஒரு ஈழ நண்பர் என்னிடம் சொன்னார். எனது ‘ஜென்மம் நிறைந்தது’ பாடலுக்கும் இசை இவரே.
ஐந்து நாட்களுக்கு முன்பு கூட பேசினோம். நல்ல உடல் நலனோடு இருந்தார். ‘ஓடங்கள்’ பட இசை அமைப்பாளர் சம்பத் செல்வத்திடம் இசை உதவியாளராக இருந்து அவர் மூலம் தனக்கு அறிமுகம் ஆனவர். நீண்ட கால நண்பர். இவரது உடல் சொந்த ஊரான தஞ்சைப் பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 3-ந் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 10 பெண்கள், 7 ஆண்கள், 1 திருநங்கை என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து, முதல் வார இறுதியில் மருத்துவ காரணங்களுக்காக வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். அதன்படி கடந்த வாரம் நதியா சங் வெளியேற்றப்பட்டார்.

அபிஷேக் ராஜா
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அபிஷேக் ராஜா, குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால், நடிகை கீர்த்தி சுரேஷ், தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். தற்போது தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் உடன் ‘அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் மகேஷ்பாபு உடன் ‘சர்காரு வாரி பாட்டா’, சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’, நானிக்கு ஜோடியாக ‘தசரா’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால், நடிகை கீர்த்தி சுரேஷ், சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. நானி ஜோடியாக தசரா படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அதிக சம்பளம் கேட்டதாகவும், இறுதியில் ரூ.3 கோடிக்கு உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய படங்களில் அவர் ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடி வரை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படம் மூலம் பிரபலமான பால் வாக்கர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார் விபத்து ஒன்றில் சிக்கி மரணமடைந்தார்.
மறைந்த ஹாலிவுட் நடிகர் பால்வாக்கர் மகள் திருமண விழாவில், மணமகளுடன் பிரபல நடிகர் வின் டீஸல் நடந்து வந்த தருணத்தை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படம் மூலம் இந்திய ரசிகர்களின் மனம்கவர்ந்தவர்கள் நடிகர்கள் பால் வாக்கர் மற்றும் வின் டீஸல்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பால் வாக்கர் கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். இந்நிலையில், அவரது மகள் மிடோ வாக்கருக்கு நடைபெற்ற திருமணத்தில் தந்தை இடத்தில் நடிகர் வின் டீஸல், மணமகளுடன் மணமேடைக்கு வந்தது ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பால் வாக்கர் மகள் திருமணத்தில் வின் டீஸல்
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தின் முதல் ஆறு பாகங்களில் நடித்தவர் பிரபல நடிகர் பால் வாக்கர். இவர் கடந்த 2013-ம் ஆண்டில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






