என் மலர்
சினிமா செய்திகள்
ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முருங்கைக்காய் சிப்ஸ் படக்குழு வெளியிட்ட போஸ்டர்
இந்நிலையில், ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
தாதாசாகேப் பால்கே விருது பெறுவது மகிழ்ச்சியளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை:
இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது. தாதா சாகேப் பால்கே விருது ஆண்டு தோறும் மத்திய அரசால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய திரைப்படத்துறையின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பிறந்தநாள் நூற்றாண்டான 1969-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு நடிகர் ரஜினி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுவிட்டது.
கொரோனா காரணமாக விருது வழங்கும் விழா தள்ளிக்கொண்டே போனது. இந்தநிலையில் நாளை (25-ந் தேதி) தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. அதற்காக ரஜினி டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் முன்பு விருது கிடைத்து இருப்பது பற்றி ரஜினி நிருபர்களிடம் கூறியதாவது:-
தாதாசாகேப் பால்கே விருது நான் எதிர்பாராதது. விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் பாலச்சந்தர் அருகில் இல்லாதது வேதனை அளிக்கிறது என்றார்.
டைரக்டர் பாலச்சந்தர் தான் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். இதே விருதை பாலச்சந்தரும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இந்த விருதை பெற்றவர் ஆவார்.
டெல்லியில் நடைபெறும் விழாவில் தங்கத்தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பணமும் ரஜினிக்கு வழங்கப்பட உள்ளது.
இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது. தாதா சாகேப் பால்கே விருது ஆண்டு தோறும் மத்திய அரசால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய திரைப்படத்துறையின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பிறந்தநாள் நூற்றாண்டான 1969-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு நடிகர் ரஜினி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுவிட்டது.
கொரோனா காரணமாக விருது வழங்கும் விழா தள்ளிக்கொண்டே போனது. இந்தநிலையில் நாளை (25-ந் தேதி) தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது.

தாதாசாகேப் பால்கே விருது நான் எதிர்பாராதது. விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் பாலச்சந்தர் அருகில் இல்லாதது வேதனை அளிக்கிறது என்றார்.
டைரக்டர் பாலச்சந்தர் தான் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். இதே விருதை பாலச்சந்தரும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இந்த விருதை பெற்றவர் ஆவார்.
டெல்லியில் நடைபெறும் விழாவில் தங்கத்தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பணமும் ரஜினிக்கு வழங்கப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்... பராமரிப்பு பணி: கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் ரத்து
தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள், கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் தளர்வுகளையும் அறிவித்துள்ளார்.
அதன்படி, நவம்பர் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
சினிமா படப்பிடிப்புகளுக்கு முழு அனுமதி:
தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள், கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் இயக்கத்தில், மோகன், மேனகா நடிப்பில் வெளியாகி இருக்கும் இன்ஷா அல்லாஹ் படத்தின் விமர்சனம்.
இஸ்லாமின் ஐந்து கடமைகள் பற்றி கூறும் படம் இன்ஷா அல்லாஹ். தம்பிக்கு சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றிய பணக்காரன் நரகத்தின் பாதைக்கும், அனாதையாக இருந்தாலும் பள்ளிவாசலில் பணிவிடை செய்த ஆதரவற்ற மனிதர் சொர்க்கத்தின பாதைக்கும் செல்வார்கள் என்பதை கதை வலியுறுத்துகிறது. அத்துடன் படத்தில் சில கிளைக் கதைகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஆதரவற்று பிச்சை எடுத்து திரியும் முதிய தம்பதி, இந்து மதத்தை சேர்ந்த பணக்கார பெண்ணை காதலித்து மணந்த இஸ்லாம் வாலிபன் என்று கிளைக்கதை தொடர்கிறது. காட்சிகள் எதுவும் நேரடி வசனங்களால் சொல்லப்படாமல் புரிதில் மூலமாக உணரும் வகையில் சீன்களை அமைத்திருக்கிறார்கள்.

அந்த புரிதல் பெரியதாக எடுபடவில்லை. பார்ப்பவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சினிமாவாக உணரும் வகையில் காட்சிகள் அமையாதது வருத்தம். எல்லா காட்சிகளும் தத்ரூபமாகவே படமாக்கப்பட்டிருக்கிறது. காட்சிகள் படமாவது அதில் நடித்த சம்பந்தப்பட்ட நபர்களுக்காவது தெரியுமா என்பது கூட சந்தேகம் என்பதுபோல் இருக்கிறது.
மெலிதாக குழாயில் விழும் தண்ணீர் ஒரு குடம் நிறையும் வரை கேமராவை அசைக்காமல் சுமார் 3 நிமிடத்துக்கும் மேலாக காட்டும் காட்சி பார்வையாளர்களை சோதிக்கிறது.

விதவை பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் புதிய சமுதாய அறக்கட்டளை வீடுகள் கட்டி தருவது என சமூக பணிகளை சமுதாயத்துக்கு வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்.
இசை என்ற தனி ஆவர்த்தனம் எதுவும் இல்லை எல்லாமே ஷூட்டிங்கின்போது பதிவு செய்யப்பட்ட ஒலிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. கதையின் காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் மோகன், மேனகா இருவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘இன்ஷா அல்லாஹ்’ சுவாரஸ்யம் குறைவு.
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.
94-வது ஆஸ்கார் விருது அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’ மற்றும் தமிழில் 14 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன.
இதில் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் இடம் பெற்றிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘கூழாங்கல்’ திரைப்படம் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூழாங்கல் படத்தை பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.

ஏற்கனவே இப்படம், இந்த ஆண்டு ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் “டைகர் விருது” பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் யோகிபாபு, பல அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்திற்கு தற்பொழுதே விருது கிடைத்துள்ளது.
யோகிபாபு நடித்த மண்டேலா திரைப்படம் ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்திருப்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் யோகிபாபு-வின் அடுத்த திரைப்படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. ஆம் யோகிபாபு அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் மீன் குழம்பு.
இத்திரைப்படத்தை சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் திரைக்கதை சிறந்த பிளாக் காமெடி திரைக்கதை என்ற விருதை பிர்சமுண்டா இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் வென்றுள்ளது.

படக்குழுவினருடன் யோகிபாபு
திரைப்படம் உருவாவதற்கு முன்பே யோகிபாபு நடிக்க இருக்கும் படத்திற்கு விருது கிடைத்திருப்பது, படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
மகிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் குமரி.டிக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் “கபளீஹரம்” படத்தின் முன்னோட்டம்.
தனிகட்சி மூலம் அரசியல் களம் வகித்த குமரி.டிக்சன் தற்பொழுது சினிமா துறையில் கால்பதித்திருக்கிறார். தற்பொழுது மகிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான “கபளீஹரம்” எனும் சினிமாவில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களுர், சென்னை, மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து நிறைவடைந்துள்ளது.
இத்திரைப்படத்தில் முருகவேல் எனும் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் மைம் கோபி, யோகிராம், மற்றும் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். அண்மையில் டிரைவர், கிளீனர்களை கொடூரமாக கொலை செய்து லாரிகளை கடத்தும் வட இந்திய கும்பல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இத்திரைப்படம் கதையமைக்கப்பட்டுள்ளது.
குமரி.டிக்சன் என்னும் அவரது பெயரை தக்ஷன் விஜய் என்று மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று தக்ஷன் விஜய் கூறினார்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் பிரபாஸ் பிறந்தநாளுக்கு சிறப்பு பரிசை படக்குழுவினர் கொடுத்துள்ளனர்.
நடிகர் பிரபாஸின் பிறந்த நாளான இன்று, அவரது அடுத்த படமான யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் ராதே ஷியாமின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரம் ஆதித்யா குறித்த சிறப்பு டீசராக இது அமைந்துள்ளது.

ராதே ஷியாம் திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை இதுவரை உருவாக்கியிருந்த நிலையில், பிரபாஸின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியிடப்பட்டுள்ள டீசர் அவர்களை இன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
விடுகதை பாணியில் அமைந்துள்ள இந்த டீசர், பிரபாஸ் ஏற்றுள்ள கதாபாத்திரமான கைரேகை நிபுணர் குறித்த ரகசியங்களை தனக்கே உரிய பாணியில் விறுவிறுப்பான முறையில் வெளியிடுகிறது. முதல் முறையாக இத்தகைய வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளன்றும் ஒரு சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டது. ஜனவரி 14, 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியாகிறது ராதே ஷியாம்.
தனது கணவர் நாகசைதன்யாவை விவகாரத்து செய்ய இருப்பதாக அறிவித்த நடிகை சமந்தா, தவறான தகவல்களை பரப்பிய யூடியூப் தளம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இவர்களது திருமண உறவு, அண்மையில் முடிவுக்கு வந்தது.
இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது. இதைத் தொடர்ந்து சமந்தா-வின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டன.
இந்நிலையில், விவாகரத்து விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறாக தகவல்களை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஐதராபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்குத் தொடர்வதை விட, அவர்களை நடிகை சமந்தா மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம்.
பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை பொது களத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள், பின்னர் அவர்கள் அவதூறு வழக்குகளைத் தாக்கல் செய்கிறார்கள்' என்று கூறினார்.

நடிகையின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று சமந்தா-வின் வழக்கறிஞர் முரளி நீதிமன்றத்தில் கோரியதை அடுத்து இந்த கருத்தை நீதிமன்றம் தெரிவித்தது. வழக்கறிஞரின் வேண்டுகோளால் கோபமடைந்த கூடுதல் மாவட்ட நீதிபதி, "இந்த மனு சரியான நேரத்தில் விசாரணைக்கு வரும்" என்று உறுதியாக கூறினார்.
மேலும் "சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று இல்லை. சமந்தா-வின் வழக்கை, நடைமுறைப்படி நீதிமன்றம் விசாரிக்கும்'' என்று கூறியுள்ளார்.
அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வரும் போனிகபூர், அவரை பற்றி சமூக வலைத்தள பக்கத்தில் புகழ்ந்து பதிவு செய்து இருக்கிறார்.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
பொங்கல் தினத்தையொட்டி அடுத்த ஆண்டு ‘வலிமை’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் அஜித் சமீபத்தில் டெல்லி உள்ளிட வட மாநிலங்களில் பைக் மூலம் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சமீபத்தில் பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் வாகா எல்லைக்கு பைக்கில் பயணம் செய்து இருந்தார்.
அப்போது எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், தயாரிப்பாளர் போனிகபூர், தனது சமூக வலைத்தள பக்கத்தில், அஜித்தின் ஆர்வத்தை தடுக்க முடியாது. ஒவ்வொரு கனவையும் அவர் நனவாக்கி வருகிறார் என்று பதிவு செய்து இருக்கிறார்.
Nothing can stop him from living his passion and making his each dream come true. Universally Loved. #AjithKumarpic.twitter.com/vcynxZdkZ8
— Boney Kapoor (@BoneyKapoor) October 23, 2021
சினிமாவில் வில்லன் மற்றும் காமெடி நடிகராக வலம் வரும் மன்சூர் அலிகான் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். வில்லன், காமெடியனாக நடித்து வரும் மன்சூர் அலிகான், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில், சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் உள்ள நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுரடியை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதால் அவரது வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

மன்சூர் அலிகான் வீடு
நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி மண்டலம் 8 அதிகாரிகள் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல் வைத்தனர்.
பாதுகாப்பு சோதனைகளுக்காக எப்போதும் எனது செயற்கை கால் விமான நிலைய அதிகாரிகளால் சோதனை செய்யப்படுவது வேதனையாக உள்ளது என சுதா சந்திரன் கூறி உள்ளார்.
புதுடெல்லி:
பிரபல நடன கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரன், 1981ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் தனது காலை இழந்தார். இதனால் செயற்கைக் கால் பொருத்தி தனது கலைப் பயணத்தை தொடர்கிறார். தமிழ், இந்தி சீரியல்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில், சுதா சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், பாதுகாப்பு சோதனைகளுக்காக எப்போதும் எனது செயற்கை கால் விமான நிலைய அதிகாரிகளால் சோதனை செய்யப்படுவதும், ஒவ்வொரு முறையும் செயற்கை காலை கழற்றி காட்டுவதும் வேதனையாக உள்ளது என கூறி உள்ளார்.
‘நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு இது எனது தனிப்பட்ட கடிதம். மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை. நான் சுதா சந்திரன், நான் ஒரு நடிகை, நாட்டியக் கலைஞர். செயற்கைக் கால்களைக் கொண்டு நடனமாடி வரலாறு படைத்திருக்கிறேன். எனது நாடு என்னை நினைத்துப் பெருமிதம் கொள்ளுமாறு செய்திருக்கிறேன்.
ஆனால், தொழில்முறைப் பயணமாக நான் ஒவ்வொரு முறை விமானம் ஏறுவதற்கு முன்பும், விமான நிலையத்தில் என்னைப் பாதுகாப்பு சோதனையில் தடுத்து நிறுத்தும்போது எனது செயற்கைக் காலை வெடிகுண்டு பரிசோதனைக் கருவியை வைத்துப் பரிசோதிக்கும்படி மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரிடம் கேட்கிறேன். ஆனால், அவர்கள் எனது செயற்கைக் காலை கழற்றி காட்டச் சொல்கின்றனர்.
மோடி அவர்களே, இது மனிதச் செயல்தானா? இதுதான் நமது தேசம் பேசுகிறதா? இந்தச் சமூகத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்குத் தரும் மரியாதை இதுதானா? மோடி அவர்களே, மூத்த குடிமக்கள், அவர்கள் மூத்தவர்கள்தான் என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் ஒரு அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்." என சுதா சந்திரன் கூறியிருந்தார்.
சுதா சந்திரனின் வீடியோ பதிவு வைரலான நிலையில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்புப் படை டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
"உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு மிகவும் வருந்துகிறோம் சுதா சந்திரன். விதிமுறைகளின் படி, குறிப்பிட்ட சில சமயங்களில் மட்டுமே செயற்கை உறுப்பு பாகங்களை நீக்கிப் பரிசோதிக்க வேண்டும். உங்களை ஏன் அப்படிச் செய்யச் சொன்னார் என்று, சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியை நாங்கள் விசாரிக்கிறோம். இதுபோன்று எந்தப் பயணிக்கும் அசவுகரியம் ஏற்படாது இருப்பதை உறுதி செய்வோம்" என மத்திய தொழிலக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.






