என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அண்ணாத்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகழ்ந்து பதிவு செய்திருக்கிறார்.
    ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கு இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், டீசர்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    தனுஷ் பதிவு
    தனுஷ் பதிவு

    இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பல பிரபலங்களும் ரஜினியை புகழ்ந்து இந்த டிரைலரை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘அண்ணாத்த, வின்டேஜ் ரஜினிசம், முத்து, அருணாசலம், படையப்பா படங்களின் அதிர்வுகளை பார்க்க முடிகிறது. திரையில் பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறேன். இது தலைவர் திருவிழா’ என்று பதிவு செய்து இருக்கிறார்.
    சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் இனியா, புதிய போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.
    ‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜா மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இனியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘காபி’.

    நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை சொல்லும் விதமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இனியா
    காபி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இதில் கை கட்டப்பட்ட நிலையில் இனியா நிற்கும் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
    ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

    இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டனர். ஆயுத பூஜையை முன்னிட்டு அண்ணாத்த டீசரை வெளியிட்டனர். இன்று அண்ணாத்த படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    ரஜினி

    இதில் ரஜினி, கல்கத்தாவிற்கே காப்பு கட்டிட்டேன் என்று பேசும் வசனம் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த டிரைலர் வைரலாகி, டிரெண்டாகி வருகிறது.
    இயக்குனராக இருந்து தற்போது நடிகராக மாறி இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தன்னுடைய நாடி, நரம்பு, கழுத்து முதுகு, தொண்டை எல்லாம் போச்சு என்று கூறியிருக்கிறார்.
    நல்ல வித்தியாசமான படைப்புகளைக் கொடுக்கக்கூடிய இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. சில ஆண்டுகளாகவே அவர் எந்த ஒரு படத்தையும் எடுக்கவில்லை. நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். 

    இந்நிலையில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா நடித்த மாநாடு படம் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியாக இருக்கிறது. இதில் காவல்துறை அதிகாரியாக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. சமீபத்தில் இதன் டப்பிங் வேலைகளை முடித்த அவர் தனது மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

    எஸ்.ஜே.சூர்யா
    எஸ்.ஜே.சூர்யா - சிம்பு

    அதில், 8 நாள் மாநாடு டப்பிங் வேலையை 5 நாளில் முடித்தேன். என்னுடைய நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை எல்லாம் போச்சு. குறைந்தது 10 நாள் ஓய்வு வேண்டும் என்று எல்லா அவயங்களும் கெஞ்சுகின்றன. ஆனால், கடைசி அவுட்புட்டை பார்த்த பிறகு, உங்கள் எல்லோருக்கும் ஒன்றை சொல்லிருக்கிறேன்... தீபாவளி நவம்பர் 25 தான்டா. என்று தன் பாணியில் எழுதியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

    எஸ்.ஜே.சூர்யா
    எஸ்.ஜே.சூர்யாவின் பதிவு
    நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்.
    இளைய மகளான சவுந்தர்யாவின் ஹூட் (Hoote) ஆப்பை கடந்த திங்கட்கிழமை நடிகர் ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தினார். எழுத படிக்க தெரியாதவர்கள் இந்த செயலி வாயிலாக மற்றவர்களுக்கு தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை, தங்கள் சொந்த குரல் வாயிலாக தெரிவிக்கலாம் எனவும், வருங்காலத்தில் மற்ற சமூக வலைத்தளங்கள் போல, இந்த hoote செயலி பிரபலம் அடைய வாழ்த்துவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தனது குரல் பதிவில் தெரிவித்து இருந்தார்.

    ஹூட் ஆப் அறிமுக விழாவில் பேசிய சவுந்தர்யா, கிளப் ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேசஸ் போல் இல்லாமல், யார் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் ஹூட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் இது இருக்கும் என தெரிவித்தார்.

    இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார் சவுந்தர்யா. இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்து 'Hoote’ App-ஐ பற்றி விவரித்து, அவருடைய வாழ்த்துகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


    ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
    விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களின் இந்த வெற்றி அரசியல் வட்டத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் தேர்தலில் தன் படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்று விஜய் கண்டிப்பாகக் கூறி, தடை போட்டிருந்தார். 

    ஆனாலும் சோர்வடையாத விஜய் ரசிகர்கள் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். தேர்தலில் நின்ற பல நிர்வாகிகள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து  பாராட்டியிருக்கிறார் விஜய்.

    விஜய்

    மேலும் வெற்றி பெற்றவர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
    ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ராம்சரண், அடுத்ததாக இயக்குனர் ஷங்கருடன் கூட்டணி அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். 

    இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் அஞ்சலி, ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சுரேஷ் கோபி
    சுரேஷ் கோபி

    இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    டோனிசான் இயக்கத்தில் நிவாஸ் ஆதித்தன், நித்யஸ்ரீ நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொடியன்’ படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் டோனிசான் இயக்கத்தில் நேரு நகர் நந்து தயாரித்துள்ள படம் ‘கொடியன்’. இந்த படத்தில் நிவாஸ் ஆதித்தன் நாயகனாகவும், நித்யஸ்ரீ கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். யோக் ஜேப்பி வில்லன் வேடத்தில் வருகிறார். 

    இந்த படத்திற்கு இசை கேபர் வாசுகி, பின்னணி இசை கிரிநந்த் - விஜய் கார்த்திகேயன் அமைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மற்றும் கதை இயக்கம் செய்துள்ளார் டோனிசான். சக்ரவர்த்தி பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

    கொடிய சம்பவங்களை நிகழ்த்துவதும் மனிதர்களே, மிருகங்களை விட கொடூரமாக மனித வாழ்வில் நடந்துகொண்டு மிருகங்களை கொடிய மிருகங்கள் என்று கூறும் மனிதர்கள் வாழும் பூமி இது.

    ஆதித்தன், நித்யஸ்ரீ
    ஆதித்தன், நித்யஸ்ரீ

    நாகரீகம் வளர்ந்தாலும் மனிதனுக்குள் இருக்கும் கொடூரமனம் இன்னும் அதிகமான கொடூரமானதாகவே மாறிக்கொண்டு வருகிறது.

    கொடியன் படமும் மனிதனுக்குள் இருக்கும் கொடிய மனிதத்தை பற்றிபேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றுயுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது சர்வதேச விருதுகளைப்பெற்று வருகிறது.
    தாதாசாகேப் பால்கே விருது பெற்றபின் பிரதமர் மோடியையும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து வாழ்த்து பெற்றதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
    மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். 

    திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ரஜினி

    இந்நிலையில், தாதாசாகேப் பால்கே விருது பெற்றபின் பிரதமர் மோடியையும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து வாழ்த்து பெற்றதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுடன் சந்திப்பு மேற்கொண்டபோது எடுத்த புகைப்படத்தையும் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தும் உடனிருந்தார்.
    விக்ரம் படத்தில் ஏற்கனவே பகத் பாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், காளிதாஸ் ஜெயராம் என நான்கு மலையாள நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
    மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. 

    இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    செம்பன் வினோத்
    செம்பன் வினோத்

    இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் ஒப்பந்தமாகி உள்ளார். விக்ரம் படத்தில் ஏற்கனவே பகத் பாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், காளிதாஸ் ஜெயராம் என நான்கு மலையாள நடிகர்கள் நடித்து வரும் நிலையில், தற்போது ஐந்தாவதாக செம்பன் வினோத் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகை ரித்திகா சிங், தற்போது அருண் விஜய்யின் பாக்சர், விஜய் ஆண்டனியுடன் கொலை, பிச்சைக்காரன் 2, அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. 

    கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம், பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழில், அருண் விஜய்யின் பாக்சர், விஜய் ஆண்டனியுடன் கொலை, பிச்சைக்காரன் 2, அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    ரித்திகா சிங்
    ரித்திகா சிங்

    இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ரித்திகா சிங், சமீப காலமாக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. கமர்ஷியல் பட வாய்ப்புகளை கைப்பற்றவே அவர் இவ்வாறு செய்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
    கவிஞர் வைரமுத்து, டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.
    மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

    தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து, டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார். 

    வைரமுத்து, ரஜினிகாந்த்
    வைரமுத்து, ரஜினிகாந்த்

    இதுகுறித்து அவர் டுவிட்டரில், “பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம். கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்” என பதிவிட்டுள்ளார்
    ×