என் மலர்
சினிமா

விஜய்
தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் விஜய் - வைரலாகும் புகைப்படம்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களின் இந்த வெற்றி அரசியல் வட்டத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் தேர்தலில் தன் படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்று விஜய் கண்டிப்பாகக் கூறி, தடை போட்டிருந்தார்.
ஆனாலும் சோர்வடையாத விஜய் ரசிகர்கள் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். தேர்தலில் நின்ற பல நிர்வாகிகள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து பாராட்டியிருக்கிறார் விஜய்.

மேலும் வெற்றி பெற்றவர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Next Story






