என் மலர்
சினிமா செய்திகள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு, நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாதாரண மனிதராக இருந்த தன்னை இந்த உயரத்துக்கு கொண்டு சென்றது ராகவேந்திரரின் அருள்தான் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.
இதைத்தொடர்ந்து காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் ‘லட்சுமி’ என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்ட ராகவா லாரன்ஸ், தற்போது ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2ம் பாகம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்தியாவிலேயே மிகப்பெரிய ராகவேந்திரர் சிலையை பிரதிஷ்டை செய்திருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

லாரன்ஸின் டுவிட்டர் பதிவு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் முதன்முறையாக 15 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட ராகவேந்திரா சாமியின் பளிங்கு சிலையை பிரதிஷ்டை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சாதாரண மனிதராக இருந்த தன்னை இந்த உயரத்துக்கு கொண்டு சென்றது ராகவேந்திரரின் அருள்தான் என தெரிவித்துள்ள லாரன்ஸ், தனது மிகப்பெரிய கனவு நனவாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை ஷங்கர் இயக்குகிறார், நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 திரைப்படம் உருவானது. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்த நிலையில், திடீரென படப்பிடிப்பு பணிகள் நின்றுபோனது.
இந்த நிலையில், இந்தியன்-2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் தொடர்ந்த, இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து லைகா சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லைகா நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதி நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது மத்தியஸ்த நடைமுறையில் பங்கேற்க உள்ளோம். அந்த சமயத்தில் ஷங்கர் வேறு படம் இயக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்த போவதில்லை’’ என்றும் கூறப்பட்டது.

சென்னை ஐகோர்ட்டு
அப்போது ஷங்கர் தரப்பில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்கின்றனர்.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் (வயது 70) இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தற்போது அவர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி பலரும் பிரார்த்தனை செய்கின்றனர்.
கார்த்திக் சவுத்ரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிப்பில் உருவாகி வரும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் முன்னோட்டம்.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இப்படத்தை கார்த்திக் சவுத்ரி என்பவர் இயக்கி உள்ளார். இவர், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான படிப்பை படித்து முடித்தவர். பிரபல தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகிய இருவரின் படங்களிலும் பணிபுரிந்து இருக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.

வாணி போஜன், விக்ரம் பிரபு
படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: “இது, அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்த படம். கதாநாயகன் விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரம், ‘சஸ்பென்ஸ்’ ஆக வைக்கப்பட்டு இருக்கிறது. பாலுமகேந்திராவின் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற சுரேஷ் பார்கவ் ஒளிப்பதிவு செய்கிறார். மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர், இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘விடுதலை’ படத்தில் நடிகர் தனுஷ் பணியாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.
இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘விடுதலை’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாடி உள்ளாராம். இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவிடம் பிரத்யேக பயிற்சி பெற்று, நடிகர் தனுஷ் இப்பாடலை பாடி உள்ளதாக இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், தனது குடும்பத்தினருடன் அண்ணாத்த படத்தை பார்த்த அனுபவம் குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், தனது குடும்பத்தினருடன் அண்ணாத்த படத்தை பார்த்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹூட் செயலியில் அவர் ஆடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த்தின் டுவிட்டர் பதிவு
அதில் அவர் கூறியுள்ளதாவது: “என் குடும்பத்துடன் அண்ணாத்த படம் பார்த்தேன். குறிப்பாக என் பேரன் வேத், தியேட்டரில் பார்க்கும் முதல் படம் இது. அதனால் என் பக்கத்திலேயே உட்கார்ந்து முழு படத்தையும் ஆர்வமாக பார்த்தான். படம் முடிஞ்சதும் 3 நிமிஷம் என்னை கட்டிப்பிடிச்சுட்டு விடவே இல்ல... அவ்ளோ சந்தோஷம் அவனுக்கு, அதைப் பார்த்து எனக்கும் ரொம்ப சந்தோஷமாயிடுச்சு” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா, பிரபல இயக்குனருடன் 20 ஆண்டுகளுக்கு பின் இணைய உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தற்போது ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றுள் ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி ஓடிடி-யில் வெளியாக உள்ளது. பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்ததும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா, தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இயக்குனர் பாலாவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்துள்ளார்.

இயக்குனர் பாலா, சூர்யா, சிவகுமார்
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்... அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘யானை’ படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
அருண் விஜய்யின் 33-வது படம் ‘யானை’. ஹரி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

யானை படத்தின் போஸ்டர்
இப்படம் கிராமத்து பின்னணியில் தயாராகி வருகிறது. ஏற்கனவே தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை நடிகர் அருண்விஜய் வெளியிட்டுள்ளார். அதன்படி யானை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹிப்ஹாப் ஆதியின் புதிய படத்தை விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படம் ‘அன்பறிவு’. இப்படத்தை அஸ்வின் ராம் இயக்கி உள்ளார். ஹீரோயினாக காஷ்மிரா பர்தேசி நடித்துள்ளார். நெப்போலியன், வித்தார்த், தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அஜித்தின் விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அன்பறிவு படத்தின் போஸ்டர்
இந்நிலையில், ‘அன்பறிவு’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட மாநிலத்தில் கரடு முரடான பகுதியில், நடிகர் அஜித் பைக் ஓட்டி வரும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன.
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் அஜித், தற்போது பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வட மாநிலங்களில் அவர் பைக்கில் வலம் வரும் புகைப்படங்கள் தினந்தோறும் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், தற்போது நடிகர் அஜித், பைக் ஓட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கரடு முரடான பகுதியில், நடிகர் அஜித் பைக் ஓட்டி வரும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன.

இந்த வீடியோவை அஜித்துடன் சுற்றுப்பயணம் சென்றுள்ள சுப்ரஜ் வெங்கட் என்பவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. வட மாநிலங்களில் சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர், நடிகர் அஜித் வெளிநாடுகளில் பைக் ரைடிங் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் பிருத்விராஜுக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால், அவரை தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தற்போது முல்லை பெரியாறு அணை பகுதியில் கனமழை பெய்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதையடுத்து நடிகர் பிருத்விராஜ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும் சரி, 125 ஆண்டுகள் பழமையான இந்த அணை ஒரு செயல்பாட்டு கட்டமைப்பாக இருப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. அரசியலையும், பொருளாதாரத்தையும் ஒதுக்கிவைத்து சரியானதை செய்வதற்கான நேரம் இது'' என்று கூறியுள்ளார்.

பிருத்விராஜ்
தமிழகத்தில் பிருத்விராஜ் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தேனியில் பிருத்விராஜ் உருவபொம்மையை எரித்தனர். பிருத்விராஜை தமிழ் படங்களில் நடிக்க அனுமதிக்கக்கூடாது என்று அரசியல் கட்சியினர் வற்புறுத்தி உள்ளனர்.
எதிப்பு காரணமாக பிருத்விராஜை தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பாளர் கே.ராஜன் கூறும்போது, ‘‘பிருத்விராஜ் தமிழ் படங்களில் நடித்து தமிழ்நாட்டில் சம்பளம் வாங்கிவிட்டு கேரளாவில் உட்கார்ந்து முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்று கருத்து சொல்லி இருப்பது கண்டிக்கத்தக்கது. அவரை தமிழ் நாட்டில் உள்ள நடிகர்கள் கண்டிக்க வேண்டும்” என்றார்.






